|

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் ஆதரவு பேரணி- 500 பேர் கைது

கூடங்குளம் அணுஉலையை மூடிட கோரி போராட்டங்கள் வலுவடைந்துவரும் வேளையில் மத்திய மாநில அரசுகள் அணுஉலையை திறக்க அனைத்து முயற்ச்சிகளையும் செய்து வருகின்றது. ஜனநாயக வழியில் அமைதியாக உறுதியுடன் போராடி வரும் போராட்டக்காரா்களை அச்சுறுத்துவதற்கும் அடக்கவதற்கு ஏராளமான துணை இராணுவ வீரர்களையும், காவல்துறையையும் குவித்து கூடங்குளம் பகுதியில் வருகின்றது.

மேலும் போராட்டக்காரர்களை பலவீனப்படுத்துவதற்காக இடிந்தகரைக்கு பால், உணவுப்பொருட்கள், மின்சாரம், இணையதளம், அலைபேசி வசதிகள் உட்பட அணைத்து வசதிகளும் தடைசெய்து தனிமைபடுத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டக்காரா்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இடிந்த கரைக்கு பேரணியாக செல்ல முற்பட்ட மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா,SDPI, நாம் தமிழர் கழகம், பாமக உட்பட பல அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர் உட்பட 500 மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.







கூடங்குளம், இடிந்தகரை தாலுகாவில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் பாளையங்கோட்டையிலேயே பேரணி தடைசெய்யப்பட்டதாகவும் தலைவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

பதிவு செய்தவர் Ameer on 4:34 PM. தலைப்பு , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added