வாருங்கள் சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக ...


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர இந்தியாவின் 65வது சுதந்திர தினம் ஆகும். இந்நாளில் இந்த தேசத்தின் விடுதலைக்காக நடைபெற்ற போராட்டங்களையும். அதில் கலந்து கொண்டு நம் முன்னோர்கள் செய்த தியாகங்களையும் நினைவு கூர்வது நமது கடமையாகும்.
இந்த தேசத்தை அன்னியர்கள் அடிமைப் படுத்த முனைந்த போதும், தேசத்திற்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்பட்ட போதும் நமது முன்னோர்கள் “என்ன நடந்தால் நமக்கென்ன” என்று இருந்திடாமல் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் துறந்து இந்த தேசத்தை பாதுகாத்தார்கள். இந்த உணர்வுகள் மேலோங்க வேண்டிய தருணம் நம் தேசத்தின் குடி மக்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வை மக்கள் கொண்டாட்டமாக மாற்றும் விதத்திலும், சுதந்திர உணர்வையும், கடந்த பல வருடங்களாக நாடு முழுவதும் சுதந்திர தின நிகழ்ச்சிகளையும் முக்கிய நகரங்களில் “சுதந்திர தின அணி வகுப்பையும்” பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது. இந்த அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 15ல் தமிழகத்தில் மதுரை, நாகை, இளையான் குடி ஆகிய நகரங்களில் “சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி” நடைபெறும். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து உரையாற்ற உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

12:33 PM | தலைப்பு: , , , | Read More »

அம்மா?வின் அடுத்த திட்டம்...!?


சென்னை: தமிழகத்தில் உள்ள இந்து மத ஏழை எளியவர்களில் புனித யாத்திரை மேற்கொள்ளும் 500 பேருக்கு, ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஜாதி மதங்கள் பாரோம் என்ற பாரதியின் கூற்றுப்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களையும் சமமாக கருதி, அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வகை செய்யும் வகையிலும், அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையிலும், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் புனித யாத்திரை மேற்கொள்வதற்கும், இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளவும், அரசு சார்பில் உதவி செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது.
அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கிறிஸ்துவர்களின் புனித தலமான ஜெருசலேம் சென்று வருவதற்கு, முதற்கட்டமாக 500 கிறிஸ்துவர்களுக்கு அரசு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான நேபாள நாட்டிலுள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் இந்துக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், மானசரோவர் புனித யாத்திரைக்கு செல்ல இந்திய வெளியுறவுத் துறையால் தேர்வு செய்யப்படும் தமிழகத்தை சேர்ந்த 250 இந்துக்கள், முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளும் 250 இந்துக்கள் என்று மொத்தம் 500 பேருக்கு ஆண்டுதோறும் அரசு மானியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு (2012-13) மானசரோவர் புனித பயணத்திற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்றுவர ஒரு நபருக்கு ஆகும் மொத்த உத்தேச செலவான ரூ.1 லட்சத்தில் பயண செலவில், ரூ.40,000 வீதம் 250 நபர்களுக்கென ரூ.1 கோடியும், முக்திநாத் புனித பயணத்திற்கு சென்னையில் இருந்து ரயில் மூலம் சென்று வர ஒரு நபருக்கு உத்தேச செலவான ரூ.25 ஆயிரத்தில், ரூ.10 ஆயிரம் வீதம் 250 யாத்ரிகர்களுக்கு ரூ.25 லட்சம் என்று மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த யாத்திரைக்கான அரசு மானியம் பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதிக்குள் இந்து சமய அறநிலையத்துறையால் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்படும். இதில் கிடைக்க பெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான பயனாளிகளை விதிகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யும் பணியை இந்துசமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.
அரசின் இந்த நடவடிக்கைகள், மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகிய புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை செல்ல விரும்பும் இந்துக்களின் கனவு, குறிப்பாக பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளவர்களின் கனவு நனவாகிட பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

4:39 PM | தலைப்பு: , , | Read More »

சைக்கோ' மனிதன் கத்தியால் குத்தி 3 பேர் பலி!

ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் பயணித்த சைக்கோ மனிதன் சரமாரியாக சக பயணிகளைக் கத்தியால் குத்தியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
ஆந்திர மாநிலம் பத்திராச்சலத்திலிருந்து சென்னைக்கு ஒரு பேருந்து நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. அதில் 24 பேர் பயணித்தனர். பேருந்து சூளூர்ப்பேட்டையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென எழுந்த ஒரு நபர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதை எதிர்பார்க்காமல் நிலை குலைந்தனர் குத்துப்பட்டவர்கள்.
சைக்கோ மனிதன் நடத்திய இந்த வெறியாட்டத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நான்காவது நபரை கத்தியால் அந்த நபர் குத்தியபோது அவர் போட்ட அலறலால் பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். விளக்கைப் போட்டார்.
மேலும் மற்ற பயணிகளும் விழித்தெழுந்தனர். இதைப் பார்த்த அந்த மர்ம நபர் வேகமாக பேருந்தை விட்டுக் கீழே குதித்து ஓடி விட்டார்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் சூளூர்ப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த நபரையும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவரது பெயர் ரமேஷ், சென்னையைச் சேர்ந்தவர், என்ஜினியர் என்று தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த மூன்று பேரில் 2 பேர் ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்தவர். ஒருவர் ஒடிசாவைச் சேர்ந்தவர்.
இரவு நேரத்தில் ஓடும் பேருந்தில் சைக்கோ மனிதர் நடத்திய இந்த வெறியாட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

3:55 AM | தலைப்பு: , , | Read More »

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ.

 
தமிழக மீனவரை படுகொலை செய்த அமெரிக்க கடற்படையை கண்டித்தும், சில்லரை வர்த்தகத்தில்  நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கக்கோரி, இந்தி யாவை அச்சுறுத்தும் ஒபாமாவை  கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ. கட்சி அமெரிக்க தூதரகம் முன்பு முற்றுகை போராட்டத்தை இன்று காலை 11 மணிக்கு மேல் நடத்தியது. இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட எஸ். டி.பி .ஐயினர் கலந்துகொண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

1:07 AM | தலைப்பு: , , | Read More »

"யாரைக்கேட்டு என் தொகுதிக்குள் வந்தீங்க...?' அமைச்சரை மிரட்டிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,

கோவை :கோவையில், பொதுமக்கள் முன்னிலையில், தமிழக உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை "மிரட்டிய' அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சியின் சிறப்பு தூய்மைக்குழு துவக்க விழா நேற்று காலை நடந்தது. உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் முனுசாமி, மேயர் வேலுசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட மருதம் நகரில் சமநிலைத் தொட்டி கட்டுமான பணியை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். அப்போது, அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த, கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, "யாரைக்கேட்டு என் தொகுதிக்குள் வந்தீங்க...?' எனக்கேட்டு அமைச்சருடன் வாக்குவாதம் செய்தார். அருகிலிருந்த கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., துரைசாமி, ஆறுக்குட்டியை சமாதானம் செய்ய முயன்றார். எனினும், அவர் தொடர்ந்து சத்தம் போட்டபடியே இருந்தார். நிலைமை மோசமாவதை கண்டு சுதாகரித்து கொண்ட அமைச்சர் முனுசாமி, ஆறுகுட்டியை சமாதானப்படுத்த முயன்றார். அதற்கு அவர், "யாரைக் கேட்டு என் தொகுதிக்குள் வந்தீங்க...? சும்மா வந்துபோற இடம்முனு என் தொகுதியை நினைச்சீங்களா? குரும்பபாளையம் பக்கம் வந்து பாருங்க, எங்காளுக உங்கள போக விடமாட்டாங்க...' என்றார்.அதற்கு அமைச்சர் முனுசாமி, " ஆறுக்குட்டி, ப்ளீஸ் ஒத்துழைங்க, இனிமேல் தவறு நடக்காம பார்த்துக்குவோம்' என்றார். அவ்வாறிருந்தும், ஆறுக்குட்டி சிறிதும் சமாதானம் அடையாமல் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார். "இந்த விஷயம் "அம்மா' காதுக்கு போகட்டும்; என் தொகுதியில நடக்கற விழா பத்தி என்கிட்ட ஏன் சொல்லலைன்னு கேக்குறது என் உரிமை,' என, ஆவேசம் குறையாமல் பேசிக்கொண்டே இருந்தார். அவரை எம்.எல்.ஏ., க்கள் துரைசாமி, வேலுமணி ஆகியோர் குறுக்கிட்டு சமாதானம் செய்தனர். அதன்பின், கையெடுத்துக் கும்பிட்டவாறு காரில் ஏறி கிளம்பினார் அமைச்சர் முனுசாமி. ஆறுக்குட்டியின் ஆவேசத்தால் "அப்செட்' ஆன பிற பிரமுகர்கள், அதிகாரிகள், நிகழ்ச்சியை ரத்துசெய்து கிளம்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி கூறுகையில், ""அமைச்சர் வருகை குறித்து எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை. என் ஊர் இது. நான் பாடுபடும் மண். என்னிடம் சொல்லாமல் யாராவது உள்ளே வரலாமா,'' என்றார். எம்.எல்.ஏ.,வின் புகார் குறித்து மாநகராட்சி தரப்பில் விசாரித்தபோது, "மாநகராட்சி கமிஷனர் மற்றும் மண்டல உதவி ஆணையர் மூலமாக, அமைச்சர் வருகை குறித்து, ஆறுக்குட்டிக்கு முறையாக தகவல் தெரிவித்து விட்டோம்' என்றனர். கட்சியினர் "அப்செட்':அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சரை, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஒருவரே மிரட்டும் தோரணையில் பேசியதை கண்டு, உடனிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கட்சி பிரமுகர் ஒருவர் கூறுகையில், "தனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என, அமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் பேசி, ஆதங்கத்தை எம்.எல்.ஏ., தெரிவித்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு, பொதுஇடத்தில் இப்படி நடந்துகொண்டிருக்க தேவையில்லை. அமைச்சரை தன் தொகுதிக்கு அழைத்துச் சென்று கோரிக்கைகள் குறித்து விளக்கியிருக்கலாம்; அதுவே சரியான அணுகுமுறை' என்றார்.

1:11 AM | தலைப்பு: , , , | Read More »

கிடப்பில் காட்டுப்பள்ளி துறைமுகம்

சரக்குகளை கையாள முடியாமல் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் நெருக்கடியில் இருக்கும் நிலையில், சென்னைக்கு அருகிலேயே கட்டி முடிக்கப்பட்டும் கூட, காட்டுப்பள்ளி துறைமுகம் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் கூட, சுங்க வரி சோதனை அலுவலகம் அமைப்பதற்குரிய ஒப்புதலை மத்திய அரசு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், இந்த துறைமுகத் திறப்பு விழா தள்ளிப் போகிறது. கால தாமதம் :சென்னை, எண்ணூர் ஆகிய இரண்டு துறைமுகங்களிலும் சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால், கப்பலில் வந்திறங்கும் சரக்குகளை, துறைமுகத்தை விட்டு வெளியில் கொண்டு வருவதற்கு மிகுந்த கால தாமதம் ஆகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக, சென்னைக்கு அருகே எண்ணூரில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் காட்டுப்பள்ளி என்ற கிராமத்தில், துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஐ.மு., கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தின் போது தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி இருந்தபோது, இதற்கான பணிகள் ஆரம்பமாகின.கட்டுமானத் துறையில் பெரிய அளவில் புகழ் பெற்று விளங்கும், "எல் அண்ட் டி' நிறுவனம் சார்பில் இந்த துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. காட்டுப்பள்ளி துறைமுகத்தின் உரிமையாளர் இந்த நிறுவனம் தான். இருப்பினும் இந்த திட்டத்தில், தமிழக அரசின் நிறுவனமான டிட்கோவுக்கும் பங்களிப்பு உள்ள வகையில் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் ஆரம்பமாகின. டிட்கோ நிறுவனத்திற்கு இந்த நிறுவனத்தில் 10 சதவீதம் வரை பங்குகள் இருப்பதால், அரசாங்க துறைமுகம் போலவே கருதப்பட்டு வந்தது. நெருக்கடி நீங்கும்:ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு, ஒரு துறைமுகத்திற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டன. வெறும் துறைமுகமாக மட்டும் இல்லாமல் கப்பல் கட்டும் வசதிகளும், சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்பட்டு வந்தது. இதனால், மிகுந்த எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் காட்டுப்பள்ளி துறைமுகம் பெற்றது. சரக்குகளை கையாள்வதில் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு உள்ள நெருக்கடிகள் விரைவில் நீங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஒப்புதல் இல்லை:ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த துறைமுகம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டும்கூட இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்கு துறைமுகத்தில் அமைக்கப்படவேண்டிய சுங்கவரிச் சோதனை அலுவலகத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காமல் இருப்பதே மிக முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. எந்த ஒரு துறைமுகமாக இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமாக விளங்குவது சுங்கவரிச்சோதனை அலுவலகம்தான்.கப்பலில் இருந்து வரும் சரக்குகளை சோதனையிட்டு அவற்றுக்கு சுங்கவரிச்சோதனை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே சரக்குகளை துறைமுகத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்லவே இயலும். ஆகவே ஒரு துறைமுகத்திற்கு ஆன்மா போல விளங்கும் சுங்கவரிச்சோதனை அலுவலகம் அமைப்பதற்குண்டான கட்டிடம், இயந்திரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்த துறைமுகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் அரசின் ஒப்புதல் மட்டும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. காரணம் என்ன?சுங்கவரிச்சோதனையில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகுந்த பற்றாக்குறையாக உள்ளது. இதனால்தான் சுங்கவரிச் சோதனை அலுவலகத்துக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் மத்திய அரசு வட்டாரங்களில் காரணங்கள் கூறப்படுகிறது. பொதுவாக சுங்கவரிச்சோதனையில் ஈடுபட திறமைவாய்ந்த அதிகாரிகளே தேவைப்படுவார்கள். அதுபோன்ற அதிகாரிகள், தற்போது பிற துறைமுகங்களிலுமே கூட குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர். இதன்காரணமாக, காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.பொதுவாக சுங்கவரிச்சோதனை குறித்த விவகாரங்கள் எல்லாமே மத்திய அரசின் நிதித்துறை இலாகாவின் கீழ் வருகிறது. மத்திய நிதியமைச்சகம்தான் இவற்றுக்கு எல்லாம் அனுமதி அளித்திடவேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவரான பழனிமாணிக்கம்தான் மத்திய நிதித்துறையில் இணை அமைச்சராக உள்ளார். அதிலும் சுங்கவரித்துறை குறித்த விவகாரங்கள் எல்லாம் இவரது கட்டுப்பாட்டின் கீழ்தான் வருவதாக தெரிகிறது. இருந்தும்கூட என்ன காரணத்தினாலோ பிரச்னைகள் தீர்க்கப்பட்டு ,காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு சுங்கவரிச் சோதனை அலுவலகம் அமைப்பதற்கு தேவையான அனுமதி கிடைக்காமல் இருந்து வருகிறது. மாற்று யோசனை:இதற்கிடையில் மாற்று ஏற்படாக சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் உள்ள சுங்கவரிச்சோதனை அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்ற யோசனையும் பரிசீலிக்கப்படுகிறது. ஆனாலும் ஒரு துறைமுகத்தின் அனுமதி பெற்று வந்து மற்றொரு துறைமுகத்திற்குவந்து சுங்கவரிச்சோதனை நடத்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் கருதப்படுதால் காட்டுப்பள்ளி துறைமுகத்தின் சிக்கல் நீடித்தபடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெ., மன்மோகன்தேதி கிடைக்கலயா: ஆரம்பத்தில் இருந்தே இந்த துறைமுகம், அரசுக்கு சொந்தமான துறைமுகமாவே கருதப்பட்டு வருகிறது. தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்திற்கும் பங்குகள் இருப்பதால், சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலுமே அரசின் துறைமுகமாகவே முன்னிறுத்தப்பட்டு வந்தது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான துறைமுகம் என்றாலும், டிட்கோ சம்பந்தப்பட்டுள்ளதால் தமிழக முதல்வரை வைத்து திறப்புவிழா நடத்த வேண்டுமென்று அதிகாரிகள் விரும்புகின்றனர். ஆனால் எல் அன் டி நிறுவனமோ பிரதமரையும் அழைத்துவந்து திறப்பு விழா நடத்த வேண்டுமென கருதுகிறது. முதல்வருக்கும் பிரதமருக்கும் ஒருசேர தேதி கிடைக்காமல் இருப்பதாலேயே திறப்புவிழா தள்ளிப்போய்க் கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆக விஐபி க்களின் தேதி கிடைக்காத காரணத்திற்காவே காலதாமதம் ஆகும் தமிழக திட்டங்களில் காட்டுப்பள்ளி துறைமுகமும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆந்திராவுக்கு போன கதை:நாட்டின் கிழக்கு கடற்கரை முழுவதும் மேலும் சில மிகப்பெரிய துறைமுகங்களை அமைப்பது என்ற முடிவு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டது. அப்போது இதே காட்டுப்பள்ளியைச் சுற்றியுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு துறைமுகம் அமைக்க முடிவானது.மத்திய அரசே பல்லாயிரம் கோடிகளை செலவு செய்து இங்கு துறைமுகம் கட்டுவதாக இருந்தது. இதனால் சென்னை, எண்ணூர் ஆகியவற்றோடு சேர்ந்து காட்டுப்பள்ளி துறைமுகமும் தமிழகத்துக்கு கிடைத்து இருக்கும். ஆனால் சில தலையீடுகள் காரணமாக கைநழுவி எல் அன் டி வசம் இந்த காட்டுப்பள்ளி போய்விட்டது. தமிழகத்தின் கிழக்கு கடற்கரைக்கு மத்திய அரசால் அமைக்கப்படவிருந்த அதே துறைமுகம், இப்போது ஆந்திராவுக்கு சென்றுவிட்ட சோகத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். -நமது டில்லி நிருபர்-

1:11 AM | தலைப்பு: , , , | Read More »

வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தது சரிதான் ஆலோசனை குழு உறுதி

தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு உள்பட ஏராளமான வழக்குகள் சேலம் மாவட்ட போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டு ஜெயிலில் அடைக்க சேலம் போலீஸ் கமிஷனர் கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை உறுதி செய்வதற்காக ஆலோசனைக் குழு முன்பு ஆவணங்கள் போலீசார் தாக்கல் செய்தனர். ஆலோசனைக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். ராமன், உறுப்பினர்களாக நீதிபதிகள் ஜி. மாசிலாமணி, ஆர்.ரகுபதி ஆகியோர் ஆவணங்களை ஆய்வு செய்தனர். பின்னர் கடந்த 11-ந் தேதி வீரபாண்டி ஆறுமுகம் ஆலோசனைக் குழு நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆலோசனை குழு நீதிபதிகள் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து நேற்று ஆணை பிறப்பித்தனர்

11:34 PM | தலைப்பு: , , , | Read More »

இந்திய ஹாஜிகளுக்கு இலவச சிம் கார்டு... :-)


இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு இலவச சிம் கார்ட் வழங்கப்பட உள்ளது. 

சவுதி அரேபியத் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சிம் கார்டுகளை இந்திய ஹஜ் கமிட்டி, புனித யாத்திரை செல்பவர்களுக்கு, இலவசமாக வழங்க உள்ளதாக ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர்களின் தொலைபேசி எண்கள் அனைத்தும் இந்த சிம் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்தார். மக்காவில் உள்ள அதிகாரிகளின் எண்களும், அவசர கால சேவைப் பிரிவுகள் எண்களும் இதில் இடம் பெறும் என்றும் அபூபக்கர் குறிப்பிட்டார்.

3:27 PM | தலைப்பு: , , , | Read More »

அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளின் ”விடுதலையை நோக்கி” கருத்தரங்கம்

இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ”விடுதலையை நோக்கி” என்ற தலைப்பில் கருத்தரங்கத்தினை  சென்னை லயோலா கல்லூரி பி. எட். ஹாலில் 7.7.2012 அன்று மாலை நடத்தியது. 10 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை கைதிகளாகவும், பொய் குற்றச்சாட்டுகளுடனும் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளையும், அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோரி  தொடர் பொதுக்கூட்டத்தினை இவ்வியக்கத்தின் தலைமை ஒருங்கினைப்பாளர் சே.ஜே. உமர்கயான்  அவர்கள் நடத்திவருகின்றார்.


 சென்னை லயோலா கல்லூரி பி. எட். ஹாலில் நடைபெற்ற கருத்தங்கத்தில் பல்வேறு அமைப்புகளை சார்ந்த தலைவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்கள். தற்போது தமிழகத்தின் பல்வேறு அமைப்புகள் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டங்களை நடத்திவருகின்றது. அரசும் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளின் நல்வாழ்விற்கு அவர்களை விடுதலைசெய்ய வேண்டுமாய் அன்பாய் வேண்டுகிறோம்.


எழுச்சியுரை ஆற்றியோர்கள்,,,,,,,,,,,,,,


தெஹ்லான் பாக்கவி - SDPI

குனங்குடி ஹனிபா

முனீர் -INTJ

தடா ரஹீம்- தேசிய லீக்

உமர்கயான் - தலைமை ஒருங்கினைப்பாளர்

சகோதரி ஆயிஷா


11:29 AM | தலைப்பு: , , , | Read More »

காவல்துறைக்கு எதிராக பாப்புலர் பிரண்ட் கண்டனப் பொதுகூட்டம்


இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் கடந்த ஜூன் 25ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியா சார்பாகநடைபெற்ற ஆரோக்கியம் சம்பந்தமான பயிற்சி முகாம் நடைபெறும் போது அனுமதியில்லாமல் அத்துமீறி நுழைந்த காவல் துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் 30 நபர்களை தீவிரவாதிகள் என்று கைது செய்து ஒரு மாபெரும் கபட நாடகத்தை அரங்கேற்றி முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
இந்த மாபாதக செயலை முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு காவல்துறை மற்றும் உளவுத்துறையின் சதியை உடைத்தெறிந்து கைது செய்யப்பட்ட  முஸ்லிம்களை மீட்டெடுத்தது ஒற்றுமையின் வெற்றி.
இச்சம்பவத்தை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியா காவல்துறை மற்றும் உளவுத்துறையின் சதியை ஊரறிய துண்டு பிரசுரங்கள் மூலம் அம்பலப்படுத்தியது. இந்நிலை முஸ்லிம்களுக்கு மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியா சார்பாக ஒரு கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதென தீர்மானித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் இராமநாதபுரம் நகர தலைவர் பரக்கத்துல்லாஹ் ஜுன் 30ந் தேதி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு மனு கொடுத்தார்.காவல்துறையோ பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழித்துக் கொண்டே இருந்தது. இந்த தேசத்தில் முஸ்லிம்கள் பொதுக்கூட்டம் நடத்துவதென்றாலும் பெரும் போராட்டம் தான். இறுதியாக ஜூலை 5ந் தேதி இரவு 12 மணிக்கு அனுமதி வழங்கப்பட்டது நள்ளிரவில் சுதந்திரம் போன்று தான் இருந்தது.
ஜுலை மாலை 7:10க்கு ஒற்றுமை கீதத்துடன் துவங்கிய பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் மு.செய்யது ஹாலிது தலைமையேற்று வரவேற்று பேசினார்.
பொதுக் கூட்டத்திற்கு பெரியபட்டினம்பனைக்குளம்புதுவலசைசக்கரகோட்டைகீழக்கிடாரம்சாயல்குடிஇருவேலி,சித்தார்கோட்டைபிரப்பன்வலசைஇருமேனிகீழக்கரைகங்கைகொண்டான்பரமக்குடிபண்ணக்கரைஇராமநாதபுரம் ஆகிய ஊர்களின் ஜமாத்சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்.....

சோஷியல் டெமக்ரடிக் கட்சியின்(SDPI) மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன்துணைத்தலைவர் அப்துல் வஹாப்பொது செயலாளர் இஷ்ஹாக்செயலாளர் செரீஃப்பொருளாளர் சோமுசோஷியல் டெமாக்ரடிக் டிரேட் யுனியனின்(SDTU) மாவட்டஒருங்கிணைப்பாளர் கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்டன உரையின் துவக்கமாக சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின்(SDPI) மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி உரையாற்றினார். அவர் தனது உரையில் இந்திய தேசத்தில் நடைபெறும்  முஸ்லிம்களுக்கு எதிரான காவல்துறை மற்றும் உளவுத் துறையின் அராஜகப் போக்கை பல்வேறு சம்பவங்களை கூறி கண்டித்தார்.
அவரைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞ்ர் R.அழகு மணி இந்திய அரசியல் சாசன சட்டம் அனைவருக்கும் சமம் என்றும் இந்தியா அரசியல் அமைப்பு சட்டம் 19A கூறும் ஆயுதங்களின்றி எங்கு வேண்டுமானாலும் கூடலாம்’ என்ற க்ஷரத்தை எடுத்துக்கூறி காவல்துறையின் அத்துமீறலை எடுத்துரைத்தார்.
அவரைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் தேசிய அளவிலான பணிகளையும்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேச நல பணிகளையும்காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அத்துமீறலையும்அராஜகப்போக்கையும்முஸ்லிம் விரோதப் போக்கையும்முஸ்லிம்களுக்கெதிரான அரசு பயங்கரவாதத்தைஇந்திய தேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரானநடவடிக்கைகளை தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் அவர் தனது உரையில் இது போன்ற முஸ்லிம்களுக்கெதிரான அத்துமீறல் தொடருமானால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியா காவல்துறை மற்றும் உளவுத்துறையின் சதியை மக்கள் மன்றத்திலே தோலுறிக்க தயங்காது என்று சூளுரைத்தார்.
இறுதியாக சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின்(SDPI) மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க நினைத்த காவல்துறையை கண்டித்தார்.
கண்டன  பொதுக்கூட்டத்தின் தீர்மானங்களான, 25/06/2012 அன்று அத்துமீறிய காவல்துறையின் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும்கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்திய ஏ.சி ரத்தினசபாபதி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்ஐந்தாவது தூணாக கருதப்படும் பத்திரிகைத்துறை நடுநிலையோடு நடக்க வேண்டுமெனவும், 7 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்யக் கோரியும்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் பெரியபட்டினம் நகர தலைவர் சலீம் தீர்மானங்களை நிறைவேற்றினார்.
இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் இராமநாதபுரம் நகர தலைவர் பரக்கத்துல்லாஹ் நன்றியுரையாற்றினார்.
கண்டன பொதுக்கூட்டத்திற்கு ஆண்கள்பெண்கள்குழந்தைகள் என 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்

2:00 PM | தலைப்பு: , , | Read More »

மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த கோரி இந்து மகா சபா ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு இந்து மகா சபாவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சுனில்குமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ பேசியதாவது:- இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதற்காக எங்களது தமிழ்நாடு இந்து மகா சபா தொடர்ச்சியாக போராடி வருகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்த இந்து உணர்வுகளின் கொந்தளிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மத மாற்ற சட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும். நமது மண்ணின் மரபையும் கலாச்சாரத்தையும் காக்க வேண்டும். சிங்கம், மான், யானை புலிகளைக் காப்பாற்ற சட்டம் உள்ளது போல் மனித குலத்திற்கே தாயாக விளங்கும் பசுவை காக்க பசுவதை தடை சட்டத்தை உடனடியாக அமுல் படுத்த வேண்டும். மதத்தின் பெயரால் தவறு செய்பவர்களை அடையாளம் காண வேண்டும். ஆன்றோர்களும், சான்றோர்களும் காட்டிய அறவழிகளை காக்க வேண்டும். நமது பண்பாட்டில் அன்னியர் குறுக்கிடுவதை தடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை இங்கே நடத்தியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். இதில் தமிழ்நாடு இந்து மகா சபா துணைத்தலைவர் ராஜசோபால்பை, ராஜன், யுவராஜ், அருண்பிரசாத், செல்வகுமார், கோபால கிருஷ்ணன், விமல்ராஜ், ரஞ்சித்குமார், விஜயகுமார், ராஜ்குமார், கண்ணகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

12:49 PM | தலைப்பு: , , , | Read More »

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டி NWF போராட்டம்


முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தமிழகத்தின் பல பாகங்களில் நடத்தியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியை முன்னிட்டு 7 ஆண்டுகள் கழிந்த ஆயுள் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்வதுண்டு. ஆனால் இது முஸ்லிம் கைதிகளுக்கு மட்டும் விதிவிலக்காக இருக்கின்றது. சென்ற தி.மு.க ஆட்சியின் போதும், இப்போது ஆ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 1 வருடம் நிறைவடைந்த போதிலும் முஸ்லிம் கைதிகளிடத்தில் பாரபட்சமாகவே நடந்து வருகின்றது.

முஸ்லிம் கைதிகளில் பெரும்பாலானோர் விசாரணை கைதிகளாக  இருக்கும்போதே தண்டனை காலமான 7 வருடங்களை பூர்த்தி செய்துவிட்டனர். இருந்த போதிலும் தமிழக அரசு இது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனை கருத்தில் கொண்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்து அவர்களது குடும்பத்தில் ஒளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.





சென்னையில் நடைபெற்ற பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்லாம்யில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவி நஃபீஸா பானு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பா. புகழேந்தி சிறப்புரையாற்றினார்கள்.


மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினருமான முஹம்மது யூசுஃப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  




நெல்லையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் S.பாத்திமா கனி, தூய சவேரியர் கல்லூரியின் உதவி பேராசிரியர் P.சாந்தி ஆகியோர் கோரிக்கையுரையற்றினார். 

இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள், நீதியாளர்கள், முஸ்லிம் பெண்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.






1:21 AM | தலைப்பு: , , , , | Read More »

தமிழகத்தில் உலா வரும் 2,000 போலி "டாக்டர்கள்': இந்திய மருத்துவ சங்க ஆய்வில் அதிர்ச்சி தகவல்


சென்னை : தமிழகம் முழுவதும், 2,000க்கும் மேற்பட்ட போலி சித்த மருத்துவர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சித்த மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டதாக, போலி சான்றிதழை வைத்துக் கொண்டு, சித்த மருத்துவம் தொடர்பாக, எவ்வித பட்டமோ, தகுதியோ பெறாமல், 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் இருப்பதாகவும், பாரம்பரிய மருத்துவ முறை மூலம் சிகிச்சை அளிக்கும் அறிவு இருப்பதாகவும் கூறி, கவுன்சிலின், "பி, சி' சான்றிதழ் மற்றும் டாக்டர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு, பலர் சிகிச்சை அளித்து வருகின்றனர். பதிவு:இவர்களது சான்றிதழ்களில், ஓய்வு பெற்ற பதிவாளர்களின் கையெழுத்துகள் இடம்பெற்றுள்ளன. அதனால், இந்திய மருத்துவ முறை மருத்துவர்களுக்கான கூட்டுறவு மருந்தகம் மற்றும் கடைகளுக்கான அமைப்பு (இம்ப்காப்ஸ்), இவர்களது சான்றிதழ்களை பதிவு செய்து கொண்டு, சிகிச்சையளிக்க அனுமதித்து வருகிறது.ஆனால், இந்த சான்றிதழ்கள் முழுக்க முழுக்க போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டவர்களில், 2,000 போலி டாக்டர்கள் இருப்பதாக, மாநில சித்த மருத்துவக் கவுன்சிலுக்கும், "இம்ப்காப்ஸ்'க்கும் கடந்த 2010ம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், அவர்கள் தொடர்ந்து சிகிச்சையளிக்க அனுமதிக்கப்படும் நிலை நீடிக்கிறது. சட்டம் அமல்: "பி, சி' மற்றும் பட்டியல் அடிப்படையில் பணிபுரியும் சித்த மருத்துவர்கள், பாரம்பரிய மற்றும் கிராமப்புறங்களில் சட்டப்பூர்வமாக பணிபுரிவதற்காக, தமிழ்நாடு சித்த மருத்துவ முறை சட்டம், 1997ல் அமல்படுத்தப்பட்டது.ஆனால் இந்த முறை, 2002ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டது. அதனால், இந்த முறையிலான மருத்துவர்கள், 60 வயதை அடைந்தவர்களாகத் தான் இருக்க முடியும். ஆனால், 30 வயது நிரம்பிய பலர் தற்போது இந்த முறை மூலம் சித்த மருத்துவச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்த போலி சான்றிதழ்கள், 1997 மற்றும் 1998ம் ஆண்டுகளில் பெறப்பட்டது போல் முன்தேதியிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில், 4,000 முதல் 8,000 வரை என்ற வரிசை எண்படி பெறப்பட்ட இந்த சான்றிதழ்களில் அச்சிடப்பட்டுள்ள எழுத்துக்கள், முத்திரைகள் வேறுபட்டுள்ளன.மேலும், 30 முதல் 40 வயது நிரம்பியவர்கள், "பி, சி' சான்றிதழ்களுடன் சிகிச்சை அளித்து வருவதே முதலில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து, மாநில சித்த மருத்துவக் கவுன்சிலிடம் புகார் செய்யப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், 2,000 சான்றிதழ்களில் 400 போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிராகரிப்பு:இது குறித்து, இந்திய சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்கத்தினர், தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கும், மாநகர போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்துள்ளனர். இது குறித்து, "இம்ப்காப்ஸ்' தலைவர் ராமலிங்கம் கூறுகையில், ""சமீபத்தில் 1,000 போலி சான்றிதழ்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. போலி சான்றிதழ் புழக்கத்தில் இருப்பது தெரியவந்தவுடன், பல உறுப்பினர்களின் பதிவு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல், புதுப்பித்தலும் நிறுத்தி வைக்கப்பட்டது. போலி சான்றிதழ் குறித்து மாநில சித்த மருத்துவக் கவுன்சிலுக்கும், இந்திய மருத்துவ முறைக்காக மத்திய குழுவுக்கும் சான்றிதழ்கள் அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகே பதிவு செய்யப்படுகிறது,'' என்றார். இதற்கிடையில், கடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களை, "இம்ப்காப்ஸ்' சித்த மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்பி சோதனை செய்தது. இதில், 115 சான்றிதழ்கள் போலி என்பது கண்டறியப்பட்டது. "இம்ப்காப்ஸ்' இயக்குனர்கள் கூட்டத்தில் இந்த 115 சான்றிதழ்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டம் என்ன சொல்கிறது :தமிழ்நாடு சித்த மருத்துவக் குழு சட்டத்தில் கூறியிருப்பதாவது: * இந்திய மருத்துவ முறைக்கான மத்திய வாரியம், இந்திய மருத்துவ முறைக்கான சென்னை அல்லது தமிழ்நாடு வாரியம் ஆகியவை, இந்திய மருத்துவ முறையில் பாரம்பரிய அல்லது மரபுரிமை அடிப்படையில் பயிற்சி பெற்ற சித்த மருத்துவர்களுக்கு சான்றிதழ் அளிக்கலாம். * 1970ம் ஆண்டு இந்திய மருத்துவ முறை மத்தியக் குழு சட்டத்தின் படி, அனுபவ அடிப்படையில் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு, சான்றிதழ் அளிக்கலாம். * நிறுவனம் சாராமல் பயிற்சி பெற்றவர்களுக்கு, வாய்மொழித் தேர்வு மூலம் சான்றிதழ் அளிக்கலாம்.

1:35 PM | தலைப்பு: , , | Read More »

அடையாள அட்டை...

தமிழகத்தில், 36 லட்சம் பேரிடம் உடல் அடையாளக் கூறுகளை, தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்து, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்திற்கு அனுப்பியும், இன்னமும், "ஆதார் எண்'களைப் பெற முடியவில்லை. இதன் பாதிப்பால், உடற்கூறு முறையிலான பதிவுகளின் அடிப்படையில், மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என, தமிழக அரசின் அறிவிப்பும் தாமதமாகும் எனத் தெரிகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் மேற்பார்வையில், "ஆதார்' அடையாள அட்டைக்கு விவரம் சேகரிக்கும் பணி, கடந்தாண்டு அக்., 25ல், தபால் துறை மூலம் தமிழகத்தில் துவக்கப்பட்டது. பல்வேறு பணிகள் மற்றும் தேசிய அளவில் பயன்படுத்தப்படும் அட்டையாகவும் அமையும் என்ற எதிர் பார்ப்பு எழுந்தது. மோதல்:இதற்காக, நந்தன் நீல்கனி தலைமையிலான குழு சிறப்பாக ஆவணங்களைத் திரட்டியது. ஆனால், அடையாள அட்டை ஆணையத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும், விவரங்களை யார் சேகரிப்பது என்பதில் மோதல் ஏற்பட்டது.பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி, உள்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது. இரு அமைப்புகளுக்கும் இடையே எழுந்த பிரச்னையால், நாடு முழுவதும் அடையாள அட்டைக்கு விவரங்கள் சேகரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. சுமுக முடிவு : இந்த பிரச்னைகளுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், சுமூக முடிவு காணப்பட்டது. அதன்படி, பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், 60 கோடி பேருக்கும், மக்கள் தொகை பதிவகம், 60 கோடி பேருக்கும் அங்க அடையாளங்களை சேகரிக்கலாம் என முடிவானது.ஏற்கனவே, தமிழகத்தில், 23 மாவட்ட தலைமை தபால் நிலையம் உட்பட, 28 இடங்களில், அடையாள அட்டை ஆணையம் மேற்பார்வையில் பணிகள் நடந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் மக்கள் தொகை பதிவகத்தின் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் துவக்கி வைத்ததால், யார் தமிழகத்தில் விவரங்களை சேகரிப்பர் என்ற குழப்பம் இருந்தது."தமிழகத்தை பொறுத்தமட்டில், இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், அடையாளக் கூறுகளின் விவரங்கள் சேகரிக்கும் பணியை மேற்கொள்ளாது. இதை, தேசிய மக்கள் தொகை பதிவகமே மேற்கொள்ளும்,' என அறிவிக்கப் பட்டது. 9 மாவட்டங்கள்:அதன்படி, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கரூர், திருவண்ணாமலை, மதுரை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில், அடையாள கூறுகளின் விவரங்களை சேகரிக்கும் பணியில், தேசிய மக்கள் தொகை பதிவகம் ஈடுபட்டு வந்தது. மேற்குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களில், தேசிய மக்கள் தொகை பதிவகம் இதுவரை, 36 லட்சம் பேரின் அடையாள கூறுகளின் விவரங்களை சேகரித்துள்ளது. தற்போது, இந்த விவரங்களை, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் ஏற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆணையம், 36 லட்சம் பேரின் விவரங்களை ஏற்காததால், அவர்களுக்கு, "ஆதார் எண்' கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.துவங்கவில்லை இதுகுறித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், பதிவிற்கான உபகரணங்கள் அளிப்பது, உபகரணங்களை கையாளும் வல்லுனர்களை நியமிப்பது உள்ளிட்ட செயல்களை, தாமதப்படுத்தி வந்தது.இதுகுறித்து, தமிழக அரசிடம் ஆலோசிக்கப் பட்டது. அதை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள, ஆணையத்திற்கு தமிழக அரசும் கடிதம் எழுதியுள்ளது. இதுவரை, 36 லட்சம் பேரின் அடையாள கூறுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.இந்த விவரங்களை, ஆணையம் ஏற்று, "ஆதார் எண்' வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான பணிகள் துவங்கவில்லை. இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.இதனால், தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலான, "ஸ்மார்ட் கார்டு' திட்டமும் தாமதமாகும் எனத் தெரிகிறது. சிக்கல் வந்தது:கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி அடையாள முறையிலான பதிவுகளின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டில், குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, "ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை முன்னோடி திட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில், 21.69 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தவும் திட்டமிட்டு இருந்தது.இதற்காக, தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்த உடற்கூறு அடையாளங்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப் பட்டது. ஆனால், தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்த விவரங்களை, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் ஏற்காததால், அவற்றை "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு பயன்படுத்துவதிலும், சிக்கல் ஏற்பட்டுள்ளது

12:31 PM | தலைப்பு: , , | Read More »

பான் கார்ட்-PAN Card -ஓர் அறிமுகம்

நம்மில் பலரிடமும் பான் கார்ட் உள்ளது (Permanent Account Number-PAN). ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. பான் கார்ட் பற்றிய சில விளக்கங்கள் இதோ...


பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை. இந்த அட்டை கோரி விண்ணப்பித்து இதைப் பெறலாம். சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.



ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான் கார்ட் உதவுகிறது.



பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் AFZPK7190K என்று வைத்துக் கொள்வோம்.
முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்
டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.



“P” என்றால் அது தனிப்பட்ட நபருடையது. “F” என்றால் Firm, “C” என்றால் Company, “T” என்றால் டிரஸ்ட் (அறக்கட்டளையுடையது) என்று பொருள்.



5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும்.



அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.



பான் கார்ட் வைத்திருப்பது கட்டாயமா?



ஆமாம். பான் கார்ட் மிக மிக அவசியமானதே. வங்கியில் பணப் பரிமாற்றத்துக்கும், வருமான வரித்துறைக்கு நமது கணக்குகளை சமர்பிக்கவும் இது கட்டாயமாகும்.



எப்படி இதைப் பெறுவது?



வருமான வரித்துறையின் Form 49 விண்ணப்பத்தில் இதைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தை www.incometaxindia.gov.inwww.utiisl.co.in or tin-nsdl.comஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.



மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம்.



உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற 

https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையத்தளத்தை நாடலாம்.


இந்திய குடிமகன்கள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.



1. பள்ளி டிசி
2. பிளஸ் டூ சான்றிதழ்
3. கல்லூரி் சான்றிதழ்
4. வங்கிக் கணக்கு விவரம்
5. கிரடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்
6. வாட்டர் பில்
7. ரேசன் கார்ட்
8. வீட்டு வரி ரசீது
9. பாஸ்போர்ட்
10. வாக்காளர் அட்டை
11. ஓட்டுனர் உரிமம்
12. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்



அதே போல விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.



1. மின் கட்டண ரசீது
2. தொலைபேசி கட்டண ரசீது
3. வங்கிக் கணக்கு விவரம்
4. வீட்டு வாடகை ரசீது
5. பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்
6. பாஸ்போர்ட்
7. வாக்காளர் அடையாள அட்டை
8. வீட்டு வரி ரசீது
9. ஓட்டுனர் உரிமம்
10. ரேசன் கார்டு
11. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்


விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.

12:54 PM | தலைப்பு: , , | Read More »

மசூதி சுவர் இடிப்பு: கவுன்சிலர் கைது

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கடைத்தெரு அருகில் உள்ள மஸ்தான் பள்ளித்தெருவில், இஸ்லாமியருக்குச் சொந்தமான மசூதியின் சுற்றுச்சுவரை இடித்த, அ.தி.மு.க., கவுன்சிலர் கண்ணதாசன் மற்றும் அவரது நண்பர் ராஜாவை மன்னார்குடி டி.எஸ்.பி., அன்பழகன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். மன்னார்குடி, மஸ்தான் பள்ளித்தெருவில் உள்ள பழமையான மசூதியின் சுற்றுச்சுவரை, நேற்றுக்காலை 10 மணியளவில் 19வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கண்ணதாசன், அவரது நண்பர் ராஜா ஆகியோர் இடித்து தள்ளினர். இதுகுறித்து மன்னார்குடி டி.எஸ்.பி., அன்பழகனிடம் மசூதி நிர்வாகத்தினர் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், கவுன்சிலர் கண்ணதாசன், ராஜா ஆகிய இருவரையும் டி.எஸ்.பி., அன்பழகன் தலைமையில் போலீஸார் கைது செய்தனர். இத்தகவலை அறிந்த முத்துப்பேட்டை, அதிராம்பட்டிணம், திருவாரூர், நாகூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமிய கமிட்டியினர் திரண்டனர். பாதுகாப்பு கருதி நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

12:39 AM | தலைப்பு: , , | Read More »

மாநகராட்சிக்கு சொந்தமான கிணறு திடீர் மாயம்

சென்னை கன்னிகாபுரத்தில் உள்ள வெங்கடேசபுரம் புதிய காலனி 3-வது தெருவில் இருந்த பொதுக்கிணறு ஒன்று மாயமாகி விட்டதாக அந்த பகுதி பொது மக்கள் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:- கன்னிகாபுரம் பிரைட்டன்ஸ் மெயின் ரோடு அரசு ஆதி திராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதிக்கு எதிரே நீண்ட காலமாக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பொது கழிப்பிடம் இருந்தது. இதில் 80 அடி ஆழம் உள்ள கிணறும், பொதுக் கழிப்பிடத்துக்கான மோட்டார் பம்பு செட்டும் இருந்தது. ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்த பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டார். அதை வாங்கியவர் மாநகராட்சி கழிப்பிடம் பொதுக்கிணறு ஆகியவற்றை மூடி மணல் மேடாக்கினார். தற்போது அங்கு புது வீடு கட்டி குடி இருக்கிறார். ஆதி திராவிடர் விடுதி மாணவர்களும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் இந்த பொது கழிப்பிடத்தை பயன்படுத்தி வந்தோம். கோடை காலத்தில் தீ விபத்து ஏற்பட்டால் இங்குள்ள கிணற்றில் இருந்துதான் தண்ணீர் எடுத்து பயன்படுத்துவோம். இந்த இடத்தை அத்துமீறி ஆக்கிரமித்து விற்பனை செய்ததால், கழிவறை கிணறு அனைத்தையும் மூடிவிட்டு தனி நபர் வீடு கட்டி உள்ளார். எனவே நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த இடத்தை மீட்டு ஆழ்குழாய் கிணறு அமைத்து பொதுக்கழிப்பிடம் கட்டித் தர வேண்டும் என்று வேண்டுகிறோம். இப்படிக்கு பொதுமக்கள், கன்னிகாபுரம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவின் நகல்கள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, கவர்னர், மேயர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் கன்னிகாபுரம் சென்று குறிப் பிட்ட இடத்தில் விசாரணை நடத்தினார்கள். இதில், அங்கு பொதுக் கழிப்பிடம் கிணறு, மோட்டார் பம்புசெட் முன்பு இருந்ததும், பின்னர் அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்து விற்கப்பட்டதும் தெரிய வந்தது. தற்போது அந்த இடத்தில் புதிய வீடு மட்டும் உள்ளது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மேல் நடவடிக்கைக்கு போலீசார் தயார் ஆகி வருகிறார்கள். நிலத்தை ஆக்கிரமித்து விற்றவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை நகரிலேயே கிணறு மாயம் ஆனது குறித்து பொது மக்கள் கொடுத்த புகார் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2:11 AM | தலைப்பு: , , | Read More »

அண்ணா பல்கலைகழக மாணவி தற்கொலை.

கிண்டி பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி தைரிய லட்சுமி (19) கல்லூரி விடுதியறையில் தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் கே வி பாளையத்தை சேர்ந்த கிரமப்புற மாணவியான இவர் 12 வகுப்புத் தேர்வில் 92 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கட்டிடப் பொறியியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்த இம்மாணவி முதல் செமஸ்ட்டரில் குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளார். தமிழ் வழிக்கல்வி பயின்ற இவரால் பொறியியல் படிப்பை தொடர மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால் மணமுடைந்த மாணவி தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
நல்ல மதிப்பெண் பெற்றதால் மிகவும் சிரமத்திற்கு மத்தியிலும் வங்கியில் லோன் எடுத்த படிக்க வைத்தேன்....ஆனால் இப்படி ஒரு முடிவைத்தேடி கொண்டாளே என்று கதறுகின்றார் விவசாயியான அவரின் தந்தை சக்திவேல்.

அக்கல்லூரி வளாகத்தில் இம்மாத்தில் நடக்கும் இரண்டாவது தற்கொலை இது.
தைரிய லட்சுமிகள் கோழை லட்சுமிகளாக ஆகி வருகின்றனர்.

மாணவ சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது?......

11:35 AM | தலைப்பு: , , | Read More »

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 10வரை உயரும்..?

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) தலைவர் ஆர் எஸ் புட்டோலா, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 10 வரை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் ரூ.47 கோடி இழப்பைச் சந்தித்து வருகின்றன என்று அவர் கூறியுள்ளார். கடந்த இரு வருடங்களில் மட்டும், பெட்ரோல் விலை குறைந்த பட்சம் 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் (2011ல்) பெரிய அளவில் பெட்ரோல் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. 
  
பெட்ரோல் விலைஉயர்வுக்கு  அரசின் அதிகப்படியான வரிவிதிப்பே காரணமாக கருதப்படுகின்றது.

9:53 AM | தலைப்பு: , , , | Read More »

அட... இது நல்லாயிருக்கே...!


"இலவச ஆன்லைன் கல்வி"க்காக ஒன்றாம் வகுப்பில் இருந்து +2 வகுப்பு வரை - ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம் படிக்கும் மற்ற படிக்க முடியாத மாணவர்களுக்காக அனைத்து பாடநூல்களையும் தொகுத்து அழகாக ஒரு இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சமச்சீர் கல்வி ஆன்லைன் எஜுக்கேஷனில் 1 - 12 வகுப்பு பாடங்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆங்கில, தமிழ் பாட புத்தகங்கள், செவிலியர் பயிற்ச்சி ஆங்கில மற்றூம் தமிழ் பாடங்கள், மாதிரி வினா தாள்கள், 2009 / 2010 / தேர்வு கேள்விதாள்கள் மற்றூம் இன்னும் நிறைய படிப்பு சம்பந்தமான புத்தகங்களை இனிமேல் இலவசமாக டவுன்லோட் செய்து படிக்கலாம். இதை ஆரம்பிக்கும் எண்ணமும் அதன் பயன்பாடும் குறித்து இந்த இணைய தளத்தை உருவாக்கியிருப்பவர் கூறும் விஷயங்கள்......

"1. இனிமேல் உங்கள் குழந்தை பள்ளியைத் தவிர வேறு எங்கு சென்றாலும் பொதியைச் சுமக்க தேவையில்லை.

2. நீங்கள் எதாவது ஒரு காரணத்திற்காக வெளியூர் சென்றாலும் ஆன்லைனில் படிக்கவும் படிப்பு சொல்லி கொடுக்கவும் மிகவும் எளிதானது.

3. புத்தகங்கள் தொலைந்து விட்டால் உடனே புத்தகம் வாங்க அல்லது தேட அவசியமில்லை. இங்கு அனைத்து புத்தகங்களின் டிஜிட்டல் காபி உள்ளது.

4. ஏதாவது ஒரு பாடத்தில் சந்தேகம் இருந்தால் உடனே அந்தப் பக்கத்தை "பேஜ் மார்க்" செய்து ஆசிரியருக்கோ அல்லது பெற்றோருக்கோ அனுப்பினால் அவர்கள் அங்கு நோட்ஸ் போட்டு உடனே பதிலை அனுப்பினால் உங்களுக்கு மட்டும் அந்தப் பக்கங்கள் கிடைக்கும்.

5, பரிட்ச்சை முடிந்தவுடன் அடுத்த வருஷ சிலபஸுக்காக வெயிட் பண்ண தெவையில்லை. இங்கு அடுத்த வருடத்திற்கான புத்தகம் உடனே எடுத்து விடுமுறையில் பயிற்சி செய்யலாம்.

6. மாதிரி வினாத்தாள் மற்றும் மாடல் கொஸ்டீன் பேப்பர் மற்றும் கடந்த இரண்டு வருட கேள்விதாள் இங்கு உங்களுக்காக வைக்கபட்டுள்ளது. அதனால் நன்கு பயிற்சி செய்யலாம்.

7. முக்கியமாக வெளி நாட்டில் உள்ள இந்தியர்கள் இந்தப் புத்தகத்தை அல்லது தமிழ் புத்தகங்களை இலவசமாக லாகின் செய்து தங்கள் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தலாம்.

8. பள்ளி மற்றும் டுட்டோரியல் கல்லூரிகளில் "புரஜக்டர்" மூலம் இனைத்தால் இந்த ஈ புத்தகத்தைப் பெரிய திரையில் காண்பித்து எல்லொரும் படிக்க ஏதுவாக இருக்கும்.

9. இந்த ஆன்லைன் இப்பொழுது தமிழக முதல்வர் கொடுத்திருக்கும் இலவச மடிகணனி வழியாக படிக்க நல்ல ஒரு வாய்ப்பு.

10. ஈ ரீடர் எனும் இன்ஸைட் டேப்ளட் கம்ப்யுட்டரும் அதில் இதிலுள்ள அனைத்து புத்தகங்களும் இன்டர்னெட் இல்லாமல் படிக்க ரூபாய் 999/- அறிமுகபடுத்தப்படுகிறது.

இந்த போர்ட்டலில் எந்த ஒரு புத்தகத்தையும் புரட்டி படிக்க முடியும். அது போக எந்தப் பக்கத்துக்கும் நேராக செல்ல முடியும். புக்மார்க் வைக்க முடியும். அது போக நோட்ஸ் மற்றும் ரெஃபரன்ஸ் எழுத முடியும். அந்த ஸ்பெஸல் நோட்ஸ் உங்கள் கண்ணுக்கு மட்டும்தான் தெரியும். ஆட்டோ ஃபிளிப் பட்டனை அமுக்கினால் அந்த புத்தகம் அதுவே புரட்டும். அது போக ஜூம் இன் ஜூம் அவுட் வசதி உள்ளதால் எவ்வளவு பெரிதாக வேண்டுமானலும் ஜூம் செய்து கொள்ளலாம். சில புத்தகங்கள் ஆடியோ வசதி செய்யபட்டுள்ள்து. அதனால் அதுவே உங்களுக்கு படிக்கும்.

மிக சீக்கிரம் வீடியோ கிளாஸஸ் தொடங்க உள்ளோம். மற்றும் உலகில் உள்ள அனைத்து கல்வியாளர்களின் டிப்ஸ் வார பாட திட்டம், வர்ச்சுவல் கிளாஸ் ரூம் அனைத்து வசதியும் படி படியாக செயல்படுத்துவேன்.

இது ஒரு இலவச கல்வி சேவை. இதற்காக மூன்று சர்வர்கள் (அமெரிக்கா / கனடா மற்றூம் இந்தியாவில்) நிறுவப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 2 - 4 லட்சம் மாணவர்கள் இலவசமாக படிக்க ஏதுவாக ஹைஸ்பீட் பேன்ட்வித் டேட்டா சென்டரில் ஹோஸ்ட் செய்யபட்டுள்ளது."

பள்ளிக்கல்விக்கு மிகுந்த பயனுள்ள இந்த இணையதளத்தைக் கீழ்கண்ட மூன்று முகவரிகளின் மூலம் அணுகலாம்.
www.samacheeronline.com /
www.samacheerkalvi.info /
www.samacheerkalvionline.in

12:59 AM | தலைப்பு: , , | Read More »

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added