அமெரிக்கா, இஸ்ரேல் உறவை எதிர்த்து கேம்பஸ் பிரண்ட் பிரச்சாரம்
சென்னை -மார்ச் 28- இந்தியா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நட்புறவு என்ற பெயரில் நாட்டின் இறையாண்மையை அடகுவைத்துக் கொண்டிருக்கின்றது. நமது நாட்டில் இவர்களது ஆதிக்கமும் உளவுப்பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மாநில அரசுகள் இவர்களை கைது செய்தாலும் மத்திய அரசால் எவ்வித விசாரனையுமின்ற விடுவிக்கப்பட்டு விடுகின்றனர். இது பெரும்பாண்மையான மக்களிடையே சந்தேகத்தையும் ஒரு வித அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.இந்நிகழ்வுகளை காரணமாக வைத்து இந்திய மாணவர்களின் கூட்டமைப்பான ” கேம்பஸ் பிரண்ட ஆப் இந்தியா” மாணவா்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்னம் வழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை ஏப்ரல் 1 முதல் 5ம் தேதி வரை நடத்த இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சார சுவரெட்டிகளை தமிழகம் முழுவதும் ஒட்டிவருகின்றனர்.
