காவல்துறைக்கு எதிராக பாப்புலர் பிரண்ட் கண்டனப் பொதுகூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் கடந்த ஜூன் 25ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாகநடைபெற்ற ஆரோக்கியம் சம்பந்தமான பயிற்சி முகாம் நடைபெறும் போது அனுமதியில்லாமல் அத்துமீறி நுழைந்த காவல் துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் 30 நபர்களை தீவிரவாதிகள் என்று கைது செய்து ஒரு மாபெரும் கபட நாடகத்தை அரங்கேற்றி முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
இந்த மாபாதக செயலை முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு காவல்துறை மற்றும் உளவுத்துறையின் சதியை உடைத்தெறிந்து கைது செய்யப்பட்ட முஸ்லிம்களை மீட்டெடுத்தது ஒற்றுமையின் வெற்றி.
இச்சம்பவத்தை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காவல்துறை மற்றும் உளவுத்துறையின் சதியை ஊரறிய துண்டு பிரசுரங்கள் மூலம் அம்பலப்படுத்தியது. இந்நிலை முஸ்லிம்களுக்கு மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஒரு கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதென தீர்மானித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் நகர தலைவர் பரக்கத்துல்லாஹ் ஜுன் 30ந் தேதி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு மனு கொடுத்தார்.காவல்துறையோ பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழித்துக் கொண்டே இருந்தது. இந்த தேசத்தில் முஸ்லிம்கள் பொதுக்கூட்டம் நடத்துவதென்றாலும் பெரும் போராட்டம் தான். இறுதியாக ஜூலை 5ந் தேதி இரவு 12 மணிக்கு அனுமதி வழங்கப்பட்டது நள்ளிரவில் சுதந்திரம் போன்று தான் இருந்தது.
ஜுலை 6 மாலை 7:10க்கு ஒற்றுமை கீதத்துடன் துவங்கிய பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் மு.செய்யது ஹாலிது தலைமையேற்று வரவேற்று பேசினார்.
பொதுக் கூட்டத்திற்கு பெரியபட்டினம், பனைக்குளம், புதுவலசை, சக்கரகோட்டை, கீழக்கிடாரம், சாயல்குடி, இருவேலி,சித்தார்கோட்டை, பிரப்பன்வலசை, இருமேனி, கீழக்கரை, கங்கைகொண்டான், பரமக்குடி, பண்ணக்கரை, இராமநாதபுரம் ஆகிய ஊர்களின் ஜமாத், சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்..... |
சோஷியல் டெமக்ரடிக் கட்சியின்(SDPI) மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், துணைத்தலைவர் அப்துல் வஹாப், பொது செயலாளர் இஷ்ஹாக், செயலாளர் செரீஃப், பொருளாளர் சோமு, சோஷியல் டெமாக்ரடிக் டிரேட் யுனியனின்(SDTU) மாவட்டஒருங்கிணைப்பாளர் கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்டன உரையின் துவக்கமாக சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின்(SDPI) மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி உரையாற்றினார். அவர் தனது உரையில் இந்திய தேசத்தில் நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான காவல்துறை மற்றும் உளவுத் துறையின் அராஜகப் போக்கை பல்வேறு சம்பவங்களை கூறி கண்டித்தார்.
அவரைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞ்ர் R.அழகு மணி இந்திய அரசியல் சாசன சட்டம் அனைவருக்கும் சமம் என்றும் ‘இந்தியா அரசியல் அமைப்பு சட்டம் 19A கூறும் ஆயுதங்களின்றி எங்கு வேண்டுமானாலும் கூடலாம்’ என்ற க்ஷரத்தை எடுத்துக்கூறி காவல்துறையின் அத்துமீறலை எடுத்துரைத்தார்.
அவரைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய அளவிலான பணிகளையும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேச நல பணிகளையும், காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அத்துமீறலையும், அராஜகப்போக்கையும், முஸ்லிம் விரோதப் போக்கையும், முஸ்லிம்களுக்கெதிரான அரசு பயங்கரவாதத்தை, இந்திய தேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரானநடவடிக்கைகளை தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் அவர் தனது உரையில் இது போன்ற முஸ்லிம்களுக்கெதிரான அத்துமீறல் தொடருமானால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காவல்துறை மற்றும் உளவுத்துறையின் சதியை மக்கள் மன்றத்திலே தோலுறிக்க தயங்காது என்று சூளுரைத்தார்.
இறுதியாக சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின்(SDPI) மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க நினைத்த காவல்துறையை கண்டித்தார்.
கண்டன பொதுக்கூட்டத்தின் தீர்மானங்களான, 25/06/2012 அன்று அத்துமீறிய காவல்துறையின் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்திய ஏ.சி ரத்தினசபாபதி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஐந்தாவது தூணாக கருதப்படும் பத்திரிகைத்துறை நடுநிலையோடு நடக்க வேண்டுமெனவும், 7 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்யக் கோரியும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரியபட்டினம் நகர தலைவர் சலீம் தீர்மானங்களை நிறைவேற்றினார்.
இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் நகர தலைவர் பரக்கத்துல்லாஹ் நன்றியுரையாற்றினார்.
கண்டன பொதுக்கூட்டத்திற்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்
பதிவு செய்தவர் Ameer
on 2:00 PM. தலைப்பு
செய்திகள்,
தமிழகம்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன