|

சவூதி இளவரசியின் உயிர் பயம்...?


இங்கிலாந்து: சவூதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசியொருவர் தான் தற்போது வசித்து வரும் இங்கிலாந்து நாட்டின் அரசாங்கத்திடம் தனக்கு அரசியல் தஞ்சம் அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தான் சவூதி திரும்பினால், தனது குடும்பத்தினரால்  உயிராபத்து ஏற்படலாம் என்பதால் இவ்வாறு அரசியல் தஞ்சம் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாரா பின்த் தலால் பின் அப்துல் அஸீஸ் என்பது அந்த இளவரசியின் பெயர். சவூதி அரேபிய நாட்டை நிர்மாணித்த மன்னர் அப்துல் அஸீஸின் மகன்களுள் ஒருவரான தலால் என்பவரின் மகள். திருமணமாகி, பின் மணமுறிவும் பெற்ற சாராவுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.
“சவுதியில் என்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். நான் மீண்டும் அங்கு சென்றால் குடும்பத்தினரால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே தான் இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கேட்டுள்ளேன். இது வருத்தமாகவே உள்ளது. ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை. இவ்வளவு நாட்கள் நான் மெளனம் காத்து வந்தேன். குடும்பத்தினருடன் உள்ள பிரச்னைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ள முயற்சித்தேன். அது முடியாததால் இப்போது இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கேட்டுள்ளேன். இதை நான் வெறும் விளம்பர நோக்கில் செய்யவில்லை” என்று சாரா கூறியுள்ளார்.
சவூதி இளவரசியின் இந்த வேண்டுகோள் குறித்து இங்கிலாந்து அரசாங்கம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

பதிவு செய்தவர் Yasar on 11:33 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added