|

அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளின் ”விடுதலையை நோக்கி” கருத்தரங்கம்

இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ”விடுதலையை நோக்கி” என்ற தலைப்பில் கருத்தரங்கத்தினை  சென்னை லயோலா கல்லூரி பி. எட். ஹாலில் 7.7.2012 அன்று மாலை நடத்தியது. 10 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை கைதிகளாகவும், பொய் குற்றச்சாட்டுகளுடனும் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளையும், அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோரி  தொடர் பொதுக்கூட்டத்தினை இவ்வியக்கத்தின் தலைமை ஒருங்கினைப்பாளர் சே.ஜே. உமர்கயான்  அவர்கள் நடத்திவருகின்றார்.


 சென்னை லயோலா கல்லூரி பி. எட். ஹாலில் நடைபெற்ற கருத்தங்கத்தில் பல்வேறு அமைப்புகளை சார்ந்த தலைவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்கள். தற்போது தமிழகத்தின் பல்வேறு அமைப்புகள் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டங்களை நடத்திவருகின்றது. அரசும் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளின் நல்வாழ்விற்கு அவர்களை விடுதலைசெய்ய வேண்டுமாய் அன்பாய் வேண்டுகிறோம்.


எழுச்சியுரை ஆற்றியோர்கள்,,,,,,,,,,,,,,


தெஹ்லான் பாக்கவி - SDPI

குனங்குடி ஹனிபா

முனீர் -INTJ

தடா ரஹீம்- தேசிய லீக்

உமர்கயான் - தலைமை ஒருங்கினைப்பாளர்

சகோதரி ஆயிஷா


பதிவு செய்தவர் Ameer on 11:29 AM. தலைப்பு , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added