12:49 PM | பதிவு செய்தவர் ah kdnl
தமிழ்நாடு இந்து மகா சபாவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சுனில்குமார் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ பேசியதாவது:-
இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதற்காக எங்களது தமிழ்நாடு இந்து மகா சபா தொடர்ச்சியாக போராடி வருகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்த இந்து உணர்வுகளின் கொந்தளிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மத மாற்ற சட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும். நமது மண்ணின் மரபையும் கலாச்சாரத்தையும் காக்க வேண்டும். சிங்கம், மான், யானை புலிகளைக் காப்பாற்ற சட்டம் உள்ளது போல் மனித குலத்திற்கே தாயாக விளங்கும் பசுவை காக்க பசுவதை தடை சட்டத்தை உடனடியாக அமுல் படுத்த வேண்டும்.
மதத்தின் பெயரால் தவறு செய்பவர்களை அடையாளம் காண வேண்டும். ஆன்றோர்களும், சான்றோர்களும் காட்டிய அறவழிகளை காக்க வேண்டும். நமது பண்பாட்டில் அன்னியர் குறுக்கிடுவதை தடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை இங்கே நடத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தமிழ்நாடு இந்து மகா சபா துணைத்தலைவர் ராஜசோபால்பை, ராஜன், யுவராஜ், அருண்பிரசாத், செல்வகுமார், கோபால கிருஷ்ணன், விமல்ராஜ், ரஞ்சித்குமார், விஜயகுமார், ராஜ்குமார், கண்ணகி ஆகியோர் கலந்து கொண்டனர்.