மனித வாழ்வினை மேம்படுத்தி
நல்லொழுக்கத்தையும், மன வலிமையையும், பரந்த
அறிவையும், சுய வலிமையையும் தருவதுதான் கல்வி. தனி மனித முன்னேற்றம், குடும்ப முன்னேற்றம், சமூக முன்னேற்றம், தேசத்தின் முன்னேற்றம் இவையெல்லாம் கல்வியின் மூலமே சாத்தியப்படும். சமூகத்தில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளகற்ற தேவையான ஆயுதம் கல்வி மட்டுமே.
இவ்வுலகில் கல்விக்குக் கண் தந்த
மார்க்கம் இஸ்லாம்! திருக்குர்ஆனின் முதல் வசனமே “இக்ரஃ : படிப்பீராக!” என்றுதான் துவங்குகிறது. அதாவது கல்வி கற்றலின் அவசியத்துடன்தான்
திருக்குர்ஆன் துவங்குகிறது. “கல்வி ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை காணாமல் போன சொத்து. அவர் அதனை கிடைக்குமிடமெல்லாம் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
இந்திய மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறார்கள்.ஒரு நாட்டிற்கு கல்வியில் வளர்ச்சி, பொருளாதாரத்தில் மேம்பாடு என்பன மிக முக்கியமானவை. அதே போல் ஒரு சமுதாய வளர்ச்சிக்கும் இவை மிக முக்கியமானவை. ஒரு நாட்டிலுள்ள மிகப் பெரும் சிறுபான்மைச் சமுதாயம் பின் தள்ளப்பட்டு, அதன் பெரும்பாலான மக்கள் கல்வியறிவற்றவர் களாகவும், வறியவர்களாகவும் இருந்தால் அந்த நாடு உண்மை யான ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டவே
முடியாது.
இந்திய முஸ்லிம்களின் துயர நிலையைப்
பாரீர்! அவர்கள் அனைத்து அம்சங்களிலும்
தலித்துகளை விட பின்தங்கியுள்ளனர் என்று சச்சார் கமிட்டி தெளிவாகக்
குறிப்பிடுகின்றது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள் கல்வியில்
மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
ஒரு குழந்தை கூட பொருளாதார
நெருக்கடியினாலோ, இன்னபிற காரணத்தினாலோ பள்ளிக்குச்
செல்லாமல் இருந்திடக் கூடாது என்ற நோக்கத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
ஆண்டு தோறும் ஏப்ரல், மே,
ஜூன் மாதங்களில் “பள்ளி செல்வோம்” (School Chalo) பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.
இந்தப் பிரச்சாரத்தில் கீழ்க்கண்ட
நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன:
1. பொருளாதாரத்தில் மிகவும்
பின்தங்கியுள்ள கிராமங்களில் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்களின்
கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.
2. உள்ளூர் கல்விக்கூட அதிகாரிகளின்
உதவியுடன் மேற்கண்ட பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்களை மீண்டும்
பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்யப்படுகின்றது.
3. கல்வியின் முக்கியத்துவத்தை
வலியுறுத்தி வீடு வீடாகச் சென்றும், பொது நிகழ்ச்சிகள் நடத்தியும்
விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
4. மாணவர் பேரணிகள், தெரு நாடகங்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவை இந்த
விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் அம்சங்கள்.
5. பிரச்சாரத்தின் முக்கிய பாகமாக ஏழை
குழந்தைகளுக்கு இலவச பள்ளிப் பைகள் (Free School Kits) வழங்கப்படுகின்றன.
2012ம் ஆண்டில் மட்டும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 12 மாநிலங்களில் 491 கிராமங்களில் 64,032 இலவச பள்ளிப் பைகளை வினியோகித்துள்ளது. பிரச்சாரத்தின் ஒரு பாகமாக நடத்தப்பட்ட
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
இந்த வருடம் இந்தப் பிரச்சாரத்தை 13 மாநிலங்களில் மேற்கொள்ள பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது. இதன்
மூலம் ஒரு லட்சம் பள்ளிப் பைகள்
வினியோகிக்கப்படும்.
மேற்கு வங்கத்திலும், மணிப்பூரிலும் இந்தப் பிரச்சாரம்
ஏற்கனவே
மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 26,000 பள்ளிப் பைகள் (School Kits) வினியோகிக்கப்பட்டன.
ஒரு பள்ளிப் பையின் விலை : ரூ. 300.00
கல்வி அறிவை வழங்கும் இந்தப் புனிதப்
பணியில் நாமும் இணைவோம். ஸதக்கத்துன் ஜாரியா என்ற
நிரந்தர தர்மத்தின் பலனை அடைவோம்.
அல்லாஹ்வின்
அருளைப் பெறுவோம்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைமையகம் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.