பெருநாள் வாழ்த்து

புதிய தேசத்தின் வாசகர்கள் அனைவருக்கும் 

”ஈகைத்திருநாள் நல்வாழ்த்துகள்”



அன்புடன்...
புதிய தேச ஆசிரியர் குழு



11:58 PM | தலைப்பு: , | Read More »

சவுதியில் பெண்களின் தனி நகரம்...!


ரியாத்: பெண்கள் மட்டும் பணியாற்றும் தனி நகரத்தை உருவாக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
இஸ்லாமிய ஷரியா சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்த நகரில் பெண்கள் மட்டுமே வசிப்பர், பணியாற்றுவர்.
இந்த நகரை கட்டும் பணி அடுத்த ஆண்டு துவங்கவுள்ளது.
செளதி அரேபியாவில் ஆண்களைப் போலவே பெண்கள் மத்தியிலும் பணியாற்றும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், செளதி பெண்கள் பணியாற்ற ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு.
இப்போது செளதி அரேபியர்களில் 15 சதவீதத்துக்கும் குறைவான பெண்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந் நிலையில், பெண்கள் மத்தியில் பணியாற்றும் ஆர்வத்துக்கு இனியும் தடைபோட விரும்பாத செளதி அரசு, அவர்களுக்கென தனி நகரத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.
அதே போல பெண்கள் மட்டுமே பணியாற்றும் தனி தொழிற்சாலைகளைக் கட்டவும் செளதி திட்டமிட்டுள்ளது.
இதற்காக செளதியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹபுப் நகரத்துக்கு சுமார் 500 மில்லியன் ரியால்களை அந் நாட்டு அரசு வழங்கவுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு சுமார் 5,000 பெண்கள் பணியாற்றும் ஜவுளி ஆலைகள், மருந்துத் தயாரிப்பு ஆலைகள், உணவுப் பதப்படுத்தல் ஆலைகளை இந்த நகராட்சி கட்டவுள்ளது.
கடந்த ஆண்டு செளதியின் பெண்கள் உள்ளாடை விற்பனை நிலையங்களில் பெண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதே போல அழகுப் பொருட்கள் விற்பனை மையங்களிலும் பெண்கள் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் முதல் முதலாக செளதி அரேபியாவைச் சேர்ந்த பெண்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2015ம் ஆண்டு முதல் செளதியின் உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களும் வாக்களிக்கலாம் என அந் நாட்டு அரசு அறிவித்துள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

11:52 PM | தலைப்பு: , , | Read More »

வாருங்கள் சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக ...


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர இந்தியாவின் 65வது சுதந்திர தினம் ஆகும். இந்நாளில் இந்த தேசத்தின் விடுதலைக்காக நடைபெற்ற போராட்டங்களையும். அதில் கலந்து கொண்டு நம் முன்னோர்கள் செய்த தியாகங்களையும் நினைவு கூர்வது நமது கடமையாகும்.
இந்த தேசத்தை அன்னியர்கள் அடிமைப் படுத்த முனைந்த போதும், தேசத்திற்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்பட்ட போதும் நமது முன்னோர்கள் “என்ன நடந்தால் நமக்கென்ன” என்று இருந்திடாமல் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் துறந்து இந்த தேசத்தை பாதுகாத்தார்கள். இந்த உணர்வுகள் மேலோங்க வேண்டிய தருணம் நம் தேசத்தின் குடி மக்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வை மக்கள் கொண்டாட்டமாக மாற்றும் விதத்திலும், சுதந்திர உணர்வையும், கடந்த பல வருடங்களாக நாடு முழுவதும் சுதந்திர தின நிகழ்ச்சிகளையும் முக்கிய நகரங்களில் “சுதந்திர தின அணி வகுப்பையும்” பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது. இந்த அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 15ல் தமிழகத்தில் மதுரை, நாகை, இளையான் குடி ஆகிய நகரங்களில் “சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி” நடைபெறும். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து உரையாற்ற உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

12:33 PM | தலைப்பு: , , , | Read More »

அப்படி செய்வது,சட்டத்திற்கு விரோதமானது-மத்திய அரசு


புதுடில்லி:"அசாமில், சந்தேகத்துக்குரிய 40 லட்சம் வாக்காளர்களை, மத ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ, பாகுபாடு பார்த்து, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. அப்படி செய்வது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அசாமை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்றின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், "வங்கதேசத்திலிருந்து, சட்ட விரோதமாக அசாமுக்குள் குடியேறிய 40 லட்சம் பேர், இங்குள்ள வாக்காளர் பட்டியலில், தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். அவர்களை கண்டறிந்து, வாக்காளர் பட்டியலில் இருந்து, அவர்களின் பெயர்களை நீக்க வேண்டும்' என கோரியிருந்தது.இந்த மனு, நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகோய் 
ஆகியோரைக் கொண்ட, சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்களை, சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. சட்ட விரோத குடியேற்றம், நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த விஷயத்தில் அரசு உறுதியாக உள்ளது.வங்கதேசத்தில் இருந்து, சட்ட விரோதமாக குடியேறியவர்கள், இங்கு தங்கியிருப்பது தெரிய வந்தால், அவர்களை கண்டறிந்து, அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என, அனைத்து மாநில அரசுகளுக்கும், அவ்வப்போது, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

அதேநேரத்தில், அசாமில், சந்தேகத்துக்குரியவர்களாக கருதப்படும், 40 லட்சம் வாக்காளர்களை, மத ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ, பாகுபாடு பார்த்து, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. அப்படி செய்வது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.இதுபோன்ற நடவடிக்கை, இந்தியாவின் மதச் சார்பின்மை கொள்கைக்கும், ஜனநாயக கட்டமைப்புக்கும் எதிரானது. சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை கண்டறிவதற்காக, ஒரு புதிய முறையை அரசு உருவாக்கியுள்ளது. இதன்படி, "டி' என்ற பிரிவில், சந்தேகத்துக்குரிய வாக்காளர்களின் பெயர், பட்டியலிடப்படும். இந்த பட்டியலில் உள்ளவர்கள், தேர்தலில் நிற்கவோ, ஓட்டளிக்கவோ, முடியாது.இவ்வாறு பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:33 PM | தலைப்பு: , , , | Read More »

ஏர் கேரளா...


வளைகுடா நாடான மஸ்கட்டில் கேரளா முஸ்லிம் கலாசாரம் மையம் சார்பாக நடத்தப்பட்ட இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கேரளா எம்பி இ.டி. முஹமது பஷீர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-வளைகுடா நாடுகளில் கேரளாவை சேர்ந்த நிறைய பேர் வேலை பார்த்துவருகின்றனர். அங்குள்ள வெளிநாட்டு இந்தியர்கள் விமானம் மூலம் கேரளாவுக்கு வர மிகவும் சிரமப்படுகின்றனர். முக்கிய விசேச காலங்களில் கேராளாவுக்கு வருவதற்கான பயணசீட்டு வாங்க அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலைமை உள்ளது. 


அவர்களின் சிரமத்தை குறைக்க கேரளாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே "ஏர் கேரளா" என்னும் அரசின் சொந்த விமானப்போக்குவரத்து தொடங்கும் திட்டம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு "ஏர் கேரளா"என்னும் பெயர் நான்கு வருடங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டுவிட்டது. 
பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் கட்டப்பட்ட கொச்சி விமான நிலையத்தை போல் இந்த "ஏர் கேரளா" விமானப போக்குவரத்தும் இயங்கும். இந்த போக்குவரத்து தொடங்குவது குறித்து முதலமைச்சர் உம்மன் சாண்டியை சந்தித்து நான் பேசியிருக்கிறேன். அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
"ஏர் கேரளா" விமானப் போக்குவரத்து தொடங்குவதில் பொருளாதாரப் பிரச்னை ஏதும் இல்லை. வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள முதலீடு தொடர்பான கூட்டத்தில் விமானப் போக்குவரத்து தொடங்குவது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

12:33 PM | தலைப்பு: , , , | Read More »

சிறுநீரகக்கற்களை கரைக்கும் உணவுகள்...


இன்றைய காலத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிலும் அந்த சிறுநீரகக் கல் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்ய வேண்டும். அதிலும் கற்களின் அளவு 5 மிமி குறைவாக இருந்தால் அதனை கண்டிப்பாக வீட்டில் இருக்கும் ஒரு சில உணவுகளின் மூலமே சரிசெய்துவிடலாம். இல்லையென்றால் லாப்ரோஸ்கோப்பி என்ற சிகிச்சையின் மூலமே நீக்க முடியும். மேலும் சிலருக்கு அந்த கற்களின் காரணமாக வயிற்றில் அடிக்கடி வலியானது ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக அதனை கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு அதனை ஈஸியாக வீட்டில் இருக்கும் ஒருசில உணவுகளை வைத்து கரைக்கலாம். அத்தகைய உணவுகள் என்னவென்று மருத்துவர்கள் பட்டிலிட்டுள்ளனர்.
சிறுநீரகக்கற்களை கரைக்கும் உணவுகள்...
* தண்ணீர் : அனைவருக்குமே சிறுநீரகக்கல் போதிய தண்ணீரானது உடலில் இல்லாத காரணத்தினாலே வருகிறதென்று நன்கு தெரியும். ஆகவே எப்போது கற்கள் உடலில் இருக்கிறதென்று தெரிககிறதோ, அன்றிலிருந்து ஒரு நாளைக்கு 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க ஆரம்பிக்க வேண்டும். இதுவே ஒரு சிறந்த எளிதான வழியாகும்.
* வெந்தய தண்ணீர் : ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் படுக்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீரகக்கற்கள் கரைவதோடு மட்டுமல்லாமல், உடலில் இருக்கும் டாக்ஸின்களும் வெளியேறுகின்றன.
* டால் மிஸ்ரி : இது ஒரு புதுவிதமான படிகமாக்கப்பட்ட சர்க்கரை கட்டிகள். இந்த சர்க்கரைக் கட்டிகள் பனை மரத்திலிருந்து செய்யப்படுகிறது. இந்த பொருள் கிடைப்பது சற்று கடினம் தான். ஆனால் அதன் பலன் மிகவும் உயர்ந்தது. இது சிறுநீரகக்கற்களை கரைக்கும் ஒரு சிறந்த பொருள். ஆகவே அதனை இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை குடிக்க வேண்டும். முக்கியமாக அந்த கட்டிகள் தண்ணீரில் நன்கு கரைந்திருக்க வேண்டும்.
* வாழைத்தண்டு : சமையலில் பயன்படும் வாழைத்தண்டுகளை வாரத்திற்கு ஒரு முறை சமைத்து உண்டால், சிறுநீரகக்கற்கள் வராமல் இருக்கும். அதுவே கற்கள் இருப்பவர்கள், அதனை தினமும் ஜூஸ் போட்டு குடித்தால், கற்கள் விரைவில் கரைந்துவிடும். ஏனெனில் அதில் அதிகமான அளவு நார்ச்சத்தானது இருக்கிறது. மேலும் அதில் நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது.
* கொத்தமல்லி இலைகள் : கொத்தமல்லி ஒரு சிறந்த மூலிகைப் செடி. இதில் பல வித நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் அந்த கொத்தமல்லியை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும். இதனால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
எனவே சிறுநீரகக்கற்களை நீண்ட நாட்கள் வைத்து, அதனால் அறுவை சிகிச்சை செய்யுமளவு கொண்டு செல்லாமல், வீட்டிலேயே தினமும் அதற்கான உணவுகளை சரியாக உண்டு வந்தாலே, கற்கள் கரைந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

12:31 PM | தலைப்பு: , , | Read More »

அம்மா?வின் அடுத்த திட்டம்...!?


சென்னை: தமிழகத்தில் உள்ள இந்து மத ஏழை எளியவர்களில் புனித யாத்திரை மேற்கொள்ளும் 500 பேருக்கு, ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஜாதி மதங்கள் பாரோம் என்ற பாரதியின் கூற்றுப்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களையும் சமமாக கருதி, அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வகை செய்யும் வகையிலும், அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையிலும், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் புனித யாத்திரை மேற்கொள்வதற்கும், இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளவும், அரசு சார்பில் உதவி செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது.
அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கிறிஸ்துவர்களின் புனித தலமான ஜெருசலேம் சென்று வருவதற்கு, முதற்கட்டமாக 500 கிறிஸ்துவர்களுக்கு அரசு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான நேபாள நாட்டிலுள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் இந்துக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், மானசரோவர் புனித யாத்திரைக்கு செல்ல இந்திய வெளியுறவுத் துறையால் தேர்வு செய்யப்படும் தமிழகத்தை சேர்ந்த 250 இந்துக்கள், முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளும் 250 இந்துக்கள் என்று மொத்தம் 500 பேருக்கு ஆண்டுதோறும் அரசு மானியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு (2012-13) மானசரோவர் புனித பயணத்திற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்றுவர ஒரு நபருக்கு ஆகும் மொத்த உத்தேச செலவான ரூ.1 லட்சத்தில் பயண செலவில், ரூ.40,000 வீதம் 250 நபர்களுக்கென ரூ.1 கோடியும், முக்திநாத் புனித பயணத்திற்கு சென்னையில் இருந்து ரயில் மூலம் சென்று வர ஒரு நபருக்கு உத்தேச செலவான ரூ.25 ஆயிரத்தில், ரூ.10 ஆயிரம் வீதம் 250 யாத்ரிகர்களுக்கு ரூ.25 லட்சம் என்று மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த யாத்திரைக்கான அரசு மானியம் பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதிக்குள் இந்து சமய அறநிலையத்துறையால் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்படும். இதில் கிடைக்க பெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான பயனாளிகளை விதிகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யும் பணியை இந்துசமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.
அரசின் இந்த நடவடிக்கைகள், மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகிய புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை செல்ல விரும்பும் இந்துக்களின் கனவு, குறிப்பாக பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளவர்களின் கனவு நனவாகிட பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

4:39 PM | தலைப்பு: , , | Read More »

வேடிக்கை பார்த்தது போதும்!

இந்தியாவின் வடகிழக்கு மூலையில் போடோ பழங்குடியினத்தவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரம் கடந்த ஒரு வார காலமாகவே நீடித்து வருகிறது. கலவரத்தில் மரணமடைவோரின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே வருகிறது. பதற்றத்தில் உறைந்து கிடக்கிறது அசாம் மாநிலம். ஆனால், மத்திய, மாநில அரசுகளால் இந்தக் கலவரத்தை இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை. போடோ பழங்குடியினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரம் நடைபெறுவது இது நான்காவது முறை. 1952, 1993, 1996 ஆகிய ஆண்டுகளில் இந்தக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. பல மாதங்கள் நீடித்த முந்தைய கலவரங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு முறையும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வாழிடங்களை விட்டு வெளியேறியுள்ளன. இப்போது நான்காவது முறையாக இந்த இரு சமூகத்துக்கு இடையே கலவரம் மூண்டுள்ளது. இதுவரை 44 பேருடைய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வாழிடங்களை விட்டு வெளியேறியுள்ளன. தற்போதைய கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது மாநில அரசு என்பது வெளிப்படை. ஜூன் 30-ம் தேதி, ஒரு முஸ்லிம் தச்சுத் தொழிலாளி கொலை செய்யப்பட்டதும், அதற்கு போடோ பழங்குடியினர் காரணம் எனக்கூறி, ஊர்வலம் நடத்தியதும் காவல் துறைக்கும் அரசுக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து, காமதபூர் விடுதலை அமைப்பைச் சேர்ந்த 2 போடோ இளைஞர்கள் ஜூலை 5-ம் தேதி பதிலடியாகக் கொல்லப்பட்டவுடனேயே அரசு விழித்துக்கொண்டிருக்க வேண்டும். களத்தில் இறங்கியிருக்க வேண்டும். செய்யத் தவறிவிட்டது. அதன் விளைவாக, ஜூலை 19-ம் தேதி மேலும் 4 போடோ இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அடுத்த நாளே மேலும் 3 பேர் கொலை. கலவரம் காட்டுத் தீயாகப் பரவிவிட்டது. போடோ பழங்குடி மக்கள், அசாம் மாநிலத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பழங்குடிகளில் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள். தேயிலைத் தோட்டங்கள் மாநிலப் பொருளாதாரத்தில் முக்கிய இடம்பெறத் தொடங்கியபோது, இங்கு பல்வேறு துணைத்தொழில்களுடன் அசாம் மாநிலத்துக்கு வந்த வங்க மாநிலத்தவர் சொத்துகள் வாங்குவதும், நிறுவனங்கள் அமைப்பதும் நடந்தன. இதனால், போடோ பழங்குடியினர் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தனர். தேயிலைத் தோட்டத்தில் வேலை தேடி வங்காளமொழி பேசும் முஸ்லிம் தொழிலாளர்கள் வங்க தேசத்திலிருந்து ஊடுருவினர். எல்லை கடந்து வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடியது. இவர்களைக் கணக்கெடுக்கவோ அல்லது புலம்பெயர்ந்தவர்கள் என்று பட்டியலிடவோ அசாம் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கடந்த 30 ஆண்டுகளில் போடோ இனத்தவரைவிட முஸ்லிம்கள் எண்ணிக்கை 6 மடங்கு அதிகமானது. இவர்களை வாக்கு வங்கிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்தான் இதற்குக் காரணம். இந்நிலையில், "அசாம் எங்களுக்குத்தான் சொந்தம்' என்று சொல்லிக்கொள்கிறது சீனா. இங்குள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கு மாவோயிஸ்ட்டுகள் மறைமுகமாக ஊக்கம் தந்து, ஆயுதங்களும் தந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த மே மாதம், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு பேட்டியில், "உல்பா (அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி) தீவிரவாத அமைப்புக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று குறிப்பிட்டார். இதை அசாம் முதல்வர் தருண் கோகோய் மறுத்தார். "உல்பா-வை ஆயுதங்களால் பலப்படுத்தும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது' என்று கூறினார். அதைத் தொடர்ந்து, பெயர் வெளிவர விரும்பாத மத்திய உளவுத் துறை அதிகாரி கூறியதாகப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளிலும்கூட, உல்பா தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் மியான்மரில் மறைந்து வாழ்வதாகவும், மாவோயிஸ்ட்டுகள் உல்பாவுக்கு சீன ஆயுதங்களை வழங்கி, அவர்களைப் பலப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் எழுதின. ஆனால், மத்திய அரசு இத்தகைய கவலைதரும் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதுவரை நடந்துள்ள கொலைச் சம்பவங்களில் தீவிரவாதிகளோ அல்லது நவீன ஆயுதங்களோ பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. பொதுமக்கள் கையாளும் கத்தி போன்ற சாதாரண ஆயுதங்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, இந்தக் கலவரங்கள் பொருளாதார சமன்குலைவால் நேரிட்டவை என்றுதான் கருத வேண்டும் என்று காவல் துறை உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள். இருப்பினும், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி தப்பிக்கும் தீவிரவாதிகள், மக்களை ஆயுதமாகப் பயன்படுத்தி இந்தக் கலவரத்தைத் தூண்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? மக்களை மக்களுடன் மோதிச் சாகச் செய்வதைவிட வேறு என்ன பாதகத்தை தீவிரவாதம் உண்டுபண்ண முடியும்? வேண்டுமென்றே தொடர்ந்து சில போடோ பழங்குடிகளைக் கொன்று, முஸ்லிம்கள் மீதான கோபத்தை வெடிக்கச் செய்யும் உத்தியாக இது ஏன் இருக்கக்கூடாது? மத்திய அரசின் புலனாய்வுத் துறை இது பற்றியும் யோசிக்க வேண்டாமா? கலவரம் தொடங்கிவிட்டது என்று தெரிந்தவுடனேயே அங்கே ராணுவம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கலவரம் மிகப் பெரியதாக வெடித்த பிறகுதான் ராணுவம் அங்கே சென்றுள்ளது. இதை வெறும் இனக்கலவரமாகக் கருத முடியவில்லை. இதன் பின்னணியில் தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப் புரிதல் இல்லாமல், இந்த விவகாரத்தை அணுகினால் தீர்வு கிடைப்பது அரிது. அரசியல் ஆதாயத்துக்காகவும், தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காகவும் வங்க தேச அகதிகளை அதிக அளவில் அசாமில் குடியேறச் செய்தது காங்கிரஸ் கட்சி. அன்றைய காங்கிரஸ் முதல்வர் ஹித்தேஷ்வர் சைக்கியாவின் குறுகிய கண்ணோட்டம்தான் இன்று ஓர் இனக்கலவரமாக வெடித்து, தீவிரவாதிகளுக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கிறது. ராணுவத்தைக் களமிறக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், பேராபத்து இந்தியாவை எதிர்நோக்கும் என்பது மட்டும் உறுதி!

11:46 AM | தலைப்பு: , , | Read More »

ரமழானைப் பயன்படுத்துதல் சில ஆலோசனைகள்

ramadhan
நாம் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் றமழான் எங்களிடம் வரும்போது அதற்கான தயார் நிலைகள் எம்மிடம் இருக்க வேண்டும். ரமழானுக்கு முன்னால் எமக்குள் தோன்ற வேண்டிய எண்ணங்கள்: எமது உள்ளத்தில் எப்போதும் நன்மை செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை இருக்க வேண்டும்.
"எனது அடியான் ஒரு நன்மையைச் செய்வதாகப் பேசினால் அவனுக்கு அதனை ஒரு நன்மையாக எழுதுகிறேன்" எனும் ஹதீஸுல் குத்ஸி ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறுகிறது. இதனை அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
1, குர்ஆனை விளங்கி பலமுறை ஓதி முடித்தல்.
2, முந்தைய பாவங்களை விட்டும் நீங்கி விடுதல் என்ற உண்மையான எண்ணம்.
3, அதிக நன்மைகளைச் செய்தல்
4, நடத்தை மாற்றம்
5, இந்த மார்க்கத்துக்காக செயலாற்றுதல் போன்ற பல நல எண்ணங்கள் எமக்குள் இருக்க வேண்டும்.
செயல் சார்ந்த தயார் நிலைக்கு கீழ்வரும் சில உதாரணங்களைக் குறிப்பிட முடியும்.
* றமழான் தொடர்பான சிறந்த நூல்களை வாசித்தல்.
* நோன்புடன் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கான தப்ஸீர் கற்றல்.
* ஈமானிய அமர்வுகளை நடாத்திக் கலந்துரையாடுதல்.
* "ஹகீபதுல் ஹைர்" (நன்மைகளுக்கான பொதி) என்னும் செயற்றிட்டத்தில் ஏழைகளுக்கு நோன்பு நோற்பதற்கான வசதி செய்து கொடுத்தல் போன்ற மனோ நிலை ரீதியான, செயல் ரீதியான தயார் நிலை எம்மிடத்தில் இருக்க வேண்டும்.
2. தஃவா ரீதியான தயார் நிலை
தஃவா ரீதியான அனைத்து செயற்பாடுகளுக்கும் ரமழான் மிகச் சிறந்த சந்தர்ப்பமாகும்.
1. "ஹகீபதுத் தஃவா" (தஃவா பொதி) வழங்குதல்.
இது நோன்பாளியின் தஃவா ரீதியான அன்பளிப்பாகும். றமழான் சிறுகையேடு, புதிய ஒலி நாடா, உணர்வு ததும்பும் வார்த்தைகள் பொதிந்த ஆக்கம், மிஸ்வாக் ஆகியன உள்ளடங்கலாக அவ் அன்பளிப்புப் பொதி அமைய வேண்டும்.
2. குடும்பத்துக்கான நாளாந்த அல்லது வாராந்த தர்பியா.
3. ஈமானிய, தர்பியா ரீதியான சொற் பொழிவுகளை பள்ளியில் நிகழ்த்தல்.
4. மாணவர் செயற்பாடுகள்.
5. குடும்ப இப்தார்களும் பொது இப்தார்களும்
6. இஸ்லாமிய நிறுவனங்களுடன் தஃவா ரீதியான உதவிகளைப் பகிர்ந்துகொள்ளல் போன்ற பல தஃவா செயற்பாடுகளை நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
உண்மையில் வெற்றிகளை சாதித்தவர்களும், இலக்கைத் தொட்டவர்களும் முன் ஆயத்தங்களுடனும் திட்டமிடல்களுடனும் செயற்பட்டவர்களே. கல்வியாண்டு ஆரம்பிக்கும் முன்னரே அதற்காகத் தயாராகும் பண்பு, திறமை மாணவர்களிடத்திலேயே இருக்கும். முன் ஆயத்தங்கள் செய்வோரின் முயற்சிக்கும், தியாகத்துக்கும் ஏற்ப அவர்களது அடைவுகளும் வித்தியாசப்பட்டிருக்கும் என்பது நாம் அறிந்த விடயம். இவ்வாறிருக்கும் போது முன் ஆயத்தம் எதுமற்றவர்கள் எவ்வாறு வெற்றியொன்றைச் சாதிப்பார்கள்?
குர்ஆனிய மாதம் றமழானை உயிர்ப்பிக்கும் நோக்கத்துடன் இம் மாதத்தில் போதிய பயிற்சிகளை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஸலபுகளின் வாழ்வு முழுவதும் றமழானை மையமாகக் கொண்டமைந்திருந்தது என்று கூற முடியும். ஆறு மாத எதிர்பார்ப்பும், ஆறு மாதப் பிரார்த்தனையும் றமழான் பற்றிய அவர்களது பிரக்ஞையை எமக்குத் தெளிவுபடுத்துகிறது. றமழானை அடைந்து கொள்ள முன் ஒரு எல்லையை நோக்கியே மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருக்கிறது. நல்லெண்ணம் வையுங்கள். இறுதி மூச்சின் போது அதற்கான கூலியும் எம் நன்மை ஏட்டில் இடம்பிடிக்கும் இன்ஷா அல்லாஹ்!
ஒவ்வொரு நிமிடமும் றமழானின் மீதான தாகத்தை உங்களுக்குள் அதிகரிக்கச் செய்ய வேண்டும். எனவே, கீழே சில முக்கியமான குறிப்புகளைத் தருகிறோம்.
1. வீட்டை அழகுபடுத்தும் முன்னர் சுத்தப்படுத்துங்கள். எதிர்பார்த்திருக்கும் விருந்தாளியின் வருகைக்காக உங்கள் உள்ளங்களைச் சுத்தப்படுத்தி வையுங்கள்.
2. நோன்பின் சட்டங்களைக் கற்றறிந்து கொள்ளுங்கள்.
3. உள்ளத்தை இறையசத்துக்குப் பழக்குங்கள், றமழான் இறையச்சம் கொண்டவர்களின் பாசறையாகும்.
4. முறிந்து போன உறவுகளைச் சந்தித்துச் சேர்ந்து கொள்ளுங்கள்.
5. தப்பெண்ணமில்லாத உள்ளத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.
6. இணைய தள பாவனையில் அதிக நேரம் கழித்து விடாது றமழானை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இமாம் மாலிக் பின் அனஸ் அவர்கள் ஹதீஸ் துறையில் ஈடுபடுவதை விட்டு விட்டு குர்ஆன் ஓதுவதில் ஆர்வமாக ஈடுபடுவார்கள். றமழான் என்றும் உங்களை எதிர்பார்த்திருக்கிறது.
7. கடந்த றமழானில் விட்ட நோன்புகளை நோற்றுக் கொள்ளுதல்.
8. ஷஃபானில் ஒவ்வொரு நாளும் ஒரு ஜுஸ்உ குர்ஆன் ஓத முயற்சி செய்யுங்கள். பின்னர் இரண்டு, மூன்று ஜுஸ்உக்களை நாளாந்தம் ஓதுகின்ற நிலைக்கு மாற வேண்டும். பின்னர் 10 நாட்களுக்கு ஒரு முறை ஒரு குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்க வேண்டும்.
9. உங்களது உடலை நீண்ட ருகூஉக்கும் ஸுஜூதுக்கும் பழக்குங்கள். றமழானின் இரவுகள் எமது நீணட நேர தொழுகைகளால் உயிர் பெற வேண்டியிருக்கின்றது.
10. பள்ளியில் நீண்ட நேரம் தரித்திருக்கப் பழகுங்கள்.
11. சந்தர்ப்ப துஆக்கள் பலதை மனனமிட்டுக் கொள்ளுங்கள்.
12. ஏழைகளுக்கு உதவி செய்ய ஆரம்பியுங்கள்.
13. உண்ணும் உணவின் அளவை இப்போதிருந்தே குறைத்துக் கொள்ளுங்கள்.
14. இரவில் நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டாம். சுபஹுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே விழித்திருந்து அமலில் ஈடுபட உங்களைப் பழக்குங்கள்.
15. வழமையை விட குறைவாகத் தூங்கப் பழகுங்கள்.
16. தினமும் 1000 வசனங்களை ஓதி கியாமுல் லைல் தொழப் பழகுங்கள்.
17. பொது வேலைகளில் ஈடுபடல்.
18. போதை வஸ்துக்கு அடிமையானோர் அவற்றை விட்டுவிடுவதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும்.
19. இறைவனை திக்ர் செய்வதில் நாவு திளைத்திருக்க வேண்டும்.
20. குர்ஆனை இப்போதிருந்தே மனனமிட ஆரம்பியுங்கள்.
21. பெருநாளைக்கான ஆடைகளை முன்னரே வாங்கி விடுங்கள். றமழானில் சந்தைகளில் அலைய வேண்டாம்.
22. திட்டமிட்ட நேர அட்டவணை ஒன்றை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
23. உங்கள் சூழலிலுள்ள சிறார்களுக்கும் நோன்பு நோற்க ஆர்வமூட்டுங்கள்
மேற்சொன்னவை சில வழிகாட்டல்கள் ஆகும். நீங்கள் மேலதிக திட்டமிடல்களுடன் எதிர்வரும் றமழானுக்காக தயாராகுங்கள்.

நன்றி: காலித் தர்வீஷ் அவர்கள் எழுதிய கட்டுரையின் சுருக்கம்
அஷ்ஷெய்க் எம்.எப்.எம் நௌஷாத் (நளீமி)

3:55 PM | தலைப்பு: , | Read More »

சைக்கோ' மனிதன் கத்தியால் குத்தி 3 பேர் பலி!

ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் பயணித்த சைக்கோ மனிதன் சரமாரியாக சக பயணிகளைக் கத்தியால் குத்தியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
ஆந்திர மாநிலம் பத்திராச்சலத்திலிருந்து சென்னைக்கு ஒரு பேருந்து நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. அதில் 24 பேர் பயணித்தனர். பேருந்து சூளூர்ப்பேட்டையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென எழுந்த ஒரு நபர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதை எதிர்பார்க்காமல் நிலை குலைந்தனர் குத்துப்பட்டவர்கள்.
சைக்கோ மனிதன் நடத்திய இந்த வெறியாட்டத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நான்காவது நபரை கத்தியால் அந்த நபர் குத்தியபோது அவர் போட்ட அலறலால் பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். விளக்கைப் போட்டார்.
மேலும் மற்ற பயணிகளும் விழித்தெழுந்தனர். இதைப் பார்த்த அந்த மர்ம நபர் வேகமாக பேருந்தை விட்டுக் கீழே குதித்து ஓடி விட்டார்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் சூளூர்ப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த நபரையும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவரது பெயர் ரமேஷ், சென்னையைச் சேர்ந்தவர், என்ஜினியர் என்று தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த மூன்று பேரில் 2 பேர் ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்தவர். ஒருவர் ஒடிசாவைச் சேர்ந்தவர்.
இரவு நேரத்தில் ஓடும் பேருந்தில் சைக்கோ மனிதர் நடத்திய இந்த வெறியாட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

3:55 AM | தலைப்பு: , , | Read More »

மியான்மரில் தொடரும் துயரம்.....மௌனம் சாதிக்கும் உலக நாடுகள்..........???









12:37 AM | தலைப்பு: , , | Read More »

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added