கர்நாடகாவை உலுக்கும் வக்ப் நில விவகாரம்
புதுடில்லி : கர்நாடக வக்பு வாரியத்திற்கு சொந்தமான 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துக்களை, சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்தது தொடர்பாக ரூ. 2 லட்சம் கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது தெரியவந்ததால் கர்நாடகாவில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை மிஞ்சும் வகையில் இம்முறைகேடு அமைந்துள்ளது. ஸ்டேட் மைனாரிட்டிஸ் கமிஷன் தலைவர் அன்வர் மணிப்பாடி, தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ரூ. 2 லட்சம் கோடி அளவிற்கு நடைபெற்றுள்ள இந்த முறைகேட்டில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 38 தலைவர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலருக்கும் தொடர்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
