பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் “பள்ளி செல்வோம்” பிரச்சாரம்!


மனித வாழ்வினை மேம்படுத்தி நல்லொழுக்கத்தையும், மன வலிமையையும், பரந்த  அறிவையும், சுய வலிமையையும் தருவதுதான் கல்வி. தனி மனித முன்னேற்றம், குடும்ப முன்னேற்றம், சமூக முன்னேற்றம், தேசத்தின் முன்னேற்றம் இவையெல்லாம் கல்வியின் மூலமே சாத்தியப்படும். சமூகத்தில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளகற்ற தேவையான ஆயுதம் கல்வி மட்டுமே.
இவ்வுலகில் கல்விக்குக் கண் தந்த மார்க்கம் இஸ்லாம்! திருக்குர்ஆனின் முதல் வசனமே இக்ரஃ : படிப்பீராக!” என்றுதான் துவங்குகிறது. அதாவது கல்வி கற்றலின் அவசியத்துடன்தான் திருக்குர்ஆன் துவங்குகிறது. கல்வி ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை காணாமல் போன சொத்து. அவர் அதனை கிடைக்குமிடமெல்லாம் பெற்றுக் கொள்ள வேண்டும்என்று எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

இந்திய மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறார்கள்.ஒரு நாட்டிற்கு கல்வியில் வளர்ச்சி, பொருளாதாரத்தில் மேம்பாடு என்பன மிக முக்கியமானவை. அதே போல் ஒரு சமுதாய வளர்ச்சிக்கும் இவை மிக முக்கியமானவை. ஒரு நாட்டிலுள்ள மிகப் பெரும் சிறுபான்மைச் சமுதாயம் பின் தள்ளப்பட்டு, அதன் பெரும்பாலான மக்கள் கல்வியறிவற்றவர் களாகவும், வறியவர்களாகவும் இருந்தால் அந்த நாடு உண்மை யான ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டவே முடியாது.
இந்திய முஸ்லிம்களின் துயர நிலையைப் பாரீர்! அவர்கள் அனைத்து அம்சங்களிலும் தலித்துகளை விட பின்தங்கியுள்ளனர் என்று சச்சார் கமிட்டி தெளிவாகக் குறிப்பிடுகின்றது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
ஒரு குழந்தை கூட பொருளாதார நெருக்கடியினாலோ, இன்னபிற காரணத்தினாலோ பள்ளிக்குச் செல்லாமல் இருந்திடக் கூடாது என்ற நோக்கத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பள்ளி செல்வோம் (School Chalo) பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.

இந்தப் பிரச்சாரத்தில் கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன:
1. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள கிராமங்களில் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.
2. உள்ளூர் கல்விக்கூட அதிகாரிகளின் உதவியுடன் மேற்கண்ட பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்யப்படுகின்றது.
3. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வீடு வீடாகச் சென்றும், பொது நிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
4. மாணவர் பேரணிகள், தெரு நாடகங்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவை இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் அம்சங்கள்.
5. பிரச்சாரத்தின் முக்கிய பாகமாக ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளிப் பைகள் (Free School Kits) வழங்கப்படுகின்றன.

2012ம் ஆண்டில் மட்டும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 12 மாநிலங்களில் 491 கிராமங்களில் 64,032 இலவச பள்ளிப் பைகளை வினியோகித்துள்ளது. பிரச்சாரத்தின் ஒரு பாகமாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில்  இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
இந்த வருடம் இந்தப் பிரச்சாரத்தை 13 மாநிலங்களில் மேற்கொள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் பள்ளிப் பைகள் வினியோகிக்கப்படும்.

மேற்கு வங்கத்திலும், மணிப்பூரிலும் இந்தப் பிரச்சாரம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 26,000 பள்ளிப் பைகள் (School Kits) வினியோகிக்கப்பட்டன.

ஒரு பள்ளிப் பையின் விலை : ரூ. 300.00

கல்வி அறிவை வழங்கும் இந்தப் புனிதப் பணியில் நாமும் இணைவோம். ஸதக்கத்துன் ஜாரியா என்ற நிரந்தர தர்மத்தின் பலனை அடைவோம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைமையகம் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

6:44 PM | தலைப்பு: , , | Read More »

வாருங்கள் சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக ...


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர இந்தியாவின் 65வது சுதந்திர தினம் ஆகும். இந்நாளில் இந்த தேசத்தின் விடுதலைக்காக நடைபெற்ற போராட்டங்களையும். அதில் கலந்து கொண்டு நம் முன்னோர்கள் செய்த தியாகங்களையும் நினைவு கூர்வது நமது கடமையாகும்.
இந்த தேசத்தை அன்னியர்கள் அடிமைப் படுத்த முனைந்த போதும், தேசத்திற்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்பட்ட போதும் நமது முன்னோர்கள் “என்ன நடந்தால் நமக்கென்ன” என்று இருந்திடாமல் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் துறந்து இந்த தேசத்தை பாதுகாத்தார்கள். இந்த உணர்வுகள் மேலோங்க வேண்டிய தருணம் நம் தேசத்தின் குடி மக்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வை மக்கள் கொண்டாட்டமாக மாற்றும் விதத்திலும், சுதந்திர உணர்வையும், கடந்த பல வருடங்களாக நாடு முழுவதும் சுதந்திர தின நிகழ்ச்சிகளையும் முக்கிய நகரங்களில் “சுதந்திர தின அணி வகுப்பையும்” பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது. இந்த அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 15ல் தமிழகத்தில் மதுரை, நாகை, இளையான் குடி ஆகிய நகரங்களில் “சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி” நடைபெறும். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து உரையாற்ற உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

12:33 PM | தலைப்பு: , , , | Read More »

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டி NWF போராட்டம்


முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தமிழகத்தின் பல பாகங்களில் நடத்தியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியை முன்னிட்டு 7 ஆண்டுகள் கழிந்த ஆயுள் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்வதுண்டு. ஆனால் இது முஸ்லிம் கைதிகளுக்கு மட்டும் விதிவிலக்காக இருக்கின்றது. சென்ற தி.மு.க ஆட்சியின் போதும், இப்போது ஆ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 1 வருடம் நிறைவடைந்த போதிலும் முஸ்லிம் கைதிகளிடத்தில் பாரபட்சமாகவே நடந்து வருகின்றது.

முஸ்லிம் கைதிகளில் பெரும்பாலானோர் விசாரணை கைதிகளாக  இருக்கும்போதே தண்டனை காலமான 7 வருடங்களை பூர்த்தி செய்துவிட்டனர். இருந்த போதிலும் தமிழக அரசு இது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனை கருத்தில் கொண்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்து அவர்களது குடும்பத்தில் ஒளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.





சென்னையில் நடைபெற்ற பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்லாம்யில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவி நஃபீஸா பானு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பா. புகழேந்தி சிறப்புரையாற்றினார்கள்.


மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினருமான முஹம்மது யூசுஃப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  




நெல்லையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் S.பாத்திமா கனி, தூய சவேரியர் கல்லூரியின் உதவி பேராசிரியர் P.சாந்தி ஆகியோர் கோரிக்கையுரையற்றினார். 

இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள், நீதியாளர்கள், முஸ்லிம் பெண்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.






1:21 AM | தலைப்பு: , , , , | Read More »

இஸ்லாம் டி.வி - குமரி மாவட்ட உள்ளுர் தொலைக்காட்சி

கன்னியாகுமரி மாவட்ட ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் சார்பாக இஸ்லாம் தொலைக்காட்சி(ISLAM TV) என்ற பெயரில் உள்ளுர் தொலைக்காட்சி சேவையினை 03-4-2012 மாலை 05 மணியளவில் ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் மூத்ததலைவர் கமாலுத்தீன் மதனி அவர்கள் திறந்துவைத்து உரைநிகழ்த்தினார்கள். 
 
இந்த தொலைக்காட்சி சேவை குமரிமாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சுற்றியுள்ள இடங்களில்(விளவங்கோடு தாலுகா முழுவதும்) தெரியும் வகையில் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.படிப்படியாக மாவட்டம் முழுவதும் இந்த சேவை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மலுக்குமுதலி, மாநில செயலாளர் தாஸிம், குளச்ல்கிளை தலைவர் நூர் முகம்மது, மீடியாக்குழுவின் குமரிமாவட்டதலைவர் மாஹீன் அபூபக்கர், மீடியாக்குழு உறுப்பினர்கள் திருவைதாஹா, P.A செய்யதுஅலி, மற்றும் இரவிபுதூர்கடை P.A.அப்துல்கரீம், ஞாறான்விளை இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டு கொண்டனர்.

1:43 PM | தலைப்பு: , , , | Read More »

அமெரிக்கா, இஸ்ரேல் உறவை எதிர்த்து கேம்பஸ் பிரண்ட் பிரச்சாரம்

சென்னை -மார்ச் 28- இந்தியா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நட்புறவு என்ற பெயரில் நாட்டின் இறையாண்மையை அடகுவைத்துக் கொண்டிருக்கின்றது. நமது நாட்டில் இவர்களது ஆதிக்கமும் உளவுப்பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மாநில அரசுகள் இவர்களை கைது செய்தாலும் மத்திய அரசால் எவ்வித விசாரனையுமின்ற விடுவிக்கப்பட்டு  விடுகின்றனர். இது பெரும்பாண்மையான மக்களிடையே சந்தேகத்தையும் ஒரு வித அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிகழ்வுகளை காரணமாக வைத்து இந்திய மாணவர்களின் கூட்டமைப்பான ” கேம்பஸ் பிரண்ட ஆப் இந்தியா” மாணவா்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்னம் வழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை ஏப்ரல் 1 முதல் 5ம் தேதி வரை நடத்த இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சார சுவரெட்டிகளை தமிழகம் முழுவதும் ஒட்டிவருகின்றனர்.


7:01 PM | தலைப்பு: , , , , | Read More »

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி




தமிழகத்தில் முதன் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்க இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!

அவசர உதவிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்படுத்தியிருக்கும் ஆம்புலன்ஸ் வாகனம்
கன்னியாகுமர் மாவட்டம் கோட்டார்இ இடலாக்குடியில் சந்தி தெருவில் வருகின்ற 25ஆம் தேதி அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை நடத்தும் ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. இந்நிகழ்ச்சியை குமரி மாவட்ட தலைவர் ஜுல்பிகர் அலி தலைமை தாங்கி நடத்தி தர இருக்கின்றார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் மற்றும் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள்இ ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

(இந்த நிகழ்ச்சி புதிய தேசம் வலைப்பூவில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும், இன்ஷா அல்லாஹ்)

12:11 PM | தலைப்பு: , , | Read More »

நெல்லையில் மஸ்ஜித் சுற்றுவட்டாரத்தை சுத்தம் செய்தது பாப்புலர் ஃப்ரண்ட்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற முழக்கத்தோடு மக்கள் மத்தியில் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது .






             இவ்வருடம் பிப்ரவரி 10 முதல் 20 ஆம் தேதி வரை இப்பிரச்சாரம் செய்ய தீர்மானக்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக நெல்லை மேலப்பாளையம் அத்தியடி கீழத் தெருவில் உள்ள நாகூர் மீரான் ஜும்ஆ பள்ளி வாசல் வளாகத்தில் மாவட்ட செயலாளர் மௌலவி A ஹைதர் அலி அவர்கள் தலைமையில் சுத்தம் செய்யப்பட்டது இதில் பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுத்தம் செய்ததை  அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய வைத்தது








பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர் களுடன் சேர்ந்து முதியவர் ஒருவர் பணியாற்றிய போது




பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர் களுடன் சேர்ந்து முதியவர் ஒருவர் பணியாற்றிய போது


சுத்தம் செய்த பின் .....

                                                             சுத்தம் செய்த பின் .....

12:32 AM | தலைப்பு: , | Read More »

இராயப்பேட்டை அரசு மருத்துவமனையை சுத்தம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நாடு முழுவதும் "ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம்" என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் பற்றியும், உடல் ஆரோக்கியம் பற்றியும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தின் இறுதியாக சென்னை மாவட்டம் சார்பாக இராயப்பேட்டை அரசு மருத்துவமனை சுற்றிய பகுதிகளை சுத்தம் செய்யும் பணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டது.




உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியு, தூய்மையான சுற்றுச்சூழலை வலியுறுத்தியும் ஒவ்வொரு வருடமும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வருடம் இப்பிரச்சாரத்தின் துவக்க விழா சில நாட்களுக்கு முன்பாக கோவை மாவட்டத்தில் நடைபெற்றது.

இப்பிரச்சாரத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா பயிற்ச்சி வகுப்புகள், மாரத்தான் ஓட்டம், கராத்தே பயிற்சி, சத்தான உணவுவகைகளை உண்பதற்கான ஆலோசனை முகாம்கள் போன்றவை நடைபெற்றன. இப்பிரச்சாரத்தின் இறுதியாக "கிளீனிங் டே" (சுத்தம் செய்யும் நாள்) என ஒரு நாளை நிர்ணயித்து அன்று பல்வேறு இடங்களை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டது  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

அந்த வகையில் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் சுத்தம் செய்தனர்.

செய்தி: ஜுனைத் அன்சாரி






செய்தி: ஜுனைத் அன்சாரி, சென்னை

11:55 PM | தலைப்பு: , | Read More »

IFF நடத்திய ஆரோக்கியமான வாழ்க்கையே! மகிழ்ச்சியான வாழ்கை!

IFF நடத்திய ஆரோக்கியமான வாழ்க்கையே! மகிழ்ச்சியான வாழ்கை! நிகழ்ச்சி

DSC00672
ஜித்தா:இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம்(IFF) ஜித்தா கிளை நடத்திய ஆரோக்கியமான வாழ்க்கையே! மகிழ்ச்சியான வாழ்கை! நிகழ்ச்சி ஷரபிய்யாஹ் நூர் பாலிகிளினிக்கில் கடந்த வியாழனன்று நடைபெற்றது.
ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை மருத்துவ ரீதியாக சகோதரர் அல்-அமான் பவர்பாயிண்ட் காட்சிகளின் (presentation) மூலம் தொகுத்தளித்தார். இதையடுத்து குர்-ஆன் மற்றும் ஹதீஸின் பார்வையில் சகோதரர் ஷேக் அப்துல்லா அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் ஆரோக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக யோகா மாஸ்டர் சிராஜ், மக்கள் அன்றாட வாழ்க்கையில் பேண வேண்டிய உடற்பயிற்சிகளை (ஆசனங்களை) சகோதரர் நௌஷாத் உதவியுடன் செய்து காட்டினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக வருகைபுரிந்த அனைவரின் உடல் எடை, உயரம் ஆகிய விவரங்கள் காணப்பட்டு, அவர்களின் உடல் நிலையைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நிகழ்ச்சியினை திருமறைக் குர்-ஆன் வசனங்களை ஓதி சகோதரர் அப்துல் கபூர் துவக்கி வைத்தார். சகோதரர் கே.ஐ.எம். ஷரீப் அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஐ.எப்.எப்.இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம்(IFF) ஆற்றி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை அதன் செயலாளர் சகோதரர் முஹம்மது அப்பாஸ் விவரித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

12:20 PM | தலைப்பு: , , | Read More »

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான கலந்துரையாடல்

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான கலந்தாலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னையில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூகப் பிரமுகர்கள் மற்றும் சகோதர இயக்கங்களின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.




"முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு" பல ஆண்டுகளாக இதற்காக அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் தங்களால் இயன்ற அளவும் போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர். இதனால் வரை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்பது ஒரு கனவாக இருந்தாலும் தற்போது மத்திய அரசு முஸ்லிம்களுக்கு மத்தியில் இடஒதுக்கீட்டை வழங்குவது என முடிவெடுத்துள்ளது. இத்துனை நாள் அமைதி காத்துக்கொண்டு தற்போது பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதையொட்டி இத்தகைய அறிக்கையை அரசியல் லாபத்திற்காக மத்திய அரசு வெளியிட்டிருந்தாலும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற நிலைக்காவது வந்திருப்பதை பாராட்டுவதில் தவறில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 3.5% இடஒதுக்கிடு அமலில் இருந்தாலும் வழங்கப்பட்ட இந்த சதவீதம் போதுமானதல்ல என்றும் தற்போது ஆட்சி செய்து வரும் மாநில அரசு தங்களுடைய தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கின்ற வேலையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டினை உடனே அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வருகின்ற ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று கோவை, சென்னை, மதுரை, தஞ்சை, நெல்லை ஆகிய ஐந்து மாவட்டங்களில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கிறது.

அதற்கும் முன்பு  தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எத்துனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் ஒன்றினைந்து தீர்மானித்து மாநில அரசை வலியுறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து சமுதாய தலைவர்களையும் அழைத்து ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முஹம்மது காலித் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இடஒதுக்கீடு தொடர்பான விரிவான தொகுப்பை தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் வழங்கினார். சமூக தலைவர்கள் அனைவரும்  ஆலோசனை செய்து ஒத்த கருத்து ஏற்பட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் ஒன்று கூடிய இந்நிகழ்ச்சி சிறப்பானதாக அமைந்தது.

இறுதியாக பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி நன்றியுரை கூறினார்.

எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி
இஸ்லாமிய தொண்டு இயக்கத்தின் தலைவர் ஜனாப் ஏ.கே. ஹனீஃபா

தமுமுகவின் மாநில செயலாளர் ஜனாப் ஹமீது
மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்கின் தலைவர் அ.ச உமர் ஃபாரூக்

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தலைவர் செய்யது இபுராஹிம் உஸ்மானி

ஐக்கிய சமாதானப்பேரவையின் தலைவர் ஹாமித் பக்ரி மன்பஈ
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் முஹம்மது ஷாஃபி

வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் ஜனாப் சிக்கந்தர்

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைத்தலைவர் ஜனாப் முனீர்

NCHRO-வின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் அப்துல் காதர்

6:53 PM | தலைப்பு: , , | Read More »

புற்றுநோய் மற்றும் மகப்பேறு இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம்.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 5 லட்சம் பேர் புற்றுநோயினால் இறக்கின்றனர். உலகில் உள்ள மொத்த கர்பப்பை புற்றுநொயாளிகளில் 26 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர். தமிழகத்தில் 1990களில் 10 சதவீதமாக இருந்த மார்பக புற்றுநோய் 2011ல் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெண்களிடையே அதிகரித்து வரும் புற்றுநோயின் அபாயம் குறித்து அவர்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகவிட்டதனை கருத்தில் கொண்டு NWFன் சார்பாக இப்புற்றுநோய் மருத்துவ விழிப்புணர்வு முகாம் இலவசமாக நடத்தப்பட்டது.
NWFன் நெல்லை மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா தலைமையேற்று நடத்திய இம்முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

NWF Medical Awareness Camp at Nellai Eruvadi


புற்றுநோய் மற்றும் மகப்பேறு குறித்த விழிப்புணர்வு உரையாற்றுவதற்காக முறையே நெல்லை Peace Health Centre சேர்ந்த Dr.R.அன்பு ராஜன் அவர்களும், நெல்லை ராயல் மருத்துவமனையைச் சேர்ந்த Dr..மங்கையர்க்கரசி அவர்களும் இம்முகாமிற்கு வருகை தந்து சிறப்பித்தனர்.

NWF Medical Awareness Camp at Nellai Eruvadi
மருத்துவர் அன்புக்கரசி புற்று நோய் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்
விழிப்புணர்வு உரைக்கு பின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் நேரத்தில் புற்றுநோய் மற்றும் மகப்பேறு குறித்து பெண்களிடையே நிலவும் சந்தேகங்களுக்கு இரு மருத்துவர்களும் மிகத் தெளிவாகவும், அழகாகவும் பதிலளித்தனர்.

முகாமில் கலந்து கொண்ட பெண்களும் எந்தவித தயக்கமுமின்றி பெண்களுக்கே உரிய பல்வேறு நோய்கள் குறித்து தங்களுக்கு இருந்த சந்தேகங்களையும், மேலும் ஆரோக்யமாக வாழ்வதற்கான பல யோசனைகளையும் பல்வேறு கேள்விகளின் மூலம் கேட்டு விளக்கம் பெற்றனர்.


கேள்வி-பதில் நேரத்திற்கு பின்னர் மருத்துவர்களை நேரில் சந்தித்து விளக்கம் பெற விரும்பியவர்களுக்கான தனி-நபர் ஆலோசனை நடைபெற்றது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டு மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற்றனர்


முகாமில் கலந்து கொள்ளும் பெண்களுடைய கவனம் சிதறாமல் இருப்பதற்காக அவர்களின் குழந்தைகளுக்கு பிரத்யேகமாக வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல் போன்ற பல்வேறு போட்டிகளும், நல்ல பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் சில வீடியோ காட்சிகளும் தனி அறைகளில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு முகாமின் இறுதியில் மேடைக்கு அழைத்து பரிசு வழங்கப்பட்டது.

முகாமில் கலந்து கொண்ட பெண்களிடையே நிலவும் ஆரோக்யம் குறித்த தேடுதலுக்கு நம்மால் இயன்ற ஒத்துழைப்பு அளிக்கும் வண்ணம் மருத்துவம் மற்றும் ஆரோக்யமாக வாழ்வது குறித்த பல்வேறு அரிய புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்ததைவிட ஆர்வமுடன் பல பெண்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். தீர்ந்து போன சில குறிப்பிட்ட புத்தகங்களை கூட மீண்டும் தங்களுக்கு கிடைக்க ஆவன செய்யுமாறு ஆர்வத்துடன் கோரினர்.

NWF Medical Awareness Camp at Nellai Eruvadi


Book Stall on NWF medical awareness camp Eruvadi



6:48 PM | தலைப்பு: , , | Read More »

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added