நோபல் பரிசு பெற்ற புகழ் மிக்க எழுத்தாளர் Gunter Grass இஸ்ரேலில் நுழைவதிலிருந்து தடை
இஸ்ரேலை விமர்சித்தது கவிதை எழுதியதற்காக நோபல் பரிசு பெற்ற புகழ் மிக்க எழுத்தாளர் Gunter Grass இஸ்ரேலில் நுழைவதற்கு இஸ்ரேலிய அரசால் தடை செய்யப்பட்டார். இவர் சமீபத்தில் தனது கவிதை ஒன்றில் இஸ்ரேலின் அணு ஆயுத கொள்கை உலக சமாதானத்துக்கு பங்கம் விளைவிக்கக் கூடியது என்று கூறியுள்ளார். இதுவே அவர் யூத எதிர்பாளர் என்று முத்திரை குத்தப்பட்டு இஸ்ரேலில் நுழைய தடை விதிக்கப்பட காரணமாக அமைந்தது.
84 வயதான Gunter grass பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளிக்கும்போது, தான் இஸ்ரேலை விமர்சிக்கவில்லை என்றும் நெதன்யாஹு அரசின் கொள்கைகளையே விமர்சித்ததாகவும் கூறியுள்ளார். சொல்லப்பட வேண்டியவை என்ற அர்த்தம் கொண்ட இவரது கவிதையில் ஈரான் மற்றும் இஸ்ரேல் தனது அணு உலைகளை சர்வதேச கண்காணிப்பின் கீழ் சமர்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஈரானிடம் அணு ஆயுதங்கள் கையிருப்பு உள்ளதாக தான் கருதுவதாகவும் இந்த இரு நாடுகளின் விவஹரத்தில் ஜெர்மனின் அணுகுமுறையையும் இவர் விமர்சித்துள்ளார். இஸ்ரேல் ஈரானை தாக்கினால் அது இன்னொரு உலக போருக்கு வழிவகுக்க கூடும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இவரது இந்த கவிதை சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பில் உள்ள யூத ஆதரவாளர்கள் அவர் அவர் பங்கிற்கு இவரை குறை கூற தொடங்கிவிட்டனர். இவர் தனது இளம் வயதில் நாசி படையின் waren SS பிரிவில் பணியாற்றியதை சுட்டிகாட்டி ( இரண்டாம் உலக போரின் கடை தருணத்தில் பல இளைஞர்கள் கட்டாயமாக ஜெர்மானிய படையில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ) இவர் ஒரு பகிரங்க யூத எதிர்ப்பாளர் என்று பிரச்சாரங்களும் செய்ய ஆரம்பித்து விட்டனர். ஜெர்மானிய வெளியுறவு துறை அமைச்சர், Grassஇன் இஸ்ரேல் மற்றும் ஈரானை ஒப்பீடு மிகவும் அபத்தமாது என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலிய உள்துறை அமைச்சர் Yishai , Grass தனது திரிபு செய்யப்பட்ட போலியான கருத்துகளை பரப்ப வேண்டும் என்றால் அவர் ஈரானிலிருந்து இதனை செய்யட்டும், அங்கு அவர்க்கு ஆதரவாளர்கள் அதிகம் கிடைப்பார்கள் என்று கூறியுள்ளார். இஸ்ரேலின் வெளியுறவு துறை அமைச்சர் Lieberman , Grass இன் இந்த கருத்துக்கள் சில புத்தகங்களை விற்பதற்காக யூத எதிர்ப்பாளர்களின் பலி பீடத்தில் யூத மக்களை இன்னுமொருமுறை பலியிட தயாராகும் மேற்கத்திய அறிவுஜீவிகளின் இறுமாப்பின் வெளிப்பாடு என்று கூறியுள்ளார்.
இதற்க்கு பதில் அளித்த Grass தனது கவிதையின் உள்ளடக்கத்தை பார்க்காமல் தன்னை குறை கூறி பிரச்சாரம் செய்வது சரியில்லை என்று கூறியுள்ளார். இவரது இந்த கவிதைக்கு இஸ்ரேலிய எழுத்தாளர்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். Larry Derfner என்பவர் +972 இணைய தளத்தில் Grass கூறியது உண்மை எனவும் அவர் இதனை கூறியதனால் தயிரியசாலி எனவும் அவர் தனது இல வயதில் waren SS பிரிவில் பணியாற்றியதை தயிரியமாக ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் கூறியுள்ளனர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் உள்ள யூதர்கள் தங்கள் வாய் மூடி நெதன்யாஹுவை பின்பற்றும்போது, ஈரானின் மீதான இஸ்ரேலிய தாக்குதலை எதிர்தமைக்காக இவர் பெரிய விலை கொடுத்து இஸ்ரேலிற்கு பெரிய தொண்டு செய்துள்ளார் என்று கூறியுள்ளனர். இவர் Yishai மற்றும் Lieberman இஸ்ரேலிய அரசாங்கத்தின் பிரபல்யமான வகுப்புவாதிகள் என்று கூறியுள்ளார். ஒரு மனிதனை அவனின் எதிரிகளை கொண்டு அறிய முடியுமானால் Grass நல்லவராகவே தெரிகின்றார் என்று கூறியுள்ளார்.
Haaretz பத்திரிகை எழுத்தாளர் Gideon Levy, Grass மற்றும் இஸ்ரேலின் கொள்கைகளை விமர்சிக்கும் மற்றவர்கள் இஸ்ரேலிய எதிர்பாளர்கள் இல்லை என்றும் அவர்கள் பல இஸ்ரேலிய மக்களின் கருத்துக்களை பிரபளிக்கின்றார்கள் என்றும் அவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு அவர்களின் கூறியதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஈரானின் அணு கோள்களை பற்றி எந்நேரமும் ஓயாமல் கூப்பாடி போடும் இஸ்ரேல் தன்னுடைய அணு ஆயுத கோள்களை குறித்து யாரும் கேள்வி எழுப்பினால் தரும் பதில் இது தான்.
நன்றி
Guardian
Sueddeutsche

பதிவு செய்தவர் தபால் பெட்டி
on 3:42 PM. தலைப்பு
அரசியல்,
உலகம்,
செய்திகள்
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன