2:13 AM | பதிவு செய்தவர் ah kdnl
துபை, ஏப்.30: ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்துகொள்வது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி, தனிப்பட்ட விவகாரங்கள் காரணமாக அவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 23 இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஜனவரி, பிப்ரவரியில் தலா 8 இந்தியர்களும், மார்ச்சில் 4 இந்தியர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
2010-ம் ஆண்டில் 50 இந்தியர்களும், 2011-ம் ஆண்டில் 54 இந்தியர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.