சிறையில் கொல்லப்பட்ட "கதீல் சித்தீகி" குடும்பத்துக்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை!
புனே ஜெயிலில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட, பட்டதாரி வாலிபர் "கதீல் சித்தீகி" குடும்பத்துக்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்க கோரி,
நேற்று புது டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், மஜ்லிஸ் -எ- முஷாவரத்தின் தலைவர் டாக்டர் ஜபருல் இஸ்லாம், கோரிக்கை வைத்தார். இது திட்டமிட்ட கொலை என்றும், இதற்கு மத்திய மாநில இரு அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றார். கொலை செய்யப்பட சித்தீகி, குற்றமற்றவர் என்பதை புரிந்துக் கொண்ட போலீசார், அவரை கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். நேற்றைய தினம் அவர் ஹை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய சூழலில், கொலை செய்யப்பட்டுள்ளது, சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. உயர் பாதுகாப்பு செல்லில் அடைக்கப்பட்டிருந்த அவரை, போலீஸ் ஆதரவில்லாமல் எவரும் நெருங்க முடியாது. மேலும், பொய்யாக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அப்பாவி முஸ்லிம்களை இப்படி போட்டுத்தள்ளும் முயற்சி நடப்பதாகவும் மஜ்லிஸ் -எ- முஷாவரத்தின் தலைவர்கள் குற்றம் சாட்டினர். கடந்த 7 மாதங்களாக கடும் பிரச்சினைகளை சந்தித்து வரும் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு, ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்குவதுடன் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.