ஐபோனில் ஃப்ரீயாக பேச வேண்டுமா?
ஐபோனில் ஃப்ரீயாக பேச வேண்டுமா?
பேசும் போன்காலிற்கு, அதற்குரிய தொலை தொடர்பு சேவை நிறுவனத்திடம் இருந்து, பணம் வசூலிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் பணமே இல்லாமல் பேச ஒரு வசதியினை ஐபோனில் எளிதாக பெறலாம். இது பற்றிய தகவலை இங்கே பார்க்கலாம்.
ஃப்ரீயாக ஐபோனில் பேச நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஐகால் அப்ளிக்கேஷனைஆப்பிள் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்வது தான். இந்த ஐகால் வசதியினை எல்லோருமே எளிதாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐகால் அப்ளிக்கேஷனை டவுன்லோட் செய்து, அதில் லாகின் செய்ய வேண்டும். அதன் பிறகு வேண்டிய நம்பரை டையல் செய்து, ப்ளேஸ் கால் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். ஆட்டோமெட்டிக்காக, டையல் செய்த நம்பருடன் இணைக்கப்படும். பின்னர் பணம் இல்லாமல் ஃப்ரீயாக பேசலாம்.
ஆனால் இந்த ஃப்ரீ கால் 5 நிமிடத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் நாம் டையல் செய்து பேசிக்கொள்ளலாம். இப்படி எத்தனைமுறை செய்தாலும், அதில் 5 நிமிடங்கள் ஃப்ரீயாக பேச முடியும். ஆனால் இதில் முதலில் 10 நொடி விளம்பரத்திற்கு பிறகு, கால் வசதி இணைக்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எத்தனை தனித்துவம் பெற்றுள்ளது எனஅபது அனைவருக்கும் தெரியும். ஒரு நொடி கூட கட்டணமில்லாமல் பேசமுடியாத என்ற நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஐகால் அப்ளிக்கேஷன் வசதி மிக சிறப்பான ஒன்றாக இருக்கும். இது போன்ற காரணத்தால் ஆப்பிள் நிறுவனத்தின் தனித்துவம்
இன்னும் அதிகரிக்கிறது.
இன்னும் அதிகரிக்கிறது.
பதிவு செய்தவர் Yasar
on 5:23 PM. தலைப்பு
தொழில்நுட்பம்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன