“போஸ்டன் குண்டு வெடிப்பிற்காக இறைவனுக்கு நன்றி” - Westboro Baptist Church
அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் நடந்த குண்டு வெடிப்பிற்காக அமெரிக்க மக்கள் அனைவரும் வருந்தி வரும் வேளையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஓரின சேர்க்கை திருமணத்தை கண்டித்து கடவுள் அனுப்பிய தண்டனை என்று வெஸ்ட் போரோ பாப்டிஸ்ட் சர்ச் (Westboro Baptist Church) கூறியுள்ளதாக வாஷிங்டன் டைம்ஸ் (Washington Times) பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
“போஸ்டன் குண்டு வெடிப்பிற்காக இறைவனுக்கு நன்றி” என்று அந்த சர்ச்சின் டிவிட்டர் (Twitter) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தை தடுப்போம் என்றும் அந்த சர்ச் மிரட்டியுள்ளது.
அமெரிக்க அரசு இந்த குண்டு வெடிப்பினை தீவிரவாத செயல் என்று அறிவித்த பொழுதும் இதற்கு காரணமானவர்கள் உள்நாட்டுத் தீவிரவாதிகளா இல்லை வெளிநாட்டுத் தீவிரவாதிகளா என்று உறுதியாக கூறவில்லை.
வெஸ்ட் போரோ சர்ச் கூறுகையில், "இந்த குண்டுகளை கடவுள் அனுப்பினார், நீங்கள் நாட்டை அழிவிற்கு எடுத்துச் செல்ல கூடிய ஓரின திருமணத்தை ஆதரிப்பதனால் உங்கள் நாட்டு மக்களை இன்னும் எத்தனை வழிகளில் காயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைகின்றீர்கள்" என்று கூறியுள்ளது.
ஹஃப்பிங்டன் போஸ்ட் (Huffington Post) பத்திரிக்கை இதனைக் குறித்து கூறிகையில், வெஸ்ட் போரோ சர்சினால் போஸ்டனில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அந்த சர்ச் இணைய தள ஹாக்கர் குழுமமான அனானிமஸ் கோபத்தை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளது.
“If WBC protests the Boston funerals, they will have to expect us” என்று அனானிமஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பதிவு செய்தவர் தபால் பெட்டி
on 12:52 PM. தலைப்பு
உலகம்,
செய்திகள்,
போஸ்டன் குண்டுவெடிப்பு
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன