|

நம் எம்.பி.,க்கள் செய்வதுதான் என்ன? பார்லிமென்ட் தரும் தகவல்

சட்டமியற்றும் தகுதி படைத்த நம் எம்.பி.,க்கள், நாடாளுமன்ற சட்டமியற்றும் நடவடிக்கைகளில் பங்கு பெறுவது வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால், மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்கள் பெரும்பாலும் சரியான விவாதம் இல்லாமல் நிறைவேறுகின்றன. இது தவிர, தனி நபர் மசோதாக்கள் மீது விவாதங்கள் நடப்பதே இல்லை. கடந்த 2011ம் ஆண்டு, லோக் சபாவில், 81 தனி நபர் மசோதாக்களும்; ராஜ்ய சபாவில் 51 மசோதாக்களும்; யாரும் கண்டுகொள்ளாததால் வீணடிக்கப் பட்டன.இவற்றில், தாய் மொழியில் உயர் கல்வி கற்பித்தல் போன்ற, பல நல்ல மசோதாக்கள் கவனமின்றி சென்றன. வெறும் கூச்சல்:அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது, கட்சி, மதம், ஜாதி போன்ற வேறுபாடுகளை கணக்கில் கொள்ளாமல், அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களும் விவாதிக்கப் பட்டு, நல்ல கருத்துக்கள் ஏற்கப்பட்டன. இது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இன்றும் நிலைத்து நிற்க வைக்கிறது.நேரு பிரதமராக இருந்தபோது, காங்கிரஸ் கட்சியில் இருந்த மகாவீர் தியாகி, அதிக பலம் இல்லாத எதிர்க்கட்சிகளை அலங்கரித்த நாத் பாய், புபேஷ்குப்தா, ஆச்சார்ய கிருபளானி போன்ற பலரும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை தங்களது நியாயமான வாதங்களால் மேம்படச் செய்தது வரலாறு.கூட்டணி ஆட்சித் தத்துவம் வந்தபின், நாடாளுமன்ற விவாதங்கள் சூடாகி வெறுப்பை ஏற்படுத்துகின்றன. தவிர, மக்களுக்குப் பயன்படும் சட்டத் திருத்தங்கள் முறையே உருவாக வழிவகுக்கவில்லை.இந்தக் கருத்து, படித்த இளைஞர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆகிய எல்லாருடைய மனதிலும் எழுந்திருக்கிறது. பயன் இல்லை :மொத்தத்தில், 60 ஆண்டுகளாகத் தொடரும் நாடாளுமன்ற மரபில், மக்கள் நலன் சார்ந்த விவாதங்கள், அதன் பயனாக சட்டங்கள் உருவாகும் நிலைமை குறைந்து வருகிறதோ என்ற எண்ணம் அதிகரிக்கிறது.தற்போது, நாடாளுமன்றம், தமிழக சட்டசபையைப் போல், அரசு முன்கூட்டியே அறிவித்த திட்டங்களுக்கு மசோதா நிறைவேற்றும் கருவியாக மட்டுமே உள்ளது. இதனால், அரசின் நடவடிக்கைகள் அனைத்தும், மசோதா பிரச்னையில்லாமல் நிறைவேறுவதற்கான, முயற்சிகள் சார்ந்தே உள்ளன. இந்த நிலை சீரடைய மக்கள் தான், தங்கள் எம்.பி.,க்களை வலியுறுத்த வேண்டும். கமிட்டி வசம் தாமதம்: பாராளுமன்ற நடவடிக்கைகளின் படி விவாதிக்கப்பட்ட சில மசோதாக்கள் நிறைவேற்றப்படும் முன், மேலும், அதிக ஆய்வுக்காக பல்வேறு கமிட்டிகளின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அவை, அடுத்ததாக ஆய்வு செய்யப்பட்டு சட்ட வடிவை எப்போது பெறும் என்பதைப் பலரும் அறிய வாய்ப்பில்லை. லோக்சபாவின் நிலைக்குழுவுக்கு, 29 மசோதாக்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இவற்றில் சில: * நேரடி வரிவிதிப்பு வழிமுறைகள் மசோதா 2010 * பினாமி சொத்து பரிமாற்ற தடுப்புச் சட்டம் 2011 * நுகர்வோர் பாதுகாப்பு திருத்த மசோதா 2011 * கேபிள் "டிவி' நெட்வொர்க்ஸ் முறைப்படுத்தும் 2வது திருத்த மசோதா * தேசிய உணவு பாதுகாப்பு மசோதா 2011 விடிவு வருமா ? சில மசோதாக்கள் நிலைக்குழு பரிசீலனை முடிந்து, சம்பந்தப்பட்ட அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில... *அணைகள் பாதுகாப்பு மசோதா 2010 * பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு தரும் மசோதா 2010

பதிவு செய்தவர் ah kdnl on 4:13 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added