பெங்களூரில் (தேர்தல்) குண்டு வெடிப்பு!
பெங்களுரு: பெங்களூரில் பா.ஜா.க அலுவலகத்திற்கு
அருகில் இன்று காலை 10:20 மணி அளவில் வெடிகுண்டு வெடித்தது. இதில் தேர்தல்
பாதுகாப்பில் ஈடுபட்ட KSRP போலீஸ் வாகனத்தில் இருந்த 8 போலீசார் உட்பட
14 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பில் 2 கார்கள் மற்றும் 2
மோட்டார்சைக்கிள் முழுமையாக சேதமடைந்தது. முதலில் இது பா.ஜ.க தேர்தல்
பிரச்சாரத்திற்க்காக பயன்படுத்திய ஆம்னி வேனின் கியாஸ் சிலிண்டர் வெடித்ததாக
போலீசார் சந்தேகித்தனர். பின்னர் இது இரண்டு கார்களுக்கு மத்தியில்
நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்த வெடி குண்டினால் ஏற்பட்டது என்று
காவல் துறை ஆணையர் ராகவேந்திரா அவுராத்கர் தெரிவித்துள்ளார் இதற்க்கு முந்தைய குண்டுவெடிப்பு இதே தேதியில் IPL போட்டிக்கு முன்னதாக சின்னசாமி மைதானத்தில் நிகழ்ந்தது. இதன் தொடர்பாக அப்துல் நாசர் மதானி எந்த தகுந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை உயர் அதிகாரி L.R. பாச்சாவ் கூறுகையில், தற்சமயம் குண்டு வெடிப்பை மட்டுமே உறுதி செய்ய முடியும் எனவும், எந்த வகையான குண்டு வெடிக்க வைக்கப்பட்டது என்பது விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் ஜன்னல்களில் இருந்து நொறுங்கிய கண்ணாடி துகள்களால் சூழ்ந்திருந்தது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமையத்தில் KSRP வேனில் இருந்த தலைமை காவலர் வெங்கடேசையா ஹிந்து பத்திரிக்கையிடம் கூறுகையில், வெடி குண்டின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாங்கள் பெரும் சப்தத்தை கேட்டோம். எங்களால் எதனையும் சரியாக காண முடியவில்லை. முற்றிலும் புகை மூட்டமாக இருந்தது. புகை விலகியதும் மக்கள் சாலையில் விழுந்து கிடந்ததை கண்டோம். அதில் பெரும்பாலானோர் புகை மற்றும் சிதறிய கண்ணாடி துண்டுகளால் காயமடைந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பா.ஜ.க அலுவலகத்திற்கு அருகிலிருந்த போலீஸ் வேன் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று பா.ஜ.க தொண்டர்கள் புகார் கூறியதால் வெடிப்பு நடந்த இடத்திற்கு மாற்றப்பட்டது. இடம் மாறிய சில நொடிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது என்று கூறினார்.
இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை K.C. பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து செல்லப்பட்டனர்.
இதனிடையில் இந்த குண்டு வெடிப்பை முன்னிறுத்தி அரசியல் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அஹமத், இந்த குண்டு வெடிப்பு பா.ஜ.க வின் தேர்தலுக்கு பெரிதும் உதவும் என்று கூறியுள்ளார். இதற்க்கு பா.ஜ.க தரப்பில் இருந்து பெரிதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இன்னும் பா.ஜ.க ஆதரவு செய்தி ஊடகங்கள் இந்த குண்டு வெடிப்பை பா.ஜ.க விற்கு ஆதரவாகவும் முஸ்லீம்களுக்கு எதிராகவும் திருப்ப நேரடி மற்றும் மறைமுக உக்திகளை கையாண்டு வருகின்றனர். http://www.oneindia.in/ என்ற செய்தி தளம் பெங்களுர் குண்டு வெடிப்பு செய்திகளை வெளியிட்ட அனைத்து பக்கங்களிலும்அந்த செய்திக்கு கீழ் அப்துல் நாசர் மதானி குறித்த வீடியோ பதிவையிட்டு இருக்கின்றது. இது போன்ற செயல்கள் தொடர்பில்லாத நிகழ்வுகளை தொடர்
நாட்டில் நடந்த குண்டு வெடிப்பில் பல அப்பாவி முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு ஆதராமில்லாமல் விடுவிக்கப்பட்டு வரும் வேளையில் இது போன்ற செய்தி மக்களை திசைதிருப்பும் முகமாக அமையும். புதிய தேச வாசகர்கள் http://www.oneindia.in/ தளத்தின் இந்த செயலை கண்டித்து அந்த பதிவுகளை நீக்க கோரி மின்னஞ்சல் அனுப்பலாம்.