|

மார்ச் 30 ஆம் தேதி ஜெரூசலம் நோக்கி உலகளாவிய பேரணி


ஜெரூசலம், 26 மார்ச் 2012.
ஒவ்வொரு ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியும் பாலஸ்தீனியர்களால் “Palestine Land Day” எனப்படும் பாலஸ்தீனபூமி தினமாக அனுசரிக்கப்படுகிறது. பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேலிய அரசாங்கம் 1964 ஆம் ஆண்டு பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியது. இதை எதிர்த்து பாலஸ்தீனியர்கள் வேலை நிறுத்தத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டபின் மிகப்பெரிய அளவில் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமானவர்கள் தங்கள் உயிர்களையும் உடல் அங்கங்களையும் இழந்தனர். பாலஸ்தீன சுதந்திர போராட்டத்தில் முக்கிய நிகழ்வை குறிக்கும் Palestine Land Day அன்று உலகளாவிய அளவில் பேரணியை நடத்த GMJ (Global March To Jerusalam)  போராட்ட குழுவினர் தீர்மானித்துள்ளனர்.  முஸ்லீம்கள், கிருஸ்துவர்கள், யூதர்கள், ஹிந்துக்கள், புத்தர்கள் என்று அனைவரும் இணைந்து பாலஸ்தீன விடுதலைக்காக பாலஸ்தீனுக்குள்ளும் இஸ்ரேலின் அனைத்து எல்லைபுறத்திலும் பேரணியையும் போராட்டத்தையும் நடத்த உள்ளனர்.  உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளின் மனித உரிமை ஆர்வலர்களை உள்ளடக்கிய GMJ அமைப்பு. பாலஸ்தீன விடுதலையும் பாலஸ்தீனர்களை சுற்றி இஸ்ரேலால் கட்டப்பட்டு வரும் தடுப்பு சுவரை உடைத்தேறிவதும்தான் தங்களுடைய போராட்டத்தின் நோக்கம் என்று GMJ அதனுடைய வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. உலகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தரை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் ஆகாய மார்க்கமாகவும் போராட்ட குழுவினர் ஜெருசலம் நோக்கி புறப்பட்டுள்ளனர். போராட்ட குழுவினரை இருப்புகரம் கொண்டு அடக்குவோம் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதேபோல இரண்டாண்டுகளுக்கு முன்பு துருக்கியிலிருந்து நிவாரணபொருள்களுடன் பாலஸ்தீனத்தின் காஸா நகரத்திற்கு சென்ற “ப்ரீடம் புலோடில்லா” கப்பலை இஸ்ரேலிய கமாண்டோக்கள் தாக்கி ஒன்பது மனித உரிமை ஆர்வலர்களை படுகொலை செய்தது உலகளாவிய அளவில் இஸ்ரேல் மீது பெரும் கண்டனத்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்தவர் நாமீ on 1:32 AM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added