|

தங்க குணம் படைத்தவன் - ஸூகர் சர்னயெவ்

2011 ஆம் ஆண்டு மே மாதம்  காம்பிரிட்ஜ் நகரத்தின் சார்பாக தனது உயர் கல்விக்காக 2500 டாலர் ஊக்கத்தொகையாக பெற்ற 19 வயதே நிறைந்த இந்த மாணவனை தீவிரவாத குற்றம் சாட்டி கைது செய்திருக்கிறது போஸ்டன் காவல் துறை. இந்த மாணவனின் பெயர் ஸூகர் சர்னயெவ்.

போஸ்டன் குண்டுவெடிப்பை தொடர்ந்து கண்காணிப்பு காமெராவில் பதிவு செய்யப்பட்ட தரம் குறைந்த புகைப்படங்கள்  வெளியானதும் ரஷ்யாவின் செச்ன்யா பகுதியிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பத்தில் பிறந்த அண்ணன் தம்பிகள் (ஸூகர் சர்னயெவ் மற்றும் அவரது மூத்த சகோதரர் டாமர்லென்) அமெரிக்க அரசால்  தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.  இதில் சர்னயெவின் மூத்த சகோதரர் தேடுதல் வேட்டையில் நடத்த துப்பாக்கிச் சண்டையில்(?) போலீசாரால் சுட்டுக் கொல்லபட்டார்.

தற்பொழுது போலீசார் கைது செய்த 19 வயதே நிரம்பிய ஸூகர்  சர்னயெவ் குறித்த  வதந்திகள் ஊடகங்களில் வந்ததும் இவரை அறிந்தவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இவரது தந்தை அன்ஸூர் இவரை குறித்து ”தி அசோசியேட் பிரஸ்” (The Associated Press) க்கு தொலைபேசி மூலம் கூறுகையில் "எனது மகன்  இரண்டாம் வருட மருத்துவ மாணவன், அவன் மிகவும் புத்தி கூர்மை வாய்ந்தவன், அவனை இந்த விடுமுறைக்கு எங்களை காண வருவான் என்று எதிர் பார்த்தோம் " என்று கூறினார்

மேலும் தன்  மகன்கள் அப்பாவிகள் என்றும் அரசு அவர்களை திட்டமிட்டு இந்த குண்டு வெடிப்பில் குற்றவாளிகளாக்கி உள்ளது என்று கூறினார். தனது மூத்த மகனை போலீசார் கொன்று விட்டனர் தன் மற்றொரு மகனையும் போலீசார் கொலை செய்து விட்டால் இது திட்டமிட்ட சதியே என்று உறுதியாகிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். இவர்களை குறித்து இவர்களின் தாயார் தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் "எனது மகன்கள் இருவரும் நிரபராதிகள், அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் என்றும் இது ஒரு சதி என்றும் கூறினார். மேலும் FBI  அதிகாரிகள் தனது மகனை மூன்று வருடங்களாக தொடர்ந்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

ஒரு ரஷ்ய சமூக வலை தளத்தில் உள்ள ஸூகரின் பக்கத்தில் அவர் கேம்பிரிஜ் ரின்டே மற்றும் லத்தின் பள்ளியில் பயின்று 2011 இல் தேர்ச்சி பெற்றதாக குறிபிடப்பட்டுள்ளது. அதே வருடம் தனது மேல்படிப்பிற்க்காக அவர் 2500 டாலர் ஊக்கத்தொகையும்  பெற்றுள்ளார். அந்த சமூக வலை தள பக்கத்தில் அவர் செச்ன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய  மொழி பேசுபவர் என்றும், தனது மீதான உலகத்தின் பார்வைக்கு இஸ்லாம் தான் காரணம் (இது தான் தற்பொழுது அமெரிக்க அரசாங்கம் இவரை தீவிரவாதி ஆக்கியதன் முதன்மை காரணம்) என்றும், தனது தனிப்பட்ட இலக்கு தொழில் மற்றும் பணம் என்றும் குறிபிட்டுள்ளார்.


போஸ்டன் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பின் ஸூகர் சர்னயெவ் தனது @J_ tsar என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் "Ain't no love in the heart of the city, stay safe people" (நகரத்தின் இதயத்தில் அன்பு இல்லை, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்) என்று பதிந்துள்ளார். உலக வரலாற்றில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட தீவிரவாதி(?) இவராகத்தான் இருக்க முடியும்.


இவரை போஸ்டன் குண்டு வெடிப்பிற்காக போலீசார் கைது செய்துள்ளனர் என்று அறிந்ததும் அவரை அறிந்த பலர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 
அந்த வானொலி நிகழ்ச்சிக்கு தொலைபேசி அழைப்பில் பேசிய ஸூகர் இன் சமூகவியல் ஆசிரியர் ஸூகர் பற்றி கூறும்பொழுது "தங்க குணம் படைத்தவன் என்றும் அவன் மொத்தமாகவே ஒரு சிறந்த சிறுவன் " என்று கூறியுள்ளார். ஸூகர் இன் மூத்த சகோதரர் டாமர்லென் குத்து சண்டை வீராவார். இவரை குறித்து வேறொரு நாடு விசாரணைக்காக கோரிக்கை விடுத்ததை அடுத்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் FBI  விசாரணை செய்தது என்று கூறியுள்ளார். இந்த விசாரணையில் டாமர்லென்  இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றுபவராகவும், ஐவேளை சரியாக தொழுபராகவும் 2010இல் இருந்து அவரது போக்கில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அதன் பின்னர் அமெரிக்காவிலிருந்து விசாரணைக்கு கோரிய நாட்டிற்கு செல்ல முற்பட்டதால் இந்த விசாரணையை அந்நாடு கோரியதாகவும் FBI தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் இவரை விசாரிக்க கோரிய நாடு (இஸ்ரேல்?)

இவர் ஒரு அமெரிக்க  பெண்ணை திருமணம் முடித்து இவர்களுக்கு மூன்று வயது மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிட தக்கது. இந்த குண்டு வெடிப்பே அரசாங்கம் நடத்தியதுதான் என்று பலர் நம்பி வரும் வேளையில், ஸூகர் சகோதரர்களுக்கு எதிராக அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதும் அவர்கள் இஸ்லாத்தை பின்பற்றி வாழ்ந்தார்கள் என்பதையும் தவிர வேறு எந்த ஒரு சிறு ஆதாரத்தையும் அதிகாரிகள் முன் வைக்க வில்லை. ஆனால் பத்திரிகைகள் மீண்டும் மீண்டும் இவர்கள் முஸ்லீம்கள் என்று கூறி வருவது அமெரிக்காவில் நிலவி வரும் முஸ்லீம் காழ்ப்புணர்ச்சி மூலம் இவர்களை குற்றவாளிகள் ஆக்கவும் மேலும் முஸ்லீம் விரோத நடவடிக்கைகளை அதிக படுத்துவதற்க்குமே ஆகும். இந்திய பத்திரிக்கைகளும் இவர்களின் கைது நடவடிக்கையை ஒரு கேலிக்குரிய செய்தியாக்கி வருகின்றன.
இனி இவர்களுக்காக ஏற்கனவே ஜோடித்து வைக்கப்பட்ட கதைகளை அதிகாரிகள் பத்திரிகைகள் வாயிலாக மக்களின் மழுங்கிய மூலையில் ஏற்றி இவர்களை குற்றவாளிகள் ஆக்கிவிடுவார்கள்.
மூன்று பேர் பறிபோன இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தேடுதல் வேட்டை, துப்பாக்கிசூடு, கைது என்று நாடகமாக ஆக்கி மறுபுறம் இதனை தொடர்ந்து 70 பேரை பலி கொண்ட Texas  மாகாண உர தொழிற்சாலை வெடிப்பை மறைகின்றனரோ என்ற சந்தேகமும் உள்ளது. நாளை அதனை நடத்தியவர்களும் இவர்கள் தான் என்று புது கதைகளும் வரலாம்.

செய்தி ஆதாரம்: டைம்ஸ் ஆப் இஸ்ரேல்
கடைசி புதுபிப்பு : 14:38

பதிவு செய்தவர் தபால் பெட்டி on 9:59 AM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added