கன்னியாகுமரி
மாவட்ட ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் சார்பாக இஸ்லாம்
தொலைக்காட்சி(ISLAM TV) என்ற பெயரில் உள்ளுர் தொலைக்காட்சி சேவையினை
03-4-2012 மாலை 05 மணியளவில் ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்
அமைப்பின் மூத்ததலைவர் கமாலுத்தீன் மதனி அவர்கள் திறந்துவைத்து
உரைநிகழ்த்தினார்கள்.
இந்த தொலைக்காட்சி சேவை குமரிமாவட்டம் மார்த்தாண்டம்
பகுதியை சுற்றியுள்ள இடங்களில்(விளவங்கோடு
தாலுகா முழுவதும்) தெரியும் வகையில் ஆரம்பம்
செய்யப்பட்டுள்ளது.படிப்படியாக மாவட்டம் முழுவதும் இந்த சேவை ஒளிபரப்ப
திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல்
கண்காணிப்பாளர் மலுக்குமுதலி, மாநில செயலாளர் தாஸிம், குளச்ல்கிளை தலைவர்
நூர் முகம்மது, மீடியாக்குழுவின் குமரிமாவட்டதலைவர் மாஹீன்
அபூபக்கர், மீடியாக்குழு உறுப்பினர்கள் திருவைதாஹா, P.A செய்யதுஅலி, மற்றும்
இரவிபுதூர்கடை P.A.அப்துல்கரீம், ஞாறான்விளை இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டு
கொண்டனர்.