|

அண்ணா பல்கலைகழக மாணவி தற்கொலை.

கிண்டி பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி தைரிய லட்சுமி (19) கல்லூரி விடுதியறையில் தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் கே வி பாளையத்தை சேர்ந்த கிரமப்புற மாணவியான இவர் 12 வகுப்புத் தேர்வில் 92 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கட்டிடப் பொறியியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்த இம்மாணவி முதல் செமஸ்ட்டரில் குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளார். தமிழ் வழிக்கல்வி பயின்ற இவரால் பொறியியல் படிப்பை தொடர மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால் மணமுடைந்த மாணவி தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
நல்ல மதிப்பெண் பெற்றதால் மிகவும் சிரமத்திற்கு மத்தியிலும் வங்கியில் லோன் எடுத்த படிக்க வைத்தேன்....ஆனால் இப்படி ஒரு முடிவைத்தேடி கொண்டாளே என்று கதறுகின்றார் விவசாயியான அவரின் தந்தை சக்திவேல்.

அக்கல்லூரி வளாகத்தில் இம்மாத்தில் நடக்கும் இரண்டாவது தற்கொலை இது.
தைரிய லட்சுமிகள் கோழை லட்சுமிகளாக ஆகி வருகின்றனர்.

மாணவ சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது?......

பதிவு செய்தவர் Ameer on 11:35 AM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added