|

நாசாவின் இரகசிய ஆவணங்களை விற்ற அமெரிக்க விஞ்ஞானிக்கு 13 ஆண்டுகள் சிறை

வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் இரகசிய ஆவணங்களை இஸ்ரேலிய உளவாளிக்கு விற்றதாக கைது செய்யப்பட நாசா விஞ்ஞானிக்கு அமெரிக்க நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவைச் சார்ந்த 54 வயதான ஸ்டீவர்ட் நொசெட்டே என்ற இவர் நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாசாவின் விண்வெளிஆய்வு மற்றும் பாதுகாப்பு குறித்த இரகசிய ஆவணங்களை இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்தின் உளவாளிக்கு விற்றதாக கைது செய்யப்பட்டார். மேலும் இவர் மீது மோசடி, உளவு மற்றும் வரி ஏய்ப்பு ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று நடந்த வழக்கு விசாரணையில் இரகசிய ஆவணங்களை விற்றது மற்றும் 2,65,000 டாலருக்கு வரி ஏய்ப்பு செய்ததையும் ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி பவுல் பயர்ட்மேன் ஸ்டீவர்ட் நொசெட்டேவுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பதிவு செய்தவர் Eshack on 1:33 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added