|

அமெரிக்காவின் போஸ்டன் (Boston) நகரத்தில் குண்டு வெடிப்பு



அமெரிக்காவின் போஸ்டன் (Boston) நகரத்தில் இன்று நடைபெற்ற மராத்தான் போட்டியில்  முடிவு  கோட்டுக்கு அருகில் சக்தி வாய்ந்த இரண்டு குண்டுகள் வெடித்தன.இந்த குண்டு வெடிப்பில் 8 வயது  சிறுவன் உட்பட  3
பேர் கொல்லப்பட்டனர். 50கும் அதிகமானோர் காயமடைந்தனர்.



சுமார் 23000 பேர் பங்கேற்ற இந்த மராத்தான் போட்டி முடிவுறும் சமயத்தில் (2:50p.m) முடிவு கோட்டுக்கு அருகாமையில் இருந்த ஒரு குப்பை தொட்டியில் முதல் குண்டு வெடித்தது. அதன் பின் 13 வினாடிகள் கழித்து இரண்டாவது குண்டும் வெடித்தது. இதனைத் தொடர்ந்து  மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். மூன்று பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு கை கால் துண்டானது.



இது குறித்து  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், "இந்த சம்பவத்தின் ஆழம் வரை செல்வோம். இதனை யார் செய்தார்கள் ஏன் செய்தார்கள் என்று நாம் கண்டறிவோம். இதற்கு காரணமான தனி நபரோ அல்லது குழுமமோ நீதியின் முழு அழுத்தத்தைப் பெரும்" என்று கூறினார்.



மேலும் இந்த சம்பவத்தை தீவிரவாத செயல் என்று ஒபமா கூறவில்லை. (வழக்கமாக இஸ்லாமியர்களை பலி கூறவே தீவிரவாதம் என்ற சொல் பயன் படுத்தப்படும்). மக்கள் எந்த ஒரு அவசர முடிவுக்கும் வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



ஆனால் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறிகையில் "இது போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகள் தீவிரவாதத்தின் செயல் என்று தெளிவாக தெரிகிறது. எனவே இது தீவிரவாதத்தின் செயலாகவே கருதப்படும். எனினும் இதுவரை இதனை செய்தவர் யார் என்று இன்னும் அறியப்பட வில்லை. முழு விசாரணையின் பின் இதனை செய்தவர்கள் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு தீவிரவாத குழுக்களா என்று கண்டறிய படும்" என்று தெரிவித்தார்.



சம்பவ இடத்தில் வெடித்த இரண்டு குண்டுகள் போக மேலும் மூன்று குண்டுகள் கண்டறியப் பட்டதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதுவரை இதனை செய்தவர் யார் என்று கண்டறியப்படாதா நிலையில் போலீசார் இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  சவூதி அரேபிய குடிமகன் ஒருவரிடம் தகவல் சேகரித்து வருகின்றனர். இவர் மற்றவர்களை போல் போட்டியை காண வந்தவரா இல்லை இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தம் உடையவரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.



ஒரு சில அதிகாரிகள் இதனை அமெரிக்க அரசு எதிர்ப்பு குழுக்களின் செயலாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 15 வரிகளை செலுத்துவதற்கான கடைசி தினமாகும். மேலும் ஏப்ரல் 19, 1995 ஓக்லகாமா(Oklahoma) நகரில் உள்ள அல்ஃ ப்ரெட் (Alfred P. Murrah Federal) என்ற அரசாங்க கட்டிட குண்டு வெடிப்பின் நினைவு நாள் ஆகும்.



செய்திகள் இவ்வாறு இருக்க 2 நாட்களுக்கு (April 13) முன்னரே போஸ்டன்(Boston) குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கான முகநூல் (Facebook) பக்கம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.


அதில் "Thoughts Go Out To All Involved In The Boston Explosions" என்று குறிப்பிட பட்டுள்ளது. இந்த பக்கத்தை உருவாக்கியவர் யார்? எப்படி இவர்களுக்கு குண்டு வெடிப்பு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தெரியும்? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் சர்ச்சையை  கிளப்பி உள்ளது. இந்த முகநூல் பக்கத்தில் ஒருவர் இது குறித்து கேள்வி  எழுப்பியதும் இந்த பக்கம் நீக்கப்பட்டு விட்டது. அதற்கான வீடியோ பதிவு இங்கே
இந்த செய்தியினை https://worldtruth.org என்ற தளம் வெளியிட்டுள்ளது.



இன்னும் பத்திரிகைகளால் வெளியிடப்படாத செய்தி என்னவெனில், போஸ்டன் குலோப் (Boston Globe) என்ற செய்தி நிறுவனம் தனது டிவிட்டர் (Twitter) தளத்தில் இன்று இந்த குண்டுவெடிப்பு நடந்த பாய்ல்ஸ்டன் (Boylston) தெருவில் உழல நூலகத்தின் எதிரே போஸ்டன் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்தும் கட்டு படுத்தப்பட்ட வெடிப்பு நிகழ்வு நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.



அதுபோல் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில்" அங்கு ஏற்கனவே குண்டுகளை கண்டறியும் நாய்கள் பல குவிக்கபட்டிருந்தது" என்று கூறினர்.



மேலும் இந்த மராத்தான்  ஓட்டத்தில் பங்கேற்ற அலக்டைர்  ஸ்டீவென்சன் (Alastair Stevenson) என்பவர் கூறுகையில், அங்குள்ள போலீசார் இது ஒரு சோதனை பயிற்சி என்று ஒலிபெருக்கி மூலம் மீண்டும் மீண்டும் கூறியதாகவும், வீரர்கள் யாரும் பங்கேற்க  வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறிகிறார்.


எது எப்படியோ! இனி அமெரிக்கா யார் மேலாவது பலி போட்டு தனது அட்டூழியத்தை செய்யதொடங்கும்.

பதிவு செய்தவர் தபால் பெட்டி on 4:57 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added