|

ஈரான் மீது போர் தொடுப்பதை எதிர்த்து இஸ்ரேலில் மிகப்பெரிய பேரணி

டெல்அவிவ், 25 Mar2012.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம்சாட்டி அதன் அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் தொடுப்போம் என்று இஸ்ரேலிய தலைவர்கள் கூறிவரும் நிலையில் ஈரான் மீது போர் தொடுப்பதற்கு இஸ்ரேலிய பொதுமக்களிடத்தில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. நேற்று இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவில் போர் எதிர்ப்பாளர்கள் மிகப்பெரிய பேரணியை நடத்தினர். பிரபல ஹபிமா சதுக்கத்தில் இருந்து புறப்பட்ட பேரணி மேயர் பூங்காவில் முடிவடைந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இப்பேரணியில் “வேண்டாம் ஈரானுடன் போர்“ மற்றும், “போர் அல்ல, பேச்சுவார்த்தையே தீர்வு“ போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனிடையே கடந்த வாரம் சமூக வலைத்தளமான facebook இல் ஈரானுக்கு நேசக்கரம் நீட்டி இஸ்ரேலிய கிராபிக்ஸ் வடிவமைப்பு தம்பதிகளால்  வரயப்பட்ட சித்திரம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் ஏராளமானவர்களால் face book இல் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. “ஈரானியர்களே ஒருபோதும் நாங்கள் உங்கள் நாட்டை தாக்கமாட்டோம், மாறாக உங்களை மனதார நேசிக்கிறோம்” என்னும் அந்த facebook  சித்திரத்துக்கு ஈரானிலும் ஆதரவு பெருகி உள்ளது. கடந்த மாதம் இஸ்ரேல் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சதவீதம் பேர் ஈரான் மீது போர்தொடுக்க எதிப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

பதிவு செய்தவர் நாமீ on 12:48 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added