1:31 PM | பதிவு செய்தவர் ah kdnl
கெய்ரோ: எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு அந்நாட்டு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை கேட்டதும் கோர்ட் வளாகத்தில் கூடியிருந்த அவரது ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கடந்த 2011ல் அதிபருக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டது. மக்கள் தரம் உயரவில்லை என் காரணத்தை கூறி மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து நாடு முழுவதும் பரவிய கலவரம் தீப்பற்றி எரிந்தது. அரசு அலுவலகங்கள் தீக்கிரையானது.
கலவரத்தை அடக்க அதிபர் உத்தரவின் பேரில் ராணுவம் மற்றும் போலீஸ் படையினர் கடும் ஆயுதங்கள் கொண்டு தாக்கினர். துப்பாக்கிச்சூட்டிற்கு 850 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கலவரம் கொழுந்து விட்டு எரிந்ததை கண்டு அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து ஷரம் அல் ஷேக்கிற்கு ஓடினார்.
இந்த குற்றம் தொடர்பான வழக்கில் மாஜி அதிபர் முபாரக், உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் என 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனை போதாது: இந்த தீர்ப்பு குறித்து கலவரத்தில் தனது மகனை இழந்த தாய் ஒருவர் கூறுகையில்; இந்த தண்டனை போதாது அவருக்கு மரணத்தண்டனை வழங்க வேண்டும். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது போல் எனது மகன் இறந்தது போல் அவரும் இறக்க வேண்டும் என்றார் ஆவேசத்துடன்.
18 நாட்கள் நீடித்த புரட்சி: எகிப்து கலவரத்தை அடுத்து அரபு நாடுகளில் இந்த கலவரம் கிளர்ச்சி எழுந்து மக்கள் போராட்டம் வென்றது. எகிப்தில் கடந்தாண்டு அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி, இதே ஜனவரி 25ம் தேதி மக்கள் புரட்சி துவங்கியது. அதற்கு முன் ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டாலும், தாரிர் சதுக்கத்தில் ஜனவரி 25ம் தேதி முதல், மக்கள் ஆயிரக்கணக்கில் திரள ஆரம்பித்தனர். இந்தப் புரட்சி 18 நாட்கள் நீடித்தது. பிப்ரவரி 11ம் தேதி முபாரக், அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டு, ஷரம் எல் ஷேக்கிற்கு ஓடிப் போனார்.
ராணுவ ஆட்சியில் திருப்தி இல்லை: தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஆனாலும் மக்களுக்கு இந்த ஆட்சி திருப்தி இல்லை என்கி்ன்றனர். புரட்சியின் நோக்கத்திற்கு பயன் கிட்டவில்லை என்றும் குறைகூறுகின்றனர்