11:35 PM | பதிவு செய்தவர் ah kdnl
சீனாவுக்கு கிழக்கே உள்ள கடல் பகுதியில் பெரும்பாலான இடங்களை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அங்குள்ள கடல் வளம், எண்ணை வளம் போன்றவற்றை மற்ற நாடுகள் பயன்படுத்திக் கொள்ள சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதன் காரணமாக சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை பான்பென் நகரில் நடந்தது. 10 நாட்டின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆனால் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடல் வளத்தை மற்ற நாடுகள் பகிர்ந்து கொள்ள சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கடலில் பெட்ரோல், மற்றும் கியாஸ் ஆகியவற்றை கண்டுபிடிக்க ஆய்வு செய்வதற்கு கப்பல்கள் செல்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதில் அனைத்திலும் தங்களுக்கே அதிக உரிமை இருப்பதாக சீனா கூறியது. இதன்காரணமாக முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது.
மற்ற நாடுகள் அமெரிக்க தூண்டுதலினால் உரிமை கொண்டாடி வருவதாகவும் சீனா குற்றம் சாட்டியது. பிரச்சினைக்குறிய பகுதிகளில் சீனா போர்க்கப்பல்கள் அதிகமாக நடமாட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.