|

டில்லியில் 5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் நியாயம் வேண்டி வலுக்கிறது போராட்டம்

டில்லி: இரண்டு நாட்களாக தொடர்ந்து கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட 5 வயது சிறுமி மீட்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கடந்த வெள்ளியன்று டில்லி எய்ம்ஸ்(AIIMS)மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி பேச்சுமூச்சற்று தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் D.K.சர்மா தெரிவித்தார்.

சிறுமியை கற்பழித்த குற்றவாளி மனோஜ்குமார் பீஹாரின் முஜப்பர்பூர் என்ற கிராமத்தில் ஒளிந்திருந்த நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டான். அவனுக்கு வயது 22.

பாலியல் பயங்கரவாதி மனோஜ்குமார்
டில்லி காந்திநகரில் உள்ள, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் வசித்து வருகிற அதே அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் குடியிருந்த குற்றவாளி மனோஜ், சிறுமியை கடந்த 15ம் தேதி கடத்தி தன் வீட்டிலேயே இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் கூட இன்றி அடைத்து வைத்திருந்ததாக காவல்துறை தகவல் தெரிவிக்கின்றன. மேலும் அவர்கள் கூறுகையில், சிறுமி இரண்டு நாட்களாக தொடர்ந்து கற்பழிக்கப்பட்டும், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டும் உள்ள நிலையில் சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு தேடிவந்த அவளின் குடும்பத்தினர் புதன் கிழமையன்று சிறுமியையை மீட்டனர்.

மனோஜ்குமார் கைது செய்யப்பட்ட பின் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட பொழுது, மூன்று நாளைக்குள் டில்லி காவல்துறையின் வசம் குற்றவாளி ஒப்படைக்கப்பட வேண்டுமென்று பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் மருத்துவர்கள் கூறுகையில் 200மி.லி ஹேர் ஆயில் பாட்டில் மற்றும் மெழுகுவர்த்தி துண்டுகள் ஆகியவை சிறுமியின் பிறப்புறுப்பிலிருந்து அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே, சிறுமிக்கு இழைந்த கொடுமையைக் கண்டித்தும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டியும் போரட்டகாரர்களும் பொதுமக்களும் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் முன்பாகவும் டில்லி காவல்துறை தலைமையகத்தின் முன்பாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் போரட்டத்தைக் கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பதிவு செய்தவர் Eshack on 7:30 PM. தலைப்பு , , , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added