கட்சிகளுக்கு தனிச்சின்னம் - தேர்தல் ஆணையத்தின் விதிமுறை.
தேர்தலின்போது, தங்களுக்குத் தனிச் சின்னம் ஒதுக்க தேர்தல்
ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தேமுதிக, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்,
விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, புதுச்சேரி என்.ஆர்.
காங்கிரஸ் உள்பட 15 அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் 2008-ம் ஆண்டில் வழக்கு
தொடர்ந்தன.
தனிச்சின்னம் ஒதுக்கப்பட்டால், குழப்பமின்றி தங்கள் கட்சிக்கு வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். ஆனால், விதிகளைக் காரணம் காட்டி தங்களுக்குத் தனிச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது என்று 15 அரசியல் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டன. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தேர்தல் ஆணையம், சட்டப்பேரவைத் தேர்தலின்போது குறைந்தபட்சம் 2 இடங்கள் மற்றும் 6 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே தனிச்சின்னம் ஒதுக்க முடியும் என்று கூறியது. அந்தத் தகுதியை எட்டும் வரை தனிச் சின்னத்துக்குப் பதிலாக தொகுதிவாரியாக மட்டுமே சின்னம் ஒதுக்க முடியும் என்று ஆணையம் கூறியது.
சிறிய கட்சிகள் தனிச் சின்னம் கோர முடியாது என்கிற தேர்தல் ஆணையத்தின் விதிமுறை சரியே என உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. மேலும், அரசியல் கட்சிகளுக்கு தனிச் சின்னம் ஒதுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பதிவு செய்தவர் Ameer
on 11:53 AM. தலைப்பு
அரசியல்,
இந்தியா,
செய்திகள்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன