முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டி NWF போராட்டம்


முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தமிழகத்தின் பல பாகங்களில் நடத்தியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியை முன்னிட்டு 7 ஆண்டுகள் கழிந்த ஆயுள் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்வதுண்டு. ஆனால் இது முஸ்லிம் கைதிகளுக்கு மட்டும் விதிவிலக்காக இருக்கின்றது. சென்ற தி.மு.க ஆட்சியின் போதும், இப்போது ஆ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 1 வருடம் நிறைவடைந்த போதிலும் முஸ்லிம் கைதிகளிடத்தில் பாரபட்சமாகவே நடந்து வருகின்றது.

முஸ்லிம் கைதிகளில் பெரும்பாலானோர் விசாரணை கைதிகளாக  இருக்கும்போதே தண்டனை காலமான 7 வருடங்களை பூர்த்தி செய்துவிட்டனர். இருந்த போதிலும் தமிழக அரசு இது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனை கருத்தில் கொண்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்து அவர்களது குடும்பத்தில் ஒளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.





சென்னையில் நடைபெற்ற பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்லாம்யில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவி நஃபீஸா பானு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பா. புகழேந்தி சிறப்புரையாற்றினார்கள்.


மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினருமான முஹம்மது யூசுஃப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  




நெல்லையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் S.பாத்திமா கனி, தூய சவேரியர் கல்லூரியின் உதவி பேராசிரியர் P.சாந்தி ஆகியோர் கோரிக்கையுரையற்றினார். 

இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள், நீதியாளர்கள், முஸ்லிம் பெண்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.






1:21 AM | தலைப்பு: , , , , | Read More »

உணவும் ஆரோக்கியமும்


இறைவனின் படைப்பினங்களில் மிகவும் உன்னதமான படைப்பு மனிதஇனம்;. இவ்வினம் உலகில் உயிர்வாழ மிக  முக்கியமானது உணவு. நம்மில் பலர் அந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும் எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பதைப்பற்றியெல்லாம் சிந்திப்பதே இல்லை. பார்ப்பதை எல்லாம் பருகவேண்டும் கிடைப்பதை எல்லாம் உண்ண வேண்டும் என்ற ஆசையில் வாழும் மனிதர்களைத்தான்  காணமுடிகிறது. ஆசைக்கு அளவில்லைதான். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சல்லவா?. பணத்தைக் கொடுத்து உணவை மட்டுமல்ல, நோயையும் அல்லவா விலைக்கு வாங்குகின்றனர். வயிறு புடைக்க உண்டு ஜீரணிக்கமுடியாமல் திண்டாடுபவர்களும் உண்டு. வாழ்வதற்காகத்தான் உண்ண வேண்டுமே தவிர உண்பதற்காக வாழ்க்கை அல்ல. 'நொறுங்க தின்றால்; நூறு வயது' என்ற முன்னோர்களின் கூற்றை  தவறாக புரிந்துகொண்டு எப்பொழுதும் நெறுக்குத்தீனிகளை திண்றுகொண்டிருக்கின்றனர். 'ஆதத்தின் மகன் வயிற்றை விட மோசமான ஒரு பாத்திரத்தை நிரப்புவதில்லை' என்பது நபிமொழி. பலநோய்கள் அதிகமாக உண்பதனாலேயே  ஏற்படுகிறது. உணவு விஷயத்தில் ஒருசில கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் நாம்  ஆரோக்கியமாக வாழலாம்.

1.தேர்ந்தெடுத்தல்.

உடல் ஆரோக்கியத்திற்கு  நல்ல சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்;. அல்லாஹ் தனது   திருமறையில் மனிதர்களே பூமியிலுள்ள பொருட்களில் அணுமதிக்கப்பட்டவற்றையும் பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள். ஆல்குர்ஆன் (2:168) இப்போது பிரபலமடைந்து வரும் விரைவு உணவுகள் ஜகயளவ கழழனஸ நாவிற்கு சுவை தந்தாலும் நோயை வரவழைக்க கூடியவை. இதுபோன்ற உணவுகளை குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க வேண்டும்.

2.அளவுகோல்.

பசி ஏற்படக்கூடிய நேரத்தில் வயிற்றுக்கு எந்த அளவு உணவு தேவையோ அந்த  அளவு மட்டுமே உண்ண வேண்டும்.  நபி(ஸல்)அவர்களின் அறிவுரைப்படி வயிற்றின் நான்கில் இரு பகுதியை உணவிற்கும் ஒருபகுதி நீருக்கும் ஒருபகுதியை  வெற்றிடமாகவும் விட்டு விட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான உடலை நம்மால் பெறமுடியும்.

3.நேரம்.

நினைத்த நேரமெல்லாம் அல்லது கிடைத்த நேரமெல்லாம் சாப்பிட்டுக்கொண்டு  இருக்காமல் சாப்பிடுவதற்கு என்று நேரம் குறிப்பிட்டு அந்த நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் நீ விரும்பும் போதெல்லாம் உணவு உண்பது வீண்விரயமாகும்.(தப்ரானி) காலை உணவை தவிர்;த்தல் கூடாது. இரவு உணவை தாமதப்படுத்தவும் கூடாது. சத்தான ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணும்போது நம் உடலை தெம்போடும் நோய்கள் அண்டாமலும்  பாதுகாத்துக் கொள்ளலாம். இஸ்லாம் ஆரோக்கியம் பேணப்படுவதன் முக்கியத்தை வலியுறுத்திக் கூறுகிறது. நபி(ஸல்)அவர்கள், இவ்வுலகில் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட அருட்கொடைகளில் முக்கியமானவைகளாக குறிப்பிடும் போது ஆரோக்கியமும் ஓய்வும் என கூறினார்கள். மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் உணவை உண்பதை பற்றி குறிப்பிடும் திருமறை குர்ஆன் அத்தோடு ஒரு விஷயத்தையும்         வலியுறுத்துகிறது.

உண்ணுங்கள் பருகுங்கள், எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து வீண்விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்;ஆன் 07 : 31)

இந்த வசனம் ஒரு உண்மையை நமக்கு உணர்த்துகிறது. இஸ்லாமிய உம்மத்தின் ஒரு பகுதியினர் அளவு கடந்து உணவை உண்டு பெரும்பகுதி உணவை வீணடித்து  ஆரோக்கியம் இழந்து நிற்கின்றனர்.மற்றொரு பகுதியினரோ உண்ண உணவின்றி பட்டினியின் காரணமாக ஆரோக்கியம் இழந்து நிற்கின்றனர்.இந்நிலை மாற்றப்படவேண்டும்.

இன்று நமது சமூகத்தில் விருந்து என்ற பெயரால் அனாச்சாரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஏழைகள் புறக்கனிக்ப்பட்டு பணம்படைத்தோர் மட்டுமே விருந்துக்கு அழைக்கப்படுகின்றனர். இதுவே மோசமான விருந்து என அண்ணலார் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். இன்று  நம் சமுதாய மக்கள் எத்தனையே பேர் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி இருக்க இடமின்றி கண்ணீருடன் வாழ்வதை காண்கிறோம்;;. அவர்கள் துயர் துடைத்து,  வாழ்வாதாரங்கள் ஏற்படுத்தி கொடுக்க என்ன முயற்சி எடுத்தோம் எப்படி செயலாற்றினோம் என்பற்கு இறைவனிடம் விடையளிக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சரியான நேரத்தில் உடலுக்கு வலுவூட்டும் உணவை உண்டு நம்முடைய ஆரோக்கியம் பேணும் அதேநேரம் முஸ்லிம் சமூகத்தில் பசியுடன் இருக்கும் தன் சகோதரனுக்கும் ஈன்றுதவி அவர்களின் ஆரோக்கியத்தையும் பேணும்போதுதான் சக்தியுள்ள ஒரு உம்மத் இந்த பூமியில் கட்டி எழுப்பப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.                

 ஆக்கம் - உம்மு அன்ஃபால்.

10:07 PM | தலைப்பு: , , , | Read More »

ஹிஜாப் - பெண்களின் வாழ்க்கை முறை

      ஹிஜாப் - பெண்களின் வாழ்க்கை முறை


அன்பான சகோதரிகளே! இன்றைய காலகட்டத்தில் சில சகோதரிகள் தங்கள் தலையை மட்டுமே மறைத்துக்கொண்டு ஹிஜாபுடன் இருக்கிறேன் என்று பெருமிதப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் தலையை மறைப்பது மட்டும் தான் ஹிஜாப் என்பதல்ல. உண்மையில் சிந்தித்துப் பார்த்தோமானால் ஹிஜாப் என்பது நம் பேச்சின் வெளிப்பாடு, நம் நடையின் வெளிப்பாடு, நம்மை நாமே வழி நடத்திச் செல்லும் நெறிமுறை. ஹிஜாப் என்னும் வார்த்தை தன்னகத்தே ஒரு முறையான, முழுமையான வாழ்க்கை நெறியைக் கொண்டுள்ளது. அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

இன்னும், முஃமீனான பெண்களுக்கும் நீர் கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும், தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது, இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும், மேலும் (முஃமீனான பெண்கள்) தம் கணவர்கள் தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம்புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் தம் சகோதரிகளின் புதல்வர்கள் அல்லது தங்கள் பெண்கள் அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்பமுடியாத அளவு) வயதானவர்கள் பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது, மேலும் தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்தி லிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம், மேலும் முஃமீன்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி)நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.(அல்குர்;ஆன் - சூரத்துந்நூர் 24:31)
ஹிஜாபைப் பற்றி இவ்வசனம் தெளிவுபடுத்தும் உண்மைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
தலையை மட்டும் மறைத்துக் கொண்டால் போதுமா?
இந்த வசனத்தை உற்று நோக்கும் போது தங்கள் முந்தானைகளை மேற்சட்டையின் மீது போட்டு கழுத்து, நெஞ்சு ஆகியவற்றையும் மறைக்க வேண்டும். அதாவது தலையை மறைக்கப் பயன்படுத்தும் துணியால் இந்த பாகங்களையும் மறைக்க வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். எனினும் சில பெண்கள் சிறிய துணியினால் தலையை மட்டும் மறைத்துக் கொண்டு ஏனைய பாகங்களான கழுத்து, நெஞ்சு பகுதியை மறைக்காமல் விட்டு விட்டு தாங்கள் முழுமையாக ஹிஜாபின் ஒழுங்கு முறைகளை கடைப்பிடிப்பதாக எண்ணிக் கொள்கின்றனர். இது அறியாமைக்கால பெண்களின் நடைமுறையாகும்;. இமாம் குர்துபி கூறியுள்ளார்கள். அக்கால பெண்கள் தலையை மறைக்க பயன்படுத்தும் துணியின் ஓரங்களை பின்னால் தொங்கும்படி விட்டுவிடுவர். இதனால் கழுத்து, நெஞ்சு, காது ஆகிய பகுதிகள் மறைக்கப்படாமல் இருக்கும். பின்னர் அல்லாஹ், தங்கள் முந்தானைகளால் இப்பகுதிகளை மறைக்க ஆணையிட்டான்.
இறுக்கமான உடைகள் அணியலாமா?
டைட் ஜீன்ஸும், சிறிய டி-ஷர்ட்டும் அணிந்து கொண்டு தலையை மட்டும் ஒரு துணியால் மறைப்பதும் ஹிஜாப் ஆகாது. உடலமைப்பை வெளிப்படுத்தும் இறுக்கமான ஆடைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அணியக்கூடாது. நபி (ஸல்) கூறினார்கள், 'என் உம்மத்தில் பெண்களிலிருந்து ஒரு சாரார் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று உயர்ந்து இருக்கும். அவர்கள் சுவனம் நுழையவே மாட்டார்கள், ஏன் சுவனத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள்'. (ஆதாரம்: முஸ்லிம்)
மெல்லிய ஆடைகளை அணியலாமா?
ஷிபான் போன்ற மெல்லிய துணி வகைகளால் ஆன ஆடைகளை அணியக் கூடாது. உடல் முழுவதும் மறைத்து இருந்தாலும் தோலின் நிறம் வெளியே தெரிகின்ற ஆடைகளை ஹிஜாபாக ஆக்க முடியாது. நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு மெல்லிய உடை அன்பளிப்பாக கிடைத்தது, அதை ஒஸாமா பின் ஜைத் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். அதை அவர் தன் மனைவிக்கு கொடுத்து விட்டார்;. நபி (ஸல்) அவரிடம் இதைப்பற்றி கேட்ட போது தம் மனைவிக்கு கொடுத்ததை தெரிவித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர் அதை அணியும் போது மேலே வேறு ஒரு ஆடையும் சேர்த்து அணியட்டும். ஏனெனில் அவ்வுடை அவரின் எலும்புகளின் அளவை விவரிக்கும் விதமாக இருப்பதாக நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள்.
ஹிஜாப் பிறரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கலாமா?
ஆடையானது பிற ஆடவரின் கவனத்தைக் கவரும் விதமாக இருக்கக்கூடாது. 'அல்லாஹ் தன் திருமறையில் அழகை வெளிப்படுத்தக் கூடாது' என தெளிவாகக் கூறுகிறான். இருந்தும் சில சகோதரிகள் ஹிஜாப் அணிகிறோம் என்ற பெயரில் அலங்கரிக்கப்பட்ட ஹிஜாபை அணிந்து கொண்டு வலம் வருகின்றனர். ஜொலிக்கும் கற்கள் பதிக்கப்பட்டும், ஜரிகை வேலை செய்யப்பட்டும் உள்ள இந்த ஹிஜாப், சாதாரண ஆடைகளில் அவர்கள் இருப்பதைவிட கூடுதல் அழகை வெளிப்படுத்தக் கூடியதாக இருப்பதால் ஆண்களின் பார்வை அவர்களை நோக்கி செல்கிறது. இதனால் ஹிஜாபின் முக்கிய அம்சமே அடிபட்டு விடுகிறது. அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
இன்னும், (நபியுடைய மனைவியரே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கிவிடுங்கள். முந்தைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது) வெளிப்படுத்தியதைப் போன்று வெளிப்படுத்தித் திரியாதீர்கள். மேலும், தொழுகையை நிறைவேற்றுங்கள். ஜகாத்தையும் கொடு(த்து வாரு)ங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (நபியுடைய) வீட்டினரே! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களைவிட்டும் (சகல) அசுத்தத்தைப் போக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவதையும்தான். (அல்குர்ஆன் - சூரத்துல் அஹ்ஜாப் 33:33)
அழகு அலங்காரமும், வாசனைத் திரவியங்களும்
அலங்காரம் செய்து கொண்டு வெளியே செல்வதும் அழகை வெளிக்காட்டும் விஷயமே! தலையையும் உடலையும் மறைத்துக் கொண்டு உதட்டுச்சாயம், கண்மை போன்றவைகளை பூசிக் கொண்டு போவதும் ஹிஜாபில் சேராது. மற்றும் வாசனை திரவியங்களை உபயோகிப்பதும் ஆகுமானதல்ல. ஆனால் வாசனைத் திரவியங்கள் கணவனுடன் மட்டும் இருக்கக்கூடிய நேரங்களில் உபயோகிக்கலாம்;;.
மஸ்ஜிதுகளுக்கு போகும்போது பெண்கள் வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். மேலும் நபி (ஸல்) யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக்கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தை கடந்து செல்கிறாளோ அவள் விபச்சாரி ஆவாள்''என்று கூறினார்கள்.(அறிவிப்பாளர்: அபூ மூஸா (ரலி), ஆதாரம்: அஹ்மது)
சலங்கை மற்றும் மணியோசையுடன் கூடிய நகைகள்
நம்மவரிடையே கொலுசு அணிவது வழக்கம். அதில் வருகின்ற ஓசை அடுத்தவரைக் கவரும், இது தவறு என்று அவர்கள் உணர்வதில்லை. சத்தம் வருகின்ற எந்த விஷயமானாலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நவீன நாகரீக உலகில் செருப்பு, கைச்செயின், கைப்பை, கிளிப் இன்னும் உடைகளிலும் சத்தம் வரும் மணிகள் வைக்கப்படுகின்றன. இவை ஹிஜாபின் ஒழுங்குகளுக்கு எதிரானது. இதையே அல்லாஹ் தனது திருமறையில் கூறும்போது,
மேலும் தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்.. (அல்குர்ஆன் - சூரத்துந்நூர் 24:31)
ஹிஜாபில் இருந்துக் கொண்டு மஹரமல்லாதவரிடம் பேசி சிரித்தல்
சில சகோதரிகள் ஹிஜாபுடன் இருந்து கொண்டு அந்நிய ஆண்களிடம் பேசி சிரிப்பதால்; தவறில்லை என்று நினைக்கின்றனர்;;. ஆனால் அவ்வாறில்லை. நீங்கள் பேசக் கூடிய ஆண் ஒரு ஆலிமாக இருந்தாலும்கூட பேச்சில் நளினம் காட்ட வேண்டாம். அல்லாஹ் திருமறையில் கூறுவதை கவனியுங்கள்:
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல, நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான், இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (சூரத்துல் அஹ்ஜாப் - 33:32)

முக்கியமான தேவைக்காக அன்றி அந்நிய ஆடவரிடம் பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நளினம் கூடாது என்பதால் கடின சித்தமாக பேசலாம் என்பதல்ல. மாறாக சாந்தமாக அதே நேரம் உறுதியான வாக்குகளைக் கொண்டு பேசவேண்டும்.
ஹிஜாப் அணிந்து கொண்டு அந்நிய ஆடவரை பார்த்தலும் ஹிஜாப் அல்ல
அல்லாஹ் உங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டுள்ளான். ஏனெனில், ஒரு பார்வை ஆயிரம் வார்த்தைகளை காட்டிலும் அர்த்தம் மிக்கவை. எனவே இஸ்லாமிய முறைப்படி முழுமையாக நாம் உடையணிந்திருந்தாலும், நமது பார்வைகளை தாழ்த்திக் கொள்வது கொண்டு நமது வெட்கத்தை பேணிக் கொள்ள வேண்டும். இதுவே குழப்பம் ஏற்படாமல் இருக்க வழிவகைச் செய்யும்.
இன்டெர்நெட் மற்றும் தொலைபேசிகளில் உரையாடுவது
மஹரம் அல்லாதவரிடம் உரையாடிக் கொண்டு, 'நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் என்று சொல்வதில் அர்த்தமில்லை. அது இன்டர்நெட் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவோ இருந்தபோதிலும், இவ்வாறான தொடர்புகள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வழி வகுத்துவிடும். எத்தனையோ குடும்பங்கள் வாழ்விழந்ததற்கும், எத்தனையோ இளம் வயது பெண்கள் வீட்டைவிட்டு ஓடிப்போவதற்கும் இவைகள் காரணங்களாக அமைந்திருக்கின்றன. எனவே தான் இஸ்லாம் சொல்கிறது ஹராமுக்கு வழிவகுக்கும் அல்லது துணைபோகும் அனைத்து விஷயங்களும் ஹராமே. அல்லாஹ் கூறுகிறான்:
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள், நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீயவழியாகவும் இருக்கின்றது. (;சூரத்துல் அஃராஃப் - 7:32)
நடையில் கவனம்
பெண்கள் பேஷன் ஷோக்களில் ஒய்யாரமாக நடை நடந்து ஆண்களை கவர்வது போன்ற நடைகளை நடக்கக் கூடாது. கண்ணியமான முறையில் ஒழுக்கத்துடன் இருப்பது தான் மரியாதை. நபி (ஸல்) 'காலை தட்டி நடக்கும் பெண்கள் நரகத்திற்குரியவர்கள்' என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
மஹரமல்லாதவர்களுடன் கை குலுக்குவது
மஹரமல்லாதவர்களுடன் கை குலுக்குவது ஆகுமானதல்ல என்பதும் ஹிஜாபின் ஒரு அம்சமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'உங்களுக்கு அனுமதி இல்லாத பெண்களை தொடுவதைவிட தலையில் இரும்பு ஆணியைக் கொண்டு அடித்தல் சிறந்தது'. (ஆதாரம்: தப்ரானி)
ஆண்கள் பகுதியை தவிர்த்தல்
சில சமயங்கள் பெண்களில் சிலர் பள்ளிகளில் ஆண்கள் பகுதியின் வழியாக நுழைவர் அல்லது அந்த வழிகளில் தனியாக நின்று கொண்டிருப்பர். இது மற்ற ஆண்களுடன் கலந்து நிற்க வழி செய்துவிடும். எங்கும் எப்போதும் பெண்கள் நுழைவுப் பகுதியையே பயன்படுத்த வேண்டும். நபி (ஸல்) 'சாலைகளின் நடுவே நடப்பதற்கு உங்களுக்கு (பெண்களுக்கு )அனுமதியில்லை என்பதால் ஓரமாக செல்லுங்கள்' என்று கூறினார்கள்.(ஆதாரம்: அபூ தாவூது) அல்லாஹ்வின் வீட்டை வலம் வரும் போதும் அந்நிய ஆடவருடன் கலந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும் என நபி (ஸல்) அறிவுறுத்தியுள்ளார்கள்.
பிற சகோதரிகளின் அழகை மறைத்தல்
ஒரு பெண் மற்றொரு பெண்ணின் அழகை தன் கணவனிடமோ அல்லது சகோதரரிடமோ வர்ணிக்கக் கூடாது. சக பெண்ணின் அவயத்தை மறைத்தலும் ஹிஜாபின் அம்சமாகும். நபி (ஸல்) 'ஒரு பெண் மற்றொரு பெண்ணின் அழகை அவளைக் காண்பது போன்று வர்ணிக்கக் கூடாது'' என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
இந்த நிரந்தரமற்ற உலகில், பிறர் நம் அழகை ரசிக்க வேண்டும். நம் ஆடம்பரத்தையும், அலங்காரத்தையும் மெச்சலுடன் பார்க்க வேண்டும் என்று நினைத்து வாழ்ந்தால், நாளை மறுமையில் இறைவன் முன் கை சேதப்பட்டவர்களாக நிற்போம். இந்நிலை நமக்கு வேண்டாம்! அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் அவனது சத்திய மார்க்கத்தை விளங்கி நேரான பாதையில் செல்ல துணைபுரிந்து உன்னத சுவனத்தை நல்குவானாக! ஆமீன்!!!
(ஆக்கம்: சகோதரி அஸ்மா பின்த் ஷமீம்)
தமிழில் : உம்மு உபைத்
 

10:04 PM | தலைப்பு: , , | Read More »

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added