|

ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்கு பதவி: கவர்னர் எதிர்ப்பு

பெங்களூரு:""சதானந்த கவுடா ராஜினாமா, மன கஷ்டத்தை கொடுத்துள்ளது. ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்கு, அமைச்சர் பதவி கொடுத்தது சரியல்ல,'' என்று கர்நாடக கவர்னர் பரத்வாஜ், எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழக்குகள், ஊழல் புகாரில் சிக்கியவர்களுக்கு, அமைச்சர் பதவி வழங்க வேண்டாம். அப்படி வழங்கினால், ஆட்சி நடத்த சிரமம் ஏற்படும். ஆட்சிக்கும் நல்லதல்ல என்று, தன்னை சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டரிடம், கவர்னர் பரத்வாஜ் கூறியிருந்தார். ஆனால், அமைச்சர் பட்டியலை பார்த்தவுடன், கவர்னர் அதிர்ச்சியடைந்தார்.வழக்கு நிலுவையிலுள்ள முருகேஷ் நிரானி, சோமண்ணா, சி.டி.ரவி, ரேணுகாச்சார்யா ஆகியோர் பெயர், பட்டியலில் இடம் பெற்றிருந்ததால், அதிருப்தியடைந்த கவர்னர், ஷெட்டரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். "பா.ஜ., மேலிட உத்தரவின் பேரில், அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது' என்று ஷெட்டர் கூறியதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கவர்னர் பரத்வாஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடக அமைச்சரவையில், ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளவர்களுக்கு, அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாம் என, ஷெட்டரிடம் கூறியிருந்தேன். என் ஆலோசனையை ஏற்று நடப்பதாக கூறியிருந்தார். ஆனால், அதன்படி அவர் நடந்து கொள்ளவில்லை.சதானந்த கவுடாவின் ராஜினாமா, எனக்கு மன கஷ்டத்தை அளித்துள்ளது. காரணம் கேட்டால், அனைத்துக்கும் கட்சி மேலிடம் காரணம் என்கின்றனர். இதில் நான், ஒன்றும் செய்ய முடியாது என்றார்.இவ்வாறு கவர்னர் கூறினார்.

பதிவு செய்தவர் ah kdnl on 11:38 PM. தலைப்பு , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added