|

இஸ்ரேலிய உளவாளிகளை அம்பல படுத்திய ஹாக்கர்கள்

கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அன்னனிமஸ் ஹாக்கர் குழுமம் இஸ்ரேலை வலை தளத்திலிருந்து துடைத்து எறியப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதில் இஸ்ரேலியர்களின் பல்லாயிரக் கணக்கான முகநூல் பக்கங்கள், டிவீட்டர் பக்கங்கள், பல வங்கிகளின் வலை தளங்கள், வெளியுறவு துறை இணையதளம், ஜெருஸலம் வங்கி இணையதளம்,இஸ்ரேல் பாதுகாப்பு துறை இணைய தொடர்பு, இஸ்ரேலிய பிரமரின் அதிகாரபூர்வ இணையதளம் இன்னும் மொசாத் உளவு பிரிவுன் இணையதளம் (ஹாக்) முடக்கப்பட்டன. இதன் மூலம் கிடைத்த பல தகவல்களை அன்னனிமஸ் ஹாக்கர் குழுமம் வெளியிட்டது.

இந்த ( ஹாக்) இணையதள முடக்க நடவடிக்கை மூலம் 123 இஸ்ரேலிய உளவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்று காசாவின் ஆளும் ஹமாஸ் இயக்கத்தின் உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இதனை எகிப்தின் அல் ஸாப் அல் மஸ்ரி என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த 123 உளவாளிகளில் 48 எகிப்து மற்றும் சவுதி அரேபியாவின் பங்கு சந்தை வர்த்தகத்திலும், 52 பேர் எகிப்தின் மத்திய தொலைகாட்சி மையம் உள்ள  கட்டிடத்திலும், 15 பேர் லிபியா மற்றும் பாரசீக வளைகுடாவில் உள்ள எண்ணெய் கிணறுகளிலும், 10 பேர் எகிப்தின் தொலை தொடர்பு வட்டத்திலும், 3 பேர் தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இவர்களின் பெயர்கள் விரைவில் எகிப்தின் உளவு பிரிவிற்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உண்மையான உளவாளிகளை பாதுகாக்கும் பொருட்டு அப்பாவி பொதுமக்களை இஸ்ரேலின் உளவாளிகளை போல முயற்சியினை இஸ்ரேலிய அரசாங்கம் செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பதிவு செய்தவர் தபால் பெட்டி on 1:37 PM. தலைப்பு , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added