முஸ்லிம்களுக்கு எதிராக விதைக்கப்படும் விஷமங்களும்;அளிக்கப்படும் அநீதியும்:
நண்பர்களே!மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்கள் உண்மைகளை தெரிந்து கொள்ளவும் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.நாட்டில் எங்கே குண்டு வெடித்தாலும் உடனே கண்ணை மூடி கொண்டு முஸ்லீம்கள் மீது பழி போட்டு அப்பாவி இளைஞர்களை கைது செய்து விசாரணை கைதி என்று பல வருடங்களாக சிறையில் அடைப்பதும்,உண்மையான குற்றவாளிகள் பிடிபட்ட பின்னரும் அவர்களை வெளியேவிடாமல் தொடர்ந்து சித்ரவதை செய்வதும்,வெளியே வந்தாலும் மீண்டும் மற்ற வழக்குகளில் கைது செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. குண்டு வெடிப்பில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.ஆனால் இப்போது நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது நாட்டின் மதச்சார்பின்மையும்,இறையாண்மையும்,நீதித்துறையும் சந்தேகம் அடைய வைக்கிறது.உதாரணமாக சில சம்பவங்களை தருகிறேன்.
1.சம்ஜவுதாரயில்குண்டுவெடிப்பு:
Feb 18 2007
68 பேர் பலி, அதிகமானோர் பாகிஸ்தானியர் (குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் முகம்மத்)சி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் – ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளான சந்தீப் டாங்கேவையும் ராம்ஜியையும் போலீஸ் தேட ஆரம்பித்தது.
2.மாலேகான் குண்டுவெடிப்பு-1:
Sep 8 2006
37 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - சல்மான் பார்சி, பாருக் இக்பால், ரயீஸ் அஹமத், நூருல் ஹுதா, ஷபீர்.ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் ஹிந்த்துத்துவ தீவிரவாதிகள்
3.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு:
May 18 2007
14 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - 25 முஸ்லிம்கள் குற்றவாளிகளாக. 80 முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில்.சீ.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள்- ஹிந்துத்துவ தீவிரவாதிகளான சந்தீப்டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, லோகேஷ்சர்மா
4.அக்டோபர் 2009ல் மார்கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 2010ல் தேசிய புலனாய்வு நிறுவனம் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் 11 பேர் மீது கோவாவில் உள்ள பஞ்சிம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
5.அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு:
Oct 11 2007
3 முஸ்லிம்கள் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் முஹம்மத்சி.பி.ஐ., ஏ.டி.எஸ். விசாரணைகளில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா, சந்திரசேகர், பிரசாத், அனில் ஜோஷி.
6.மாலேகான் குண்டுவெடிப்பு-2:
Sep 29 2008
7 பேர் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - இந்திய முஜாஹிதீன்கள்.ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரிய ஜாக்ரன் மன்ச் பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோகித் மற்றும் ஸ்வாமி அமிர்தானந்த் தேவ் ஆகிய ஹிந்துத்துவ தீவிரவாதிகள்.
7.தானே சினிமா குண்டுவெடிப்பு:
Jun 4 2008
ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களான ஹிந்து ஐங்காகிருதி சமீதி, சனாதன் அன்று, தானே சினிமா குண்டு வெடிப்பு தொடர்பாக ஹிந்து ஜன்ஜாக்ரிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்புகளைச் சேர்ந்த ரமேஷ் ஹனுமந்த் கட்கரியும் மங்கேஷ் தினகர் சன்ஸ்தா. ‘ஜோதா அக்பர்’ என்ற முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஹிந்திப் படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.
8.கான்பூர்,நந்தித் குண்டுவெடிப்பு முயற்சிகள்:
Aug 2008
இரு இடங்களிலும் குண்டு தயாரிக்கும் சமயத்தில் வெடித்து 4 ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் பலி. பஜ்ரங் தள் உறுப்பினர்கள் என் ராஜ்கோண்ட்வாரும் எச் பன்சேவும் தவறுதலாக வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டனர்.ஆகஸ்ட் 2006ல் அதே அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ராவும் பூபிந்தர் சிங்கும் கான்பூரில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டனர். இவற்றைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் உள்ள பல நகரங்களில் மசூதிகளில் குண்டுகள் வெடித்தன. நந்தாதில் தயாரிக்கப்பட்ட குண்டு அவுரங்காபாத் மசூதிக்கானது என்று தெரியவந்தது. சம்பவ இடத்தில் அவுரங்காபாத் வரைபடமும் பொய் தாடிகளும் முஸ்லீம் ஆண் உடைகளும் கண்டு பிடிக்கப்பட்டன.
9.கடந்த பிப்ரவரி 21ம் தேதி ஹைதரபாத் தில்சுக்நகரின் சந்தைத் தெருவில் 100 மீட்டர் இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன; 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்; 119 பேர்காயமடைந்தனர்.இதி்ல் குற்றம் சாட்டப்பட்ட சித்திக் குற்றம் நிருபிக்கபடாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.உண்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை..
தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. தாடியும், தொப்பியும் தடயங்களாக விட்டு சென்று முஸ்லிம்களின் மேல் பழியைப் போட முயன்ற இந்து முன்னணி பயங்கரவாதிகளை வளைத்து பிடித்தது தமிழக காவல் துறை.மேலும் ராம சேனா என்ற அமைப்பின் ப்ரவீன் முத்தலீக் என்பவன் முஸ்லிம்களின் மேல் செயற்கையாக மதக்கலவரத்தை உருவாக்க விலை பேசி, குண்டு வைப்பது மட்டும் எங்கள் கலாச்சாரமல்ல; கலவரங்களை செயற்கையாக உருவாக்கி முஸ்லிம்களை கருவறுப்பதும் எங்களது கைவந்த கலை தான் என்பதை உலகத்திற்கு புரிய வைத்தான். கேமராவை மறைத்து வைத்து அவனிடம் ரகசியமாகவும் நைச்சியமாகவும் பேசிய போது கலவரம் நடத்த பேரம் பேசி விலை நிர்ணயம் செய்த அயோக்கியத்தனம் வெளியுலகிறகு கசிந்தது.இன்னும், ஹைதராபாத்தில் மாட்டுக்கறியை கோவிலில் வீசி விட்டு அந்தப் பழியை முஸ்லிம்களின் மேல் போட்டு கலவரத்தை தூண்ட நினைத்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டதும்... (இதே யுக்தி மதுரையிலும் முன்னோட்டமிடப்பட்டது. ஆனால் கைது செய்தது முஸ்லிம்களை)கர்நாடாகாவில் அரசு அலுவலகத்தில் புது வருஷ தினத்தன்று பாகிஸ்தான் கொடியை ஏற்றி, முஸ்லிம்களின் மேல் பழியைப் போட இருந்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டு பல முஸ்லிம்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதும்..
இவர்களின் நோக்கம் எல்லாம் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து மக்களின் மத்தியில் பிரிவினையை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்பதே.இவர்களின் இந்த செயல்களை அரசும் கண்டும் காணமல் இருப்பதுதான் வேதனை..இவர்கள் எல்லாம் வெளியே உல்லாசமாக உலவி கொண்டு இருக்கும்போது நாட்டில் இன்னும் பல குண்டு வெடிப்புகள் நிகழத்தான் செய்யும்.இவர்களையும்.அந்த அமைப்புகளையும் அரசு தண்டிக்கும்போது நாட்டில் அமைதி நிலவும்...அன்றுதான் நாம் அனைவரும் பெருமைப்பட முடியும் இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்று..

பதிவு செய்தவர் Unknown
on 3:09 PM. தலைப்பு
இந்தியா,
கட்டுரை,
குண்டுவெடிப்பு,
செய்திகள்
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன