|

குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடியா காரணம்?

குஜராத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் நரேந்திர மோடி தான் முழுமையாக காரணம் என்று பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல என்பதை புள்ளி விவரங்களின் அடிப் படையில் பார்த்தால் தெளிவாகப் புரியும்.

1994-95 இல் குஜராத்தின் வளர்ச்சி 13.2 விழுக்காடாகவும், 1994 முதல் 2001 வரை யிலான சராசரி வளர்ச்சி 10 . 13 விழுக்காடாகவும் இருக்கும் போது மோடி முதல்வராக இருக்கவில்லை. 1999 இல்தான் அவர் முதல்வரானார்.
1990 இல் குஜராத் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. 1960 இம்மாநிலம் உருவாக்கப் பட்டபோது எட்டாவது இடத்தில் இருந்த குஜராத் 20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மூன்றாவது இடத்திற்கு வந்தது.
மின்உற்பத்திக்குத் தேவையான கட்டுமானங்களில் 35 விழுக்காடு 1995-2000த்துக்கும் இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
நாட்டின் பெட்ரோலியப் பொருள்களின் தயாரிப்பில் 49 விழுக்காடு குஜராத்தில் இருக்கிறது. நாட்டின் மிகப் பெரிய துறைமுகமான பவநகரும், மிகப் பெரிய ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ள ஜாம்நகரும் குஜராத்தில் தான் உள்ளன. இந்தியாவின் சோடா உப்பு தயாரிப்பில் 90 விழுக்காடு குஜராத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.


இவை அனைத்துமே குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி வருவதற்கு முன்பே இருந்தவைதான்.
குஜராத் மாநிலம் இன்று வளமாக இருப்பதாகக் கூறுவதில் என்ன வியப்பு இருக்க முடியும்?
வழக்கமான முன்னேற்றத்திற்கிடையேயும் குஜராத்தின் தொழிலாளர்களில் 93 விழுக்காட்டினர் முறைசாராத் துறைகளில் பணியாற்றுபவர்களாகவே உள்ளனர்.
அதனால், வெறும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு மட்டுமே மக்களின் வாழ்க்கை மேம்பட்டு விட்டதாகக் கூற முடியாது.


மனித வள மேம்பாட்டுக் குறி யீட்டில் 2003-04 இல் குஜராத் ஒரு இடம் பின்தங்கி இன்று கேரளா, பஞ்சாப், தமிழ் நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களுக்குக் கீழே உள்ளது. கிராமப்புற வளர்ச்சியில் அய்ந்தாவது இடத்தில் இருக்கும் குஜராத் முதலிடத்தில் உள்ள பஞ்சாபை விட பின் தங்கியே உள்ளது.
தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மற்ற மாநிலங்கள் பெறும் தொகையில் பாதி அளவைத்தான் குஜராத் பெறுகிறது.


அண்மையில் பா.ஜ.க.வை விட்டு விலகிய உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்தான் இத்தகவலை வெளியிட்டார் என்பது கவனிக்கத் தகுந்தது.
2005 இல் நடத்தப்பட்ட செயலாற்றல் மிக்க குஜராத் கண்காட்சியின் ஆலோசகர்களான எர்னஸ்ட் அண்ட் யங் எனும் நிறுவனம், மாநிலங்களில் செய்யப்படும் முதலீடுகளைப் பொறுத்த வரை, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்கனை விட குஜராத் பின்தங்கியும், கர்நாடகாவுக்கு இணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


தொழிலாளர் தரத்தைப் பொறுத்தமட்டில், அதே நிறுவனம் குஜராத்துக்கு வெறும் பி கிரேட் தந்துள்ளது. பல நிபந்தனைகள் நிறை வேற்றப்படவில்லை என்பதே இதன் காரணம்.
1996 இல் ஆசிய வளர்ச்சி வங்கி குஜராத்தை முதலீட்டு விஷயத்தில் இரண்டாவது இடத்தில் வைத்திருந்தது. 2005 இல் குஜராத் அய்ந்தாவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குஜராத் முன் னிலையில் இருக்கும் போது, நரேந்திர மோடிதான் அதனை முன்னிலைப்படுத்தினார் என்று கூறுவதன் காரணம் என்ன?


மோடியிடம் போலிப் புள்ளி விவரங்கள், கணக்குகள் காட்டும் திறமை அதிகமாக இருந்தது என்பதால் இந்த உண்மை மக்களின் கண்களுக்குத் தெரியாது.
குஜராத்தின் கவுரவம் என்னும் உணர்ச்சியை மிகவும் தந்திரமாக மோடி தூண்டிவிட்டார். இதனால் குஜராத்தின் வளர்ச்சி விகிதத்தைப் பற்றி எவருமே கவலைப்படவில்லை.
தனிப்பட்ட முறையில் திறமை மிகுந்த நிர்வாகி என்று மோடி காட்டிக் கொண்டது தான் பல இந்திய நிறுவனங்களைக் கவர்ந்தது.


தரப்பட்டியலில் குஜராத் கீழே இறங்குவதைப் பற்றியும் அவர்கள் சிந்திக்கவே செய்தார்கள்.
ஆனால் அவர் ளுக்கு வேண்டியது எல்லாம் மோடியின் வேகமான செயல் பாடு மட்டுமே. நானோ கார் தயாரிப்புக்கு மோடி பாதுகாப்பு மட்டும் கொடுக்கவில்லை; மூன்றே மாதங்களில் தேவையான பர்மிட்டுகளை மோடி தயார் செய்து ரத்தன் டாடாவுக்குக் கொடுத்தார்.


இது இதற்கு முன் எப்போதுமே கேள்விப்படாதது ஆகும். சட்டத்தைத் தன் விருப்பம் போல் வளைக்க இயன்ற மனிதர் ஒருவர் இங்கே இருக்கிறார்; ஆனால் என்ன - ஒன்று, அவருக்கு உங்களைப் பிடித்திருக்க வேண்டும்.
தனியார் முதலீட்டை மோடி வரவேற்றபோது, பெரிய, சிறிய நிறுவனங்கள் அவர் பக்கம் ஓடின.
அரசியல் வாதிகளின் ஆதரவும், பாதுகாப்பும் தேடுவது என்ற இந்திய நிறுவனங்களின் மனப்பான்மை ஒன்றுதான் பொருளாதார தாராளமய மாக்கலின் தாக்கத்திலிருந்து தப்பியதாகும்.


செய்வது அனைத்தையும் வேகத்துடன் செய்வது என்ற மோடியின் வழியே முதலீட்டாளர்களைக் கவர்ந்தது. மோடியை இந்தியாவின் எதிர்காலப் பிரத மராகவே அனில் அம்பானி காணத் தொடங்கிவிட்டார். அவரைத் தொடர்ந்து சுனில் மிட்டலும் மற்றவர்களும் இந்தப் பாட்டைப் பாட ஆரம்பித்துவிட்டனர்.
---மேலும் மோடியை ஆதரிக்க அவர் ஒரு நடுநிலைவாதி அல்ல.குஜராத் வழககுகளில் அவர் பெயர் இன்னும் உள்ளதும் அவருக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டதும் அனைவரும் அறிந்த விஷயம்.காங்கிரஸ்,பிஜேபி தவிர மூன்றாவது அணியில் ஒருவர் பிரதமர் ஆனால்தான் இந்தியா ஒளிரும்..இந்தியர்கள் அனைவரும் நிம்மதியாக வாழ முடியும் என்பது என் அபிப்ராயம் ....

பதிவு செய்தவர் Unknown on 1:12 PM. தலைப்பு , , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added