|

பொருளாதார தடை: 12 நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதாக தெரியவந்துள்ள 12 நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணு சோதனை நடத்துவதாக ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் புகார் தெரிவித்து வருகின்றன. இதனால் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியூலன்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானிமிடருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா , சீனா உள்ளிட்ட 12 நாடுகள் மீது வரும் ஜூன் மாதத்திற்குள் பொருளாதார தடை விதிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் முடிவு செய்து உள்ளார். இது தொடர்பாக அவர் அறிவிப்பு வெளியிடுவார். இவ்வாறு விக்டோரியா நியூலன்ட் கூறினார்.

பதிவு செய்தவர் ah kdnl on 4:31 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added