சவூதி அரேபியா வாழ் இந்தியருக்கு இலவச சட்ட உதவி


ஜெட்டா: சவூதி அரேபியாவில் வாழும் ஏழை இந்தியர்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்குவதற்கான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
"Pleace India" என்ற பெயரிலான இந்த அமைப்பு இந்திய உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் இணையதளத்தின் மூலம் ( http://pleaceindia.com)சவூதி அரேபியா வாழ் இந்தியர்கள் தங்களது சட்ட உதவிகளை கோரலாம். Pleaceindia அமைப்பின் பிரவாசி லீகர் எய்ட் செல் என்ற பிரிவு சட்ட உதவிகளை வழங்கும்.
சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் உரிய சட்ட உதவிகளைப் பெறுவதற்கு இந்திய தூதரகத்தில் உள்நாட்டு சட்ட ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்திய தூதரகம், இந்தியர்களிடம் பெற்றிருக்கும் சுமார் 15 மில்லியன் சவூதி ரியாத்தை இந்தியர் நலனுக்காக செலவிட முன்வர வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் சவூதி அரேபியா வாழ் இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சட்ட உதவிகளைப் பெற்றுத் தருவதற்கும் இந்திய தூதரகம் உறுதுணையாக நிற்க வேண்டும் என்றும் Pleaceindia அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது

1:09 AM | தலைப்பு: , , | Read More »

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ.

 
தமிழக மீனவரை படுகொலை செய்த அமெரிக்க கடற்படையை கண்டித்தும், சில்லரை வர்த்தகத்தில்  நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கக்கோரி, இந்தி யாவை அச்சுறுத்தும் ஒபாமாவை  கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ. கட்சி அமெரிக்க தூதரகம் முன்பு முற்றுகை போராட்டத்தை இன்று காலை 11 மணிக்கு மேல் நடத்தியது. இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட எஸ். டி.பி .ஐயினர் கலந்துகொண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

1:07 AM | தலைப்பு: , , | Read More »

சவூதி பெண்களுக்கு அனுமதி...?

சவூதி பெண்கள் தங்கள் கணவருக்கு தம்மடிக்கும் பழக்கம் இருந்தால் அவரை தாராளமாக விவாகரத்து செய்யலாம் என்று அந்நாட்டு நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சவூதி அரேபிய நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் அரபு மொழி நாளிதழலான அல் வாதானுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,
ஒரு பெண் திருமணமான பிறகு தனது கணவனுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதை கண்டுபிடித்து, அதனால் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் தான் அவருடன் இனியும் சேர்ந்து வாழ விரும்பவில்லை இல்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவருக்கு கண்டிப்பாக விவாகரத்து கொடுக்க வேண்டும். ஆனால் திருமணத்திற்கு முன்பே அவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதை தெரிந்து மணக்கும் பெண்களுக்கு இது பொருந்தாது.
மேலும் அந்த பெண் தனது கணவருடன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்துள்ளார் என்பதை கணக்கில் கொண்டு தான் விவாகரத்து வழங்க வேண்டும். உதாரணமாக ஒரு பெண் புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள கணவருடன் 20 ஆண்டுகள் வாழ்ந்த பின் விவாகரத்து கேட்டால் அந்த வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றார்.
சவூதி அரேபியாவில் 600,000 பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட 772,000 இளம்வயதினருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவில் சிகரெட் இறக்குமதி செய்யும் நாடுகளில் சவூதி அரேபியா 4வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1:01 AM | தலைப்பு: , , | Read More »

இலட்சத்தில் ஒருவர் - ஜெய்னுல் ஆபிதீன்

விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. கூடவே காற்றும். சாலை எல்லாம் தண்ணீர். சாலை என்றதும் பெரிய நகரம் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும். அதனால் தெரு என்று சொல்லலாம். சிறு சிறு தெருக்கள் உள்ள, வசதிகள் மிகவும் குறைவான, பங்களாதேஷ் நாட்டின் மைமென்சிங் மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏதோ ஒரு கிராமம். மரணத்துடன் இறுதிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் தம் தந்தையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார் மகன் ஜெய்னுல் ஆபிதீன். கண்ணெல்லாம் நீர் கோர்த்துக் கொண்டு வெளியே பெய்யும் மழைக்கு நிகராய் வழிந்து கொண்டிருந்ததே தவிர, வேறு என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. என்னவாவது சிகிச்சைக்கு முயன்று பார்க்கலாம் என்றால் மருத்துவ வசதி அற்றிருந்த ஊர் அது. அண்மையில் உள்ள மருத்துவமனை என்பதோ 20 கி.மீ. தொலைவு. கொட்டும் மழையில் எந்த வாகனத்தைப் பிடித்து எப்படிப் போய்ச் சேருவது? தொழில் என்று வயல்களில் கூலி வேலை செய்து, கிடைக்கும் சொற்ப வருமானத்தில் ஓரளவு வயிற்றையும் வீட்டில் ஏழ்மையையும் நிரப்பி வைத்திருந்த ஜெய்னுல் ஆபிதீனுக்கு வாகனம் அமர்த்தும் வசதியும் கேள்விகுறிதான். கன்னத்தில் கைவைத்து கொட்டக் கொட்டப் பார்க்க, மரணத்தைத் தழுவினார் தந்தை. எங்கோ ஓர் இடி இடித்தது. ஜெய்னுல் ஆபிதீன் மனத்தில் இறங்கியது. o-O-o “நாம் தாக்காவுக்குச் சென்று விடலாமா?” ஒருநாள் தம் மனைவி லால் பானுவிடம் கேட்டார் ஜெய்னுல் ஆபிதீன். தந்தை இறந்த சோகம் குறைந்திருந்தாலும் அது ஏற்படுத்திய தாக்கம் அவரை விட்டு மறையவில்லை. மனத்தில் விதை ஒன்றைத் தூவியிருந்தது. கேள்விக்குறியுடன் தம் கணவனைப் பார்த்தார் லால் பானு. “பெரிய ஊர். ஏதாவது நல்ல வேலை கிடைக்கும். இப்பொழுது வருவதைவிட அதிகமாகவே சம்பாதிக்க முடியும் என்று தோன்றுகிறது.“ மறுபேச்சு பேசாமல் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கணவனுடன் கிளம்பினார் மனைவி. ஏதோ குருட்டு தைரியத்தில் இருவரும் கிளம்பி விட்டார்களே தவிர, சிறிய கிராமத்திலிருந்து வந்து இறங்கிய அவர்களை ஏகப்பட்ட மக்களுடன் பரபரவென்று இயங்கிக்கொண்டிருந்த நகரத்தின் பிரம்மாண்டம் பயமுறுத்தியது. எக்கச்சக்க மக்கள் நெருக்கிப்பிடித்து வாழும் தாக்கா பங்களாதேஷின் தலைநகரம். உலகின் ஒன்பதாவது பெரிய நகரம். மற்றொரு உலகப் பெருமையும் தாக்காவுக்கு இருந்தது. ரிக்-ஷாக்களின் உலகத் தலைநகர். சுமார் நாலு இலட்சம் சைக்கிள் ரிக்-ஷாக்கள் அந்நகரில் ஓடிக்கொண்டிருந்தன. சாலையில் மீதமுள்ள பகுதிகளில்தான் கார், பஸ் போன்றவை ஓடும் போலும். இங்கு என்ன செய்து எப்படி பிழைக்கப் போகிறோம் என்று ஜெய்னுல் ஆபிதீனுக்குப் புரியவில்லை. நகரின் ஒரு மூலையில் அண்மிக்கொண்டு பிழைப்புத் தேட ஆரம்பித்தார். வந்தாரை வாழ வைக்கும் தாக்காவில் அவரைப் போன்றவர்களுக்கு எளிதில் கிடைத்த வாய்ப்பு ரிக்-ஷா. ஆனால் பிரச்சினை ரிக்-ஷாவை மிதிப்பதைவிட மூச்சுத் திணறும் அந்நகரின் போக்குவரத்தில் அதை ஓட்டுவதுதான். தட்டுத்தடுமாறி பெடலடிக்க ஆரம்பித்தவருக்கு விரைவில் அந்த லாவகம் புலப்பட்டுப் போனது. கார்களுக்கும் லாரிகளுக்கும் இடையில் புகுந்து ‘கட்’ அடித்து வெளிவருவம் சூட்சுமம் வசமானது. ‘கால் தேர்ந்த’ ரிக்-ஷாக்காரர் ஆகிவிட்டார் ஜெய்னுல் ஆபிதீன். எப்படியும் இந்நகரில் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை வலுவானது. கூடவே, கிராமத்திலிருந்து கிளம்பும்முன் மனத்தில் விழுந்திருந்த விதை துளிர்க்க ஆரம்பித்தது. மக்கள், சரக்கு என்று பாகுபாடில்லாமல் என்ன சவாரி கிடைத்தாலும் சரி என்று ஓட ஆரம்பித்தது ஜெய்னுல் ஆபிதீனின் ரிக்-ஷா. லட்சக்கணக்கான ரிக்-ஷா ஓட்டுனர்களில் ஒருவராகச் சங்கமித்தார். ஆனால் அவர் லட்சத்தில் ஒருவராக உருவாகப்போவதை அப்பொழுது யாரும் அறியவில்லை. மாங்கு மாங்கென்று பொழுதெல்லாம் ஓட்டினாலும் எவ்வளவு வருமானம் கிடைத்துவிடப் போகிறது? ‘நானும் ஏதாவது செய்கிறேனே’ என்று மனைவி லால் பானு தாமும் ஒரு வேலை தேடினார். கிடைத்தது. அவர்கள் தங்கியிருந்த பகுதியில் தனியார் மருத்துமனை ஒன்றில் உதவியாளர் வேலை. அதிலும் மிகப் பெரும் வருமானம் என்று சொல்ல முடியாவிட்டாலும், கிராமத்தில் அவர்கள் கிடந்ததற்கு நிலைமை மோசமில்லை. இந்நிலையில்தான் ஜெய்னுல் ஆபிதீனின் ரகசிய ஆசை மேலும் வலுவடைந்தது. மனைவிக்குத் தெரியாமல் அதைச் செய்வது என்று முடிவெடுத்தார். மிகப் பெரும் முடிவு. ஆனால் அதை ரகசியமாய் செய்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. ஜெய்னுல் ஆபிதீன் நகரிலுள்ள வங்கி ஒன்றில் நுழைந்து விசாரித்தார். சேமிப்புக் கணக்கு உருவானது. சிறு தொகை சேமிப்பது வழக்கமானது. செலவு செய்தது போக மீதமுள்ளது சேமிப்பு என்பது போலில்லாமல், தமது தினசரி வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை வங்கியில் போடுவதைத் தனக்குத்தானே விதியாக்கிக் கொண்டார். எல்லா நாட்களும் ஒன்றே போல் சவாரி கிடைத்து விடுமா என்ன? அதெல்லாம் விதியைத் தளர்த்தவில்லை. வருமானம் குறைந்தாலும் சேமிப்பு போகத்தான் வீட்டிற்கு மீதி. சப்ஜி வாங்கப் பணம் போதவில்லை என்றால் சாப்ஜியைச் சாட ஆரம்பிப்பார் லால் பானு. மனைவியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டாலும் பரவாயில்லை என்று கல்லுளி மங்கனாய் இருந்தாரே தவிர தமது ரகசிய சேமிப்பைப்பற்றி தவறியும் வாய் திறக்கவில்லை ஜெய்னுல் ஆபிதீன். காலம் வஞ்சனையில்லாமல் நகர, முப்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒருநாள் வங்கிக்குச் சென்று விசாரித்தார். “என் சேமிப்பில் எவ்வளவு தொகை இருக்கிறது?” சிறு துளி மூன்றேகால் இலட்சம் பங்களாதேஷி டாக்காவாகப் பெருகியிருந்தது. அவரது மனத்தில் தோன்றிய மகிழ்வும் புத்துணர்வும், வலிக்க வலிக்க ரிக்-ஷவை மிதித்த கால்களில் பரவி, திணறி நின்றார் அவர். எத்தனை நாள் காத்திருப்பு! எத்தனை ஆண்டு ரகசியம்! உடைக்க நேரம் நெருங்கிவிட்டது என்று இப்பொழுது அவருக்குத் தோன்றியது. போட்டு உடைத்தார். o-O-o பிழைப்புத் தேடி பெருநகரங்களுக்குப் புலம் பெயர்பவர்கள் யாரும் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வதில்லை. தொடர்பு இருக்கும். நல்லது, கெட்டது என்று ஊருக்குச் சென்று வருவது இயல்பாகும். ஆனால் நகர வாழ்க்கையின் வசதிகளுக்குப் பழக்கப்பட்டுப் போன மனம் மீண்டும் சொந்த ஊருக்குப் புலம்பெயர மட்டும் தயாராவதில்லை. ஆனால் அறுபது வயது தாத்தா, தாக்கா நகருக்கு டாட்டா காட்டிவிட்டு தமது ஊருக்குத் திரும்பினார். சிறியதொரு மனையை விலை பேசி வாங்கினார். குருவிபோல் சேமித்து எடுத்து வந்திருந்த பணத்திலிருந்து கூடு கட்டினார். நாலா புறமும் சுவர், கூரையாகத் தகரம். இதுதான் அவரது எளிய வீடு. ஆனால் அவரது அத்தனை ஆண்டு லட்சியம் இதுவல்ல! அவர் மனத்தில் முப்பது ஆண்டுகளாய் பொத்து வளர்த்த ரகசியம் ஒரு பேராச்சரியம்! தம் வீட்டுடன் சேர்த்து பக்கத்தில் ஒரு ஷெட் கட்டினார். அதன் கூரையும் தகரம்தான். அக்கம் பக்கத்தவர்கள், ஊர்க்காரர்கள் அனைவரையும் அழைத்தார். ‘என் புது வீட்டிற்கு மொய் எழுதுங்கள்’ என்று சொல்லவில்லை. மாறாய், “இதோ பாருங்கள். இது இந்த ஊருக்கு நான் வழங்கும் இலவச க்ளினிக். நாமெல்லாம் இங்கு இலவச சிகிச்சை செய்து கொள்ளலாம்,” என்றார் ஜெய்னுல் ஆபிதீன். ஊர்க்காரர்கள் அவரை மேலும் கீழும் பார்த்தார்கள்; தலையாட்டினார்கள்; கலைந்துச் சென்றார்கள். கேலி அவர்களது முகத்தில் அப்பியிருந்தது. மீதமிருந்த பணத்தில் சில மேசைகள், கட்டில்கள் வாங்கி தமது க்ளினிக்கில் போட்டார். பெயர் வைக்க வேண்டுமே? ‘மும்தாஜ் ஆஸ்பிட்டல்’ என்ற பெயர் பலகை வந்து ஏறியது. மக்கள் வந்து நின்று படித்துப் பார்த்துவிட்டு, இன்னும் கொஞ்சம் சிரித்துவிட்டுச் சென்றனர். எல்லாம் சரி! மருத்துவர்கள்? சிலரைச் சந்தித்துப் பேசினார். “நீ ரிக்-ஷாக்காரன். இப்பொழுது க்ளினிக் திறந்துள்ளாய்! அப்படியா? மெத்த மகிழ்ச்சி” என்று மருத்தவர்கள் பதில்களிலும் நையாண்டி ஒளிந்திருந்தது. கால்களைப்போல் மனமும் உரமேறியிருந்த ஜெய்னுல் ஆபிதீன் அதற்கெல்லாம் அசரவில்லை. இவர்களுக்கு நான் அளிக்கும் பரிசை உணரக்கூட இயலாத அப்பாவிகள் இவர்கள் என்றுதான் அவருக்கு அந்த மக்களைப் பற்றித் தோன்றியது. ஒருநாள் கிராமத்தில் யாருக்கோ அடிபட்டு ஏதோ காயம். அவசரமாய் தேவை என்றதும் இந்த க்ளினிக்கிற்கு அழைத்துவந்து, முதல் உதவி அளிக்கும் தகுதியுடைய நர்ஸ் போன்ற ஒருவரைப் பிடித்துவந்து, காயத்திற்கு மருத்துவ உதவி அளித்திருக்கிறார். அவ்வளவுதான்! சரசரவென்று காட்டுத் தீயாய் கிராமத்தில் பரவியது செய்தி. ‘அட இந்த மனுசன் அப்ப உண்மையாத்தான் சொல்லியிருக்கிறான்’ என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு, தலையைப் பிடித்துக் கொண்டு, ஆளுக்கொரு என்னத்தையோ பிடித்துக் கொண்டு க்ளினிக்கில் ‘ஜே ஜே’ என்று கூட்டம். சிறிய பிரச்சினைகளைக் கவனிக்க தினசரி முதலுதவி மருத்துவர், வாரம் ஒருமுறை பெரிய மருத்துவர் என்று களை கட்ட ஆரம்பித்தது க்ளினிக். சளி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு இத்தியாதி சிறு வியாதிகளுக்கு அந்த க்ளினிக்கில் இலவச சிகிச்சை. சுகப் பிரசவமும் இலவசம். அந்தச் சிறு கிராமத்தில் தினசரி நூறு நோயாளிகளுக்குச் சிகிச்சை என்று வளர ஆரம்பித்தது சேவை. பெரிய விஷயங்களுக்கு மட்டும் மைமென் சிங்கில் உள்ள பெரிய மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். நல்ல மனம் கொண்ட சிலரும் இந்தச் செய்தியை அறிந்த சில நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு உதவ அடுத்து இலவச மருந்து கடை உருவானது. விஷயம் பரவ பரவ, உள்ளூர் ஊடகங்களும் செய்தி வெளியிட, நல்லுள்ளம் கொண்ட மக்களின் நன்கொடை தானாய் வர ஆரம்பித்தது. பார்த்தார் ஆபிதீன். அந்தப் பணத்தில் மேலும் இரண்டு ஷெட்டுகள் கட்டி, இது தொடக்கக் கல்வி பிள்ளைகளுக்குப் பயிற்சி மையம் என்று அறிவித்துவிட்டார். அந்தக் கிராமத்தில் உள்ள மக்களின் தொழில் என்பதெல்லாம், விவசாயம், கூலி வேலை. அவர்களின் பிள்ளைகள் ஓடிவந்து அங்கு அமர்ந்துகொள்ள சுமார் 150 மாணவர்களுக்கு பெங்காலி, அரபு மொழி, கணிதம், ஆங்கிலம் என்று அந்தப் பாடசாலையில் கல்விப் பணி துவங்கியது. அவர்களுக்கான புத்தகங்களும் இலவசம். 61 வயதை நெருங்கிவிட்ட ஜெய்னுல் ஆபிதீனுக்கு க்ளினிக்கைக் கவனிப்பதே முழு நேர அலுவலாகிவிட்டது. ரிக்-ஷா ஓட்டிதானே என்று அவரை அப்பொழுது பெரிதாய்க் கண்டு கொள்ளாத மக்கள் மத்தியில் இப்பொழுது ஏக மரியாதை. “பாய்! எங்கள் வீட்டிற்கு வந்து ஒரு கப் சாயா குடித்துவிட்டுப் போங்களேன்” என்று அன்பு உபசரிப்பு அதிகமாகிவிட்டது. “எங்கள் நாட்டின் முன்னோடி மனிதர்களுள் ஒருவராகி விட்டார் ஜெய்னுல் ஆபிதீன்” என்று அரசு ஊழியர் ஒருவரின் பெருமையான பிபிசி பேட்டி வேறு. ஜெய்னுல் ஆபிதீனும் பிபிசி-க்குப் பேட்டி அளித்தார். கண்களில் மற்றுமொரு கனவு. “அரசாங்கமும் மக்களும் மேலும் உதவினால் இதை ஒரு முழு அளவிலான மருத்துவமனையாகவே உருவாக்கிவிடலாம்.” கனவு மெய்ப்படும் என்றே தோன்றுகிறது – இன்ஷா அல்லாஹ்! -நூருத்தீன் (தகவல் உதவி - பிபிசி செய்திக் குறிப்பு

12:57 AM | தலைப்பு: , , | Read More »

அமெரிக்கர்களின் அட்டூழியம்..!


 Tn Fisherman Killed 3 Hurt Firing From Us Navy Ship துபாய்: துபாயில் அமெரிக்க கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு தமிழக மீனவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.
 Fisherman Killing India Asks Uae Register Case பஹ்ரைனில் அமெரிக்க கடற்படையின் 5-வது படைப்பிரிவு முகாமிட்டுள்ளது. அந்த படைக்கு எரிபொருள் விநியோகத்துக்காக `யுஎஸ்என்எஸ் ரப்பாஹன்னோக்' என்ற அமெரிக்க எரிபொருள் கப்பல் துபாய் வழியாக சென்று கொண்டிருந்தது. துபாயின் ஜபேல் அலி துறைமுகம் அருகே அக்கப்பல் சென்று கொண்டிருந்தபோது, அந்த கப்பலை நோக்கி 30 அடி நீளமுள்ள ஒரு சிறிய படகு விரைந்து வந்து கொண்டிருந்தது.
அந்தப் படகு தீவிரவாதிகளின் படகாக இருக்குமோ என்று அச்சப்பட்ட அமெரிக்க மாலுமிகள் படகின் திசையை மாற்றுமாறு எச்சரித்திருக்கின்றனர். ஆனால் படகில் சென்று கொண்டிருந்த மீனவர்களுக்கு அது தெரியவில்லை. இதனால் திடீரென அமெரிக்க படகில் இருந்தவர்கள் வானத்தை நோக்கி சுட்டனர். ஆனாலும் மீனவர் படகு தங்களைத்தான் தாக்க வருகிறது என்று கருதி சராமரியாக படகை நோக்கி சுடத் தொடங்கினர்.
இதில் படகில் இருந்த ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். அப்படகு ஜபேல் அலி துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
படகில் இருந்தவர்கள் ராமேஸ்வரம் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் துபாய் நிறுவனத்துக்காக கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பலியானவர் பெயர் சேகர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் தோப்புவலசை களிமண்குண்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த முத்து முனிராஜ், தொண்டி அருகே முள்ளிமுனையைச் சேர்ந்த முத்துகண்ணன், முருகன் ஆகியோர் படுகாயமடைந்தவர்கள்.
இச்சம்பவம் குறித்து அமெரிக்க கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
மத்திய அரசு விளக்கம்:
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜூலை 16ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேரப்படி, துபாய், ஜபேல் அலி துறைமுகம் அருகே மாலை 3 மணியளவில் மீன்பிடி படகு ஒன்றின் மீது தனது நாட்டு கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
இதில் ஒரு இந்திய மீனவர் கொல்லப்பட்டார். 3 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். இந்திய மீனவர் உயிரிழந்ததும், 3 பேர் காயமடைந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம், அமெரிக்க அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அதேபோல அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகமும், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இந்த துயரச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துவது தொடர்பாக முழு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அங்குள்ள தற்காலிக தூதர் ஜபேல் அலி வழங்கி வருகிறார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவல், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாயைத் தொடர்பு கொண்டு மீனவர் பலியானதற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். இதுதொடர்பாக அமெரிக்க அரசு முழு அளவிலான விசாரணையை நடத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அரசு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் இந்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:01 PM | தலைப்பு: , , | Read More »

"யாரைக்கேட்டு என் தொகுதிக்குள் வந்தீங்க...?' அமைச்சரை மிரட்டிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,

கோவை :கோவையில், பொதுமக்கள் முன்னிலையில், தமிழக உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை "மிரட்டிய' அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சியின் சிறப்பு தூய்மைக்குழு துவக்க விழா நேற்று காலை நடந்தது. உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் முனுசாமி, மேயர் வேலுசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட மருதம் நகரில் சமநிலைத் தொட்டி கட்டுமான பணியை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். அப்போது, அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த, கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, "யாரைக்கேட்டு என் தொகுதிக்குள் வந்தீங்க...?' எனக்கேட்டு அமைச்சருடன் வாக்குவாதம் செய்தார். அருகிலிருந்த கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., துரைசாமி, ஆறுக்குட்டியை சமாதானம் செய்ய முயன்றார். எனினும், அவர் தொடர்ந்து சத்தம் போட்டபடியே இருந்தார். நிலைமை மோசமாவதை கண்டு சுதாகரித்து கொண்ட அமைச்சர் முனுசாமி, ஆறுகுட்டியை சமாதானப்படுத்த முயன்றார். அதற்கு அவர், "யாரைக் கேட்டு என் தொகுதிக்குள் வந்தீங்க...? சும்மா வந்துபோற இடம்முனு என் தொகுதியை நினைச்சீங்களா? குரும்பபாளையம் பக்கம் வந்து பாருங்க, எங்காளுக உங்கள போக விடமாட்டாங்க...' என்றார்.அதற்கு அமைச்சர் முனுசாமி, " ஆறுக்குட்டி, ப்ளீஸ் ஒத்துழைங்க, இனிமேல் தவறு நடக்காம பார்த்துக்குவோம்' என்றார். அவ்வாறிருந்தும், ஆறுக்குட்டி சிறிதும் சமாதானம் அடையாமல் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார். "இந்த விஷயம் "அம்மா' காதுக்கு போகட்டும்; என் தொகுதியில நடக்கற விழா பத்தி என்கிட்ட ஏன் சொல்லலைன்னு கேக்குறது என் உரிமை,' என, ஆவேசம் குறையாமல் பேசிக்கொண்டே இருந்தார். அவரை எம்.எல்.ஏ., க்கள் துரைசாமி, வேலுமணி ஆகியோர் குறுக்கிட்டு சமாதானம் செய்தனர். அதன்பின், கையெடுத்துக் கும்பிட்டவாறு காரில் ஏறி கிளம்பினார் அமைச்சர் முனுசாமி. ஆறுக்குட்டியின் ஆவேசத்தால் "அப்செட்' ஆன பிற பிரமுகர்கள், அதிகாரிகள், நிகழ்ச்சியை ரத்துசெய்து கிளம்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி கூறுகையில், ""அமைச்சர் வருகை குறித்து எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை. என் ஊர் இது. நான் பாடுபடும் மண். என்னிடம் சொல்லாமல் யாராவது உள்ளே வரலாமா,'' என்றார். எம்.எல்.ஏ.,வின் புகார் குறித்து மாநகராட்சி தரப்பில் விசாரித்தபோது, "மாநகராட்சி கமிஷனர் மற்றும் மண்டல உதவி ஆணையர் மூலமாக, அமைச்சர் வருகை குறித்து, ஆறுக்குட்டிக்கு முறையாக தகவல் தெரிவித்து விட்டோம்' என்றனர். கட்சியினர் "அப்செட்':அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சரை, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஒருவரே மிரட்டும் தோரணையில் பேசியதை கண்டு, உடனிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கட்சி பிரமுகர் ஒருவர் கூறுகையில், "தனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என, அமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் பேசி, ஆதங்கத்தை எம்.எல்.ஏ., தெரிவித்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு, பொதுஇடத்தில் இப்படி நடந்துகொண்டிருக்க தேவையில்லை. அமைச்சரை தன் தொகுதிக்கு அழைத்துச் சென்று கோரிக்கைகள் குறித்து விளக்கியிருக்கலாம்; அதுவே சரியான அணுகுமுறை' என்றார்.

1:11 AM | தலைப்பு: , , , | Read More »

கிடப்பில் காட்டுப்பள்ளி துறைமுகம்

சரக்குகளை கையாள முடியாமல் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் நெருக்கடியில் இருக்கும் நிலையில், சென்னைக்கு அருகிலேயே கட்டி முடிக்கப்பட்டும் கூட, காட்டுப்பள்ளி துறைமுகம் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் கூட, சுங்க வரி சோதனை அலுவலகம் அமைப்பதற்குரிய ஒப்புதலை மத்திய அரசு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், இந்த துறைமுகத் திறப்பு விழா தள்ளிப் போகிறது. கால தாமதம் :சென்னை, எண்ணூர் ஆகிய இரண்டு துறைமுகங்களிலும் சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால், கப்பலில் வந்திறங்கும் சரக்குகளை, துறைமுகத்தை விட்டு வெளியில் கொண்டு வருவதற்கு மிகுந்த கால தாமதம் ஆகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக, சென்னைக்கு அருகே எண்ணூரில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் காட்டுப்பள்ளி என்ற கிராமத்தில், துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஐ.மு., கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தின் போது தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி இருந்தபோது, இதற்கான பணிகள் ஆரம்பமாகின.கட்டுமானத் துறையில் பெரிய அளவில் புகழ் பெற்று விளங்கும், "எல் அண்ட் டி' நிறுவனம் சார்பில் இந்த துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. காட்டுப்பள்ளி துறைமுகத்தின் உரிமையாளர் இந்த நிறுவனம் தான். இருப்பினும் இந்த திட்டத்தில், தமிழக அரசின் நிறுவனமான டிட்கோவுக்கும் பங்களிப்பு உள்ள வகையில் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் ஆரம்பமாகின. டிட்கோ நிறுவனத்திற்கு இந்த நிறுவனத்தில் 10 சதவீதம் வரை பங்குகள் இருப்பதால், அரசாங்க துறைமுகம் போலவே கருதப்பட்டு வந்தது. நெருக்கடி நீங்கும்:ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு, ஒரு துறைமுகத்திற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டன. வெறும் துறைமுகமாக மட்டும் இல்லாமல் கப்பல் கட்டும் வசதிகளும், சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்பட்டு வந்தது. இதனால், மிகுந்த எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் காட்டுப்பள்ளி துறைமுகம் பெற்றது. சரக்குகளை கையாள்வதில் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு உள்ள நெருக்கடிகள் விரைவில் நீங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஒப்புதல் இல்லை:ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த துறைமுகம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டும்கூட இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்கு துறைமுகத்தில் அமைக்கப்படவேண்டிய சுங்கவரிச் சோதனை அலுவலகத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காமல் இருப்பதே மிக முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. எந்த ஒரு துறைமுகமாக இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமாக விளங்குவது சுங்கவரிச்சோதனை அலுவலகம்தான்.கப்பலில் இருந்து வரும் சரக்குகளை சோதனையிட்டு அவற்றுக்கு சுங்கவரிச்சோதனை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே சரக்குகளை துறைமுகத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்லவே இயலும். ஆகவே ஒரு துறைமுகத்திற்கு ஆன்மா போல விளங்கும் சுங்கவரிச்சோதனை அலுவலகம் அமைப்பதற்குண்டான கட்டிடம், இயந்திரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்த துறைமுகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் அரசின் ஒப்புதல் மட்டும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. காரணம் என்ன?சுங்கவரிச்சோதனையில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகுந்த பற்றாக்குறையாக உள்ளது. இதனால்தான் சுங்கவரிச் சோதனை அலுவலகத்துக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் மத்திய அரசு வட்டாரங்களில் காரணங்கள் கூறப்படுகிறது. பொதுவாக சுங்கவரிச்சோதனையில் ஈடுபட திறமைவாய்ந்த அதிகாரிகளே தேவைப்படுவார்கள். அதுபோன்ற அதிகாரிகள், தற்போது பிற துறைமுகங்களிலுமே கூட குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர். இதன்காரணமாக, காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.பொதுவாக சுங்கவரிச்சோதனை குறித்த விவகாரங்கள் எல்லாமே மத்திய அரசின் நிதித்துறை இலாகாவின் கீழ் வருகிறது. மத்திய நிதியமைச்சகம்தான் இவற்றுக்கு எல்லாம் அனுமதி அளித்திடவேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவரான பழனிமாணிக்கம்தான் மத்திய நிதித்துறையில் இணை அமைச்சராக உள்ளார். அதிலும் சுங்கவரித்துறை குறித்த விவகாரங்கள் எல்லாம் இவரது கட்டுப்பாட்டின் கீழ்தான் வருவதாக தெரிகிறது. இருந்தும்கூட என்ன காரணத்தினாலோ பிரச்னைகள் தீர்க்கப்பட்டு ,காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு சுங்கவரிச் சோதனை அலுவலகம் அமைப்பதற்கு தேவையான அனுமதி கிடைக்காமல் இருந்து வருகிறது. மாற்று யோசனை:இதற்கிடையில் மாற்று ஏற்படாக சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் உள்ள சுங்கவரிச்சோதனை அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்ற யோசனையும் பரிசீலிக்கப்படுகிறது. ஆனாலும் ஒரு துறைமுகத்தின் அனுமதி பெற்று வந்து மற்றொரு துறைமுகத்திற்குவந்து சுங்கவரிச்சோதனை நடத்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் கருதப்படுதால் காட்டுப்பள்ளி துறைமுகத்தின் சிக்கல் நீடித்தபடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெ., மன்மோகன்தேதி கிடைக்கலயா: ஆரம்பத்தில் இருந்தே இந்த துறைமுகம், அரசுக்கு சொந்தமான துறைமுகமாவே கருதப்பட்டு வருகிறது. தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்திற்கும் பங்குகள் இருப்பதால், சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலுமே அரசின் துறைமுகமாகவே முன்னிறுத்தப்பட்டு வந்தது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான துறைமுகம் என்றாலும், டிட்கோ சம்பந்தப்பட்டுள்ளதால் தமிழக முதல்வரை வைத்து திறப்புவிழா நடத்த வேண்டுமென்று அதிகாரிகள் விரும்புகின்றனர். ஆனால் எல் அன் டி நிறுவனமோ பிரதமரையும் அழைத்துவந்து திறப்பு விழா நடத்த வேண்டுமென கருதுகிறது. முதல்வருக்கும் பிரதமருக்கும் ஒருசேர தேதி கிடைக்காமல் இருப்பதாலேயே திறப்புவிழா தள்ளிப்போய்க் கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆக விஐபி க்களின் தேதி கிடைக்காத காரணத்திற்காவே காலதாமதம் ஆகும் தமிழக திட்டங்களில் காட்டுப்பள்ளி துறைமுகமும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆந்திராவுக்கு போன கதை:நாட்டின் கிழக்கு கடற்கரை முழுவதும் மேலும் சில மிகப்பெரிய துறைமுகங்களை அமைப்பது என்ற முடிவு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டது. அப்போது இதே காட்டுப்பள்ளியைச் சுற்றியுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு துறைமுகம் அமைக்க முடிவானது.மத்திய அரசே பல்லாயிரம் கோடிகளை செலவு செய்து இங்கு துறைமுகம் கட்டுவதாக இருந்தது. இதனால் சென்னை, எண்ணூர் ஆகியவற்றோடு சேர்ந்து காட்டுப்பள்ளி துறைமுகமும் தமிழகத்துக்கு கிடைத்து இருக்கும். ஆனால் சில தலையீடுகள் காரணமாக கைநழுவி எல் அன் டி வசம் இந்த காட்டுப்பள்ளி போய்விட்டது. தமிழகத்தின் கிழக்கு கடற்கரைக்கு மத்திய அரசால் அமைக்கப்படவிருந்த அதே துறைமுகம், இப்போது ஆந்திராவுக்கு சென்றுவிட்ட சோகத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். -நமது டில்லி நிருபர்-

1:11 AM | தலைப்பு: , , , | Read More »

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added