கர்நாடகா தேர்தல் முடிவும் SDPI யின் அரசியல் அங்கீகாரமும்:


                              நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது SDPI கட்சியின் வளர்ச்சி மறுக்க முடியாத அளவில் உள்ளது.மக்கள் மத்தியில் கட்சிக்கு கிடைத்து  உள்ள செல்வாக்கு கட்சியின் பாராபட்சமற்ற சமுதாய பணிகளே காரணம் ஆகும்.அதனால்தான் இதற்கு முன்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் யாரும் எதிர்பாராத அளவு வெற்றியடைய முடிந்தது.போட்டி இட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னணி கட்சிகளைவிடவும் அதிக வாக்குகள் கிடைத்து உள்ளது.முக்கியமாக சில வாக்குகள் வித்யாசத்தில்  இரண்டாம் இடத்தையும் பிடித்து உள்ளது.முதன் முதலில்  இதுபோன்ற  ஒரு அங்கீகாரம் கிடைத்தது  கட்சியின் வளர்ச்சி பாதையை உறுதி செய்கிறது.மதவாத கொள்கையை மையமாக வைத்து அரசியல் நடத்திய பிஜேபி அரசை மக்களே ஒதுக்கிவிட்டனர்.அதன் பெரும்பாலான தலைவர்கள் தேர்தலில் மோசமான தோல்வியை தழுவி உள்ளனர்.மோடியை முன்னிறித்தி செய்த பிரச்சாரங்கள் மோடியை மக்கள் வெறுப்பதை காட்டுகிறது.தேர்தலை தங்களுக்கு சாதகமாக ஆக்கிகொள்ள பிஜேபி அலுவலகத்தில் குண்டுவெடிப்பை நடத்தி அதை அப்பாவி முஸ்லீம்கள் மேல் சுமத்தியும், தமிழ்நாட்டை சேர்ந்த சில அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் கைது செய்தும்,கேரளாவில் உடற்பயிற்சி செய்து கொண்டு  இருந்த PFI (popular front of india) உறுப்பினர்களை  ஆயுதபயிற்சியில் ஈடுபட்டார்கள் என்று கைதுசெய்ததும் அதிகாரிகளுடன் இணைந்து கொண்டு அரசியல்வாதிகள் செய்யும் மட்ட அரசியலை காட்டுகிறது.இதன் மூலம் SDPI கட்சிக்கு மக்களிடம் அவப்பெயரை உண்டாக்கவும்,கரநாடகாவில் உள்ள தமிழ்நாடு மற்றும் கேரளா மக்களின் வாக்குகளை பிரிக்கவும் சதி செய்தனர்.ஆனால் இறைவன் அவர்களின் சதிகளை முறித்து அவர்களை தோல்வி அடைய  செய்தான்.மதவாத சக்திகள் வட இந்தியாவை போல தென் இந்தியாவையும் மாற்ற வேண்டும் என்ற திட்டம் தோல்வி தழுவியது.     பிஜேபி மேல் உள்ள ஒட்டுமொத்த வெறுப்பே மக்கள் காங்கிரஸ் அரசை பெரும்பான்மையாக வெற்றி பெற செய்தது.காங்கிரஸ் அரசு மக்கள் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி மேலும் இந்த மதவாதிகளின்,இந்துத்துவ அரசியலையும் ஒழிக்க முன் வர வேண்டும்.குற்றங்கள் சரியாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.அப்பாவி முஸ்லீம்களை கைது  செய்தவர்களை விடுவிக்க வேண்டும்.இல்லையென்றால் காங்கிரஸ் வர போகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படும். கர்நாடக போலீஸ் தமிழ்நாட்டில் புகுந்து அப்பாவிகளை கைது செய்ய அனுமதி வழங்கி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசும் தன் போக்கை மாற்ற வேண்டும்.அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளும் ஒன்றாகி விஸ்வரூபம் படத்தை தடை செய்ய சொன்னதும் உடனே நிறைவேற்றிய அரசு இந்த விசயத்தில் பல போராட்டங்கள் நடந்த பின்னும் அமைதி காப்பது அழகல்ல.கோவையில் மீண்டும் கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கில் சில சம்பவங்கள் நடைபெறுவதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.ஆனால் மரக்காணத்தில் உடனடியாக குற்றவாளிகளை சிறையில் அடைத்தது.இந்த நீதி முஸ்லீம்களுக்கும் கிடைக்க வேண்டும். SDPI கட்சியின் தாரக மந்திரம் சம உரிமை,சமநீதி,சம பாதுகாப்பு..அரசியல் லாபம் இல்லை.மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் கட்சி இல்லை..அனைத்து
மக்களால்,மக்களுக்காக,மக்களே களப்பணி  ஆற்றும் கட்சி.இனி வரும் காலங்களில் அரசியலில் முத்திரை பதிக்க இறைவன் அருள் புரிவானாக!


8:13 PM | தலைப்பு: , , , , | Read More »

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் “பள்ளி செல்வோம்” பிரச்சாரம்!


மனித வாழ்வினை மேம்படுத்தி நல்லொழுக்கத்தையும், மன வலிமையையும், பரந்த  அறிவையும், சுய வலிமையையும் தருவதுதான் கல்வி. தனி மனித முன்னேற்றம், குடும்ப முன்னேற்றம், சமூக முன்னேற்றம், தேசத்தின் முன்னேற்றம் இவையெல்லாம் கல்வியின் மூலமே சாத்தியப்படும். சமூகத்தில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளகற்ற தேவையான ஆயுதம் கல்வி மட்டுமே.
இவ்வுலகில் கல்விக்குக் கண் தந்த மார்க்கம் இஸ்லாம்! திருக்குர்ஆனின் முதல் வசனமே “இக்ரஃ : படிப்பீராக!” என்றுதான் துவங்குகிறது. அதாவது கல்வி கற்றலின் அவசியத்துடன்தான் திருக்குர்ஆன் துவங்குகிறது. “கல்வி ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை காணாமல் போன சொத்து. அவர் அதனை கிடைக்குமிடமெல்லாம் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

இந்திய மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறார்கள்.ஒரு நாட்டிற்கு கல்வியில் வளர்ச்சி, பொருளாதாரத்தில் மேம்பாடு என்பன மிக முக்கியமானவை. அதே போல் ஒரு சமுதாய வளர்ச்சிக்கும் இவை மிக முக்கியமானவை. ஒரு நாட்டிலுள்ள மிகப் பெரும் சிறுபான்மைச் சமுதாயம் பின் தள்ளப்பட்டு, அதன் பெரும்பாலான மக்கள் கல்வியறிவற்றவர் களாகவும், வறியவர்களாகவும் இருந்தால் அந்த நாடு உண்மை யான ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டவே முடியாது.
இந்திய முஸ்லிம்களின் துயர நிலையைப் பாரீர்! அவர்கள் அனைத்து அம்சங்களிலும் தலித்துகளை விட பின்தங்கியுள்ளனர் என்று சச்சார் கமிட்டி தெளிவாகக் குறிப்பிடுகின்றது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
ஒரு குழந்தை கூட பொருளாதார நெருக்கடியினாலோ, இன்னபிற காரணத்தினாலோ பள்ளிக்குச் செல்லாமல் இருந்திடக் கூடாது என்ற நோக்கத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் “பள்ளி செல்வோம்” (School Chalo) பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.

இந்தப் பிரச்சாரத்தில் கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன:
1. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள கிராமங்களில் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.
2. உள்ளூர் கல்விக்கூட அதிகாரிகளின் உதவியுடன் மேற்கண்ட பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்யப்படுகின்றது.
3. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வீடு வீடாகச் சென்றும், பொது நிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
4. மாணவர் பேரணிகள், தெரு நாடகங்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவை இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் அம்சங்கள்.
5. பிரச்சாரத்தின் முக்கிய பாகமாக ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளிப் பைகள் (Free School Kits) வழங்கப்படுகின்றன.

2012ம் ஆண்டில் மட்டும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 12 மாநிலங்களில் 491 கிராமங்களில் 64,032 இலவச பள்ளிப் பைகளை வினியோகித்துள்ளது. பிரச்சாரத்தின் ஒரு பாகமாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில்  இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
இந்த வருடம் இந்தப் பிரச்சாரத்தை 13 மாநிலங்களில் மேற்கொள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் பள்ளிப் பைகள் வினியோகிக்கப்படும்.

மேற்கு வங்கத்திலும், மணிப்பூரிலும் இந்தப் பிரச்சாரம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 26,000 பள்ளிப் பைகள் (School Kits) வினியோகிக்கப்பட்டன.

ஒரு பள்ளிப் பையின் விலை : ரூ. 300.00

கல்வி அறிவை வழங்கும் இந்தப் புனிதப் பணியில் நாமும் இணைவோம். ஸதக்கத்துன் ஜாரியா என்ற நிரந்தர தர்மத்தின் பலனை அடைவோம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைமையகம் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

6:44 PM | தலைப்பு: , , | Read More »

முஸ்லிம்களுக்கு எதிராக விதைக்கப்படும் விஷமங்களும்;அளிக்கப்படும் அநீதியும்:


நண்பர்களே!மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்கள் உண்மைகளை தெரிந்து கொள்ளவும்  இந்த கட்டுரையை எழுதுகிறேன்.நாட்டில் எங்கே குண்டு வெடித்தாலும் உடனே கண்ணை மூடி கொண்டு முஸ்லீம்கள் மீது பழி  போட்டு அப்பாவி இளைஞர்களை கைது செய்து விசாரணை கைதி என்று பல வருடங்களாக சிறையில் அடைப்பதும்,உண்மையான குற்றவாளிகள் பிடிபட்ட பின்னரும் அவர்களை வெளியேவிடாமல் தொடர்ந்து சித்ரவதை செய்வதும்,வெளியே வந்தாலும் மீண்டும் மற்ற வழக்குகளில் கைது செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. குண்டு வெடிப்பில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.ஆனால் இப்போது நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது நாட்டின் மதச்சார்பின்மையும்,இறையாண்மையும்,நீதித்துறையும் சந்தேகம் அடைய வைக்கிறது.உதாரணமாக சில சம்பவங்களை தருகிறேன்.

1.சம்ஜவுதாரயில்குண்டுவெடிப்பு:
Feb 18 2007
68 பேர் பலி, அதிகமானோர் பாகிஸ்தானியர் (குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் முகம்மத்)சி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் – ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளான சந்தீப் டாங்கேவையும் ராம்ஜியையும் போலீஸ் தேட ஆரம்பித்தது.

2.மாலேகான் குண்டுவெடிப்பு-1:
Sep 8 2006
37 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - சல்மான் பார்சி, பாருக் இக்பால், ரயீஸ் அஹமத், நூருல் ஹுதா, ஷபீர்.ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் ஹிந்த்துத்துவ தீவிரவாதிகள்

3.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு:

May 18 2007
14 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - 25 முஸ்லிம்கள் குற்றவாளிகளாக. 80 முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில்.சீ.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள்- ஹிந்துத்துவ தீவிரவாதிகளான சந்தீப்டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, லோகேஷ்சர்மா

4.அக்டோபர் 2009ல் மார்கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 2010ல் தேசிய புலனாய்வு நிறுவனம் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் 11 பேர் மீது கோவாவில் உள்ள பஞ்சிம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

5.அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு:
Oct 11 2007
3 முஸ்லிம்கள் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் முஹம்மத்சி.பி.ஐ., ஏ.டி.எஸ். விசாரணைகளில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா, சந்திரசேகர், பிரசாத், அனில் ஜோஷி.

6.மாலேகான் குண்டுவெடிப்பு-2:

Sep 29 2008
7 பேர் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - இந்திய முஜாஹிதீன்கள்.ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரிய ஜாக்ரன் மன்ச் பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோகித் மற்றும் ஸ்வாமி அமிர்தானந்த் தேவ் ஆகிய ஹிந்துத்துவ தீவிரவாதிகள்.

7.தானே சினிமா குண்டுவெடிப்பு:

Jun 4 2008
ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களான ஹிந்து ஐங்காகிருதி சமீதி, சனாதன் அன்று, தானே சினிமா குண்டு வெடிப்பு தொடர்பாக ஹிந்து ஜன்ஜாக்ரிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்புகளைச் சேர்ந்த ரமேஷ் ஹனுமந்த் கட்கரியும் மங்கேஷ் தினகர் சன்ஸ்தா. ‘ஜோதா அக்பர்’ என்ற முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஹிந்திப் படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.

8.கான்பூர்,நந்தித் குண்டுவெடிப்பு முயற்சிகள்:
Aug 2008
இரு இடங்களிலும் குண்டு தயாரிக்கும் சமயத்தில் வெடித்து 4 ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் பலி. பஜ்ரங் தள் உறுப்பினர்கள் என் ராஜ்கோண்ட்வாரும் எச் பன்சேவும் தவறுதலாக வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டனர்.ஆகஸ்ட் 2006ல் அதே அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ராவும் பூபிந்தர் சிங்கும் கான்பூரில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டனர். இவற்றைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் உள்ள பல நகரங்களில் மசூதிகளில் குண்டுகள் வெடித்தன.  நந்தாதில் தயாரிக்கப்பட்ட குண்டு அவுரங்காபாத் மசூதிக்கானது என்று தெரியவந்தது. சம்பவ இடத்தில் அவுரங்காபாத் வரைபடமும் பொய் தாடிகளும் முஸ்லீம் ஆண் உடைகளும் கண்டு பிடிக்கப்பட்டன.

9.கடந்த பிப்ரவரி 21ம் தேதி ஹைதரபாத் தில்சுக்நகரின் சந்தை
த் தெருவில் 100 மீட்டர் இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன; 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்; 119 பேர்காயமடைந்தனர்.இதி்ல் குற்றம் சாட்டப்பட்ட சித்திக் குற்றம் நிருபிக்கபடாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.உண்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை..

                                        

தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. தாடியும், தொப்பியும் தடயங்களாக விட்டு சென்று முஸ்லிம்களின் மேல் பழியைப் போட முயன்ற இந்து முன்னணி பயங்கரவாதிகளை வளைத்து பிடித்தது தமிழக காவல் துறை.மேலும் ராம சேனா என்ற அமைப்பின் ப்ரவீன் முத்தலீக் என்பவன் முஸ்லிம்களின் மேல் செயற்கையாக மதக்கலவரத்தை உருவாக்க விலை பேசி, குண்டு வைப்பது மட்டும் எங்கள் கலாச்சாரமல்ல; கலவரங்களை செயற்கையாக உருவாக்கி முஸ்லிம்களை கருவறுப்பதும் எங்களது கைவந்த கலை தான் என்பதை உலகத்திற்கு புரிய வைத்தான். கேமராவை மறைத்து வைத்து அவனிடம் ரகசியமாகவும் நைச்சியமாகவும் பேசிய போது கலவரம் நடத்த பேரம் பேசி விலை நிர்ணயம் செய்த அயோக்கியத்தனம் வெளியுலகிறகு கசிந்தது.இன்னும், ஹைதராபாத்தில் மாட்டுக்கறியை கோவிலில் வீசி விட்டு அந்தப் பழியை முஸ்லிம்களின் மேல் போட்டு கலவரத்தை தூண்ட நினைத்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டதும்... (இதே யுக்தி மதுரையிலும் முன்னோட்டமிடப்பட்டது. ஆனால் கைது செய்தது முஸ்லிம்களை)கர்நாடாகாவில் அரசு அலுவலகத்தில் புது வருஷ தினத்தன்று பாகிஸ்தான் கொடியை ஏற்றி, முஸ்லிம்களின் மேல் பழியைப் போட இருந்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டு பல முஸ்லிம்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதும்..

                                    

இவர்களின் நோக்கம் எல்லாம் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து மக்களின் மத்தியில் பிரிவினையை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்பதே.இவர்களின் இந்த செயல்களை அரசும் கண்டும் காணமல் இருப்பதுதான் வேதனை..இவர்கள் எல்லாம் வெளியே உல்லாசமாக உலவி கொண்டு இருக்கும்போது நாட்டில் இன்னும் பல குண்டு வெடிப்புகள் நிகழத்தான் செய்யும்.இவர்களையும்.அந்த அமைப்புகளையும்  அரசு தண்டிக்கும்போது நாட்டில் அமைதி நிலவும்...அன்றுதான் நாம் அனைவரும் பெருமைப்பட முடியும் இந்தியா ஒரு மதச்  சார்பற்ற நாடு என்று..

3:09 PM | தலைப்பு: , , , | Read More »

குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடியா காரணம்?

குஜராத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் நரேந்திர மோடி தான் முழுமையாக காரணம் என்று பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல என்பதை புள்ளி விவரங்களின் அடிப் படையில் பார்த்தால் தெளிவாகப் புரியும்.

1994-95 இல் குஜராத்தின் வளர்ச்சி 13.2 விழுக்காடாகவும், 1994 முதல் 2001 வரை யிலான சராசரி வளர்ச்சி 10 . 13 விழுக்காடாகவும் இருக்கும் போது மோடி முதல்வராக இருக்கவில்லை. 1999 இல்தான் அவர் முதல்வரானார்.
1990 இல் குஜராத் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. 1960 இம்மாநிலம் உருவாக்கப் பட்டபோது எட்டாவது இடத்தில் இருந்த குஜராத் 20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மூன்றாவது இடத்திற்கு வந்தது.
மின்உற்பத்திக்குத் தேவையான கட்டுமானங்களில் 35 விழுக்காடு 1995-2000த்துக்கும் இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
நாட்டின் பெட்ரோலியப் பொருள்களின் தயாரிப்பில் 49 விழுக்காடு குஜராத்தில் இருக்கிறது. நாட்டின் மிகப் பெரிய துறைமுகமான பவநகரும், மிகப் பெரிய ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ள ஜாம்நகரும் குஜராத்தில் தான் உள்ளன. இந்தியாவின் சோடா உப்பு தயாரிப்பில் 90 விழுக்காடு குஜராத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.


இவை அனைத்துமே குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி வருவதற்கு முன்பே இருந்தவைதான்.
குஜராத் மாநிலம் இன்று வளமாக இருப்பதாகக் கூறுவதில் என்ன வியப்பு இருக்க முடியும்?
வழக்கமான முன்னேற்றத்திற்கிடையேயும் குஜராத்தின் தொழிலாளர்களில் 93 விழுக்காட்டினர் முறைசாராத் துறைகளில் பணியாற்றுபவர்களாகவே உள்ளனர்.
அதனால், வெறும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு மட்டுமே மக்களின் வாழ்க்கை மேம்பட்டு விட்டதாகக் கூற முடியாது.


மனித வள மேம்பாட்டுக் குறி யீட்டில் 2003-04 இல் குஜராத் ஒரு இடம் பின்தங்கி இன்று கேரளா, பஞ்சாப், தமிழ் நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களுக்குக் கீழே உள்ளது. கிராமப்புற வளர்ச்சியில் அய்ந்தாவது இடத்தில் இருக்கும் குஜராத் முதலிடத்தில் உள்ள பஞ்சாபை விட பின் தங்கியே உள்ளது.
தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மற்ற மாநிலங்கள் பெறும் தொகையில் பாதி அளவைத்தான் குஜராத் பெறுகிறது.


அண்மையில் பா.ஜ.க.வை விட்டு விலகிய உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்தான் இத்தகவலை வெளியிட்டார் என்பது கவனிக்கத் தகுந்தது.
2005 இல் நடத்தப்பட்ட செயலாற்றல் மிக்க குஜராத் கண்காட்சியின் ஆலோசகர்களான எர்னஸ்ட் அண்ட் யங் எனும் நிறுவனம், மாநிலங்களில் செய்யப்படும் முதலீடுகளைப் பொறுத்த வரை, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்கனை விட குஜராத் பின்தங்கியும், கர்நாடகாவுக்கு இணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


தொழிலாளர் தரத்தைப் பொறுத்தமட்டில், அதே நிறுவனம் குஜராத்துக்கு வெறும் பி கிரேட் தந்துள்ளது. பல நிபந்தனைகள் நிறை வேற்றப்படவில்லை என்பதே இதன் காரணம்.
1996 இல் ஆசிய வளர்ச்சி வங்கி குஜராத்தை முதலீட்டு விஷயத்தில் இரண்டாவது இடத்தில் வைத்திருந்தது. 2005 இல் குஜராத் அய்ந்தாவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குஜராத் முன் னிலையில் இருக்கும் போது, நரேந்திர மோடிதான் அதனை முன்னிலைப்படுத்தினார் என்று கூறுவதன் காரணம் என்ன?


மோடியிடம் போலிப் புள்ளி விவரங்கள், கணக்குகள் காட்டும் திறமை அதிகமாக இருந்தது என்பதால் இந்த உண்மை மக்களின் கண்களுக்குத் தெரியாது.
குஜராத்தின் கவுரவம் என்னும் உணர்ச்சியை மிகவும் தந்திரமாக மோடி தூண்டிவிட்டார். இதனால் குஜராத்தின் வளர்ச்சி விகிதத்தைப் பற்றி எவருமே கவலைப்படவில்லை.
தனிப்பட்ட முறையில் திறமை மிகுந்த நிர்வாகி என்று மோடி காட்டிக் கொண்டது தான் பல இந்திய நிறுவனங்களைக் கவர்ந்தது.


தரப்பட்டியலில் குஜராத் கீழே இறங்குவதைப் பற்றியும் அவர்கள் சிந்திக்கவே செய்தார்கள்.
ஆனால் அவர் ளுக்கு வேண்டியது எல்லாம் மோடியின் வேகமான செயல் பாடு மட்டுமே. நானோ கார் தயாரிப்புக்கு மோடி பாதுகாப்பு மட்டும் கொடுக்கவில்லை; மூன்றே மாதங்களில் தேவையான பர்மிட்டுகளை மோடி தயார் செய்து ரத்தன் டாடாவுக்குக் கொடுத்தார்.


இது இதற்கு முன் எப்போதுமே கேள்விப்படாதது ஆகும். சட்டத்தைத் தன் விருப்பம் போல் வளைக்க இயன்ற மனிதர் ஒருவர் இங்கே இருக்கிறார்; ஆனால் என்ன - ஒன்று, அவருக்கு உங்களைப் பிடித்திருக்க வேண்டும்.
தனியார் முதலீட்டை மோடி வரவேற்றபோது, பெரிய, சிறிய நிறுவனங்கள் அவர் பக்கம் ஓடின.
அரசியல் வாதிகளின் ஆதரவும், பாதுகாப்பும் தேடுவது என்ற இந்திய நிறுவனங்களின் மனப்பான்மை ஒன்றுதான் பொருளாதார தாராளமய மாக்கலின் தாக்கத்திலிருந்து தப்பியதாகும்.


செய்வது அனைத்தையும் வேகத்துடன் செய்வது என்ற மோடியின் வழியே முதலீட்டாளர்களைக் கவர்ந்தது. மோடியை இந்தியாவின் எதிர்காலப் பிரத மராகவே அனில் அம்பானி காணத் தொடங்கிவிட்டார். அவரைத் தொடர்ந்து சுனில் மிட்டலும் மற்றவர்களும் இந்தப் பாட்டைப் பாட ஆரம்பித்துவிட்டனர்.
---மேலும் மோடியை ஆதரிக்க அவர் ஒரு நடுநிலைவாதி அல்ல.குஜராத் வழககுகளில் அவர் பெயர் இன்னும் உள்ளதும் அவருக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டதும் அனைவரும் அறிந்த விஷயம்.காங்கிரஸ்,பிஜேபி தவிர மூன்றாவது அணியில் ஒருவர் பிரதமர் ஆனால்தான் இந்தியா ஒளிரும்..இந்தியர்கள் அனைவரும் நிம்மதியாக வாழ முடியும் என்பது என் அபிப்ராயம் ....

1:12 PM | தலைப்பு: , , , , | Read More »

டில்லியில் 5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் நியாயம் வேண்டி வலுக்கிறது போராட்டம்

டில்லி: இரண்டு நாட்களாக தொடர்ந்து கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட 5 வயது சிறுமி மீட்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கடந்த வெள்ளியன்று டில்லி எய்ம்ஸ்(AIIMS)மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி பேச்சுமூச்சற்று தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் D.K.சர்மா தெரிவித்தார்.

சிறுமியை கற்பழித்த குற்றவாளி மனோஜ்குமார் பீஹாரின் முஜப்பர்பூர் என்ற கிராமத்தில் ஒளிந்திருந்த நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டான். அவனுக்கு வயது 22.

பாலியல் பயங்கரவாதி மனோஜ்குமார்
டில்லி காந்திநகரில் உள்ள, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் வசித்து வருகிற அதே அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் குடியிருந்த குற்றவாளி மனோஜ், சிறுமியை கடந்த 15ம் தேதி கடத்தி தன் வீட்டிலேயே இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் கூட இன்றி அடைத்து வைத்திருந்ததாக காவல்துறை தகவல் தெரிவிக்கின்றன. மேலும் அவர்கள் கூறுகையில், சிறுமி இரண்டு நாட்களாக தொடர்ந்து கற்பழிக்கப்பட்டும், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டும் உள்ள நிலையில் சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு தேடிவந்த அவளின் குடும்பத்தினர் புதன் கிழமையன்று சிறுமியையை மீட்டனர்.

மனோஜ்குமார் கைது செய்யப்பட்ட பின் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட பொழுது, மூன்று நாளைக்குள் டில்லி காவல்துறையின் வசம் குற்றவாளி ஒப்படைக்கப்பட வேண்டுமென்று பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் மருத்துவர்கள் கூறுகையில் 200மி.லி ஹேர் ஆயில் பாட்டில் மற்றும் மெழுகுவர்த்தி துண்டுகள் ஆகியவை சிறுமியின் பிறப்புறுப்பிலிருந்து அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே, சிறுமிக்கு இழைந்த கொடுமையைக் கண்டித்தும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டியும் போரட்டகாரர்களும் பொதுமக்களும் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் முன்பாகவும் டில்லி காவல்துறை தலைமையகத்தின் முன்பாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் போரட்டத்தைக் கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

7:30 PM | தலைப்பு: , , , , , | Read More »

மோடியின் அரசியல் நாடகம்.

குஜராத் அரசு 2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனக்க்கலவரத்தில் ஆயுள் தண்டனை அளிக்கட்பட்ட மாயா கோட்னானி,பாபு பஜ்ரங்கி  உட்பட 10  பேரின் தூக்கு தண்டனைக்கு உச்ச நீதி மன்றத்தில் மனு அளிக்க போவதாக அரசு வழக்கறிஞர் கௌரங்க் வியாஸ் அறிவித்துள்ளார்.
எதிர்வரும்  நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மோடி தன் மேலே உள்ள மதச் சாயத்தை மறைக்க தனது சகாக்களையே பலி கொடுக்க துணிந்துவிட்டார்.தனது இமேஜ் இதன் மூலம் பெரியதாகவேண்டும் என்று எண்ணி வேஷம் போடும் மோடியை பற்றி பாமர மக்களும் அறிவார்கள்.இவர் இத்தனை வருடங்கள் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு இருந்தாரா என்ன? கலவரத்தில் அப்பாவி மக்களையும் பெண்களையும் சிறுவர்களையும் வார்த்தையால் சொல்ல முடியாத கொடுமைகளால் கொன்றவர்களுக்கு பதவியில் அமர்த்தி அழகு பார்த்தாரே!. தெகல்ஹாவில் வீடியோ ஆதாரங்களுடன் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொண்ட போதும் நாடே அவர்களை தண்டிக்க கோரியபோதும் எங்கே போய் இருந்தார் இந்த நீதிமான் மோடி?. மாறாக மாயா கோட்னானிக்கு MLA ,அமைச்சர் பதவியும், மதன் சாவலுக்கும் ,ஹரீஸ் பட்டுக்கும் குற்றவாளிகள் என்று தெரிந்த பின்னர்தானே MLA பதவி கொடுத்தார்.ஆனால் இன்று தன் முன்னேற்றத்துக்கு தடை என்று தெரிந்ததும் அவர்களை பலி  கொடுக்க துணிந்துவிட்டார். 
ஊடங்களின் உதவியுடனும் காங்கிரஸ் அரசுக்குள்ள எதிர்ப்புணர்வையும்  பயன்படுத்தி எப்படியாவது பிரதமர் பதவியை அடைந்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார் மோ(கே)டி. ஆனால் நாட்டில் உள்ள நடுநிலையாளர்களும் மதசார்பற்ற கட்சிகளும் அவரின் கனவை தகர்க்க வேண்டும். இவர்களை எல்லாம் விட கலவரத்தில் மூன்று நாட்கள்  அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பயன்படுத்தி ஒரு சிறுபான்மை இனத்தை அழிக்க முக்கிய காரணகர்த்தவே இந்த மோடிதான்.முதலில் தண்டிக்க பட  வேண்டியதும் அவர்தான்.தூக்கிலிடப்பட வேண்டியவரும் இவரே.

8:14 AM | தலைப்பு: , , , , , | Read More »

டெல்லியில் தொடரும் பாலியல் வன்முறைகள்......


டெல்லி: டெல்லியில் ஓடும் காரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளபோதிலும், டெல்லியில் இக்கொடுமை ஒரு தொடர் நிகழ்வாகவே உள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள அசோக் நகர் அருகே நேற்று காலை பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அம்மாணவியை காரில் தூக்கிப் போட்டு அருகில் உள்ள சரோஜினி நகருக்கு கடத்திச் சென்றது. இந்த கும்பலில் ஒருவர் அம்மாணவியின் ஒன்றுவிட்ட சகோதரன் ஆவார்.

அதனைத் தொடர்ந்து காரில் வைத்தே அம்மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய அக்கும்பல், பின்னர் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டிவிட்டு, அம்மாணவியை ஓடும் காரிலிருந்தே தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்ற இருவரையும் தீவிரமாக தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அம்மாணவி மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  

கடந்த டிசம்பர் மாதத்தில் ஒடும் பஸ்ஸில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் டெல்லியை குலுக்கிய நிலையில் மீண்டும் அதுபோன்ற தொரு சம்பவம் அரங்கேறியிருப்பது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இதுபோன்ற குற்றங்கள் இந்தியாவின் பெரும் நகரங்களில் நடந்து வருவது வாடிக்கையாகி வருகின்றது. இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு அரசு தனிகவனம் எடுத்து இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

3:55 PM | தலைப்பு: , , , , | Read More »

பெங்களூரில் (தேர்தல்) குண்டு வெடிப்பு!


பெங்களுரு: பெங்களூரில் பா.ஜா.க அலுவலகத்திற்கு அருகில் இன்று காலை 10:20 மணி அளவில் வெடிகுண்டு வெடித்தது. இதில் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட்ட  KSRP போலீஸ் வாகனத்தில் இருந்த  8 போலீசார் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பில் 2 கார்கள் மற்றும் 2 மோட்டார்சைக்கிள் முழுமையாக சேதமடைந்தது. முதலில் இது பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்திற்க்காக பயன்படுத்திய ஆம்னி வேனின் கியாஸ் சிலிண்டர் வெடித்ததாக போலீசார் சந்தேகித்தனர். பின்னர் இது இரண்டு கார்களுக்கு மத்தியில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்த வெடி குண்டினால் ஏற்பட்டது என்று காவல் துறை ஆணையர் ராகவேந்திரா அவுராத்கர் தெரிவித்துள்ளார்

இதற்க்கு முந்தைய குண்டுவெடிப்பு இதே தேதியில் IPL போட்டிக்கு முன்னதாக சின்னசாமி மைதானத்தில் நிகழ்ந்தது. இதன் தொடர்பாக அப்துல் நாசர் மதானி எந்த தகுந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டார்.
மூத்த காவல் துறை அதிகாரிகள் கூறுகையில்,  நீல நிற சுசுகி மோட்டார் சைக்கிளில் டைமர் வகையை சார்ந்த IED  குண்டு பொருத்தப்பட்டு வெடிக்க செய்யப்பட்டுள்ளது என்று  கூறினார். மேலும் அந்த சுசுகி பைக் முந்தைய இரவு அங்கு நிருத்தபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகின்றனர். இந்த வெடி குண்டு தாக்குதலின் விசாரணைக்கு பா.ஜ.க அலுவலகத்தில் பொருத்தப்பட்ட CCTV காமெரா உதவும்(?) என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

காவல்துறை உயர் அதிகாரி L.R. பாச்சாவ் கூறுகையில், தற்சமயம் குண்டு வெடிப்பை மட்டுமே உறுதி செய்ய முடியும் எனவும், எந்த வகையான குண்டு வெடிக்க வைக்கப்பட்டது என்பது விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் ஜன்னல்களில் இருந்து நொறுங்கிய கண்ணாடி  துகள்களால் சூழ்ந்திருந்தது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமையத்தில் KSRP வேனில் இருந்த தலைமை காவலர் வெங்கடேசையா ஹிந்து பத்திரிக்கையிடம்  கூறுகையில், வெடி குண்டின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாங்கள் பெரும் சப்தத்தை கேட்டோம். எங்களால் எதனையும் சரியாக காண முடியவில்லை. முற்றிலும் புகை மூட்டமாக இருந்தது. புகை விலகியதும் மக்கள் சாலையில் விழுந்து கிடந்ததை கண்டோம். அதில் பெரும்பாலானோர் புகை மற்றும் சிதறிய கண்ணாடி துண்டுகளால் காயமடைந்தவர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக  பா.ஜ.க அலுவலகத்திற்கு அருகிலிருந்த போலீஸ் வேன் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று பா.ஜ.க தொண்டர்கள் புகார் கூறியதால்  வெடிப்பு நடந்த இடத்திற்கு மாற்றப்பட்டது. இடம் மாறிய சில நொடிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது  என்று கூறினார்.


இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை K.C. பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து செல்லப்பட்டனர்.
குண்டு வெடிப்பு நடந்த தெரு முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெடி குண்டு நிபுணர்கள், தேசிய புலனாய்வு அதிகாரிகள் மற்றும் உளவு துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். உள்துறை அமைச்சர் அசோக், கட்சி அலுவலகத்தையும் சம்பவ இடத்தையும் பார்வை இட்டார்.

இதனிடையில் இந்த குண்டு வெடிப்பை முன்னிறுத்தி அரசியல் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அஹமத், இந்த குண்டு வெடிப்பு பா.ஜ.க வின் தேர்தலுக்கு பெரிதும் உதவும் என்று கூறியுள்ளார். இதற்க்கு பா.ஜ.க தரப்பில் இருந்து பெரிதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இன்னும் பா.ஜ.க ஆதரவு செய்தி ஊடகங்கள் இந்த குண்டு வெடிப்பை பா.ஜ.க விற்கு ஆதரவாகவும் முஸ்லீம்களுக்கு எதிராகவும் திருப்ப நேரடி மற்றும் மறைமுக உக்திகளை கையாண்டு வருகின்றனர். http://www.oneindia.in/ என்ற செய்தி தளம் பெங்களுர் குண்டு வெடிப்பு செய்திகளை வெளியிட்ட அனைத்து பக்கங்களிலும்அந்த செய்திக்கு கீழ் அப்துல் நாசர் மதானி குறித்த வீடியோ பதிவையிட்டு இருக்கின்றது. இது போன்ற செயல்கள் தொடர்பில்லாத நிகழ்வுகளை தொடர்
பு படுத்தி பார்க்க உறுதுணையாய் அமையும்.

நாட்டில் நடந்த குண்டு வெடிப்பில் பல அப்பாவி முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு ஆதராமில்லாமல் விடுவிக்கப்பட்டு வரும் வேளையில் இது போன்ற செய்தி மக்களை திசைதிருப்பும் முகமாக அமையும். புதிய தேச வாசகர்கள் http://www.oneindia.in/ தளத்தின் இந்த செயலை கண்டித்து அந்த பதிவுகளை நீக்க கோரி மின்னஞ்சல் அனுப்பலாம்.

7:32 PM | தலைப்பு: , , , , | Read More »

அப்படி செய்வது,சட்டத்திற்கு விரோதமானது-மத்திய அரசு


புதுடில்லி:"அசாமில், சந்தேகத்துக்குரிய 40 லட்சம் வாக்காளர்களை, மத ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ, பாகுபாடு பார்த்து, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. அப்படி செய்வது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அசாமை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்றின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், "வங்கதேசத்திலிருந்து, சட்ட விரோதமாக அசாமுக்குள் குடியேறிய 40 லட்சம் பேர், இங்குள்ள வாக்காளர் பட்டியலில், தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். அவர்களை கண்டறிந்து, வாக்காளர் பட்டியலில் இருந்து, அவர்களின் பெயர்களை நீக்க வேண்டும்' என கோரியிருந்தது.இந்த மனு, நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகோய் 
ஆகியோரைக் கொண்ட, சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்களை, சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. சட்ட விரோத குடியேற்றம், நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த விஷயத்தில் அரசு உறுதியாக உள்ளது.வங்கதேசத்தில் இருந்து, சட்ட விரோதமாக குடியேறியவர்கள், இங்கு தங்கியிருப்பது தெரிய வந்தால், அவர்களை கண்டறிந்து, அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என, அனைத்து மாநில அரசுகளுக்கும், அவ்வப்போது, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

அதேநேரத்தில், அசாமில், சந்தேகத்துக்குரியவர்களாக கருதப்படும், 40 லட்சம் வாக்காளர்களை, மத ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ, பாகுபாடு பார்த்து, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. அப்படி செய்வது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.இதுபோன்ற நடவடிக்கை, இந்தியாவின் மதச் சார்பின்மை கொள்கைக்கும், ஜனநாயக கட்டமைப்புக்கும் எதிரானது. சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை கண்டறிவதற்காக, ஒரு புதிய முறையை அரசு உருவாக்கியுள்ளது. இதன்படி, "டி' என்ற பிரிவில், சந்தேகத்துக்குரிய வாக்காளர்களின் பெயர், பட்டியலிடப்படும். இந்த பட்டியலில் உள்ளவர்கள், தேர்தலில் நிற்கவோ, ஓட்டளிக்கவோ, முடியாது.இவ்வாறு பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:33 PM | தலைப்பு: , , , | Read More »

ஏர் கேரளா...


வளைகுடா நாடான மஸ்கட்டில் கேரளா முஸ்லிம் கலாசாரம் மையம் சார்பாக நடத்தப்பட்ட இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கேரளா எம்பி இ.டி. முஹமது பஷீர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-வளைகுடா நாடுகளில் கேரளாவை சேர்ந்த நிறைய பேர் வேலை பார்த்துவருகின்றனர். அங்குள்ள வெளிநாட்டு இந்தியர்கள் விமானம் மூலம் கேரளாவுக்கு வர மிகவும் சிரமப்படுகின்றனர். முக்கிய விசேச காலங்களில் கேராளாவுக்கு வருவதற்கான பயணசீட்டு வாங்க அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலைமை உள்ளது. 


அவர்களின் சிரமத்தை குறைக்க கேரளாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே "ஏர் கேரளா" என்னும் அரசின் சொந்த விமானப்போக்குவரத்து தொடங்கும் திட்டம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு "ஏர் கேரளா"என்னும் பெயர் நான்கு வருடங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டுவிட்டது. 
பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் கட்டப்பட்ட கொச்சி விமான நிலையத்தை போல் இந்த "ஏர் கேரளா" விமானப போக்குவரத்தும் இயங்கும். இந்த போக்குவரத்து தொடங்குவது குறித்து முதலமைச்சர் உம்மன் சாண்டியை சந்தித்து நான் பேசியிருக்கிறேன். அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
"ஏர் கேரளா" விமானப் போக்குவரத்து தொடங்குவதில் பொருளாதாரப் பிரச்னை ஏதும் இல்லை. வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள முதலீடு தொடர்பான கூட்டத்தில் விமானப் போக்குவரத்து தொடங்குவது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

12:33 PM | தலைப்பு: , , , | Read More »

வேடிக்கை பார்த்தது போதும்!

இந்தியாவின் வடகிழக்கு மூலையில் போடோ பழங்குடியினத்தவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரம் கடந்த ஒரு வார காலமாகவே நீடித்து வருகிறது. கலவரத்தில் மரணமடைவோரின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே வருகிறது. பதற்றத்தில் உறைந்து கிடக்கிறது அசாம் மாநிலம். ஆனால், மத்திய, மாநில அரசுகளால் இந்தக் கலவரத்தை இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை. போடோ பழங்குடியினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரம் நடைபெறுவது இது நான்காவது முறை. 1952, 1993, 1996 ஆகிய ஆண்டுகளில் இந்தக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. பல மாதங்கள் நீடித்த முந்தைய கலவரங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு முறையும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வாழிடங்களை விட்டு வெளியேறியுள்ளன. இப்போது நான்காவது முறையாக இந்த இரு சமூகத்துக்கு இடையே கலவரம் மூண்டுள்ளது. இதுவரை 44 பேருடைய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வாழிடங்களை விட்டு வெளியேறியுள்ளன. தற்போதைய கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது மாநில அரசு என்பது வெளிப்படை. ஜூன் 30-ம் தேதி, ஒரு முஸ்லிம் தச்சுத் தொழிலாளி கொலை செய்யப்பட்டதும், அதற்கு போடோ பழங்குடியினர் காரணம் எனக்கூறி, ஊர்வலம் நடத்தியதும் காவல் துறைக்கும் அரசுக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து, காமதபூர் விடுதலை அமைப்பைச் சேர்ந்த 2 போடோ இளைஞர்கள் ஜூலை 5-ம் தேதி பதிலடியாகக் கொல்லப்பட்டவுடனேயே அரசு விழித்துக்கொண்டிருக்க வேண்டும். களத்தில் இறங்கியிருக்க வேண்டும். செய்யத் தவறிவிட்டது. அதன் விளைவாக, ஜூலை 19-ம் தேதி மேலும் 4 போடோ இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அடுத்த நாளே மேலும் 3 பேர் கொலை. கலவரம் காட்டுத் தீயாகப் பரவிவிட்டது. போடோ பழங்குடி மக்கள், அசாம் மாநிலத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பழங்குடிகளில் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள். தேயிலைத் தோட்டங்கள் மாநிலப் பொருளாதாரத்தில் முக்கிய இடம்பெறத் தொடங்கியபோது, இங்கு பல்வேறு துணைத்தொழில்களுடன் அசாம் மாநிலத்துக்கு வந்த வங்க மாநிலத்தவர் சொத்துகள் வாங்குவதும், நிறுவனங்கள் அமைப்பதும் நடந்தன. இதனால், போடோ பழங்குடியினர் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தனர். தேயிலைத் தோட்டத்தில் வேலை தேடி வங்காளமொழி பேசும் முஸ்லிம் தொழிலாளர்கள் வங்க தேசத்திலிருந்து ஊடுருவினர். எல்லை கடந்து வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடியது. இவர்களைக் கணக்கெடுக்கவோ அல்லது புலம்பெயர்ந்தவர்கள் என்று பட்டியலிடவோ அசாம் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கடந்த 30 ஆண்டுகளில் போடோ இனத்தவரைவிட முஸ்லிம்கள் எண்ணிக்கை 6 மடங்கு அதிகமானது. இவர்களை வாக்கு வங்கிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்தான் இதற்குக் காரணம். இந்நிலையில், "அசாம் எங்களுக்குத்தான் சொந்தம்' என்று சொல்லிக்கொள்கிறது சீனா. இங்குள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கு மாவோயிஸ்ட்டுகள் மறைமுகமாக ஊக்கம் தந்து, ஆயுதங்களும் தந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த மே மாதம், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு பேட்டியில், "உல்பா (அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி) தீவிரவாத அமைப்புக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று குறிப்பிட்டார். இதை அசாம் முதல்வர் தருண் கோகோய் மறுத்தார். "உல்பா-வை ஆயுதங்களால் பலப்படுத்தும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது' என்று கூறினார். அதைத் தொடர்ந்து, பெயர் வெளிவர விரும்பாத மத்திய உளவுத் துறை அதிகாரி கூறியதாகப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளிலும்கூட, உல்பா தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் மியான்மரில் மறைந்து வாழ்வதாகவும், மாவோயிஸ்ட்டுகள் உல்பாவுக்கு சீன ஆயுதங்களை வழங்கி, அவர்களைப் பலப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் எழுதின. ஆனால், மத்திய அரசு இத்தகைய கவலைதரும் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதுவரை நடந்துள்ள கொலைச் சம்பவங்களில் தீவிரவாதிகளோ அல்லது நவீன ஆயுதங்களோ பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. பொதுமக்கள் கையாளும் கத்தி போன்ற சாதாரண ஆயுதங்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, இந்தக் கலவரங்கள் பொருளாதார சமன்குலைவால் நேரிட்டவை என்றுதான் கருத வேண்டும் என்று காவல் துறை உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள். இருப்பினும், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி தப்பிக்கும் தீவிரவாதிகள், மக்களை ஆயுதமாகப் பயன்படுத்தி இந்தக் கலவரத்தைத் தூண்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? மக்களை மக்களுடன் மோதிச் சாகச் செய்வதைவிட வேறு என்ன பாதகத்தை தீவிரவாதம் உண்டுபண்ண முடியும்? வேண்டுமென்றே தொடர்ந்து சில போடோ பழங்குடிகளைக் கொன்று, முஸ்லிம்கள் மீதான கோபத்தை வெடிக்கச் செய்யும் உத்தியாக இது ஏன் இருக்கக்கூடாது? மத்திய அரசின் புலனாய்வுத் துறை இது பற்றியும் யோசிக்க வேண்டாமா? கலவரம் தொடங்கிவிட்டது என்று தெரிந்தவுடனேயே அங்கே ராணுவம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கலவரம் மிகப் பெரியதாக வெடித்த பிறகுதான் ராணுவம் அங்கே சென்றுள்ளது. இதை வெறும் இனக்கலவரமாகக் கருத முடியவில்லை. இதன் பின்னணியில் தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப் புரிதல் இல்லாமல், இந்த விவகாரத்தை அணுகினால் தீர்வு கிடைப்பது அரிது. அரசியல் ஆதாயத்துக்காகவும், தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காகவும் வங்க தேச அகதிகளை அதிக அளவில் அசாமில் குடியேறச் செய்தது காங்கிரஸ் கட்சி. அன்றைய காங்கிரஸ் முதல்வர் ஹித்தேஷ்வர் சைக்கியாவின் குறுகிய கண்ணோட்டம்தான் இன்று ஓர் இனக்கலவரமாக வெடித்து, தீவிரவாதிகளுக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கிறது. ராணுவத்தைக் களமிறக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், பேராபத்து இந்தியாவை எதிர்நோக்கும் என்பது மட்டும் உறுதி!

11:46 AM | தலைப்பு: , , | Read More »

கிடப்பில் காட்டுப்பள்ளி துறைமுகம்

சரக்குகளை கையாள முடியாமல் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் நெருக்கடியில் இருக்கும் நிலையில், சென்னைக்கு அருகிலேயே கட்டி முடிக்கப்பட்டும் கூட, காட்டுப்பள்ளி துறைமுகம் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் கூட, சுங்க வரி சோதனை அலுவலகம் அமைப்பதற்குரிய ஒப்புதலை மத்திய அரசு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், இந்த துறைமுகத் திறப்பு விழா தள்ளிப் போகிறது. கால தாமதம் :சென்னை, எண்ணூர் ஆகிய இரண்டு துறைமுகங்களிலும் சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால், கப்பலில் வந்திறங்கும் சரக்குகளை, துறைமுகத்தை விட்டு வெளியில் கொண்டு வருவதற்கு மிகுந்த கால தாமதம் ஆகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக, சென்னைக்கு அருகே எண்ணூரில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் காட்டுப்பள்ளி என்ற கிராமத்தில், துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஐ.மு., கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தின் போது தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி இருந்தபோது, இதற்கான பணிகள் ஆரம்பமாகின.கட்டுமானத் துறையில் பெரிய அளவில் புகழ் பெற்று விளங்கும், "எல் அண்ட் டி' நிறுவனம் சார்பில் இந்த துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. காட்டுப்பள்ளி துறைமுகத்தின் உரிமையாளர் இந்த நிறுவனம் தான். இருப்பினும் இந்த திட்டத்தில், தமிழக அரசின் நிறுவனமான டிட்கோவுக்கும் பங்களிப்பு உள்ள வகையில் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் ஆரம்பமாகின. டிட்கோ நிறுவனத்திற்கு இந்த நிறுவனத்தில் 10 சதவீதம் வரை பங்குகள் இருப்பதால், அரசாங்க துறைமுகம் போலவே கருதப்பட்டு வந்தது. நெருக்கடி நீங்கும்:ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு, ஒரு துறைமுகத்திற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டன. வெறும் துறைமுகமாக மட்டும் இல்லாமல் கப்பல் கட்டும் வசதிகளும், சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்பட்டு வந்தது. இதனால், மிகுந்த எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் காட்டுப்பள்ளி துறைமுகம் பெற்றது. சரக்குகளை கையாள்வதில் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு உள்ள நெருக்கடிகள் விரைவில் நீங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஒப்புதல் இல்லை:ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த துறைமுகம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டும்கூட இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்கு துறைமுகத்தில் அமைக்கப்படவேண்டிய சுங்கவரிச் சோதனை அலுவலகத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காமல் இருப்பதே மிக முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. எந்த ஒரு துறைமுகமாக இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமாக விளங்குவது சுங்கவரிச்சோதனை அலுவலகம்தான்.கப்பலில் இருந்து வரும் சரக்குகளை சோதனையிட்டு அவற்றுக்கு சுங்கவரிச்சோதனை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே சரக்குகளை துறைமுகத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்லவே இயலும். ஆகவே ஒரு துறைமுகத்திற்கு ஆன்மா போல விளங்கும் சுங்கவரிச்சோதனை அலுவலகம் அமைப்பதற்குண்டான கட்டிடம், இயந்திரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்த துறைமுகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் அரசின் ஒப்புதல் மட்டும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. காரணம் என்ன?சுங்கவரிச்சோதனையில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகுந்த பற்றாக்குறையாக உள்ளது. இதனால்தான் சுங்கவரிச் சோதனை அலுவலகத்துக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் மத்திய அரசு வட்டாரங்களில் காரணங்கள் கூறப்படுகிறது. பொதுவாக சுங்கவரிச்சோதனையில் ஈடுபட திறமைவாய்ந்த அதிகாரிகளே தேவைப்படுவார்கள். அதுபோன்ற அதிகாரிகள், தற்போது பிற துறைமுகங்களிலுமே கூட குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர். இதன்காரணமாக, காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.பொதுவாக சுங்கவரிச்சோதனை குறித்த விவகாரங்கள் எல்லாமே மத்திய அரசின் நிதித்துறை இலாகாவின் கீழ் வருகிறது. மத்திய நிதியமைச்சகம்தான் இவற்றுக்கு எல்லாம் அனுமதி அளித்திடவேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவரான பழனிமாணிக்கம்தான் மத்திய நிதித்துறையில் இணை அமைச்சராக உள்ளார். அதிலும் சுங்கவரித்துறை குறித்த விவகாரங்கள் எல்லாம் இவரது கட்டுப்பாட்டின் கீழ்தான் வருவதாக தெரிகிறது. இருந்தும்கூட என்ன காரணத்தினாலோ பிரச்னைகள் தீர்க்கப்பட்டு ,காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு சுங்கவரிச் சோதனை அலுவலகம் அமைப்பதற்கு தேவையான அனுமதி கிடைக்காமல் இருந்து வருகிறது. மாற்று யோசனை:இதற்கிடையில் மாற்று ஏற்படாக சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் உள்ள சுங்கவரிச்சோதனை அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்ற யோசனையும் பரிசீலிக்கப்படுகிறது. ஆனாலும் ஒரு துறைமுகத்தின் அனுமதி பெற்று வந்து மற்றொரு துறைமுகத்திற்குவந்து சுங்கவரிச்சோதனை நடத்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் கருதப்படுதால் காட்டுப்பள்ளி துறைமுகத்தின் சிக்கல் நீடித்தபடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெ., மன்மோகன்தேதி கிடைக்கலயா: ஆரம்பத்தில் இருந்தே இந்த துறைமுகம், அரசுக்கு சொந்தமான துறைமுகமாவே கருதப்பட்டு வருகிறது. தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்திற்கும் பங்குகள் இருப்பதால், சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலுமே அரசின் துறைமுகமாகவே முன்னிறுத்தப்பட்டு வந்தது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான துறைமுகம் என்றாலும், டிட்கோ சம்பந்தப்பட்டுள்ளதால் தமிழக முதல்வரை வைத்து திறப்புவிழா நடத்த வேண்டுமென்று அதிகாரிகள் விரும்புகின்றனர். ஆனால் எல் அன் டி நிறுவனமோ பிரதமரையும் அழைத்துவந்து திறப்பு விழா நடத்த வேண்டுமென கருதுகிறது. முதல்வருக்கும் பிரதமருக்கும் ஒருசேர தேதி கிடைக்காமல் இருப்பதாலேயே திறப்புவிழா தள்ளிப்போய்க் கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆக விஐபி க்களின் தேதி கிடைக்காத காரணத்திற்காவே காலதாமதம் ஆகும் தமிழக திட்டங்களில் காட்டுப்பள்ளி துறைமுகமும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆந்திராவுக்கு போன கதை:நாட்டின் கிழக்கு கடற்கரை முழுவதும் மேலும் சில மிகப்பெரிய துறைமுகங்களை அமைப்பது என்ற முடிவு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டது. அப்போது இதே காட்டுப்பள்ளியைச் சுற்றியுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு துறைமுகம் அமைக்க முடிவானது.மத்திய அரசே பல்லாயிரம் கோடிகளை செலவு செய்து இங்கு துறைமுகம் கட்டுவதாக இருந்தது. இதனால் சென்னை, எண்ணூர் ஆகியவற்றோடு சேர்ந்து காட்டுப்பள்ளி துறைமுகமும் தமிழகத்துக்கு கிடைத்து இருக்கும். ஆனால் சில தலையீடுகள் காரணமாக கைநழுவி எல் அன் டி வசம் இந்த காட்டுப்பள்ளி போய்விட்டது. தமிழகத்தின் கிழக்கு கடற்கரைக்கு மத்திய அரசால் அமைக்கப்படவிருந்த அதே துறைமுகம், இப்போது ஆந்திராவுக்கு சென்றுவிட்ட சோகத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். -நமது டில்லி நிருபர்-

1:11 AM | தலைப்பு: , , , | Read More »

ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்கு பதவி: கவர்னர் எதிர்ப்பு

பெங்களூரு:""சதானந்த கவுடா ராஜினாமா, மன கஷ்டத்தை கொடுத்துள்ளது. ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்கு, அமைச்சர் பதவி கொடுத்தது சரியல்ல,'' என்று கர்நாடக கவர்னர் பரத்வாஜ், எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழக்குகள், ஊழல் புகாரில் சிக்கியவர்களுக்கு, அமைச்சர் பதவி வழங்க வேண்டாம். அப்படி வழங்கினால், ஆட்சி நடத்த சிரமம் ஏற்படும். ஆட்சிக்கும் நல்லதல்ல என்று, தன்னை சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டரிடம், கவர்னர் பரத்வாஜ் கூறியிருந்தார். ஆனால், அமைச்சர் பட்டியலை பார்த்தவுடன், கவர்னர் அதிர்ச்சியடைந்தார்.வழக்கு நிலுவையிலுள்ள முருகேஷ் நிரானி, சோமண்ணா, சி.டி.ரவி, ரேணுகாச்சார்யா ஆகியோர் பெயர், பட்டியலில் இடம் பெற்றிருந்ததால், அதிருப்தியடைந்த கவர்னர், ஷெட்டரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். "பா.ஜ., மேலிட உத்தரவின் பேரில், அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது' என்று ஷெட்டர் கூறியதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கவர்னர் பரத்வாஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடக அமைச்சரவையில், ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளவர்களுக்கு, அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாம் என, ஷெட்டரிடம் கூறியிருந்தேன். என் ஆலோசனையை ஏற்று நடப்பதாக கூறியிருந்தார். ஆனால், அதன்படி அவர் நடந்து கொள்ளவில்லை.சதானந்த கவுடாவின் ராஜினாமா, எனக்கு மன கஷ்டத்தை அளித்துள்ளது. காரணம் கேட்டால், அனைத்துக்கும் கட்சி மேலிடம் காரணம் என்கின்றனர். இதில் நான், ஒன்றும் செய்ய முடியாது என்றார்.இவ்வாறு கவர்னர் கூறினார்.

11:38 PM | தலைப்பு: , , , | Read More »

அரசியலின் அசிங்கமான முகங்கள் :-(

 Pv Was Angry Over Idea That Sonia B அர்ஜுன் சிங்குடன் சேர்ந்து அசோக் சோப்ரா என்பவர் எழுதிய சுயசரிதை புத்தகமான 'A Grain of Sand in the Hourglass of Time' வெளியிடப்பட உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அர்ஜூன் சிங் மறைவையடுத்து, இந்தப் புத்தகத்தை எழுதி முடிக்கும் நிலையில் உள்ளார். அந்தப் புத்தகத்தில் சிங் கூறியிருப்பதாவது:

அரசியலின் அசிங்கமான முகங்களை நானே நேரடியாக பார்த்திருக்கிறேன். காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் படுகொலை செய்யப்பட்டார்.

காங்கிரசுக்கு ஏற்பட்ட இந்த இழப்பை சரிக்கட்ட காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியை நியமிக்கலாம் என்று நான் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பி.வி.நரசிம்ம ராவிடம் கூறினோம்.

சிறிது நேரம் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக இருந்த நரசிம்ம ராவ் திடீரென பட்டாசாக வெடித்தார். முகத்திலும், வார்த்தையிலும் கடுமையான கோபம் வெளிப்பட்டது.
காங்கிரஸ் கட்சி என்ன ரயில் பெட்டிகளா? நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவர்தான் என்ஜினாக (தலைவராக) இருக்க வேண்டுமா?. கட்சியில் தலைவர் பதவிக்கு வேறு ஆட்களே கிடையாதா? என்று வெடித்தார் ராவ்.
அவரது கோபத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றாலும் அமைதியாக இருந்துவிட்டேன்.

அவரது பேச்சு மூலம் அவரது நேரு குடும்ப எதிர்ப்பு மனநிலையை தெளிவாக உணர முடிந்தது.
ஆனாலும் அப்போதைய காங்கிரஸ் பொருளாளர் சீதாராம் கேசரி விடவில்லை. முதலில் சோனியாவிடம் கேட்டுப் பார்ப்போம். அவர் தலைவராக ஒப்புக் கொண்டால் அவரை தலைவராக்குவோம் என்றார்.
மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு ஆதரவாக இருப்பதை உணர்ந்த ராவ் உடனே தனது நிலையை மாற்றிக் கொண்டார்.
கட்சியில் தலைவராக முதலில் சோனியா காந்தி ஒப்புக் கொள்வாரா என்று பல்டி அடித்து பேச ஆரம்பித்தார். இதற்கு எங்களிடம் பதில் இல்லை. சோனியாவிடம் பேசிவிட்டுத் தான் எதையும் சொல்ல முடியும் என்று கூறிவிட்டேன்.
முன்னதாக சோனியாவை தலைவராக்கலாம் என்ற கருத்தை நான் தான் ராஜிவின் உதவியாளர் வின்சென்ட் ஜார்ஜ், மூத்த தலைவர் எம்.எல்.பொதேதார், கேசரி ஆகியோரிடம் முன் மொழிந்தேன். லேசான தயக்கம் இருந்தாலும் சோனியாவை ஆதரிக்க கேசரி முன் வந்தார் என்று கூறியுள்ளார் அர்ஜூன் சிங்.
உத்தரப் பிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து தனியாக ஒரு அத்தியாயத்தை எழுதியுள்ளார் அர்ஜூன் சிங். அதிலும் நரசிம்ம ராவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தகவல் வந்தவுடன் அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் தனது வீட்டில் தன் அறைக்குள் போய் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதைப் பார்த்தபோது ரோம் நகரமே எரிந்து கொண்டிருக்கும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதைதான் நினைவுக்கு வந்தது.
மசூதி இடிப்பையடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ராவுடன் பேச அவரது வீட்டுக்கு போன் செய்தேன். ஆனால், அவர் யாருடனும் பேச மாட்டார் என்று தான் பதில் கிடைத்தது.
நரசிம்ம ராவ் வீட்டில் இருக்கிறாரா அல்லது டெல்லிக்கு வெளியே போய்விட்டாரா என்று கேட்டேன். அதற்கு பதிலளித்த ராவின் பி.ஏ, அவர் ஒரு ரூமுக்குள் உள் பக்கமாக தாளிட்டுக் கொண்டுவிட்டார். யார் கேட்டாலும் தன்னை டிஸ்டர்ப் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார் என்றார்.
இதையடுத்து பஞ்சாபில் இருந்த நான் உடனடியாக டெல்லிக்குப் புறப்பட்டேன். என் மனமெல்லாம் மசூதி இடிப்பையடுத்து என்னவெல்லாம் வன்முறைகள் நடக்கப் போகிறதோ என்ற அச்சத்திலும் வேதனையிலும் இருந்தது.
இத்தனைக்கும் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாளான 1992ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி நான் உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங்கை சந்தித்துப் பேசினேன். மாநில நிலைமையை ஆராய்ந்துவிட்டு டெல்லிக்கு விரைந்தேன்.
மசூதியை இடிக்கப் போகிறார்கள்.. நடவடிக்கை எடுங்கள் என்று நரசிம்ம ராவிடம் நேரடியாகவே சொன்னேன். அதை அவர் காதிலேயே வாங்கவில்லை.
நான் மீண்டும் மீண்டும் நடவடிக்கை எடுக்குமாறு நெருக்குதல் தரவே, மசூதியை எல்லாம் இடிக்க மாட்டார்கள் என்றார்.
பாஜக- இந்துத்துவா சக்திகளின் திட்டத்தைத் தடுக்க நாம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல என்று நான் கூறியவுடன், மசூதியை எப்போது இடிப்பார்கள் என்று கேட்டார் நரசிம்ம ராவ். நடவடிக்கை எடுக்காவிட்டால் எப்போது வேண்டுமானாலும் அது நடக்கலாம் என்றேன். ஆனால், அடுத்த நாளே அதை இடித்துத் தள்ளுவார்கள் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
மசூதி விவகாரத்தில் ஒரு கட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் பாலாசாப் தியோராஸை நேரில் சந்திக்கக் கூட நரசிம்ம ராவ் திட்டமிட்டார். அதை நான் கடுமையாக எதிர்த்ததால் அந்தத் திட்டத்தை கைவிட்டார்.
பாபர் மசூதி விவகாரத்தை நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு மிக மோசமாகக் கையாண்டது. நான் எத்தனையோ அரசுகளை பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படிப்பட்ட ஒரு அரசை பார்த்ததில்லை.
அரசியல் விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டிக் கூட்டங்களின் பைல்கள் எப்போது பொது மக்களின் பார்வைக்குத் திறக்கப்படுகின்றனவோ அப்போது தான் நரசிம்ம ராவ் அரசின் செயல்கள் இந்த உலகுக்கு முழுமையாகத் தெரிய வரும் என்று தனது சுயசரிதையில் கூறியுள்ளார் அர்ஜூன் சிங்.

1:40 AM | தலைப்பு: , , , | Read More »

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added