|

முதல் கணவரை விவாகரத்து செய்யாததால் சர்ச்சை பெண் எம்.எல்.ஏ., மதம் மாறி 2வது திருமணம்

கவுகாத்தி:முதல் கணவரை விவாகரத்து செய்யாமல், முஸ்லிம் மதத்திற்கு மாறி, இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பெண் எம்.எல்.ஏ.,வால் சர்ச்சை உருவாகியுள்ளது. அசாம் மாநில காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., டாக்டர் ருமிநாத், 33. இவரை கடந்த ஒரு மாதமாகக் காணவில்லை. ஆனால், நேற்று முன்தினம் திடீரென கவுகாத்தியில் காணப்பட்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், "முதல் கணவரை விவாகரத்து செய்யாமல், இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். அதற்கு முன்னதாக முஸ்லிம் மதத்திற்கு மாறி, என் பெயரை ரபீயா சுல்தானா என, பெயர் மாற்றம் செய்துள்ளேன். இந்த விவகாரத்தில், நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. எனக்கு எந்தப் பயமும் இல்லை. எந்தப் பிரச்னையையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன்' என்றார். சட்ட விரோதம்:"முதல் கணவரை விவாகரத்து செய்யாமல், ருமிநாத் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது சட்ட விரோதம். அவரை உடனடியாக சட்டசபையிலிருந்து நீக்க வேண்டும்' என, அசாம் மாநில வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ருமிநாத், கடந்த 2006ம் ஆண்டில், போர்கோலா தொகுதியில் இருந்து பா.ஜ., கட்சி சார்பில் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார். ருமிநாத்தின் முதல் கணவர் ராகேஷ்சிங். உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு வயதில் ஒரு குழந்தை உள்ளது. ருமிநாத், இணைய தளத்தை அடிக்கடி பயன்படுத்துபவர். தன் கட்சிப் பணிகள் குறித்தும், அது தொடர்பான புகைப்படங்களையும் அவ்வப்போது பேஸ் புக்கில் போடுவார். ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில், புதிய ஆண் நபருடன், ருமிநாத் இருப்பது போன்ற புகைப்படம், பேஸ் புக்கில் வெளியானது. அதிலேயே தனக்கு இரண்டாவது திருமணம் நடந்து விட்டதாக, ருமிநாத் கூறி இருந்தார். இது அசாம் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனே மறுப்பு தெரிவித்த ருமிநாத், தன் முதல் கணவருடன் சந்தோஷமாக வாழ்வதாகத் தெரிவித்தார். இரண்டாம் திருமணம்:இந்த சூழ்நிலையில் தான், கடந்த மாதம் திடீரென மாயமாகி இப்போது, இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளார். ருமிநாத் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளவர் அவரது பேஸ்புக் நண்பர் ஜாகிர் உசேன், 29. இந்த திருமணத்துக்கு, அசாம் மாநில எல்லை பாதுகாப்பு அமைச்சர் சித்திக் அகமது உதவி செய்துள்ளார். இரண்டாவது திருமணம் செய்த தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, ருமிநாத் கேட்டுக் கொண்டுள்ளார். ருமிநாத், 2வது திருமணம் செய்துள்ள ஜாகீர், முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகன்.

பதிவு செய்தவர் ah kdnl on 12:30 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added