ஹயாத்துஸ் ஸஹாபா. தொடர் -2
ஹயாத்துஸ் ஸஹாபா
தொடர் -2
தொழுகை
இறைப்பாதையில்
உயிர் நீத்த இரு சகோதரர்கள்:
ஸஅத் இப்னு அபீ
வக்காஸ் (ரலி) அவர்களின் மகன் ஆமிர் அவர்கள் தங்கள் தந்தை மற்றும் இதர
நபித்தோழர்கள் வழி தான் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் காலத்தில்
இரண்டு சகோதரர்கள் வசித்து வந்தார்கள். அந்த இருவரில் சிறந்த நல் அமல் புரியும்
ஒருவர் போரில் கலந்து கொண்டு ஷஹீதாகிவிட்டார். இரண்டாமவர் இன்னும் சில நாட்கள் (40 நாட்கள்) கழிந்து இறந்துவிட்டார். இதனை
குறித்து ஒரு நபர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், (நல் அமல் புரிந்த) அந்த மனிதர் சிறந்தவர் என
புகழ்ந்துரைத்தார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (இரண்டாவதாக இறந்த) அந்த சகோதரர்; தொழுகையை கடைபிடிப்பவராக இல்லையா? எனக் கேட்டார்கள். அவர் தொழுகையை முறையாக
நிறைவேற்றுபவர் என உறுதி செய்யப்பட்ட நிலையில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினர்கள்,
(தனது சகோதரர் ஷஹீதான
பின்னர்) அவரது தொழுகை, அவரை எந்த
நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது என்பது உமக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அப்போதுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்;,
தொழுகைக்கு உதாரணமாவது,
ஆளமும், தூய்மையும் நிறைந்த நதி ஒரு மனிதனின் வீட்டு
வாசலில் ஓடுகிறது. அந்த நதியில் அம் மனிதன் ஒரு நாளைக்கு ஐந்து முறை
குளிப்பானேயானால் அவனது உடலில் ஏதேனும் அழுக்கு தங்கியிருக்குமா? என விளக்கம் அளித்தார்கள்.
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள், குதாஆ
கோத்திரத்தின் ஒரு பகுதியான பாலி கிளையிலிருந்து இருவர் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதில் ஒருவர் போரில் கலந்து
கொண்டு ஷஹீதாகிவிட்டார். இரண்டாமவர் ஒரு வருடம் அதிகமாக வாழ்ந்தார். (பின்னர்
இயற்கையாக மரணமடைந்தார்). ஒரு நாள் தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கனவில்,
போரில் உயிர் நீத்த
ஷஹீதிற்கு முன்பாக இரண்டாமவர் சுவனத்தில் நுழைவதைக் கண்டார்கள். இதனால்
ஆச்சரியமுற்ற அவர்கள், (அல்லது அவரிடம்
இந்த செய்தியை கேட்ட மற்றொருவர்) நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். மறுநாள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், முதல் நபரின் இறப்புக்குப் பின்னர், இரண்டாம் நபர் ஒரு முழு ரமளான் மாத்தின்
நோன்பையும், ஆறாயிரத்திற்கும்
மேற்பட்ட ரக்அத் தொழுகையையும் தொழவில்லையா? என விளக்கமளித்தார்கள். மற்றொரு அறிவிப்பில்,
அவ் இருவருக்கும்
இடையேயான தரத்தின் வித்தியாசம் வானத்திற்கும், பூமிக்கும் இடையேயான தூரம் என
விடையளித்தார்கள்.
பாவத்தின்
பரிகாரம் தொழுகை.
அலி (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஒரு முறை நாங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பள்ளியில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு மனிதர்
எழுந்து சொன்னார், நான் ஒரு பாவம்
செய்துவிட்டேன். அதனை கேட்டும் நபிகளார் பாராமுகமாக இருந்துவிட்டனர். பின்னர்
தொழுகை முடிந்ததும் அந்த மனிதர்; எழுந்து மீண்டும்
சொன்னார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீர் முறையாக ஒழு செய்து எங்களுடன் தொழுகையை
நிறை வேற்றவில்லையா? அதற்கு அம்
மனிதர் ஆம் என மறுமொழி பகர்ந்தார். அப்படியானால், அது உங்கள் பாவத்தின் பரிகாரம் என நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அமல்களில் மிகச்
சிறந்தது எது? என்பதற்கு நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் மறுமொழி.
அப்துல்லா பின்
அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
ஒரு மனிதர் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களிடம், அமல்களில் மிகச்
சிறந்த அமல் எது எனக் கேட்டார். தொழுகை என நபிகளார் மறுமெழி பகர்ந்தார்கள். அதன்
பிறகு என அம்மனிதர் கேட்டார். அதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை
என்றார்கள். மூன்றாவது முறையும் அம்மனிதர் அதே கேள்வியை கேட்க்க நபிகளார் தொழுகை
என்றே மறுமொழி பகர்ந்தார்கள். அடுத்தடுத்த அம்;மனிதர் இக் கேள்வியை கேட்க்க நபிகளார், அல்லாஹ்வின்
பாதையில் அறப்போர் புரிதல் என்றார்கள். அதற்கு அம்மனிதர், எனக்கு பெற்றோர்கள் இருக்கின்றார்களே எனக்
கேட்க்க, உனது பெற்றேர்களை
நன்முறையில் நடத்த நான் உனக்கு அறிவுறுத்துகிறேன் என நபிகளார் மறுமொழி
பகர்ந்தார்கள். அதன் பின்னர் அம்மனிதர் கூறினார், உம்மை உண்மையைக் கொண்டு நபியாக அனுப்பியவன்
மீது சத்தியமாக நான் அறப்போரில் பங்கெடுத்துவிட்டு அவர்களை விட்டுவிடுவேன். அதற்கு
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள், எது சிறந்தது
என்பது உமக்கு தெரியும். (நீர் இல்லாத போது வேறு சிலர் பெற்றோர்களுக்கு பணிவிடை
செய்ய முடியும் எனும் போது).
பதிவு செய்தவர் எஸ்.எம்
on 1:28 AM. தலைப்பு
ஆன்மீகம்,
செய்திகள்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன