4:30 PM | பதிவு செய்தவர் Ameer
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சென்னையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் மக்கள் பீதியடைந்னர்.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இன்று மதியம் சுமார் 2.15 மணியளவில் இந்த
நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானதால் நிலநடுக்கம்
மிகக்கடுமையாக உணரப்பட்டது.
இதன் தாக்கம் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் உணரப்பட்டது.
கட்டிடங்கள் குலுங்கியதால் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தோர் பீதியடைந்து வெளியே ஓடிவந்தனர்.