ஐ.நா. சபை தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வெளியுறவு துறை மந்திரி அறிவிப்பு
கொழும்பு நகரில் 26.03.2012 அன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பீரீஸ்,இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை குழு தீர்மானத்துக்கு கட்டுப்படுவது இல்லை என்று முடிவு எடுத்து இருக்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்த தீர்மானம் இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாக நாங்கள் கருதுகிறோம். மேலும் இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க முடியாது. இது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
