கர்நாடகா தேர்தல் முடிவும் SDPI யின் அரசியல் அங்கீகாரமும்:
நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது SDPI கட்சியின் வளர்ச்சி மறுக்க முடியாத அளவில் உள்ளது.மக்கள் மத்தியில் கட்சிக்கு கிடைத்து உள்ள செல்வாக்கு கட்சியின் பாராபட்சமற்ற சமுதாய பணிகளே காரணம் ஆகும்.அதனால்தான் இதற்கு முன்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் யாரும் எதிர்பாராத அளவு வெற்றியடைய முடிந்தது.போட்டி இட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னணி கட்சிகளைவிடவும் அதிக வாக்குகள் கிடைத்து உள்ளது.முக்கியமாக சில வாக்குகள் வித்யாசத்தில் இரண்டாம் இடத்தையும் பிடித்து உள்ளது.முதன் முதலில் இதுபோன்ற ஒரு அங்கீகாரம் கிடைத்தது கட்சியின் வளர்ச்சி பாதையை உறுதி செய்கிறது.மதவாத கொள்கையை மையமாக வைத்து அரசியல் நடத்திய பிஜேபி அரசை மக்களே ஒதுக்கிவிட்டனர்.அதன் பெரும்பாலான தலைவர்கள் தேர்தலில் மோசமான தோல்வியை தழுவி உள்ளனர்.மோடியை முன்னிறித்தி செய்த பிரச்சாரங்கள் மோடியை மக்கள் வெறுப்பதை காட்டுகிறது.தேர்தலை தங்களுக்கு சாதகமாக ஆக்கிகொள்ள பிஜேபி அலுவலகத்தில் குண்டுவெடிப்பை நடத்தி அதை அப்பாவி முஸ்லீம்கள் மேல் சுமத்தியும், தமிழ்நாட்டை சேர்ந்த சில அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் கைது செய்தும்,கேரளாவில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த PFI (popular front of india) உறுப்பினர்களை ஆயுதபயிற்சியில் ஈடுபட்டார்கள் என்று கைதுசெய்ததும் அதிகாரிகளுடன் இணைந்து கொண்டு அரசியல்வாதிகள் செய்யும் மட்ட அரசியலை காட்டுகிறது.இதன் மூலம் SDPI கட்சிக்கு மக்களிடம் அவப்பெயரை உண்டாக்கவும்,கரநாடகாவில் உள்ள தமிழ்நாடு மற்றும் கேரளா மக்களின் வாக்குகளை பிரிக்கவும் சதி செய்தனர்.ஆனால் இறைவன் அவர்களின் சதிகளை முறித்து அவர்களை தோல்வி அடைய செய்தான்.மதவாத சக்திகள் வட இந்தியாவை போல தென் இந்தியாவையும் மாற்ற வேண்டும் என்ற திட்டம் தோல்வி தழுவியது. பிஜேபி மேல் உள்ள ஒட்டுமொத்த வெறுப்பே மக்கள் காங்கிரஸ் அரசை பெரும்பான்மையாக வெற்றி பெற செய்தது.காங்கிரஸ் அரசு மக்கள் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி மேலும் இந்த மதவாதிகளின்,இந்துத்துவ அரசியலையும் ஒழிக்க முன் வர வேண்டும்.குற்றங்கள் சரியாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.அப்பாவி முஸ்லீம்களை கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும்.இல்லையென்றால் காங்கிரஸ் வர போகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படும். கர்நாடக போலீஸ் தமிழ்நாட்டில் புகுந்து அப்பாவிகளை கைது செய்ய அனுமதி வழங்கி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசும் தன் போக்கை மாற்ற வேண்டும்.அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளும் ஒன்றாகி விஸ்வரூபம் படத்தை தடை செய்ய சொன்னதும் உடனே நிறைவேற்றிய அரசு இந்த விசயத்தில் பல போராட்டங்கள் நடந்த பின்னும் அமைதி காப்பது அழகல்ல.கோவையில் மீண்டும் கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கில் சில சம்பவங்கள் நடைபெறுவதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.ஆனால் மரக்காணத்தில் உடனடியாக குற்றவாளிகளை சிறையில் அடைத்தது.இந்த நீதி முஸ்லீம்களுக்கும் கிடைக்க வேண்டும். SDPI கட்சியின் தாரக மந்திரம் சம உரிமை,சமநீதி,சம பாதுகாப்பு..அரசியல் லாபம் இல்லை.மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் கட்சி இல்லை..அனைத்து
மக்களால்,மக்களுக்காக,மக்களே களப்பணி ஆற்றும் கட்சி.இனி வரும் காலங்களில் அரசியலில் முத்திரை பதிக்க இறைவன் அருள் புரிவானாக!
மக்களால்,மக்களுக்காக,மக்களே களப்பணி ஆற்றும் கட்சி.இனி வரும் காலங்களில் அரசியலில் முத்திரை பதிக்க இறைவன் அருள் புரிவானாக!