|

அப்படி செய்வது,சட்டத்திற்கு விரோதமானது-மத்திய அரசு


புதுடில்லி:"அசாமில், சந்தேகத்துக்குரிய 40 லட்சம் வாக்காளர்களை, மத ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ, பாகுபாடு பார்த்து, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. அப்படி செய்வது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அசாமை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்றின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், "வங்கதேசத்திலிருந்து, சட்ட விரோதமாக அசாமுக்குள் குடியேறிய 40 லட்சம் பேர், இங்குள்ள வாக்காளர் பட்டியலில், தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். அவர்களை கண்டறிந்து, வாக்காளர் பட்டியலில் இருந்து, அவர்களின் பெயர்களை நீக்க வேண்டும்' என கோரியிருந்தது.இந்த மனு, நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகோய் 
ஆகியோரைக் கொண்ட, சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்களை, சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. சட்ட விரோத குடியேற்றம், நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த விஷயத்தில் அரசு உறுதியாக உள்ளது.வங்கதேசத்தில் இருந்து, சட்ட விரோதமாக குடியேறியவர்கள், இங்கு தங்கியிருப்பது தெரிய வந்தால், அவர்களை கண்டறிந்து, அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என, அனைத்து மாநில அரசுகளுக்கும், அவ்வப்போது, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

அதேநேரத்தில், அசாமில், சந்தேகத்துக்குரியவர்களாக கருதப்படும், 40 லட்சம் வாக்காளர்களை, மத ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ, பாகுபாடு பார்த்து, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. அப்படி செய்வது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.இதுபோன்ற நடவடிக்கை, இந்தியாவின் மதச் சார்பின்மை கொள்கைக்கும், ஜனநாயக கட்டமைப்புக்கும் எதிரானது. சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை கண்டறிவதற்காக, ஒரு புதிய முறையை அரசு உருவாக்கியுள்ளது. இதன்படி, "டி' என்ற பிரிவில், சந்தேகத்துக்குரிய வாக்காளர்களின் பெயர், பட்டியலிடப்படும். இந்த பட்டியலில் உள்ளவர்கள், தேர்தலில் நிற்கவோ, ஓட்டளிக்கவோ, முடியாது.இவ்வாறு பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்தவர் Yasar on 12:33 PM. தலைப்பு , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added