முஸ்லீம்களுக்கெதிரான அரசியல் கட்சி மே மாதம் பிரிட்டனில் தொடக்கம்.
இங்கிலீஸ் டிபன்ஸ் லீக் (EDL - English Defense League) என்ற வலது சாரி கிருத்தவ இயக்கம் கடந்த மூன்று வருடங்களாக இங்கிலாந்தின் பல பகுதிகளில் இஸ்லாத்திற்கு எதிராகவும் முஸ்லீம் குடியேற்றதிற்கு எதிராகவும் பேரணிகளையும், கூட்டங்களையும் நடத்திவருகிறது. தங்களது கருத்துகளுக்கு பொதுமக்களின் ஆதரவை திரட்டுவதற்காக ஒரு அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக இவ்வியக்கத்தின் தலைவர் ஸ்டீபன் லினோன் கூறினார். வரும் மே மாதம் லுட்டன் நகரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் போது Freedom Party என்னும் பெயரில் தாங்கள் தொடங்க இருக்கும் புதிய கட்சி இஸ்ரேலுக்கும் சியோனிஸதுக்கும் ஆதரவாகவும் இஸ்லாத்திற்கும் பிரிட்டனில் முஸ்லிம்களின் குடியேற்றதிற்கும் எதிராகவும் செயல்படும் என்றார்.
இந்த இயக்கம் இதுவரை நடத்திய பேரணிகள் கூட்டங்கள் பெரும்பாலும் வன்முறையில் முடிந்துள்ளதால் இவ்வியக்கத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அரசியலில் குதிக்கும் EDL இன் திட்டம் அரசியல் ரீதியாக தங்கள் கருத்துக்கு ஆதரவு திரட்டும் முயற்சி என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டு நார்வே நாட்டில் 77 பேர்களை அநியாயமாக சுட்டுக்கொன்ற அண்டர் பெஹ்ரிங் ப்ரேவிக் பலமுறை EDL தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தான். ஐரோப்பிய சுதந்திர பிரகடனம் எனும் தனது கட்டூரையில் ப்ரேவிக் முஸ்லீம்கள் ஐரோப்பாவை அரேபியாவாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் 2083 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவில் உள்ள முஸ்லீம்கள் அனைவரையும் நாடு கடத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தான். இதனிடையே தங்கள் கட்சியின் எதிர்காலம் குறித்து ஸ்டீபன் லெனோன் கூறும்போது ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான பிரிட்டிஷ் நேசனலிஸ்ட் கட்சிக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு இரண்டு இடம் கிடைத்ததென்றால் அதைவிட தாங்கள் அதிக இடங்களை கைப்பற்றுவோம் என்றார். ஐரோப்பாவின் பல நாடுகளிலும் முஸ்லீம்களுக்கு எதிராகவும் முஸ்லீம் வணக்கஸ்தலங்களுக்கு எதிராகவும் தாக்குதல்கள் அதிகரித்துள்ள வேளையில் EDL இன் வளர்ச்சி இன்னும் நிலைமையை மோசமடைய செய்யும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.