|

எகிப்து:பிரதமர் அஹ்மத் ஷஃபீக் ராஜினாமா

கெய்ரோ,மார்ச்.3:எகிப்து நாட்டின் பிரதமர் அஹ்மத் ஷஃபீக் தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார். எகிப்தின் ராணுவ உயர்மட்டக் கவுன்சில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் ராஜினாமாச் செய்ததாக கூறப்பட்டிருந்தது.

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் இஸ்ஸாம் ஷரஃபிடம் புதிய அமைச்சரவை உருவாக்குமாறு ராணுவ கவுன்சில் கோரியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹுஸ்னி முபாரக் மக்கள் எழுச்சியின் மூலம் பதவியை விட்டு விலகுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக ஷஃபீக் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஷஃபீக் முபாரக்கின் நெருங்கிய நபராவார்.

செய்தி:மாத்யமம்

பதிவு செய்தவர் தபால் பெட்டி on 6:18 PM. தலைப்பு , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added