சிறுநீரகக்கற்களை கரைக்கும் உணவுகள்...


இன்றைய காலத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிலும் அந்த சிறுநீரகக் கல் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்ய வேண்டும். அதிலும் கற்களின் அளவு 5 மிமி குறைவாக இருந்தால் அதனை கண்டிப்பாக வீட்டில் இருக்கும் ஒரு சில உணவுகளின் மூலமே சரிசெய்துவிடலாம். இல்லையென்றால் லாப்ரோஸ்கோப்பி என்ற சிகிச்சையின் மூலமே நீக்க முடியும். மேலும் சிலருக்கு அந்த கற்களின் காரணமாக வயிற்றில் அடிக்கடி வலியானது ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக அதனை கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு அதனை ஈஸியாக வீட்டில் இருக்கும் ஒருசில உணவுகளை வைத்து கரைக்கலாம். அத்தகைய உணவுகள் என்னவென்று மருத்துவர்கள் பட்டிலிட்டுள்ளனர்.
சிறுநீரகக்கற்களை கரைக்கும் உணவுகள்...
* தண்ணீர் : அனைவருக்குமே சிறுநீரகக்கல் போதிய தண்ணீரானது உடலில் இல்லாத காரணத்தினாலே வருகிறதென்று நன்கு தெரியும். ஆகவே எப்போது கற்கள் உடலில் இருக்கிறதென்று தெரிககிறதோ, அன்றிலிருந்து ஒரு நாளைக்கு 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க ஆரம்பிக்க வேண்டும். இதுவே ஒரு சிறந்த எளிதான வழியாகும்.
* வெந்தய தண்ணீர் : ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் படுக்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீரகக்கற்கள் கரைவதோடு மட்டுமல்லாமல், உடலில் இருக்கும் டாக்ஸின்களும் வெளியேறுகின்றன.
* டால் மிஸ்ரி : இது ஒரு புதுவிதமான படிகமாக்கப்பட்ட சர்க்கரை கட்டிகள். இந்த சர்க்கரைக் கட்டிகள் பனை மரத்திலிருந்து செய்யப்படுகிறது. இந்த பொருள் கிடைப்பது சற்று கடினம் தான். ஆனால் அதன் பலன் மிகவும் உயர்ந்தது. இது சிறுநீரகக்கற்களை கரைக்கும் ஒரு சிறந்த பொருள். ஆகவே அதனை இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை குடிக்க வேண்டும். முக்கியமாக அந்த கட்டிகள் தண்ணீரில் நன்கு கரைந்திருக்க வேண்டும்.
* வாழைத்தண்டு : சமையலில் பயன்படும் வாழைத்தண்டுகளை வாரத்திற்கு ஒரு முறை சமைத்து உண்டால், சிறுநீரகக்கற்கள் வராமல் இருக்கும். அதுவே கற்கள் இருப்பவர்கள், அதனை தினமும் ஜூஸ் போட்டு குடித்தால், கற்கள் விரைவில் கரைந்துவிடும். ஏனெனில் அதில் அதிகமான அளவு நார்ச்சத்தானது இருக்கிறது. மேலும் அதில் நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது.
* கொத்தமல்லி இலைகள் : கொத்தமல்லி ஒரு சிறந்த மூலிகைப் செடி. இதில் பல வித நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் அந்த கொத்தமல்லியை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும். இதனால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
எனவே சிறுநீரகக்கற்களை நீண்ட நாட்கள் வைத்து, அதனால் அறுவை சிகிச்சை செய்யுமளவு கொண்டு செல்லாமல், வீட்டிலேயே தினமும் அதற்கான உணவுகளை சரியாக உண்டு வந்தாலே, கற்கள் கரைந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

12:31 PM | தலைப்பு: , , | Read More »

பூச்சிமருந்தில் ஆல்கஹாலா ...!


கோக கோலா மற்றும் பெப்சி குளிர்பானங்களில் பல்லி மிதக்கும், மூடி கிடக்கும், பூச்சி இருக்கும் என்பதெல்லாம் போய் இப்போது அதில் ஆல்கஹாலும் கலந்திருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஒரு லிட்டர் பாட்டிலில் 10 மில்லிகிராம் அளவுக்கே இது இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரான்ஸைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. இதற்காக 19 விதம் விதமான கோக் பாட்டில்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் பத்து பாட்டில்களில் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் ஒவ்வொரு ஒரு லிட்டர் பாட்டிலிலும் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலந்திருப்பதாக தெரிய வந்தது. இதேபோல பெப்சியிலும் ஆல்கஹால் இருக்கிறதாம்.
இதுகுறித்து கோக கோலாவின் பிரான்ஸ் பிரிவு அறிவியல் இயக்குநர் மைக்கேல் பெபின் கூறுகையில், கோக்கில் ஆல்கஹால் கலந்திருக்கிறது என்பதில் ஓரளவு உண்மைதான். இருப்பினும் இது மிக மிக மென்மையான அளவில்தான் இருக்கும்.
ஆனால் இதை வைத்து கோக்கை மது பானம் என்று கூறி விட முடியாது. இது மென் குளிர்பானம்தான். இந்த குளி்ர்பானத்தை அருந்தலாம் என்று பாரீஸைச் சேர்ந்த இஸ்லாமிய மசூதி ஒன்று சான்றிதழ் அளித்துள்ளது.
பெப்சி நிறுவனமும் இதேபோல இத்தகைய குளிர்பானங்களில் மிக மிக சிறிய அளவில் ஆல்கஹால் கலந்திருக்கும் என்பதை ஒத்துக் கொண்டுள்ளது.
கோக் 1886ம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. ஆரம்பத்தில் இதை தலைவலி, ஆண்மைக் குறைவுக்கான மருந்தாக பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோக்கில் பெரிய அளவில் ஆல்கஹால் இல்லை என்று கூறப்பட்டாலும் கூட மது அருந்துவதை தடை செய்யும் இஸ்லாமிய நாடுகளில் இனி கோக்குக்கு எதிர்ப்பு கிளம்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது....!அரபிகளுக்கு பேரிச்சை இல்லாட்டியும் பெப்சி வேணுமே...:-)

3:23 PM | தலைப்பு: , , | Read More »

தமிழகத்தில் உலா வரும் 2,000 போலி "டாக்டர்கள்': இந்திய மருத்துவ சங்க ஆய்வில் அதிர்ச்சி தகவல்


சென்னை : தமிழகம் முழுவதும், 2,000க்கும் மேற்பட்ட போலி சித்த மருத்துவர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சித்த மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டதாக, போலி சான்றிதழை வைத்துக் கொண்டு, சித்த மருத்துவம் தொடர்பாக, எவ்வித பட்டமோ, தகுதியோ பெறாமல், 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் இருப்பதாகவும், பாரம்பரிய மருத்துவ முறை மூலம் சிகிச்சை அளிக்கும் அறிவு இருப்பதாகவும் கூறி, கவுன்சிலின், "பி, சி' சான்றிதழ் மற்றும் டாக்டர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு, பலர் சிகிச்சை அளித்து வருகின்றனர். பதிவு:இவர்களது சான்றிதழ்களில், ஓய்வு பெற்ற பதிவாளர்களின் கையெழுத்துகள் இடம்பெற்றுள்ளன. அதனால், இந்திய மருத்துவ முறை மருத்துவர்களுக்கான கூட்டுறவு மருந்தகம் மற்றும் கடைகளுக்கான அமைப்பு (இம்ப்காப்ஸ்), இவர்களது சான்றிதழ்களை பதிவு செய்து கொண்டு, சிகிச்சையளிக்க அனுமதித்து வருகிறது.ஆனால், இந்த சான்றிதழ்கள் முழுக்க முழுக்க போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டவர்களில், 2,000 போலி டாக்டர்கள் இருப்பதாக, மாநில சித்த மருத்துவக் கவுன்சிலுக்கும், "இம்ப்காப்ஸ்'க்கும் கடந்த 2010ம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், அவர்கள் தொடர்ந்து சிகிச்சையளிக்க அனுமதிக்கப்படும் நிலை நீடிக்கிறது. சட்டம் அமல்: "பி, சி' மற்றும் பட்டியல் அடிப்படையில் பணிபுரியும் சித்த மருத்துவர்கள், பாரம்பரிய மற்றும் கிராமப்புறங்களில் சட்டப்பூர்வமாக பணிபுரிவதற்காக, தமிழ்நாடு சித்த மருத்துவ முறை சட்டம், 1997ல் அமல்படுத்தப்பட்டது.ஆனால் இந்த முறை, 2002ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டது. அதனால், இந்த முறையிலான மருத்துவர்கள், 60 வயதை அடைந்தவர்களாகத் தான் இருக்க முடியும். ஆனால், 30 வயது நிரம்பிய பலர் தற்போது இந்த முறை மூலம் சித்த மருத்துவச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்த போலி சான்றிதழ்கள், 1997 மற்றும் 1998ம் ஆண்டுகளில் பெறப்பட்டது போல் முன்தேதியிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில், 4,000 முதல் 8,000 வரை என்ற வரிசை எண்படி பெறப்பட்ட இந்த சான்றிதழ்களில் அச்சிடப்பட்டுள்ள எழுத்துக்கள், முத்திரைகள் வேறுபட்டுள்ளன.மேலும், 30 முதல் 40 வயது நிரம்பியவர்கள், "பி, சி' சான்றிதழ்களுடன் சிகிச்சை அளித்து வருவதே முதலில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து, மாநில சித்த மருத்துவக் கவுன்சிலிடம் புகார் செய்யப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், 2,000 சான்றிதழ்களில் 400 போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிராகரிப்பு:இது குறித்து, இந்திய சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்கத்தினர், தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கும், மாநகர போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்துள்ளனர். இது குறித்து, "இம்ப்காப்ஸ்' தலைவர் ராமலிங்கம் கூறுகையில், ""சமீபத்தில் 1,000 போலி சான்றிதழ்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. போலி சான்றிதழ் புழக்கத்தில் இருப்பது தெரியவந்தவுடன், பல உறுப்பினர்களின் பதிவு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல், புதுப்பித்தலும் நிறுத்தி வைக்கப்பட்டது. போலி சான்றிதழ் குறித்து மாநில சித்த மருத்துவக் கவுன்சிலுக்கும், இந்திய மருத்துவ முறைக்காக மத்திய குழுவுக்கும் சான்றிதழ்கள் அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகே பதிவு செய்யப்படுகிறது,'' என்றார். இதற்கிடையில், கடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களை, "இம்ப்காப்ஸ்' சித்த மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்பி சோதனை செய்தது. இதில், 115 சான்றிதழ்கள் போலி என்பது கண்டறியப்பட்டது. "இம்ப்காப்ஸ்' இயக்குனர்கள் கூட்டத்தில் இந்த 115 சான்றிதழ்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டம் என்ன சொல்கிறது :தமிழ்நாடு சித்த மருத்துவக் குழு சட்டத்தில் கூறியிருப்பதாவது: * இந்திய மருத்துவ முறைக்கான மத்திய வாரியம், இந்திய மருத்துவ முறைக்கான சென்னை அல்லது தமிழ்நாடு வாரியம் ஆகியவை, இந்திய மருத்துவ முறையில் பாரம்பரிய அல்லது மரபுரிமை அடிப்படையில் பயிற்சி பெற்ற சித்த மருத்துவர்களுக்கு சான்றிதழ் அளிக்கலாம். * 1970ம் ஆண்டு இந்திய மருத்துவ முறை மத்தியக் குழு சட்டத்தின் படி, அனுபவ அடிப்படையில் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு, சான்றிதழ் அளிக்கலாம். * நிறுவனம் சாராமல் பயிற்சி பெற்றவர்களுக்கு, வாய்மொழித் தேர்வு மூலம் சான்றிதழ் அளிக்கலாம்.

1:35 PM | தலைப்பு: , , | Read More »

பற்பசையின் பாதகங்கள்..!,பார்த்து துலக்குங்கள்...!



டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !
நமது ஒவ்வொரு நாளும் டூஸ் பேஸ்டில் இருந்துதான் துவங்குகிறது. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதிஎன்ற பழமொழிக்கேற்ப முன்பெல்லாம் நமது முன்னோர்கள் ஆலங்குச்சியையும், வேப்பங்குச்சியையும் பல்துலக்க பயன்படுத்தினர். உமிக்கரி, உப்பு, இடித்த மிளகு சேர்த்து பல் தேய்த்த காலமும் உண்டு. 
ஆனால், இன்று அதிகாலையின் சுறுசுறுப்பை நம்மில் முதலில் விதைப்பது நறுமணம் கவழும் டூஸ் பேஸ்டுகளாகும். டூஸ் பேஸ்ட் இல்லாத ஒரு வாழ்க்கையைக் குறித்து நம்மால் சிந்திக்க கூட முடிவதில்லை. சுகந்தமான சுவாசத்திற்கும், வலுவான பற்களுக்கும் நம்மில் பெரும்பாலோர் டூஸ் பேஸ்டுகளையே நம்பியுள்ளனர். ப்ரஸ் மற்றும் டூத் பேஸ்டுகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் இன்றைய காலக்கட்டத்தில் செலவிடப்படுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்த ஏராளமான டூஸ் பேஸ்டுகளும், ப்ரஸ்ஸுகளும் நமது சந்தையை ஆக்கிரமித்துள்ளன.

மினி ஸ்க்ரீனில் தொடர்ந்து காட்டப்படும் டூத் ப்ரஸ், பேஸ்ட் விளம்பரங்கள் நம்மை வலுக்கட்டாயமாக வாங்கத் தூண்டுகின்றன. பற்கள் மற்றும் ஈறுகள் பலம் பெற என ஒரு விளம்பரம், சுகந்தமான சுவாசத்திற்க்கு இன்னொரு விளம்பரம், பற்கள் பளீரிட மற்றொரு விளம்பரம் என விளம்பரங்கள் அளிக்கும் வாக்குறுதிகளால் அடிக்கடி நாம் ப்ராண்டுகளையும் மாற்றி வருகிறோம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலவே தான் டூத் பேஸ்டும். நீங்கள் விளம்பரங்களில் காண்பதுபோல ப்ரஸ் முழுக்க பேஸ்டை நிரப்பிவிட்டா பல் துலக்குகின்றீர்கள்? அவ்வாறெனில் நீங்கள் உங்கள் பற்களுக்கு தீங்கிழைக்கின்றீர்கள் என்பதுதான் உண்மை. காரணம் ஃப்ளோரைடும், இதர இரசாயனப் பொருட்களும் கலந்த டூத் பேஸ்டை ப்ரஸ்ஸில் ஒரு பட்டாணி அளவுக்கு எடுத்தாலே போதுமானது. இவ்விடத்தில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில் டூத் பேஸ்டின் அளவில் அல்ல, மாறாக எவ்வாறு பேஸ்டை உபயோகின்றீர்கள் என்பதாகும்.

விளம்பரங்கள் உங்களை வழி தவறச் செய்துவிடும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் நல்லது.

ஃப்ளோரைடு

ப்ளோரைடு கலந்த பற்பசைகளை பயன்படுத்துமாறு பல் மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். நாம் வசிக்கும் இடத் தைப் பொறுத்தும், நாம் அருந்தும் நீரில் கலந்துள்ள ப்ளோரைடின் அளவைப் பொறுத்தும் இந்த அறிவுரை மாறுபடுகிறது.

ப்ளோரைடு இயற்கையாகவே கிடைக்கின்ற ஒன்று. அது நமது பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது. பல சோதனைகளில், ப்ளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்கு பற்குழி விழுவது குறைகிறது அல்லது தவிர்க்கப்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் அளவுக்கு அதிகமான ப்ளோரைடு உபயோகம் பற்களுக்கு ஊறு விளைவிக்கும். அது மட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

1997-ம் ஆண்டின் மத்தியிலிருந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) ப்ளோரைடு கலந்த பற்பசைகளில் கீழ்க்கண்ட எச்சரிக்கையை அச்சிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

“WARNINGS: Keep out of reach of children under 6 years of age. If you accidentally swallow more than used for brushing, seek PROFESSIONAL HELP or contact a POISON CONTROL center immediately.”

ஒரு முறை பல் துலக்குவதற்கு வேண்டிய அளவை விட அதிகமான பற்பசையை உட்கொண்டாலே உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் அல்லது, விஷமுறிவு மையத்தை நாடவும் என்ற எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

அதிக அளவு ப்ளோரைடு உபயோகம் ப்ளூரோசிஸ் என்ற பல்சிதைவு ஏற்பட காரணமாகிறது. மேலும் குழந்தைகளுக்கு பற்கள் விழுந்து முளைக்கும் சமயத்தில் அதிக அளவு ப்ளோரைடு உபயோகித்தால் பற்களில் வெள்ளைத் திட்டுக்கள் விழக் கூடும்.

பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் 1000ppm அளவிற்கு மிகாமலும், சிறுவர்களுக்குக்கான பற்பசையில் 500ppm அளவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ப்ளோரைடு பற்பசையினை உபயோகிக்கும் பொழுது ஒரு பட்டானி அளவிற்கு மட்டுமே எடுத்துக் கொண்டு பல்துலக்க வேண்டும் என்று பல் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

ப்ளோரைடு பற்பசை உபயோகிக்கும் பொழுது அது தொண்டைக்குள் செல்லாமல் துப்பி விடுவது நல்லது. சிறுவர்களுக்கு பிடித்தமான சுவைகளில் பற்பசைகள் தயாரிக்கப்படுவதால் சிறுவர்கள் இதனை விழுங்காமல் பார்த்துக் கொள்வது கடினம்.

ப்ளோரைடு கலவையை நேரடியாக உட்கொண்டால் விஷம் தான். ஆனால் பற்களிலும், எலும்புகளிலும் ப்ளோரைடு கலந்திருக்கிறது. இது பற்களை வலுவானதாக ஆக்குகிறது.

பூமியில் இயற்கையாக கிடைப்பது கால்சியம் ப்ளோரைடு என்ற தாது உப்பு வடிவில் உள்ளது. ஆனால் பற்பசையில் கலக்கப்படும் ப்ளோரைடு இந்த வகையில் இல்லை. சோடியம் ப்ளோரைடு அல்லது ப்ளூரோசாலிசிக் அமிலம் பற்பசையில் உபயோகிக்கப்படுகிறது. இவை அலுமினியத் தொழிற்சாலைகளில் விஷக் கழிவுகளாக வெளியேறுபவை. இவை எலி பாஷாணத்திலும், பூச்சி மருந்திலும் உபயோகப் படுத்தப்படுகிறது. இவைகளையே ப்ளோரைடு தேவைக்காக பற்பசையில் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்து வல்லுநர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ப்ளோரைடு நல்லதா கெட்டதா என்று காரசாரமாக விவாதிக்க இரண்டு புறமும் வல்லுநர் அணிகள் இருக்கிறார்கள்.

ப்ளோரைடு பற்பசை நல்லதே என்று கூறும் வெப் தளங்கள்:


ப்ளோரைடு பற்பசை மிக ஆபத்தானது என்று கூறும் வெப் தளங்கள்:


ப்ளோரைடு பற்றிய பக்க விளைவுகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக ப்ளோரைடு செயல் கூட்டணி’ (Fluoride Action Network) என்ற அமைப்பு செயல்படுகிறது. http://www.fluoridealert.org/

தற்போது ப்ளோரைடு கலவாத பற்பசைகளே இல்லை என்ற நிலை உள்ளது. சில ஆயுர்வேத பற்பசைகளும், இயற்கை மூலிகை பற்பசைகளுமே ப்ளோரைடு கலவாத பற்பசைகளாக உள்ளது.

பற்பசைகளில் ப்ளோரைடு உள்ளதா என எப்படி அறிவது?

பற்பசை பெட்டியிலும் ட்யூபிலும், சிறிய எழுத்துக்களில் ‘FOAMING FLUORIDATED TOOTHPASTE’ என்று எழுதப்பட்டிருக்கும். மேலும், ‘ contains 1000PPM of available fluoride’ என்றும் எழுதப்பட்டிருக்கும்.

டூத் பேஸ்டில் இதர சேர்மானங்கள்

*பற்களை பாலிஷ் செய்யவும், சுத்தப்படுத்துவதற்குமான Abrasives

*நுரையை உருவாக்கும் டிடர்ஜெண்டுகள்

*ஈரப்பதத்தை தக்கவைக்கும் humectant

*நீண்டகாலம் கெடாமலிருக்க preservatives

*நிறத்தை அளிக்கும் கலர்கள்

*சுவை அளிக்கும் flavours

*நறுமணத்தை வழங்கும் fragrance

*கால்ஸியம்

*பாஸ்பரஸ்

* மெக்னீசியம்

*வைட்டமின் டி

பல்தேய்க்க எவ்வளவு பேஸ்ட் தேவை?

முன்பு குறிப்பிட்டதைப்போலவே ஒரு பட்டாணி அளவு பேஸ்ட் போதுமானது. அதுபோலவே பலரும் அரைமணி நேரம் பல் தேய்ப்பதில் செலவழிக்கின்றனர். இது வீணானது. நேரத்தையும் கொலைச் செய்வதாகும். ஆகவே 2 அல்லது 3 நிமிடங்களே போதுமானது. காலையில் உபயோகிக்கும் பேஸ்டின் அளவை விட இரவில் சற்று அதிகம் உபயோகிக்கலாம். ஏனெனில் காலையில் பற்களை அழகாக்கவும், இரவில் அழுக்குகளைப் போக்கவும் பற்களை துலக்குகிறோம். ஒவ்வொருவரின் வயதைப் பொறுத்து பேஸ்டின் அளவு மாறுபடும். குழந்தைகளுக்கு பெரியவர் பயன்படுத்துவதை விட குறைந்த அளவு பயன்படுத்தினால் போதும். கூடுதல் நேரம் பற்களை துலக்குவதால் பற்கள் பளிச்சிடாது.

பேஸ்டில் பிரச்சனைகள்

டூத் பேஸ்டில் அடங்கியிருக்கும் சேர்மானங்களை குறித்து மேலேக் கண்டோம். இவற்றில் பல இரசாயனங்கள் கலந்தவையாகும்.

உதாரணமாக நுரை வருவதற்கு சேர்க்கப்படும் டிடர்ஜெண்ட், நிறத்தை அளிக்கும் கலர்கள் ஆகியவற்றை அதிகமாக உபயோகிப்பதால் பற்களின் எனாமல் இழந்துபோகும். மேலும் பற்கள் கூசவோ அல்லது புளிப்புத்தன்மையை உணரவோ செய்யும். இதன் மூலம் சிறியவயதிலேயே பற்களுக்கு பாதிப்பு உருவாகும்.

சரி இனி மேல் பேஸ்ட் வாங்கும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டியவை!

1.வண்ண நிறங்களை கொண்ட பேஸ்டை விட வெள்ளை நிறத்திலான பேஸ்டை வாங்குங்கள்!

2.ஃப்ளோரைடு குறைந்த பேஸ்டை தேர்வுச்செய்யுங்கள்

3.குழந்தைகளுக்காக வாங்கும் பேஸ்டில் ஃப்ளோரைடு இல்லை என்பதை உறுதிச் செய்யவும்.

4.ஜெல் பேஸ்டுகள் பற்களின் தேய்மானத்திற்கு காரணமாகும் என்பதால் க்ரீம் பேஸ்டுகளே நல்லது.

5.பற்கள் சொத்தையாக காரணமாகும் இரசாயனங்கள் அடங்கியதுதான் அப்ரேஸிவ். ஆகவே இதன் அளவு குறைந்த பேஸ்டை வாங்குங்கள்.

6.சோடியம் லாரைல், சோடியம் லாரேத், பேக்கிங் சோடா, பெராக்ஸைட் ஆகியன அடங்கிய பேஸ்டுகளை தவிருங்கள்.

4:19 PM | தலைப்பு: , , | Read More »

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added