உணவும் ஆரோக்கியமும்
இறைவனின் படைப்பினங்களில் மிகவும் உன்னதமான படைப்பு மனிதஇனம்;. இவ்வினம் உலகில் உயிர்வாழ மிக முக்கியமானது உணவு. நம்மில் பலர் அந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும் எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பதைப்பற்றியெல்லாம் சிந்திப்பதே இல்லை. பார்ப்பதை எல்லாம் பருகவேண்டும் கிடைப்பதை எல்லாம் உண்ண வேண்டும் என்ற ஆசையில் வாழும் மனிதர்களைத்தான் காணமுடிகிறது. ஆசைக்கு அளவில்லைதான். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சல்லவா?. பணத்தைக் கொடுத்து உணவை மட்டுமல்ல, நோயையும் அல்லவா விலைக்கு வாங்குகின்றனர். வயிறு புடைக்க உண்டு ஜீரணிக்கமுடியாமல் திண்டாடுபவர்களும் உண்டு. வாழ்வதற்காகத்தான் உண்ண வேண்டுமே தவிர உண்பதற்காக வாழ்க்கை அல்ல. 'நொறுங்க தின்றால்; நூறு வயது' என்ற முன்னோர்களின் கூற்றை தவறாக புரிந்துகொண்டு எப்பொழுதும் நெறுக்குத்தீனிகளை திண்றுகொண்டிருக்கின்றனர். 'ஆதத்தின் மகன் வயிற்றை விட மோசமான ஒரு பாத்திரத்தை நிரப்புவதில்லை' என்பது நபிமொழி. பலநோய்கள் அதிகமாக உண்பதனாலேயே ஏற்படுகிறது. உணவு விஷயத்தில் ஒருசில கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.
1.தேர்ந்தெடுத்தல்.
உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்;. அல்லாஹ் தனது திருமறையில் மனிதர்களே பூமியிலுள்ள பொருட்களில் அணுமதிக்கப்பட்டவற்றையும் பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள். ஆல்குர்ஆன் (2:168) இப்போது பிரபலமடைந்து வரும் விரைவு உணவுகள் ஜகயளவ கழழனஸ நாவிற்கு சுவை தந்தாலும் நோயை வரவழைக்க கூடியவை. இதுபோன்ற உணவுகளை குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க வேண்டும்.
2.அளவுகோல்.
பசி ஏற்படக்கூடிய நேரத்தில் வயிற்றுக்கு எந்த அளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ண வேண்டும். நபி(ஸல்)அவர்களின் அறிவுரைப்படி வயிற்றின் நான்கில் இரு பகுதியை உணவிற்கும் ஒருபகுதி நீருக்கும் ஒருபகுதியை வெற்றிடமாகவும் விட்டு விட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான உடலை நம்மால் பெறமுடியும்.
3.நேரம்.
நினைத்த நேரமெல்லாம் அல்லது கிடைத்த நேரமெல்லாம் சாப்பிட்டுக்கொண்டு இருக்காமல் சாப்பிடுவதற்கு என்று நேரம் குறிப்பிட்டு அந்த நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் நீ விரும்பும் போதெல்லாம் உணவு உண்பது வீண்விரயமாகும்.(தப்ரானி) காலை உணவை தவிர்;த்தல் கூடாது. இரவு உணவை தாமதப்படுத்தவும் கூடாது. சத்தான ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணும்போது நம் உடலை தெம்போடும் நோய்கள் அண்டாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம். இஸ்லாம் ஆரோக்கியம் பேணப்படுவதன் முக்கியத்தை வலியுறுத்திக் கூறுகிறது. நபி(ஸல்)அவர்கள், இவ்வுலகில் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட அருட்கொடைகளில் முக்கியமானவைகளாக குறிப்பிடும் போது ஆரோக்கியமும் ஓய்வும் என கூறினார்கள். மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் உணவை உண்பதை பற்றி குறிப்பிடும் திருமறை குர்ஆன் அத்தோடு ஒரு விஷயத்தையும் வலியுறுத்துகிறது.
உண்ணுங்கள் பருகுங்கள், எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து வீண்விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்;ஆன் 07 : 31)
இந்த வசனம் ஒரு உண்மையை நமக்கு உணர்த்துகிறது. இஸ்லாமிய உம்மத்தின் ஒரு பகுதியினர் அளவு கடந்து உணவை உண்டு பெரும்பகுதி உணவை வீணடித்து ஆரோக்கியம் இழந்து நிற்கின்றனர்.மற்றொரு பகுதியினரோ உண்ண உணவின்றி பட்டினியின் காரணமாக ஆரோக்கியம் இழந்து நிற்கின்றனர்.இந்நிலை மாற்றப்படவேண்டும்.
இன்று நமது சமூகத்தில் விருந்து என்ற பெயரால் அனாச்சாரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஏழைகள் புறக்கனிக்ப்பட்டு பணம்படைத்தோர் மட்டுமே விருந்துக்கு அழைக்கப்படுகின்றனர். இதுவே மோசமான விருந்து என அண்ணலார் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். இன்று நம் சமுதாய மக்கள் எத்தனையே பேர் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி இருக்க இடமின்றி கண்ணீருடன் வாழ்வதை காண்கிறோம்;;. அவர்கள் துயர் துடைத்து, வாழ்வாதாரங்கள் ஏற்படுத்தி கொடுக்க என்ன முயற்சி எடுத்தோம் எப்படி செயலாற்றினோம் என்பற்கு இறைவனிடம் விடையளிக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சரியான நேரத்தில் உடலுக்கு வலுவூட்டும் உணவை உண்டு நம்முடைய ஆரோக்கியம் பேணும் அதேநேரம் முஸ்லிம் சமூகத்தில் பசியுடன் இருக்கும் தன் சகோதரனுக்கும் ஈன்றுதவி அவர்களின் ஆரோக்கியத்தையும் பேணும்போதுதான் சக்தியுள்ள ஒரு உம்மத் இந்த பூமியில் கட்டி எழுப்பப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆக்கம் - உம்மு அன்ஃபால்.
