கர்நாடகா தேர்தல் முடிவும் SDPI யின் அரசியல் அங்கீகாரமும்:


                              நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது SDPI கட்சியின் வளர்ச்சி மறுக்க முடியாத அளவில் உள்ளது.மக்கள் மத்தியில் கட்சிக்கு கிடைத்து  உள்ள செல்வாக்கு கட்சியின் பாராபட்சமற்ற சமுதாய பணிகளே காரணம் ஆகும்.அதனால்தான் இதற்கு முன்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் யாரும் எதிர்பாராத அளவு வெற்றியடைய முடிந்தது.போட்டி இட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னணி கட்சிகளைவிடவும் அதிக வாக்குகள் கிடைத்து உள்ளது.முக்கியமாக சில வாக்குகள் வித்யாசத்தில்  இரண்டாம் இடத்தையும் பிடித்து உள்ளது.முதன் முதலில்  இதுபோன்ற  ஒரு அங்கீகாரம் கிடைத்தது  கட்சியின் வளர்ச்சி பாதையை உறுதி செய்கிறது.மதவாத கொள்கையை மையமாக வைத்து அரசியல் நடத்திய பிஜேபி அரசை மக்களே ஒதுக்கிவிட்டனர்.அதன் பெரும்பாலான தலைவர்கள் தேர்தலில் மோசமான தோல்வியை தழுவி உள்ளனர்.மோடியை முன்னிறித்தி செய்த பிரச்சாரங்கள் மோடியை மக்கள் வெறுப்பதை காட்டுகிறது.தேர்தலை தங்களுக்கு சாதகமாக ஆக்கிகொள்ள பிஜேபி அலுவலகத்தில் குண்டுவெடிப்பை நடத்தி அதை அப்பாவி முஸ்லீம்கள் மேல் சுமத்தியும், தமிழ்நாட்டை சேர்ந்த சில அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் கைது செய்தும்,கேரளாவில் உடற்பயிற்சி செய்து கொண்டு  இருந்த PFI (popular front of india) உறுப்பினர்களை  ஆயுதபயிற்சியில் ஈடுபட்டார்கள் என்று கைதுசெய்ததும் அதிகாரிகளுடன் இணைந்து கொண்டு அரசியல்வாதிகள் செய்யும் மட்ட அரசியலை காட்டுகிறது.இதன் மூலம் SDPI கட்சிக்கு மக்களிடம் அவப்பெயரை உண்டாக்கவும்,கரநாடகாவில் உள்ள தமிழ்நாடு மற்றும் கேரளா மக்களின் வாக்குகளை பிரிக்கவும் சதி செய்தனர்.ஆனால் இறைவன் அவர்களின் சதிகளை முறித்து அவர்களை தோல்வி அடைய  செய்தான்.மதவாத சக்திகள் வட இந்தியாவை போல தென் இந்தியாவையும் மாற்ற வேண்டும் என்ற திட்டம் தோல்வி தழுவியது.     பிஜேபி மேல் உள்ள ஒட்டுமொத்த வெறுப்பே மக்கள் காங்கிரஸ் அரசை பெரும்பான்மையாக வெற்றி பெற செய்தது.காங்கிரஸ் அரசு மக்கள் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி மேலும் இந்த மதவாதிகளின்,இந்துத்துவ அரசியலையும் ஒழிக்க முன் வர வேண்டும்.குற்றங்கள் சரியாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.அப்பாவி முஸ்லீம்களை கைது  செய்தவர்களை விடுவிக்க வேண்டும்.இல்லையென்றால் காங்கிரஸ் வர போகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படும். கர்நாடக போலீஸ் தமிழ்நாட்டில் புகுந்து அப்பாவிகளை கைது செய்ய அனுமதி வழங்கி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசும் தன் போக்கை மாற்ற வேண்டும்.அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளும் ஒன்றாகி விஸ்வரூபம் படத்தை தடை செய்ய சொன்னதும் உடனே நிறைவேற்றிய அரசு இந்த விசயத்தில் பல போராட்டங்கள் நடந்த பின்னும் அமைதி காப்பது அழகல்ல.கோவையில் மீண்டும் கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கில் சில சம்பவங்கள் நடைபெறுவதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.ஆனால் மரக்காணத்தில் உடனடியாக குற்றவாளிகளை சிறையில் அடைத்தது.இந்த நீதி முஸ்லீம்களுக்கும் கிடைக்க வேண்டும். SDPI கட்சியின் தாரக மந்திரம் சம உரிமை,சமநீதி,சம பாதுகாப்பு..அரசியல் லாபம் இல்லை.மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் கட்சி இல்லை..அனைத்து
மக்களால்,மக்களுக்காக,மக்களே களப்பணி  ஆற்றும் கட்சி.இனி வரும் காலங்களில் அரசியலில் முத்திரை பதிக்க இறைவன் அருள் புரிவானாக!


8:13 PM | தலைப்பு: , , , , | Read More »

டில்லியில் 5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் நியாயம் வேண்டி வலுக்கிறது போராட்டம்

டில்லி: இரண்டு நாட்களாக தொடர்ந்து கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட 5 வயது சிறுமி மீட்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கடந்த வெள்ளியன்று டில்லி எய்ம்ஸ்(AIIMS)மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி பேச்சுமூச்சற்று தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் D.K.சர்மா தெரிவித்தார்.

சிறுமியை கற்பழித்த குற்றவாளி மனோஜ்குமார் பீஹாரின் முஜப்பர்பூர் என்ற கிராமத்தில் ஒளிந்திருந்த நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டான். அவனுக்கு வயது 22.

பாலியல் பயங்கரவாதி மனோஜ்குமார்
டில்லி காந்திநகரில் உள்ள, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் வசித்து வருகிற அதே அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் குடியிருந்த குற்றவாளி மனோஜ், சிறுமியை கடந்த 15ம் தேதி கடத்தி தன் வீட்டிலேயே இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் கூட இன்றி அடைத்து வைத்திருந்ததாக காவல்துறை தகவல் தெரிவிக்கின்றன. மேலும் அவர்கள் கூறுகையில், சிறுமி இரண்டு நாட்களாக தொடர்ந்து கற்பழிக்கப்பட்டும், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டும் உள்ள நிலையில் சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு தேடிவந்த அவளின் குடும்பத்தினர் புதன் கிழமையன்று சிறுமியையை மீட்டனர்.

மனோஜ்குமார் கைது செய்யப்பட்ட பின் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட பொழுது, மூன்று நாளைக்குள் டில்லி காவல்துறையின் வசம் குற்றவாளி ஒப்படைக்கப்பட வேண்டுமென்று பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் மருத்துவர்கள் கூறுகையில் 200மி.லி ஹேர் ஆயில் பாட்டில் மற்றும் மெழுகுவர்த்தி துண்டுகள் ஆகியவை சிறுமியின் பிறப்புறுப்பிலிருந்து அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே, சிறுமிக்கு இழைந்த கொடுமையைக் கண்டித்தும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டியும் போரட்டகாரர்களும் பொதுமக்களும் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் முன்பாகவும் டில்லி காவல்துறை தலைமையகத்தின் முன்பாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் போரட்டத்தைக் கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

7:30 PM | தலைப்பு: , , , , , | Read More »

மோடியின் அரசியல் நாடகம்.

குஜராத் அரசு 2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனக்க்கலவரத்தில் ஆயுள் தண்டனை அளிக்கட்பட்ட மாயா கோட்னானி,பாபு பஜ்ரங்கி  உட்பட 10  பேரின் தூக்கு தண்டனைக்கு உச்ச நீதி மன்றத்தில் மனு அளிக்க போவதாக அரசு வழக்கறிஞர் கௌரங்க் வியாஸ் அறிவித்துள்ளார்.
எதிர்வரும்  நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மோடி தன் மேலே உள்ள மதச் சாயத்தை மறைக்க தனது சகாக்களையே பலி கொடுக்க துணிந்துவிட்டார்.தனது இமேஜ் இதன் மூலம் பெரியதாகவேண்டும் என்று எண்ணி வேஷம் போடும் மோடியை பற்றி பாமர மக்களும் அறிவார்கள்.இவர் இத்தனை வருடங்கள் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு இருந்தாரா என்ன? கலவரத்தில் அப்பாவி மக்களையும் பெண்களையும் சிறுவர்களையும் வார்த்தையால் சொல்ல முடியாத கொடுமைகளால் கொன்றவர்களுக்கு பதவியில் அமர்த்தி அழகு பார்த்தாரே!. தெகல்ஹாவில் வீடியோ ஆதாரங்களுடன் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொண்ட போதும் நாடே அவர்களை தண்டிக்க கோரியபோதும் எங்கே போய் இருந்தார் இந்த நீதிமான் மோடி?. மாறாக மாயா கோட்னானிக்கு MLA ,அமைச்சர் பதவியும், மதன் சாவலுக்கும் ,ஹரீஸ் பட்டுக்கும் குற்றவாளிகள் என்று தெரிந்த பின்னர்தானே MLA பதவி கொடுத்தார்.ஆனால் இன்று தன் முன்னேற்றத்துக்கு தடை என்று தெரிந்ததும் அவர்களை பலி  கொடுக்க துணிந்துவிட்டார். 
ஊடங்களின் உதவியுடனும் காங்கிரஸ் அரசுக்குள்ள எதிர்ப்புணர்வையும்  பயன்படுத்தி எப்படியாவது பிரதமர் பதவியை அடைந்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார் மோ(கே)டி. ஆனால் நாட்டில் உள்ள நடுநிலையாளர்களும் மதசார்பற்ற கட்சிகளும் அவரின் கனவை தகர்க்க வேண்டும். இவர்களை எல்லாம் விட கலவரத்தில் மூன்று நாட்கள்  அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பயன்படுத்தி ஒரு சிறுபான்மை இனத்தை அழிக்க முக்கிய காரணகர்த்தவே இந்த மோடிதான்.முதலில் தண்டிக்க பட  வேண்டியதும் அவர்தான்.தூக்கிலிடப்பட வேண்டியவரும் இவரே.

8:14 AM | தலைப்பு: , , , , , | Read More »

டெல்லியில் தொடரும் பாலியல் வன்முறைகள்......


டெல்லி: டெல்லியில் ஓடும் காரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளபோதிலும், டெல்லியில் இக்கொடுமை ஒரு தொடர் நிகழ்வாகவே உள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள அசோக் நகர் அருகே நேற்று காலை பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அம்மாணவியை காரில் தூக்கிப் போட்டு அருகில் உள்ள சரோஜினி நகருக்கு கடத்திச் சென்றது. இந்த கும்பலில் ஒருவர் அம்மாணவியின் ஒன்றுவிட்ட சகோதரன் ஆவார்.

அதனைத் தொடர்ந்து காரில் வைத்தே அம்மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய அக்கும்பல், பின்னர் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டிவிட்டு, அம்மாணவியை ஓடும் காரிலிருந்தே தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்ற இருவரையும் தீவிரமாக தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அம்மாணவி மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  

கடந்த டிசம்பர் மாதத்தில் ஒடும் பஸ்ஸில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் டெல்லியை குலுக்கிய நிலையில் மீண்டும் அதுபோன்ற தொரு சம்பவம் அரங்கேறியிருப்பது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.துபோன்ற குற்றங்கள் இந்தியாவின் பெரும் நகரங்களில் நடந்து வருவது வாடிக்கையாகி வருகின்றது. இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு அரசு தனிகவனம் எடுத்து இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

3:55 PM | தலைப்பு: , , , , | Read More »

பெங்களூரில் (தேர்தல்) குண்டு வெடிப்பு!


பெங்களுரு: பெங்களூரில் பா.ஜா.க அலுவலகத்திற்கு அருகில் இன்று காலை 10:20 மணி அளவில் வெடிகுண்டு வெடித்தது. இதில் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட்ட  KSRP போலீஸ் வாகனத்தில் இருந்த  8 போலீசார் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பில் 2 கார்கள் மற்றும் 2 மோட்டார்சைக்கிள் முழுமையாக சேதமடைந்தது. முதலில் இது பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்திற்க்காக பயன்படுத்திய ஆம்னி வேனின் கியாஸ் சிலிண்டர் வெடித்ததாக போலீசார் சந்தேகித்தனர். பின்னர் இது இரண்டு கார்களுக்கு மத்தியில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்த வெடி குண்டினால் ஏற்பட்டது என்று காவல் துறை ஆணையர் ராகவேந்திரா அவுராத்கர் தெரிவித்துள்ளார்

இதற்க்கு முந்தைய குண்டுவெடிப்பு இதே தேதியில் IPL போட்டிக்கு முன்னதாக சின்னசாமி மைதானத்தில் நிகழ்ந்தது. இதன் தொடர்பாக அப்துல் நாசர் மதானி எந்த தகுந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டார்.
மூத்த காவல் துறை அதிகாரிகள் கூறுகையில்,  நீல நிற சுசுகி மோட்டார் சைக்கிளில் டைமர் வகையை சார்ந்த IED  குண்டு பொருத்தப்பட்டு வெடிக்க செய்யப்பட்டுள்ளது என்று  கூறினார். மேலும் அந்த சுசுகி பைக் முந்தைய இரவு அங்கு நிருத்தபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகின்றனர். இந்த வெடி குண்டு தாக்குதலின் விசாரணைக்கு பா.ஜ.க அலுவலகத்தில் பொருத்தப்பட்ட CCTV காமெரா உதவும்(?) என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

காவல்துறை உயர் அதிகாரி L.R. பாச்சாவ் கூறுகையில், தற்சமயம் குண்டு வெடிப்பை மட்டுமே உறுதி செய்ய முடியும் எனவும், எந்த வகையான குண்டு வெடிக்க வைக்கப்பட்டது என்பது விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் ஜன்னல்களில் இருந்து நொறுங்கிய கண்ணாடி  துகள்களால் சூழ்ந்திருந்தது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமையத்தில் KSRP வேனில் இருந்த தலைமை காவலர் வெங்கடேசையா ஹிந்து பத்திரிக்கையிடம்  கூறுகையில், வெடி குண்டின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாங்கள் பெரும் சப்தத்தை கேட்டோம். எங்களால் எதனையும் சரியாக காண முடியவில்லை. முற்றிலும் புகை மூட்டமாக இருந்தது. புகை விலகியதும் மக்கள் சாலையில் விழுந்து கிடந்ததை கண்டோம். அதில் பெரும்பாலானோர் புகை மற்றும் சிதறிய கண்ணாடி துண்டுகளால் காயமடைந்தவர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக  பா.ஜ.க அலுவலகத்திற்கு அருகிலிருந்த போலீஸ் வேன் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று பா.ஜ.க தொண்டர்கள் புகார் கூறியதால்  வெடிப்பு நடந்த இடத்திற்கு மாற்றப்பட்டது. இடம் மாறிய சில நொடிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது  என்று கூறினார்.


இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை K.C. பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து செல்லப்பட்டனர்.
குண்டு வெடிப்பு நடந்த தெரு முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெடி குண்டு நிபுணர்கள், தேசிய புலனாய்வு அதிகாரிகள் மற்றும் உளவு துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். உள்துறை அமைச்சர் அசோக், கட்சி அலுவலகத்தையும் சம்பவ இடத்தையும் பார்வை இட்டார்.

இதனிடையில் இந்த குண்டு வெடிப்பை முன்னிறுத்தி அரசியல் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அஹமத், இந்த குண்டு வெடிப்பு பா.ஜ.க வின் தேர்தலுக்கு பெரிதும் உதவும் என்று கூறியுள்ளார். இதற்க்கு பா.ஜ.க தரப்பில் இருந்து பெரிதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இன்னும் பா.ஜ.க ஆதரவு செய்தி ஊடகங்கள் இந்த குண்டு வெடிப்பை பா.ஜ.க விற்கு ஆதரவாகவும் முஸ்லீம்களுக்கு எதிராகவும் திருப்ப நேரடி மற்றும் மறைமுக உக்திகளை கையாண்டு வருகின்றனர். http://www.oneindia.in/ என்ற செய்தி தளம் பெங்களுர் குண்டு வெடிப்பு செய்திகளை வெளியிட்ட அனைத்து பக்கங்களிலும்அந்த செய்திக்கு கீழ் அப்துல் நாசர் மதானி குறித்த வீடியோ பதிவையிட்டு இருக்கின்றது. இது போன்ற செயல்கள் தொடர்பில்லாத நிகழ்வுகளை தொடர்
பு படுத்தி பார்க்க உறுதுணையாய் அமையும்.

நாட்டில் நடந்த குண்டு வெடிப்பில் பல அப்பாவி முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு ஆதராமில்லாமல் விடுவிக்கப்பட்டு வரும் வேளையில் இது போன்ற செய்தி மக்களை திசைதிருப்பும் முகமாக அமையும். புதிய தேச வாசகர்கள் http://www.oneindia.in/ தளத்தின் இந்த செயலை கண்டித்து அந்த பதிவுகளை நீக்க கோரி மின்னஞ்சல் அனுப்பலாம்.

7:32 PM | தலைப்பு: , , , , | Read More »

ஓநாய் அழுகிறது

வறுமைக்கோடு என்றால் என்ன என்று சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் ஒரு கேள்வியை எழுப்பியது. அதற்கு திட்டக் கமிஷன், "நாள் ஒன்றுக்கு நகர்ப்புறத்தில் ரூ.32, ஊரகப் பகுதியில் ரூ.26-க்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள்' என்று விளக்கம் அளித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. விற்கும் விலைவாசியில் இந்தப் பணத்தில் மனிதன் உயிர்வாழ முடியுமா? இதென்ன அபத்தம்? இந்தப் புள்ளிவிவரம், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில் உட்கார்ந்து எழுதுபவர்களால் தரப்படுகின்றது என்றெல்லாம் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இப்போது திட்டக் கமிஷன் வறுமைக்கோடு குறித்து வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. அதாவது, நகர்ப்புறத்தில் தனிநபர் வருமானம் ரூ.28.65-க்கு கீழாகவும், கிராமப்புறத்தில் ரூ.22.42-க்கு கீழாகவும் இருந்தால் அவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். அதாவது, நான்குபேர் கொண்ட ஒரு குடும்பத்தை வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பம் என்று வரையறை செய்ய, அந்தக் குடும்பத்தின் ஒரு நாள் வருவாய், நகர்ப்புறத்தில் ரூ.114-க்கு (மாதம் ரூ.3,420) குறைவாகவும், கிராமப்புறத்தில் ரூ.90-க்கு (மாதம் ரூ.2,700) குறைவாகவும் இருந்தால் அவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் என்று கொள்ளலாம். இது ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்த வருவாயைக் காட்டிலும் மிகவும் குறைவு. ஆகவே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அமளி செய்தார்கள்.
திட்டக் கமிஷன் சொல்லும் அளவீடு கேலிக்கூத்து என்றால் அதைவிடப் பெரிய கேலிக்கூத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடையது. இவர்களுக்கு வறுமை என்றால் என்னவென்று தெரியாது. இவர்களுக்கு வாக்குகளும் அதன் விலையும் மட்டும்தான் தெரியும். இவர்களில் சிலரது ஆண்டு வருமானம் பல கோடிகள் என்றால், ஏனைய பலரின் மாத வருமானம் சில லட்சங்கள். ஒருவேளை, இவ்வளவு குறைந்த பணத்தில் உயிர்வாழும் ஒரு வாக்காளரின் வாக்குக்கு ஏன் ஆயிரக்கணக்கில் விலை என்ற சுயகேள்வியால் எழுந்த கோபமாகவும்கூட இருக்கலாம், இந்தக் கூச்சலும் குழப்பமும்!
இந்தியாவில் 2004-05-ம் ஆண்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் 37.2%. இந்த அளவு 2010-11-ம் ஆண்டில் 29.8% ஆகக் குறைந்துள்ளது. அதாவது, வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. அப்படியானால் இவர்கள் அதிகம் சம்பாதிக்கும் நிலைமை உருவாகியிருக்க வேண்டுமே? ஒரு குடும்பத்தின் வருவாய் கூடியிருக்க வேண்டுமே? ஆனால், திட்டக் கமிஷன் வறுமைக்கோட்டுக்கான வருமான அளவை மேலும் குறைக்கின்றது. இது எளிதில் புரியாத பொருளாதாரப் புதிர்.
இதே காலகட்டத்தில், தமிழ்நாட்டைப் பொருத்தவரை வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் எண்ணிக்கை 29.4% லிருந்து 17.1% ஆகக் குறைந்துள்ளது. அதாவது, பல லட்சம் குடும்பங்களின் மாத வருமானம் உயர்ந்திருக்கிறது. எந்த அளவுக்கு உயர்ந்திருக்க முடியும்? 2009-10-ம் ஆண்டில் தமிழகத்தின் சராசரி (வறுமைக்கோடு நிர்ணயிக்கும்) தனிநபர் வருவாய் கிராமப்புறத்தில் ரூ.639, நகர்ப்புறத்தில் ரூ.800. இவை வெறும் புள்ளிவிவரங்கள்.
ஒரு மனிதன் அரசு தரும் அத்தனை சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, விலையில்லா அரிசி, அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரை, அரசின் மருத்துவக் காப்பீட்டில் சிகிச்சை பெறுதல், அரசுப் பள்ளியில் குழந்தைகளைப் படிக்கவைத்தல், ஒரு விளக்கு திட்டத்தில் வீட்டுக்கு இலவச மின்சாரம் பெறுதல் போன்ற அத்தனை சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, இந்தக் குறைந்த வருமானத்தில் வாழ்கிறார் என்பதுதான் இந்தப் புள்ளிவிவரம்.
தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தில் ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்குச் செலவிடப்படும் தொகை ரூ.6 மட்டுமே. இந்த திட்டத்திலும் உணவுத் தானியங்கள் திருடு போகவும் செய்கின்றன. அதன் பிறகும் இந்த ஆறு ரூபாயில், 478 கலோரி, 15.26 கிராம் புரோட்டீன் உள்ள உணவுகளை வழங்குகிறார்கள். இதுபோன்று ஒரு தனிநபர் தனது குழந்தைக்கு வெறும் ரூ.6 கொடுத்து மதிய உணவைப் பெற்றுத்தர முடியுமா? தேநீர்கூட வாங்கித் தர முடியாது. ஓர் அரசு ஒட்டுமொத்தமாகச் செய்வதற்கும், ஒரு தனிநபர் செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கவே செய்யும்.
தமிழக அரசின் கடைநிலை ஊழியரின் மாதச் சம்பளம் ரூ.5,299 என்றால், அவருக்கான வாடகைப்படி சென்னை பெருநகரில் ரூ.500, மாநகராட்சியில் ரூ.300, நகராட்சியில் ரூ.200. இந்த வாடகைப் படிக்கும் அவர் கொடுக்கும் வாடகைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?
சிறு நகரங்களில்கூட வாடகை உயர்ந்துவிட்டது. குறைந்தது ரூ.3,000 வாடகை கொடுத்தாக வேண்டும். அதை அவர் எப்படிக் கொடுக்கிறார் என்பது சராசரி வாக்காளருக்குக் கூடத் தெரிந்த உண்மை.
இந்தியாவை ஒட்டுமொத்தமாகப் பார்த்து, அரசின் சலுகைகளைக் கழித்துக் கணக்கிடும் திட்டக் கமிஷனின் வெறும் புள்ளிவிவரத்துக்காகக் கொதித்தெழும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முறையற்ற வழிகளில் வருமானம் தேடுவதிலும், தொகுதி மேம்பாட்டு நிதியைச் செலவிடுவதிலும் ஊழல் செய்வோரை அம்பலப்படுத்துவதிலும் முனைப்புக் காட்டினாலே போதும். இந்தியாவில் அனைவரும் பணக்காரர்களாகிவிடுவார்கள்.
கம்பன் சொல்வதுபோல கொடுப்பார் இல்லை, கொள்வார் இல்லையால் என்ற நிலைமையை உருவாக்க வேண்டியவர்கள் வெறும் புள்ளிவிவரத்துக்காக கூச்சல் போடுவானேன்?

4:41 PM | தலைப்பு: , , | Read More »

10 வருடங்கள் ஆகியும் இரத்தக்கரையோடு இருக்கும் குஜராத்!

சென்னை: குஜராத் இனப்படுகொலை நடைபெற்று நேற்றோடு 10 வருடங்கள் கடந்து விட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குஜராத் கலவரத்தால் வீட்டை இழந்து, குடும்பத்தினரை இழந்து தவித்து வரும் அனைத்து குடும்பங்களுக்கும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

தங்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்று கூறிக்கொண்டு சிறுபான்மை மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த எந்த அரசாங்கமும் நரவேட்டை நாயகனான நரேந்திர மோடியிடம் இருந்து குஜராத் மக்களை இன்று வரை பாதுகாக்க இயலவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றாகும்.
அஹமதாபாத் பாப்பு நகர் நிவாரண முகாமில் தங்கியிருக்கும் முஸ்லிம்கள்

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான் என்று உலக நாடுகளுக்கு முன் பிதற்றிக்கொண்டிருக்க 10 வருடங்கள் ஆகியும் கலவரத்தை கச்சிதமாக நடத்தி முடித்தவர்கள் இன்று வரை சுதந்திரமாக உலாவி வருகின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் கலவரத்தில் கொடூரத்தை அரங்கேற்றியவர்களுள் பலர் இன்று அமைச்சர்களாகவும், எம்.பிகளாகவும், எம்.எல்.ஏக்களாகவும் இருப்பது இந்த தேசத்திற்கே அவமானமாகும். ஆனால் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று வரை நீதி மறுக்கப்பட்டு வருகிறது.


கலவரத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் கல்லறைகள் இன்றும் அந்த கொடூர நிகழ்வை சித்தரித்துக்கொண்டிருக்கிறது. சமூகத்திலிருந்து முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் செயல் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கலவரத்தில் உயிர் பிழைத்த எண்ணற்ற முஸ்லிம்களால் இதுவரை தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்ப முடியவில்லை. வலுக்கட்டாயமாக முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் சொந்த மண்ணிலேயே முஸ்லிம்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.


குஜராத்தை தற்போது ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களே கலவரத்திற்கு காரணம் என்பது தெளிவான உண்மை. இருந்த போதிலும் அவர்களில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களோ நீதி வேண்டி தவித்துக்கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு நீதி வழங்கும் விஷயத்தில் மாநில அரசும், மத்திய அரசும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. நீதி வழங்குவதற்கு பதிலாக கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் மீது அரசியல் விளையாட்டை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பக்கம் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என பிரச்சாரம் செய்து பிற மக்களின் ஒட்டுக்களை சேகரித்து வரும் நரேந்திர மோடி, மறுபுரம் முஸ்லிம்களின் இறந்த உடல்களை காட்டி முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு துடித்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இவர்கள் இருவருக்கும் மத்தியில் முஸ்லிம்கள் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர்.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை பொறுத்தவரை சுதந்திரம், நீதி, பாதுகாப்பு என்பது இந்தியாவில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும். பாராளுமன்றமும், நீதிமன்றங்களும், சட்டமன்றங்களும் மக்களை பாதுகாக்கும் வகையில் தங்களது பணிகளை நேர்மையாக நிறைவேற்றி நீதியை நிலை நாட்டவேண்டும். அதன் மூலம் குஜராத் கலவரத்திற்கு மூளையாக செயல்பட்ட நரேந்திர மோடியை சட்டத்திற்கு முன் நிறுத்தி தகுந்த முறையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே நீதிக்காக ஏங்கும் மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

11:13 PM | தலைப்பு: , , , | Read More »

முர்ஷிதாபாத்தில் 10 கிராமங்களை தத்தெடுத்தது பாப்புலர் ஃப்ரண்ட்

7:24 PM | தலைப்பு: , , , | Read More »

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய டிசம்பர்-6 தலித் இஸ்லாமியர் எழுச்சி கருத்தரங்கம்

டிசம்பர்-6 புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம் ஆகியவற்றை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலித் இஸ்லாமியர் எழுச்சி நாள் கருத்தரங்கம் நடைபெற்றது .சென்னையில் உள்ள சர்.பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்ற இந்த கருதரங்கத்திர்க்கு
திரு.தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார் இந்த கருத்தரங்கில் SDPI -ன் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி ,மனித உரிமை போராளி
அ.மார்க்ஸ் ,எழுத்தாளர் ஆளுர் ஷாநவாஸ் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் மற்றும் இரா ஜவகர் களந்தை பீர் முகமது ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர் .விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில போருலாளர் யூசுப் தீர்மானங்கள் வாசித்தார்




1 .பாபர் மசூதி இடித்த இடத்தில் மீண்டும் கட்டித்தரப்படும் என்ற அப்போதைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம ராவின் உறுதிமொழியை காங்கிரஸ் கட்சி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்


2 லிபரகான் கமிசன் சுட்டிகாட்டியுள்ள ,அத்வானி ,முரளி மனோகர் ஜோசி ,உமாபாரதி உள்ளிட்ட கிரிமினல் குற்றவாளிகள் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்


3 .விசாரணை கைதிகளாக பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களையும் ,10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை பெற்ற முஸ்லிம்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் .விசாரணை கைதிகளாக ஆண்டுகணக்கில் சிறைவைக்கப்பட்டு பின்னர் நிரபராதி எனக் கூறி விடுதலை செய்யப்படும் முஸ்லிம் கைதிகளின் மறுவாழ்வுக்கு அரசே முழு பொறுபேற்க வேண்டும்


4 முல்லை பெரியார் பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு ,உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைபடுத்த வேண்டும்


5 .ராஜிவ் கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாந்தன் ,முருகன் ,பேரறிவாளன் மற்றும் நாடாளுமன்ற வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்சல் குறு ஆகியோரின் தூக்கு தண்டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்


6 பால் விலை உயர்வு ,பேருந்து கட்டண உயர்வு ,மின் கட்டண உயர்வு ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்


உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

3:15 PM | தலைப்பு: , , , , , | Read More »

எகிப்து:பிரதமர் அஹ்மத் ஷஃபீக் ராஜினாமா

கெய்ரோ,மார்ச்.3:எகிப்து நாட்டின் பிரதமர் அஹ்மத் ஷஃபீக் தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார். எகிப்தின் ராணுவ உயர்மட்டக் கவுன்சில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் ராஜினாமாச் செய்ததாக கூறப்பட்டிருந்தது.

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் இஸ்ஸாம் ஷரஃபிடம் புதிய அமைச்சரவை உருவாக்குமாறு ராணுவ கவுன்சில் கோரியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹுஸ்னி முபாரக் மக்கள் எழுச்சியின் மூலம் பதவியை விட்டு விலகுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக ஷஃபீக் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஷஃபீக் முபாரக்கின் நெருங்கிய நபராவார்.

செய்தி:மாத்யமம்

6:18 PM | தலைப்பு: , | Read More »

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added