ரமழானைப் பயன்படுத்துதல் சில ஆலோசனைகள்

ramadhan
நாம் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் றமழான் எங்களிடம் வரும்போது அதற்கான தயார் நிலைகள் எம்மிடம் இருக்க வேண்டும். ரமழானுக்கு முன்னால் எமக்குள் தோன்ற வேண்டிய எண்ணங்கள்: எமது உள்ளத்தில் எப்போதும் நன்மை செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை இருக்க வேண்டும்.
"எனது அடியான் ஒரு நன்மையைச் செய்வதாகப் பேசினால் அவனுக்கு அதனை ஒரு நன்மையாக எழுதுகிறேன்" எனும் ஹதீஸுல் குத்ஸி ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறுகிறது. இதனை அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
1, குர்ஆனை விளங்கி பலமுறை ஓதி முடித்தல்.
2, முந்தைய பாவங்களை விட்டும் நீங்கி விடுதல் என்ற உண்மையான எண்ணம்.
3, அதிக நன்மைகளைச் செய்தல்
4, நடத்தை மாற்றம்
5, இந்த மார்க்கத்துக்காக செயலாற்றுதல் போன்ற பல நல எண்ணங்கள் எமக்குள் இருக்க வேண்டும்.
செயல் சார்ந்த தயார் நிலைக்கு கீழ்வரும் சில உதாரணங்களைக் குறிப்பிட முடியும்.
* றமழான் தொடர்பான சிறந்த நூல்களை வாசித்தல்.
* நோன்புடன் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கான தப்ஸீர் கற்றல்.
* ஈமானிய அமர்வுகளை நடாத்திக் கலந்துரையாடுதல்.
* "ஹகீபதுல் ஹைர்" (நன்மைகளுக்கான பொதி) என்னும் செயற்றிட்டத்தில் ஏழைகளுக்கு நோன்பு நோற்பதற்கான வசதி செய்து கொடுத்தல் போன்ற மனோ நிலை ரீதியான, செயல் ரீதியான தயார் நிலை எம்மிடத்தில் இருக்க வேண்டும்.
2. தஃவா ரீதியான தயார் நிலை
தஃவா ரீதியான அனைத்து செயற்பாடுகளுக்கும் ரமழான் மிகச் சிறந்த சந்தர்ப்பமாகும்.
1. "ஹகீபதுத் தஃவா" (தஃவா பொதி) வழங்குதல்.
இது நோன்பாளியின் தஃவா ரீதியான அன்பளிப்பாகும். றமழான் சிறுகையேடு, புதிய ஒலி நாடா, உணர்வு ததும்பும் வார்த்தைகள் பொதிந்த ஆக்கம், மிஸ்வாக் ஆகியன உள்ளடங்கலாக அவ் அன்பளிப்புப் பொதி அமைய வேண்டும்.
2. குடும்பத்துக்கான நாளாந்த அல்லது வாராந்த தர்பியா.
3. ஈமானிய, தர்பியா ரீதியான சொற் பொழிவுகளை பள்ளியில் நிகழ்த்தல்.
4. மாணவர் செயற்பாடுகள்.
5. குடும்ப இப்தார்களும் பொது இப்தார்களும்
6. இஸ்லாமிய நிறுவனங்களுடன் தஃவா ரீதியான உதவிகளைப் பகிர்ந்துகொள்ளல் போன்ற பல தஃவா செயற்பாடுகளை நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
உண்மையில் வெற்றிகளை சாதித்தவர்களும், இலக்கைத் தொட்டவர்களும் முன் ஆயத்தங்களுடனும் திட்டமிடல்களுடனும் செயற்பட்டவர்களே. கல்வியாண்டு ஆரம்பிக்கும் முன்னரே அதற்காகத் தயாராகும் பண்பு, திறமை மாணவர்களிடத்திலேயே இருக்கும். முன் ஆயத்தங்கள் செய்வோரின் முயற்சிக்கும், தியாகத்துக்கும் ஏற்ப அவர்களது அடைவுகளும் வித்தியாசப்பட்டிருக்கும் என்பது நாம் அறிந்த விடயம். இவ்வாறிருக்கும் போது முன் ஆயத்தம் எதுமற்றவர்கள் எவ்வாறு வெற்றியொன்றைச் சாதிப்பார்கள்?
குர்ஆனிய மாதம் றமழானை உயிர்ப்பிக்கும் நோக்கத்துடன் இம் மாதத்தில் போதிய பயிற்சிகளை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஸலபுகளின் வாழ்வு முழுவதும் றமழானை மையமாகக் கொண்டமைந்திருந்தது என்று கூற முடியும். ஆறு மாத எதிர்பார்ப்பும், ஆறு மாதப் பிரார்த்தனையும் றமழான் பற்றிய அவர்களது பிரக்ஞையை எமக்குத் தெளிவுபடுத்துகிறது. றமழானை அடைந்து கொள்ள முன் ஒரு எல்லையை நோக்கியே மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருக்கிறது. நல்லெண்ணம் வையுங்கள். இறுதி மூச்சின் போது அதற்கான கூலியும் எம் நன்மை ஏட்டில் இடம்பிடிக்கும் இன்ஷா அல்லாஹ்!
ஒவ்வொரு நிமிடமும் றமழானின் மீதான தாகத்தை உங்களுக்குள் அதிகரிக்கச் செய்ய வேண்டும். எனவே, கீழே சில முக்கியமான குறிப்புகளைத் தருகிறோம்.
1. வீட்டை அழகுபடுத்தும் முன்னர் சுத்தப்படுத்துங்கள். எதிர்பார்த்திருக்கும் விருந்தாளியின் வருகைக்காக உங்கள் உள்ளங்களைச் சுத்தப்படுத்தி வையுங்கள்.
2. நோன்பின் சட்டங்களைக் கற்றறிந்து கொள்ளுங்கள்.
3. உள்ளத்தை இறையசத்துக்குப் பழக்குங்கள், றமழான் இறையச்சம் கொண்டவர்களின் பாசறையாகும்.
4. முறிந்து போன உறவுகளைச் சந்தித்துச் சேர்ந்து கொள்ளுங்கள்.
5. தப்பெண்ணமில்லாத உள்ளத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.
6. இணைய தள பாவனையில் அதிக நேரம் கழித்து விடாது றமழானை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இமாம் மாலிக் பின் அனஸ் அவர்கள் ஹதீஸ் துறையில் ஈடுபடுவதை விட்டு விட்டு குர்ஆன் ஓதுவதில் ஆர்வமாக ஈடுபடுவார்கள். றமழான் என்றும் உங்களை எதிர்பார்த்திருக்கிறது.
7. கடந்த றமழானில் விட்ட நோன்புகளை நோற்றுக் கொள்ளுதல்.
8. ஷஃபானில் ஒவ்வொரு நாளும் ஒரு ஜுஸ்உ குர்ஆன் ஓத முயற்சி செய்யுங்கள். பின்னர் இரண்டு, மூன்று ஜுஸ்உக்களை நாளாந்தம் ஓதுகின்ற நிலைக்கு மாற வேண்டும். பின்னர் 10 நாட்களுக்கு ஒரு முறை ஒரு குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்க வேண்டும்.
9. உங்களது உடலை நீண்ட ருகூஉக்கும் ஸுஜூதுக்கும் பழக்குங்கள். றமழானின் இரவுகள் எமது நீணட நேர தொழுகைகளால் உயிர் பெற வேண்டியிருக்கின்றது.
10. பள்ளியில் நீண்ட நேரம் தரித்திருக்கப் பழகுங்கள்.
11. சந்தர்ப்ப துஆக்கள் பலதை மனனமிட்டுக் கொள்ளுங்கள்.
12. ஏழைகளுக்கு உதவி செய்ய ஆரம்பியுங்கள்.
13. உண்ணும் உணவின் அளவை இப்போதிருந்தே குறைத்துக் கொள்ளுங்கள்.
14. இரவில் நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டாம். சுபஹுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே விழித்திருந்து அமலில் ஈடுபட உங்களைப் பழக்குங்கள்.
15. வழமையை விட குறைவாகத் தூங்கப் பழகுங்கள்.
16. தினமும் 1000 வசனங்களை ஓதி கியாமுல் லைல் தொழப் பழகுங்கள்.
17. பொது வேலைகளில் ஈடுபடல்.
18. போதை வஸ்துக்கு அடிமையானோர் அவற்றை விட்டுவிடுவதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும்.
19. இறைவனை திக்ர் செய்வதில் நாவு திளைத்திருக்க வேண்டும்.
20. குர்ஆனை இப்போதிருந்தே மனனமிட ஆரம்பியுங்கள்.
21. பெருநாளைக்கான ஆடைகளை முன்னரே வாங்கி விடுங்கள். றமழானில் சந்தைகளில் அலைய வேண்டாம்.
22. திட்டமிட்ட நேர அட்டவணை ஒன்றை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
23. உங்கள் சூழலிலுள்ள சிறார்களுக்கும் நோன்பு நோற்க ஆர்வமூட்டுங்கள்
மேற்சொன்னவை சில வழிகாட்டல்கள் ஆகும். நீங்கள் மேலதிக திட்டமிடல்களுடன் எதிர்வரும் றமழானுக்காக தயாராகுங்கள்.

நன்றி: காலித் தர்வீஷ் அவர்கள் எழுதிய கட்டுரையின் சுருக்கம்
அஷ்ஷெய்க் எம்.எப்.எம் நௌஷாத் (நளீமி)

3:55 PM | தலைப்பு: , | Read More »

வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம் (தொடர்-1)

மறுமையை நம்புவது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும், மறுமையை நம்புவதென்பது மரணத்திற்கு பின் மறுமை என்னும் வாழ்வு இருக்கின்றது என்பதாகும், மறுமையில் அல்லாஹ் நல்லடியார்களுக்கு சுவர்க்கத்தையும், இறை நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான். சுவர்க்கம் என்றால் என்ன, அதில் கிடைக்கும் இன்பங்கள் என்ன என்பதை கூறி, அதன் பக்கம் மக்களை ஆர்வம் காட்ட வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அச்சுவர்க்த்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பையும் அதற்குரிய அமல்கள் செய்யும் நல்வாய்ப்பினையும் தந்தருள்வானாக.! இப்போது வாருங்கள்,அந்த சுவர்க்கத்தை பார்வையிடுவோம். சுவர்க்கத்தின் பெயர்கள்: 1. அல் ஜன்னத் 2. தாருஸ் ஸலாம் 3. தாருல் குல்த் 4. தாருல் முகாமத் 5. ஜன்னதுல் மஃவா 6. ஜன்னாத்து அத்ன் 7. தாருல் ஹயவான் 8. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் 9. ஜன்னாத்துன்னயீம் 10. அல் மகாமுல் அமீன் 11. மக்அது ஸித்க் 12. கதமு ஸித்க் சுவர்க்க வாசலின் பெயர்கள் 1. பாபு முஹம்மது 2. பாபுத்தவ்பா 3. பாபுஸ்ஸலா 4. பாபுஸ்ஸவ்ம் (அர்ரைய்யான்) 5. பாபுஸ்ஸகாத் 6. பாபுஸ்ஸதகாத் 7. பாபுல் ஹஜ்ஜி வல்உம்ரா 8. பாபுல் ஜிஹாத் குர்ஆனில் சுவர்க்கம் நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.(அவர்களை நோக்கி) ”சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்). மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது; அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர். ”என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்). இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர். நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன, இன்னும், ”நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!” (என அவர்களிடம் சொல்லப்படும்.) ”நீங்கள் செய்து கொண்டிருந்ததன் (நன்மையான) காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள். ”உங்களுக்கு அதில் ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன, அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்” (எனக் கூறப்படும்). 15:45 – 73 அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது. கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள். இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்). தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களை சுற்றி கொண்டுவரும். (அது) மிக்க வெண்மையானது. அருந்துவோருக்கு மதுரமானது. அதில் கெடுதியும் இராது. அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள். (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள். 37:40-50 பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற இடத்தில் இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்). ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீராம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹுருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம். அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள். முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான். (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியுமாகும். 44:51 – 57 (பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள். தெளிந்த பானங்களால் நிரம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்). (அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை வலிக்குள்ளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள். இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் (பறவைகளின்) மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்). (அங்கு இவர்களுக்கு) ஹுருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). (இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும். அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். ‘ஸலாம், ஸலாம்’ என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). இன்னும் வலப்புறத்தார்கள்! – வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்; (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும் இன்னும், நீண்ட நிழலிலும், (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும், ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் – அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்). நிச்சயமாக (ஹுருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி அப்பெண்களைக் கன்னிகளாகவும்; (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும், பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்). 56:15-40 நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) ‘நயீம்’ என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்கிகளைப்) பார்ப்பார்கள். அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர். (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அதன் முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும். அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முர்புகள் அருந்துவார்கள். 83:22-28 இன்னும் இது போன்ற பல வசனங்களும் இத்தொடரில் உள்ளது. சுருக்கத்திற்காக இத்துடன் முடிக்கிறேன். மறுமையில் அல்லாஹ்வின் சந்திப்பு நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்பொழுது அவர்கள் வானில் பதினான்காம் பக்கத்து நிலவை(பரிபூரண சந்திரனை) பார்த்தார்கள். அப்பொழுது கூறினார்கள். நீங்கள் இந்த நிலவைப் பார்ப்பதைப் போல(கியாமத் நாளில்)உங்கள் ரப்பைக் கண் கூடாகக் காண்பீர்கள். அவனைப் பார்ப்பதில் உங்களுக்கு எந்தக் குழப்பமும் இருக்காது. (புகாரி, முஸ்லிம்) சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழைந்ததும், அல்லாஹுதபாரக வதஆலா, அவர்களிடம் வேறு எதனையும் நீங்கள் நாடுகிறீர்களா? அதனை நான் உங்களுக்கு அதிகப் படுத்துகிறேன். என்று கூறுவான். அதற்கவர்கள், எங்கள் இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வெண்மையாக்கி விட்டாய். எங்களை சுவர்க்கத்தில் நுழையச் செய்து விட்டாய். நரகை விட்டும் எங்களைக் காப்பாற்றி விட்டாய். (நீ எங்களுக்கு எல்லா விதமான அருட்கொடைகளையும், இன்பங்களையும், அளித்து விட்டாய்! இனி எங்களுக்கு வேறு என்ன வேண்டும்) என்பார்கள். அப்பொழுது அல்லாஹ் தனக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள திரையை அகற்றி விடுவான். (அப்பொழுது அவர்கள் தங்கள் இரட்சகனைப் பார்க்கும் பாக்கியத்தை பெறுவார்கள்) தங்கள் இரட்சகனைப் பார்ப்பதை விட வேறு எந்தப் பொருளும் அவர்களுக்குப் பிரியமானதாகக் கொடுக்கப்படவில்லை. (அவர்களது இரட்சகனைப் பார்ப்பதே எல்லாவற்றையும் விட அவர்களுக்கு மிகப் பிரியமானதாக இருக்கும்) முஸ்லிம்: ஸுஹைபு(ரலி) இன்ஷா அல்லாஹ் தொடரும்..

4:14 PM | தலைப்பு: , , | Read More »

ஹயாதுஸ் ஸஹாபா தொடா் - 05


ஸஹாபாக்களின் தொழுகை குறித்த ஆா்வமூட்டல்...

mg;Jy;yh gpd; k];RT+j; (uyp) mwptpf;fpd;whh;fs;> ngUk;ghtq;fspy; ,Ue;J jtph;e;J nfhs;sg;gll epiyapy;> njhOif vd;gJ mtdJ midj;J ghtq;fspd; ghpfhukhFk;. NkYk; $wpdhh;fs;> njhOif vd;gJ mtdpd; gpe;ija ghtj;jpw;Fk; ghpfhukhFk;. Mjk; (miy) mth;fSf;F ghjj;jpy; cUthd fl;b xd;W fhYf;F gutp gpd;dh; %l;Lg;Fjpia mile;;jJ. gpd;dh; mjd; ghjpg;G ,Lg;gpw;Fk; gpd;dh; fOj;jpw;Fk; gutpaJ. Mjk; (miy) mth;fs; my;yh`;it njhOjhh;fs;. mjd; fhuzkhf fl;b fOj;Jg; gFjpf;F ,wq;fpaJ. kPz;Lk; njhOjhh;fs;. fl;b ,Lg;G gFjpf;Fk; gpd;dh; %l;bw;Fk; ,wq;fpaJ. kPz;Lk; njhOifia njhlh;e;jhh;fs;. fl;b ghjj;jpw;F ,wq;fp gpd;dh; cliytpl;L Kw;wpYkhf kiwe;J NghdJ.
]y;khd; /ghh;]p (uyp) mth;fs; mwptpf;fpd;whh;fs;> xU kdpjd; njhOiff;fhf vOe;jp epw;ghd; vdpy;> mtdJ ghtq;fs; midj;Jk; mtdJ jiyf;F Nkyhy; cah;j;jg;gLk;. mtd; njhOifia Kbf;Fk; Neuk;> mtdJ midj;J ghtq;fSk; <r;rkuj;jpd; rUfs; tyg;GwkhfTk;> ,lg;GwkhfTk; cjph;tJ Nghy cjph;e;JtpLk;.
kw;nwhU mwptpg;gpy; ]y;khd; /ghh;]p (uyp) mth;fs; $wpdhhh;fs;> xU kdpjd; njhOiff;fhf vOe;jp epw;ghd; vdpy;> mtdJ ghtq;fs; midj;Jk; mtdJ jiyf;F Nkyhy; xd;W Nrh;f;fg;gLk;. mtd; xt;nthU Kiw ][jh nra;Ak; NghJk; kuj;jpd; ,iyfs; cjph;tJ Nghy mtdJ ghtq;fs; cjph;e;J NghFk;.
jhhpf; gpd; \p`hg; (uyp)  mwptpf;fpd;whh;fs;. ]y;khd; /ghh;]p mth;fs; jq;fis vt;thW tzf;f topghLfspy; <LgLj;jpf; nfhs;fpd;whh;fs; vd;gij mwptjw;fhf ehd; xU ehs; mth;fSld; jq;fpNdd;. ]y;khd;> ,utpd; filrpg; nghOjpy;jhd; vOe;jhh;fs; (j`[;[j; njhOtjw;fhf). mth; vd;d vjph;ghh;j;J ]y;khd; (uyp)Ald; jq;Ftjw;F te;jhNuh mJ eilngwtpy;iy. (]y;khd; (uyp) ,uT KOtJk; epd;W tzq;Fk; topghl;by; %o;fp ,Ug;ghh;fs; vd vjph;ghh;j;jhh;). ,e;j nra;jp ]y;khd; (uyp) mth;fsplk; $wg;gl;l NghJ> mth;fs; nrhd;dhh;fs; INtis njhOifia ey;y Kiwapy; Ngzpf; nfhs;Sq;fs;. fhuzk; mJ mtuJ midj;J ghtq;fSf;Fk; ghpfhukhFk;. ngUk;ghtq;fspy; <Lglhjtiu”. ,uTg; nghOij milAk; kf;fis %d;W gphptpduhf nfhs;syhk;. xUrhuhh;> mth;fs; ew;Fzj;ij Vw;gLj;Jk; ed;ikfisr; nra;th;> jPik gaf;Fk; ve;j ghtj;ijAk; nra;akhl;lhh;. ,uz;lhtJ rhuh;> mth;fs; ew;Fzj;ij Vw;gLj;Jk; ve;j ed;ikiaAk; nra;akhl;lhh;. jPik gaf;Fk; ghtq;fis kl;Lk; nra;th;. %d;whtJ rhuh;> mth;fs; ew;Fzq;fis Vw;gLj;Jk; ed;ikiaNah> jPik gaf;Fk; ghtq;fisNah nra;khl;lhh;fs;.
kf;fs; mrl;ilahf ,Uf;Fk; tpraj;ij  ntspg;gLj;Jk; xU kdpjh;> ,Ul;L mlh;e;j ,uTg; nghOjpy; vOe;J fhiytiu ,iwtid epd;W tzq;Ffpwhh;.  mth; ew;Fzj;ij Vw;gLj;Jk; ed;ikfisr; nra;gth;> jPik gaf;Fk; ve;j ghtj;ijAk; nra;ahjth;. kf;fs; mrl;ilahf ,Uf;Fk; tpraj;ij  ntspg;gLj;Jk; kw;nwhU kdpjh;> ,Ul;L mlh;e;j ,uTg; nghOjpy; ghtq;fspy; %o;Ffpd;whh;. mth; ew;Fzj;ij Vw;gLj;Jk; ve;j ed;ikiaAk; nra;ahjth;. jPik gaf;Fk; ghtq;fis kl;Lk; nra;gth;. %d;whkth; mth; ,\h njhOifia epiwNtw;wpaJk; cwq;fr; nrd;WtpLthh;. (,uT Neuj; njhOiff;F vOe;jpUg;gjppy;iy) mth; ew;Fzq;fis Vw;gLj;Jk; ed;ikiaNah> jPik gaf;Fk; ghtq;fisNah nra;ahjtuhthh;.
njhluhfr; nra;ahKbahky; f];lj;jpy; Mo;j;Jk; tzf;f topghLfspy; cq;fis ePq;fs; Ml;gLj;jpf; nfhs;tJ gw;wp vr;rhpf;ifahf ,Uq;fs;. vg;NghJk; ePq;fs; eLepiyahd> njhluhd tzf;f topghLfis kl;LNk njhpT nra;fpwPh;fs; vd;gij cWjp nra;J nfhs;Sq;fs;.
mG+ %]h m\;mhp (uyp) mth;fs; mwptpf;fpd;whh;fs;> (ghtq;fs; GhptJ nfhz;L) ek;ik ehNk vhpj;Jf; nfhs;fpNwhk;. Mdhy; ehk; /gh;shd njhOifia epiwT nra;Ak; NghJ mJ me;j ghtq;fSf;F ghpfhukhfptpLfpwJ. kPz;Lk; (ghtk; Ghptjd; %yk;) ek;ik vhpj;Jf; nfhs;Sk;NghJ> mLj;J ehk; epiwT nra;Ak; /gh;shd njhOif ehk; nra;j ghtq;fSf;F ghpfhukhfptpLfpd;wJ.

11:43 PM | தலைப்பு: , , | Read More »

ஹயாதுஸ் ஸஹாபா தொடா்-4


]`hghf;fspd; njhOif Fwpj;j Mh;t%l;ly;.
mG+gf;fh; (uyp) kw;Wk; ckh; (uyp) mth;fspd; $w;W.
xU Kiw mG+gf;fh; (uyp) mth;fs; nrhd;dhh;fs;> njhOifia epiwNtw;Wtjd; %yk; xU kdpjd; ,g;Gtpapy; my;yh`;tpd; ghJfhg;gpy; MfptpLfpd;whd;.
mG+ kyP`; (uyp) mth;fs; mwptpf;fpd;whh;fs;> ehd; ckh; (uyp) mth;fs; ciuapy; njhOifia epiwNtw;whj xU kdpjdplk; ,];yhk; vd;gJ ,y;iy vd nkhopaf; Nfl;bUf;fpd;Nwd;.
i[J gpd; ]hgpj; (uyp) mth;fs; mwptpf;fpd;whh;fs;> xU kdpjd; (e/gpyhd) njhOifia tPl;by; njhOthNdahdhy;> mJ mtdJ tPl;bd; xspahFk;. xU kdpjd; njhOiff;fhf epw;Fk; NghJ mtdJ ghtq;fs; midj;Jk; mtdJ jiyf;F Nkyhy; jLj;J epWj;jg;gLfpwJ. mtd; xt;nthU Kiw ][jh nra;Ak; NghJ mtdJ midj;J ghtq;fSk; kd;dpf;fg;gLfpd;wd. 
`{ijgh (uyp) mth;fs; mwptpf;fpd;whh;fs;. xU kdpjd; Kiwahf xOit epiwNtw;wp njhOiff;fhf epw;g;ghd; vdpy;> my;yh`; mtid Nehf;fp jpUk;Gfpdwhd;;. mtNdhL ciuahLfpd;whd;. gpd;dh; mk;kdpjd; tyg;gf;fNkh my;yJ ,lg;gf;fNkh jpUk;ghjtiu my;yh`; mtidtpl;L jpUk;Gtjpy;iy.

mg;Jy;yh gpd; ckh; (uyp) mth;fs; mwptpf;fpd;whh;fs;> njhOif vd;gJ fyg;gw;w Gdpjkhd tzf;fkhFk;. vd;Dld; ahh; ,izfpwhh;fs; vd;gJ $l vd; ftdj;jpw;F tUtjpy;iy”.
mg;Jy;yh gpd; mk;h; (uyp) mth;fs; mwptpf;fpd;whh;fs;> vg;Nghnjy;yhk; xU kdpjd; cah;e;j xU njhOkplj;ijNah> my;yJ fl;lg;gl;l gs;spthapiyNah mile;J mjpy; njhOfpd;whNdh> mg;NghJ me;j epyk; nrhy;Yk;> my;yh`;Tf;fhf vd;W vd;kPJ njhOif epiwNtw;wg;gl;bUf;fpwJ. X kdpjNd! eP ,iwtid re;jpf;Fk; ehspy; cdf;fhf ehd; rhl;rpak; gfh;Ntd;.

mg;Jy;yh gpd; mk;h; (uyp) mth;fs; NkYk; mwptpf;fpd;whh;fs;> xU fl;b xd;W Mjk; (miy) mth;fspd; fOj;jpy; cUthfpapUe;jJ> mth;fs; my;yh`;it njhOjhh;fs;. mJ mth;fSila khh;Gg; gFjpf;F ,wq;fpaJ. kPz;Lk; njhOifia njhlh;e;jhh;fs;. gpd;dh; mJ mth;fSila ,Lg;gpw;Fk; gpd;dh; fuz;ilfhYf;Fk; ,wq;fpaJ. kPz;Lk; my;yh`;it njhOjhh;fs;. mJ mth;fSila ghjj;jpw;F ,wq;fp gpd;dh; cliy tpl;L Kw;wpYkhf ePq;fptpl;lJ. 

mg;Jy;yh gpd; k];T+j; (uyp) mwptpf;fpd;whh;fs;> ePq;fs; njhOifapy; <Lgl;bUf;Fk; Neunky;yhk; ePq;fs; kdpjh;fspd; murd; (Mfpa my;yh`;tpd;) fjit jl;bf; nfhz;bUf;fpd;wPh;fs;. me;j murdpd; fjT> jl;Lk; Nghnjy;yhk; jpwf;fg;gLk;. 

kw;nwhU mwptpg;gpy;> cq;fs; midj;J NjitfisAk; /gh;shd njhOifapy; rkh;g;gpAq;fs;. (njhOifapy; GhpAk; gpuhh;j;jidfs; ,iwtdhy; epiwNtw;wpj; jug;gLk;)

12:18 AM | தலைப்பு: , , | Read More »

ஹயாதுஸ் ஸஹபா தொடா்-3

ஹயாத்துஸ் ஸஹாபா



தொடர் -3

தொழுகை

இஸ்லாத்தின் தூண்களை நிறைவேற்றியவர்கள், சித்தீகீன்கள் மற்றும் ஷுஹதாக்களில் நின்றுமுள்ளவர்கள்.
mk;W gpd; Kw;wh [{`;dp (uyp) mwptpf;fpd;whh;fs;> xU kdpjh; egp (]y;) mth;fsplk; Nfl;lhh;fs;> ehd; tzf;fj;jpw;Fhpa ehad; my;yh`; xUtd; jhd; vd;Wk;> ePq;fs; my;yh`;tpd; jpUj;J}jh; vd;Wk; rhl;rp gfh;e;J> INtis njhOif kw;Wk; ]fhj;ijAk; epiwNtw;wp ukshd; khjj;jpy; Nehd;G Nehw;W e/gpyhd njhOifiaAk; epiwT nra;jhy; ehd; ve;j tif $l;lj;jhUld; ,Ug;Ngd;? Mjw;F egpfs; ehafk; (]y;)  mth;fs;> ePq;fs; rpj;jPfPd;fs; kw;Wk; \{`jhf;fspy; epd;WKs;sth;fs; vd gjpyspj;jhh;fs;.
நபிகள் நாயகம் (ஸல்) மரணப்படுக்கையிலும் தொழுகையை வலியுறுத்திய நிகழ்வு.
md]; (uyp) mwptpf;fpd;whh;fs;> egpfs; ehafk; (]y;) mth;fs; kuzj; jUthapy; ,Uf;Fk; NghJ njhOifapYk; cq;fs; mbikfspYk;; (mjpf ftdk; nrYj;Jq;fs;) vd mbf;fb $Wgth;fshf ,Ue;jdh;. mth;fsJ Fuy; kpfTk; Fiwe;J> caph; njhz;ilf; Fopia milf;Fk; epiyapYk; ,jid typAWj;Jgth;fshf ,Ue;jhh;fs;.
kw;nwhU mwptpg;gpy;> egpfs; ehafk; (]y;) mth;fs; kuzj; jUthapy; ,Uf;Fk; NghJ njhOifapYk; cq;fs; mbikfspYk;; (mjpf ftdk; nrYj;Jq;fs;) vd mbf;fb $Wgth;fshf ,Ue;jdh;. mth;fsJ caph; neQ;ir milj;J  thh;j;ijfis ehtpy; nfhz;Ltu rpwkg;gl;l NtisapYk; ,jid typAWj;Jgth;fshf ,Ue;jhh;fs;.
myp (uyp) mth;fs; mwptpf;fpd;whh;fs;> egpfs; ehafk; (]y;) mth;fs; vd;dplk; xU rpNyl;il nfhz;L tur; nrhy;yp mjpy; jdJ r%fk; vdJ kuzj;jpw;F gpwFk; kwe;J Nghfhky; ,Uf;f Ntz;ba rpytw;iw vOjr; nrhd;dhh;fs;. ehd; rpNyl;il nfhz;L tUtjw;Fs; mth;fs; ,we;JtpLthh;fNsh vd mQ;rpa ehd;> my;yh`;tpd; J}jNu ePq;fs; $Wq;fs;. ehd; kddkpl;Lf; nfhs;fpNwd; vd $wpNdd;. vdJ r%fk; ey;y Kiwapy; njhOifiaAk;> ]fhj;ijAk;> jdJ mbikfsplKk; ele;J nfhs;s Ntz;Lk; vd ehd; typAWj;j tpUk;Gfpd;Nwd;.
kw;nwhU mwptpg;gpy;>  myp (uyp) $wpdhh;fs;> my;yh`;tpd; J}jh; (]y;) mth;fs;> jq;fs; caph; gphpAk; tiu> njhOifia epiwNtw;WtijAk;> ]fhj;ij Kiwg;gb nfhLj;JtUtijAk;> jq;fs; mbikfis md;Gld; elj;JtijAk; typAWj;jpdhh;fs;. NkYk; ,Wjp %r;R gphpAk;tiu> tzf;fj;jpw;Fhpa ehad; my;yh`; xUtidj; jtpw Ntwpy;iy vd;Wk; K`k;kj; (]y;) my;yh`;tpd; mbahUk; jpUj;J}jUk; Mthh;fs; vDk; \`hjj; fypkhit nkhope;j tz;zk; ,Ue;jdh;. NkYk;; ahh; ,e;j ,uz;L ek;gpf;ifapd; thrfq;fis cr;rhpf;fpd;whNuh mtUf;F eufk; jLf;fg;l;ljhFk; vd;Wk; $wpdhh;fs;.
kw;nwhU mwptpg;gpy;> myp (uyp) mwptpf;fpd;whh;fs;> njhOif (ia Ngzpf; nfhs;Sq;fs;)> njhOif (ia Ngzpf; nfhs;Sq;fs;)> cq;fs; mbikfs; tpraj;jpy; my;yh`;it mQ;rpf; nfhs;Sq;fs; vd;gNj my;yh`;tpd; J}jhpd; ,Wjp thh;j;ijfshf ,Ue;jd.

7:00 AM | தலைப்பு: , , | Read More »

ஹயாத்துஸ் ஸஹாபா. தொடர் -2

ஹயாத்துஸ் ஸஹாபா



தொடர் -2

தொழுகை
 
இறைப்பாதையில் உயிர் நீத்த இரு சகோதரர்கள்:
ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் மகன் ஆமிர் அவர்கள் தங்கள் தந்தை மற்றும் இதர நபித்தோழர்கள் வழி தான் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் காலத்தில் இரண்டு சகோதரர்கள் வசித்து வந்தார்கள். அந்த இருவரில் சிறந்த நல் அமல் புரியும் ஒருவர் போரில் கலந்து கொண்டு ஷஹீதாகிவிட்டார். இரண்டாமவர் இன்னும் சில நாட்கள் (40 நாட்கள்) கழிந்து இறந்துவிட்டார். இதனை குறித்து ஒரு நபர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், (நல் அமல் புரிந்த) அந்த மனிதர் சிறந்தவர் என புகழ்ந்துரைத்தார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (இரண்டாவதாக இறந்த) அந்த சகோதரர்; தொழுகையை கடைபிடிப்பவராக இல்லையா? எனக் கேட்டார்கள். அவர் தொழுகையை முறையாக நிறைவேற்றுபவர் என உறுதி செய்யப்பட்ட நிலையில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினர்கள், (தனது சகோதரர் ஷஹீதான பின்னர்) அவரது தொழுகை, அவரை எந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது என்பது உமக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.  அப்போதுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்;, தொழுகைக்கு உதாரணமாவது, ஆளமும், தூய்மையும் நிறைந்த நதி ஒரு மனிதனின் வீட்டு வாசலில் ஓடுகிறது. அந்த நதியில் அம் மனிதன் ஒரு நாளைக்கு ஐந்து முறை குளிப்பானேயானால் அவனது உடலில் ஏதேனும் அழுக்கு தங்கியிருக்குமா? என விளக்கம் அளித்தார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், குதாஆ கோத்திரத்தின் ஒரு பகுதியான பாலி கிளையிலிருந்து இருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதில் ஒருவர் போரில் கலந்து கொண்டு ஷஹீதாகிவிட்டார். இரண்டாமவர் ஒரு வருடம் அதிகமாக வாழ்ந்தார். (பின்னர் இயற்கையாக மரணமடைந்தார்). ஒரு நாள் தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கனவில், போரில் உயிர் நீத்த ஷஹீதிற்கு முன்பாக இரண்டாமவர் சுவனத்தில் நுழைவதைக் கண்டார்கள். இதனால் ஆச்சரியமுற்ற அவர்கள், (அல்லது அவரிடம் இந்த செய்தியை கேட்ட மற்றொருவர்) நபிகள்  நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். மறுநாள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், முதல் நபரின் இறப்புக்குப் பின்னர், இரண்டாம் நபர் ஒரு முழு ரமளான் மாத்தின் நோன்பையும், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ரக்அத் தொழுகையையும் தொழவில்லையா? என விளக்கமளித்தார்கள். மற்றொரு அறிவிப்பில், அவ் இருவருக்கும் இடையேயான தரத்தின் வித்தியாசம் வானத்திற்கும், பூமிக்கும் இடையேயான தூரம் என விடையளித்தார்கள்.

பாவத்தின் பரிகாரம் தொழுகை.

அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஒரு முறை நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பள்ளியில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு மனிதர் எழுந்து சொன்னார், நான் ஒரு பாவம் செய்துவிட்டேன். அதனை கேட்டும் நபிகளார் பாராமுகமாக இருந்துவிட்டனர். பின்னர் தொழுகை முடிந்ததும் அந்த மனிதர்; எழுந்து மீண்டும் சொன்னார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீர் முறையாக ஒழு செய்து எங்களுடன் தொழுகையை நிறை வேற்றவில்லையா? அதற்கு அம் மனிதர் ஆம் என மறுமொழி பகர்ந்தார். அப்படியானால், அது உங்கள் பாவத்தின் பரிகாரம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அமல்களில் மிகச் சிறந்தது எது? என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறுமொழி.
அப்துல்லா பின் அம்ர் (ரலி)  அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், அமல்களில் மிகச் சிறந்த அமல் எது எனக் கேட்டார். தொழுகை என நபிகளார் மறுமெழி பகர்ந்தார்கள். அதன் பிறகு என அம்மனிதர் கேட்டார். அதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை என்றார்கள். மூன்றாவது முறையும் அம்மனிதர் அதே கேள்வியை கேட்க்க நபிகளார் தொழுகை என்றே மறுமொழி பகர்ந்தார்கள். அடுத்தடுத்த அம்;மனிதர் இக் கேள்வியை கேட்க்க நபிகளார்,  அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல் என்றார்கள். அதற்கு அம்மனிதர், எனக்கு பெற்றோர்கள் இருக்கின்றார்களே எனக் கேட்க்க, உனது பெற்றேர்களை நன்முறையில் நடத்த நான் உனக்கு அறிவுறுத்துகிறேன் என நபிகளார் மறுமொழி பகர்ந்தார்கள். அதன் பின்னர் அம்மனிதர் கூறினார், உம்மை உண்மையைக் கொண்டு நபியாக அனுப்பியவன் மீது சத்தியமாக நான் அறப்போரில் பங்கெடுத்துவிட்டு அவர்களை விட்டுவிடுவேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள், எது சிறந்தது என்பது உமக்கு தெரியும். (நீர் இல்லாத போது வேறு சிலர் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்ய முடியும் எனும் போது).

1:28 AM | தலைப்பு: , , | Read More »

ஹயாத்துஸ் ஸஹாபா - தொடர் -1


ஹயாத்துஸ் ஸஹாபா
வாசகர்களுக்கு:
நபிகளார் (ஸல்) அவர்களின் தோழர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் தொகுப்போ ஹயாத்துஸ் ஸஹாபா. அந்த உத்தம ஸஹாபாக்கள் தங்களது வாழ்க்கை நெறியாக பின்பற்றிய நபிகளாரின் வழிமுறை அவர்களது வாழ்வில் ஒவ்வொரு கனங்களிலும் எவ்வாறு பிரதிபலித்தது, அதனை பிறருக்கும் எவ்வாறு பயிற்றுவித்தார்கள்  என்பதை அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் விவரிக்கின்றார் தொகுப்பாசிரியர். ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இத்தொகுப்பை இன்ஷா அல்லாஹ் தமிழ் வடிவமாக தொடர்ந்து தர இருக்கின்றார் புதியதேச எழுத்தாளர் எஸ் எம் அவர்கள். வாசகர்கள் படிப்பதோடு வாழ்க்கையிலும் செயல்படுத்த வேண்டுமாய் அன்பாய் வேண்டுகிறோம். (ஆ-ர்)
தொடர் - 1

தொழுகை

நபி (ஸல்) அவர்களின் தொழுகை குறித்த ஆர்வமூட்டல்
உஸ்மான் (ரலி) அவர்களால் அடிமையாய் இருந்து உரிமை விடப்பட்ட ஹாரித் அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஒரு முறை நாங்கள் உஸ்மான் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது தொழுகைக்கான அழைப்பு விடுக்க பள்ளியின் முஅத்தின் அங்கு வந்தார்கள். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரும்படி கூறினார்கள். அதில் ஒரு முத் அளவு தண்ணீர் இருந்தது. அதில் உஸ்மான் (ரலி) அவர்கள் ஒழு செய்துவிட்டுச் சொன்னார்கள், இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் ஒழு செய்ய நான் கண்டிருக்கிறேன். பின்னர் கூறினார்கள், எவரொருவர் இவ்வாறு ஒழு செய்துவிட்டு பின்னர் அவர் லுஹர் தொழுகையை நிறைவேற்றுகிறாரோ, அவருக்கு ஃபஜ்ர் மற்றும் லுஹர் தொழுகைக்கு இடையே உள்ள பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். அதன் பின்னர் அவர் அஸர் தொழுகையை நிறைவேற்றுவாரேயானால், அவருடைய லுஹர் மற்றும் அஸர் தொழுகைக்கு இடையே உள்ள பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.அதன் பின்னர் அவர் மஃரிப் தொழுகையை நிறை வேற்றுவாரேயானால், அவருடைய அஸர் மற்றும் மஃரிப் தொழுகைக்கு இடையே உள்ள பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். அது போன்றே அவர் இஷா தொழுகையை நிறைவேற்றுவாரேயானால், அவருடைய மஃரிப் மற்றும் இ;ஷா தொழுகைக்கு இடையே உள்ள பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். அவர் அன்றைய இரவுப் பொழுதை அடைந்து அதில் பாவம் செய்திருந்தாலும், பின்னர் அதிகாலைப் பொழுதை அடைந்து ஒழு செய்து பஜ்ர் தொழுகையை நிறைவேற்றுவாரேயானால் அவருடைய இஷா மற்றும் ஃபஜ்ர் தொழுகைக்கு இடையே உள்ள பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.; பாவங்களை துடைத்தெறிவதில் தொழுகை சிறந்து விளங்குகிறது.
உஸ்மான் அவர்களே! இவைகள் நல் அமல்கள் எனில், நிரந்தரமாக நன்மைகளை அள்ளித்தரும் நல் அமல்கள் எவை என மக்கள் கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், லாயிலாஹ இல்லல்லாஹ், சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹுஅக்பர், லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ் என விடை பகர்ந்தார்கள்.
அபூ உஸ்மான் அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஒரு முறை அவர் ஸல்மான் (ரலி) அவர்களுடன் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார்கள். ஸல்மான் (ரலி) அம்மரத்தின் காய்ந்த கிளை ஒன்றை பிடித்து அதிலுள்ள அனைத்து இலைகளும் உதிர்ந்து விழும் வரை குலுக்கினார்கள். பின்னர் அபூ உஸ்மானை நோக்கி, நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்று என்னை நீர் கேட்க்கமாட்டீரா? என வினவினார்கள், அதற்கு அபூ உஸ்மான், ஏன் அவ்வாறு செய்தீர்கள்எனக் கேட்டார்கள். அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள் விடை பகர்ந்தார்கள். ஒரு முறை நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு மரத்தின் கீழ் நின்று கொண்டிருக்கும் போது, நபிகளார் இதே போன்று செய்தார்கள். நபிகளார் ஒரு மரத்தின் காய்ந்த கிளை ஒன்றை பிடித்து அதன் இலைகள் அனைத்தும் உதிரும் வரை குலுக்கினார்கள். பின்னர் என்னிடம் கேட்டார்கள், ஸல்மானே நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்று கேட்க்கமாட்டீரா? என கேட்டார்கள். ஏன் அவ்வாறு செய்தீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு முஸ்லிம் சரியான முறையில் ஒழு செய்து பின்னர் ஐந்து வேளை தொழுகையையும் நிறைவேற்றுவான் எனில் அவனது அனைத்து பாவங்களும் இம்மரத்தின் இலைகள் உதிர்ந்தது போன்று நீங்கிவிடும் என விளக்கமளித்தார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனின் திருவசனத்தை ஓதினார்கள்..
பகலின் (காலை. மாலை ஆகிய) இரு முனைகளிலும் இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக. நிச்சயமாக நற்செயல்கள் தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூருவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும். (ஹுத் : 114).

8:24 AM | தலைப்பு: , , | Read More »

கிழக்குமாகாண தொழிற்பேட்டை நகரில் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு

சவுதி அரேபியா கிழக்கு மாகாண தொழிற் பேட்டை நகரமான அல் அல்ஜுபைல் நகரில் தமிழ் பேசும் மக்களுக்கான 14 வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு எதிர்வரும் 6.4.212 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் பல்வேறு அறிஞர்கள் நல்ல பல தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள். பெண்களுக்கு தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது.

3:53 PM | தலைப்பு: , , | Read More »

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added