சைக்கோ' மனிதன் கத்தியால் குத்தி 3 பேர் பலி!
ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் பயணித்த சைக்கோ மனிதன் சரமாரியாக சக பயணிகளைக் கத்தியால் குத்தியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
ஆந்திர மாநிலம் பத்திராச்சலத்திலிருந்து சென்னைக்கு ஒரு பேருந்து நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. அதில் 24 பேர் பயணித்தனர். பேருந்து சூளூர்ப்பேட்டையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென எழுந்த ஒரு நபர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதை எதிர்பார்க்காமல் நிலை குலைந்தனர் குத்துப்பட்டவர்கள்.
சைக்கோ மனிதன் நடத்திய இந்த வெறியாட்டத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நான்காவது நபரை கத்தியால் அந்த நபர் குத்தியபோது அவர் போட்ட அலறலால் பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். விளக்கைப் போட்டார்.
மேலும் மற்ற பயணிகளும் விழித்தெழுந்தனர். இதைப் பார்த்த அந்த மர்ம நபர் வேகமாக பேருந்தை விட்டுக் கீழே குதித்து ஓடி விட்டார்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் சூளூர்ப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த நபரையும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவரது பெயர் ரமேஷ், சென்னையைச் சேர்ந்தவர், என்ஜினியர் என்று தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த மூன்று பேரில் 2 பேர் ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்தவர். ஒருவர் ஒடிசாவைச் சேர்ந்தவர்.
இரவு நேரத்தில் ஓடும் பேருந்தில் சைக்கோ மனிதர் நடத்திய இந்த வெறியாட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பதிவு செய்தவர் Yasar
on 3:55 AM. தலைப்பு
செய்திகள்,
தமிழகம்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன